Tuesday, April 21, 2020

தடயம்- விமர்சனம் ( தேநீர் பதிப்பகம் விமர்சனப்போட்டி )



படம் டைட்டில் போடும்போது என்னைக்கவர்ந்த 2 விஷயங்கள்

1  ஆனந்த விகடனில் பிரசுரம் ஆன சிறுகதை இது
2 இயக்குநர்  கம் கதாசிரியர் தமயந்தி +  க்ரவுட் ஃபண்டிங் முறைல பலரது கூட்டுத்தயாரிப்பில் உருவான படம் இது

படத்தோட கதை ஒன் லைன்ல சொல்லிடலாம், முன்னாள் காதலியை நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்க வரும்  காதலனின் அனுபவங்கள்


 வழக்கமா இது மாதிரி கதை அம்சம் உள்ள படங்களில் நாயகனும், நாயகியும் உடல் ரீதியா சேருவாங்களா? எனும் ரசிகனின் எதிர்பார்ப்பை  வைத்தே திரைக்கதையில் விளையாடுவார்கள் இயக்குநர்கள் , இதற்கு லேட்டஸ்ட் உதா - 96. ஆனா அந்த  மாதிரி எதிர்பார்க்கவே வழி இல்லாத மாதிரி நாயகியை ஒரு நோயாளியா , படுத்த படுக்கையா காட்டி இருப்பதில் தெரிகிறது இயக்குநரின் தன்னம்பிக்கை 

நாயகியின்  கேரக்டர் ஸ்கெட்ச் பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி பட சரிதாவை நினைவு படுத்தியது . நாயகிக்கு வைத்த  பெயர் கடலோரக்கவிதைகள் ரேகா ( ஜெனிஃபர் டீச்சர்)வை ஞாபகப்படுத்தியது . நாயகியின் நடிப்பு அபாரம், ஒப்பனையே இல்லாமல் மிக யதார்த்த நடிப்பிலேயே ரசிகர்க்ளை கட்டிப்போட வேண்டிய கட்டாயம்.அவர் நிஜமாவே படுத்த படுக்கையாத்தான் இருக்காரோ என நினைக்க வைக்கும் அளவுக்கு அவர் உடல் மொழியில் அவ்ளவ் யதார்த்தம். வெல்டன்


 நாயகனாக வருபவர் நாயகியை விட ஒரு ஸ்டெப் கம்மிதான் நடிப்பில் . ஆனாலும் நேர்த்தியான பங்களிப்பு . பார்வைகளாலேயே தன் காதலை உணர்த்தி விடுகிறார்


 நச் டயலாக்ஸ்


1 திடீர்னு வரக்கூடிய மழை நமக்குள்ளே  இருக்கற  பல ஞாபகங்களை  கிளறிவிடும்


2 வாழ்க்கைல யு டர்ன் கிடையாது


3   என்ன ஆகிடும்? மேக்சிமம் செத்திடுவேன், அவ்ளோ தானே?

4  நீ பெண்ணா இருந்தா அந்த கஷ்டம் தெரிஞ்சிருக்கும்


5   உனக்கு எல்லாமே விளையாட்டுதானா?

 அப்படி (விளையாட்டுத்தனமா )  இல்லைனா எப்பவோ நான் செத்திருப்பேன்


6  உனக்கு (பணத்) தேவை இருந்தா ( என்னைத்தவிர ) வேற யார்ட்டயும் கேட்க மாட்டேனு எனக்கு தெரியும் 

7 எவ்ளோ ஈகோயிஸ்ட்  நீ, என் முன்னால சின்னப்பிள்ளை மாதிரி அழறே?

8   அந்த கவிதா ஒரு ரசனைக்காரி , ஒரே வீட்ல  பி. சுசீலாவும் , அவுரங்கசீப்பும் வாழ முடியுமா?

9  நான் ஒரு மக்குடா , இல்லைன்னா உன்னை ,மிஸ் பண்ணி இருப்பேனா?

10  பொய் சொல்லாதே , என் காதல் பொய் சொல்ல வைக்கக்கூடாது, கஷ்டப்பட வைக்கக்கூடாது


சபாஷ் இயக்குநர்


1  நாயகன் , நாயகி இருவருமே நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும்போது பரஸ்பரம் அவங்கவங்க தாம்பத்ய வாழ்க்கை , லைஃப் பார்ட்னர் பற்றி விசாரித்துக்கொள்வது மிக யதார்த்தம்

2    இயக்குநர் ஒரு பெண் என்பதால் ரொமாண்டிக் காட்சிகளில் நெற்றி முத்தம் முக்கிய இடம் பிடித்ததைப்பார்க்க முடிந்தது. இதுவே ஆண் இயக்குநர் எனில் இதழ் முத்தம், கன்ன முத்தம் என வழகக்மான  ரொமான்சாக இருந்திருக்கும்

3   ஃபிளாஸ்பேக்கில் வரும் அந்த டூயட் காட்சி அட்டகாசம், மொத்தப்படமுமே  ஒரே அறையில் கிட்டத்தட்ட ஹாஸ்பிடல் மோட்ல யே இருப்பதால் அந்த இயற்கை எழில் கொஞ்சும் பசுமை வெளிகளில்  படமாக்கப்பட்ட காட்சி அழகு கவிதை


4   பின்னணி இசை அமைத்தவர்   இளையராஜா ரசிகர் போல . மவுனமும் ஒரு இசை தான் என்பதையும் , காட்சிகளில்  உணர்த்தி விடுகிறார்


5  பசுமையான நினைவுகள் என்பதாலோ , இயக்குநருக்குப்பிடித்த நிறம் என்பதாலோ எப்படியோ படம் பூரா பச்சை நிறம் தனி பங்களிப்பு எடுத்திருக்கிறது.  நாயகி , சுஜாதா , கவிதா என 3 பெண் கேர்க்டர்களுமே  பச்சைக்கலர் உடையில் இருப்பது கோ இன்சிடென்சாவும் இருக்கலாம்


6   நிகழ்கால உரையாடல்களை வைத்தே அவர்களது கடந்த கால சம்பவங்களை நினைவு கூர வைத்தது இயக்குநர் டச்

7   க்ளைமாக்சில்  அனுதாபத்துக்காக நாயகியை சாகடிக்கும் மலிவான டெக்னிக் எதுவும் இல்லாமல் எதார்த்தமான முடிவாக அமைந்தது மகிழ்ச்சி 



 திரைக்கதையில் சில நெருடல்கள் 


1   கேன்சர் பேஷண்ட்டான முன்னாள் நாயகியைப்பார்க்க வரும் நாயகன் கேன்சர்க்கு வழி வகுக்கும் சிகரெட் பிடிப்பவராக அடிக்கடி காட்டி இருப்பது ஏனோ? ஒரு பெண் இயக்குநரே   தம் காட்சிகளை எடுக்கலாமா?


2   கள்ளக்காதலர்கள் என்ற பதம் அடிக்கடி நாயகியால் சொல்லபப்டுது. அது எதுக்கு ? கல்யாணத்துக்குப்பிறகு ஏற்படும் எக்ஸ்ட்ரா மேரிட்டல் லைஃப் தானே கள்ளக்காதல்? இது கல்யாணத்துக்கு முன் இருந்த  காதல் தானே?


3  காதலர்கள்  தங்களுக்குள் பரஸ்பரம் செல்லப்பெயர் வைத்துக்கொஞ்சிக்கொள்வது வழக்கம் தான், எருமை , பேயே, நாயே , இப்டி.. ஆனா நாயகன் அடிக்கடி நாயகியை “ மூதேவி “ என சொல்வ்து அமங்கலமா இருக்கு. இத்தனைக்கும்  நாயகி படுத்த படுக்கையா இருக்கும் பேஷண்ட். . புரியாத புதிர் படத்தில் ரகுவரன் ஐ நோ ஐ நோ என பல டைம் சொல்வார் , அது மாதிரி இங்கே இது.. தவிர்த்திருக்கலாம்



4  நாயகி ஒரு முறை சுஜாதா கண்கள் பெருசா பள பளனு இருக்கும்  என வர்ணிக்கிறாள் , ஆனால் நிஜத்தில் சுஜாதா சின்னக்கண் உடையவர் ஆக காட்டப்படுகிறார்


5  கவிதா கேர்க்டர் எதுக்கு சம்பந்தம் இல்லாமல் . வந்ததுமே 2 நிமிசத்துல கிளம்பிடுது.அதே போல ஃபிளாஸ்பேக்கில் நாயகன் இப்போதைய தோற்றத்துலயே தாடி , நரை முடியோட டல்லா வர்றார். ஃபிரெஷ் ஆன நாயகி கெட்டப் காட்றப்ப நாயகனையும் அப்படி யூத் மாதிரி காட்டி இருக்க வேணாமா?


6   கவிதா வரும்போது வீடு தாழ் போடப்பட்டிருக்கு. அந்த சின்ன வீட்டுக்கு எதுக்கு தாழ்? ஹால், பெட்ரூம், கிச்சன் ரூம்  என பெரிய வீடா இருந்தா தாழ் போடலாம்.

7   மெல்லிய மயில் இறகால் வருடுவது போல வசனங்கள் வந்து போகையில் வத்தக்குழம்பை நக்கி நக்கி சாப்பிடறது என்ற வசனம் முகத்தில் அறைகிறது. தவிர்த்திருக்கலாம்



 எனிவே படம்  நல்ல முயற்சி. பாடல்களை கவிதாயினி குட்டி ரேவதியுடன் இணைந்து இயக்குநர் தமயந்தியும் எழுதி இருப்பது மகிழ்ச்சி . பாடல் ஆசிரியர் தாமரையையும் இந்த லிஸ்ட்டில் இணைத்திருக்கலாம் .

ஆனந்த விகடனில் வந்த சிறுகதையின் பெயர் என்ன? என்பதை குறிப்பிட்டிருக்கலாம்.படத்துக்கு டைட்டில் தடயம் என வைத்தது  க்ரைம் த்ரில்லர் போல காட்டுது. தடம் என வைத்திருக்கலாம்.படம்     ஸ்லோ என்பதால் ஏ செண்ட்டர் ஆடியன்சை மட்டுமே கவரும் என கணிக்கிறேன்

 தமயந்தி க்கு ஒரு கிளாசிக்கல் மூவி . ரேட்டிங்   3.5 / 5



0 comments: