கோர்ட் வளாகத்துலயே ஒரு பெண் வக்கீல் தன் சக பெண் வக்கீல் தோழிகளோடு சேர்ந்து ஒரு ஆளை கத்தியால குத்திக்கொலை பண்ண முயற்சி பண்றா, ஆனா ஆள் எஸ்கேப் . அவ நல்லவ. குத்துவாங்குனவன் கெட்டவன். எதனால அவ அவனைக்கொலை பண்ண முயற்சி பண்றா? அவன் யார்? என்பதற்கு திரைக்கதையில் விடை இருக்கு
இந்த KNOT டை கேள்விப்பட்டதும் ஃபேஸ்புக்ல குடி இருக்கறவங்களுக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்திருக்குமே?
கணேஷ் பாலா ஃபேஸ்புக்கில் படம் பார்த்து கதை சொல் போட்டி வெச்சிருந்தாரு . அதுல பரிமாறப்பட்ட படம் வக்கீல் யூனிஃபார்மல ஒரு ஆள் இன்னொரு ஆளை கொலை செய்ய கத்தியை ஓங்கற மாதிரி போஸ்
இந்தப்படத்துக்கு பலரும் கதை அனுப்புனாங்க ,. நடுவர்களா சிரி சிரி கதை புகழ் நந்து சுந்து சார் , வேதா கோபாலன் மேடம் இருவரும் .. வந்த கதைகளை இரண்டாகப்பிரித்து இரு ஜட்ஜ்களுக்கும் கதை அனுப்பப்பட்டது.
க்தைகளைப்படிச்ச நடுவர்கள் சொன்ன கருத்து “ பெரும்பாலும் கதை எழுதுனவ்ங்க கொலை பண்ண முயற்சி பண்றவன் கெட்டவன் , கொலை செய்யப்படுபவன் நல்லவன் என்ற கோணத்துலயே எழுதி இருக்காங்க . யாருமே கொலையாளி நல்லவன் , கொலை செய்யப்படுபவன் கெட்டவன் என்ற கோணத்தில் எழுதலை . மாத்தி யோசி வெற்றிக்கோடு உனக்கு தூசி
என்ற ஃபார்முலா படி கதைஞர்கள் வித்தியாசமா சிந்திக்கனும் என கருத்து தெரிவிச்சிருந்தாங்க
இரு ஜட்ஜ்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் ஃபைனல் ரவுண்டில் கலந்து சில கதைகள் தேர்வாச்சு
எதேச்சையா நடந்ததா? அல்லது இயக்குநர் இதைப்பார்த்து திரைக்கதை எழுதுனாரா தெரில. நல்ல விறு விறுப்பான ஆக்ஷன் கமர்ஷியல் மசாலா படம் தமிழ் சினிமாக்கு கிடைச்சிருக்கு
ஹீரோவா ஜீவா , கொஞ்சம் கேப்க்கு பின் இவருக்கு ஒரு கம்பேக் மூவி. ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார்.ஒரு சரத்குமாரோ ஒரு விஷாலோ ஒரு அருண் விஜயோ பண்ண வேண்டிய கேரக்டர். அதாவது நல்ல பாடி பில்டர் தான் இந்த ரோலுக்கு சூட் ஆவார் . ஜீவாவுக்கு பிஞ்சு மூஞ்சி , இருந்தாலும் சமாளிக்கிறார்
ஹீரோயினா ரியா சுமன் ,. தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகக்குறைவான காட்சிகள் வந்த முதல் ஹீரோயின் இவர் தான் , ஓப்பனிங் சீன்ல ஒரு டூயட் , க்ளைமாக்ஸ்ல சுபம் போடும்போது ஒரு அட்டெண்டென்ஸ் அவ்”லோ” தான்
ஃபிளாஸ்பேக்கில் வக்கீலாக வரும் நந்தினிக்கு நல்ல வாய்ப்பு , சில இடங்களில் ஓவர் ஆக்டிங் என்றாலும் பல இடங்களீல் எதார்த்தம்
வில்ல்னாக க்ரிமினல் லாயராக நவ்தீப் ( ஏகன் படத்தில் பேபி ) சுமாரான நடிப்பு
ப்ரொஃபஷனல் கில்லராக வருண். இவருக்கும் ஹீரோவுக்குமான ஓப்பனிங் சீன் சேசிங் , டெலிஃபோன் உரையாடல்கள் , சவால்கள் எல்லாம் அமெச்சூர்த்தனமாய் இருந்தது பெரிய மைனஸ். ஃபிளாஸ்பேக் காட்சிகளில் ஆக்ஷன் காட்சிகளில் முத்திரை பதித்த இயக்குநர் இதில் கோட்டை வ்கிட்டது ஏனோ?
பொதுவா பொண்ணுங்க அடிதடி வம்பு தும்புக்கு போக மாட்டாங்க ( க்ட்டுன புருஷனை துவைச்செடுப்பாங்க, அது வேற ) என்ற கருத்தை மறுதலித்து தோழிக்காக பழி வாங்கப்புறப்படும் பெண்கள் புது கான்செப்ட்
நச் வசனங்கள்
1 இவன் ஃபோட்டோ பார்த்துட்டு ஆளைப்போடறவன் இல்லைடா , ஆளைப்போட்டுத்தள்ளிட்டு ஃபோட்டோவைப்பார்க்கறவன்
2 நம்பவெச்சுக்கழுத்தறுக்கறவன் தானே நீ?
ஆனா முதுகுல குத்த் மாட்டேன் ( இந்த டயலாக் பேசற வில்லன் அடியாளுங்களோட சண்டை போடறப்ப 3 பேரோட முதுகைதான் குத்தறாப்டி )
3 ஆட்டத்தை ஆடரவங்களை விட வெளில இருந்து வேடிக்கை பார்க்கறவன் தான் கேமை கரெக்டா ஆடி முடிப்பான்
4 நாடு நாசமாப்போய்க்கிட்டு இருக்கு நாசாவுக்கு போய் என்ன பண்ணப்போறோம்
5 எல்லாருக்கும் கனவு காண உரிமை இருக்கு ஆனா உன் கனவு என் உரிமையை பறிக்கக்கூடாது
6 உதவிங்கறது முதுகுக்குப்பின்னாடி இருக்கற மச்சம் மாதிரி , சம்பந்தப்பட்டவங்களுக்கு இன்னார்னு அடையாளம் காட்டிக்காமயே செஞ்சுடனும்
7 நான் இல்லாம எந்த இரு நல்ல காரியமும் நடந்துடக்கூடாது
8 காளைக்கு மட்டும் தான் கொம்பு இருக்குனு நினைக்காதே , மான்களுக்கும் கொம்பு உண்டு ( இது கொஞ்சம் டபுள் மீனிங்கா இருக்கு , இயக்குநர் சொல்ல வர்றது ஆண்களப்போலவே பெண்களும் தாக்குவாங்க அப்டினு , ஆனா சொன்னது கில்மா டைப் வசனம் . இந்த இடத்துல ஆண் தேள் பெண் தேள் எல்லார்க்கும் கொடுக்கு உண்டு விஷம் உண்டு . பாம்பு வகைகள்ல ஆண் இனத்துக்கு மட்டும் தான் விஷம் உண்டுனு இ,ல்லை இப்டி எதுனா வெச்சிருக்க,.லாம்
சபாஷ் டைரக்டர்
1 படம் 2 மணி நேரத்துல முடியுது. செம விறுவிறுப்பு , ஸ்பீடு
2 ஃபிளாஸ்பேக் காட்சிகள் கதைக்கு ஜீவன்
3 இமான் இசை , ஆக்சன் சீக்வன்ஸ்
1 படம் 2 மணி நேரத்துல முடியுது. செம விறுவிறுப்பு , ஸ்பீடு
2 ஃபிளாஸ்பேக் காட்சிகள் கதைக்கு ஜீவன்
3 இமான் இசை , ஆக்சன் சீக்வன்ஸ்
லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 நிறை மாத கர்ப்பிணியா இருக்கற தங்கையை அண்ணன் தனியா விட்டுட்டு போவானா? பெற்றோர் இல்லை , பார்த்துக்க ஒரு நர்ஸ் அல்லது பணிப்பெண்ணை நியமிக்க மாட்டாரா?
2 கோர்ட் வளாகத்துல கத்தியால வில்லனைக்குத்துற லேடி டக்னு கத்தியை தூர வீசிடனும் அல்லது அதை ஃபோல்டு பண்ணி ஹேண்ட் பேக்ல வெச்சுக்கனும், அப்படியே ரத்தக்கரையோட கைல வெச்சுக்கிட்டே 2 கிமீ ஓடிட்டு இருக்காப்டி . கூட்டத்துல யார் கைல கத்தி இருக்கோ அவங்க தான் கொலையாளினு ஈசியா கண்டு பிடிச்சுட மாட்டாங்களா?
3 பொதுவா ஆளைக்கொலை பண்ற கத்தி மினிம்ம் ஒரு ஜானாவது இருக்கனும், ஆனா அந்த லேடி யூஸ் பண்ற கத்தி கேரட் வெட்டதான் நீளம் போதும் .பொண்ணுங்க கட்ற வாட்ச் சின்னது , அவங்க ஹேண்ட் பேக் சின்னது , இதெல்லாம் ஓக்கே , ஏத்துக்கலாம் , ஆனா அவங்க கொலை பண்ண யூஸ் பண்ற கத்தி சின்னதா இருந்தா எப்படி ஆள் உயிர் போகும் ?
1 நிறை மாத கர்ப்பிணியா இருக்கற தங்கையை அண்ணன் தனியா விட்டுட்டு போவானா? பெற்றோர் இல்லை , பார்த்துக்க ஒரு நர்ஸ் அல்லது பணிப்பெண்ணை நியமிக்க மாட்டாரா?
2 கோர்ட் வளாகத்துல கத்தியால வில்லனைக்குத்துற லேடி டக்னு கத்தியை தூர வீசிடனும் அல்லது அதை ஃபோல்டு பண்ணி ஹேண்ட் பேக்ல வெச்சுக்கனும், அப்படியே ரத்தக்கரையோட கைல வெச்சுக்கிட்டே 2 கிமீ ஓடிட்டு இருக்காப்டி . கூட்டத்துல யார் கைல கத்தி இருக்கோ அவங்க தான் கொலையாளினு ஈசியா கண்டு பிடிச்சுட மாட்டாங்களா?
3 பொதுவா ஆளைக்கொலை பண்ற கத்தி மினிம்ம் ஒரு ஜானாவது இருக்கனும், ஆனா அந்த லேடி யூஸ் பண்ற கத்தி கேரட் வெட்டதான் நீளம் போதும் .பொண்ணுங்க கட்ற வாட்ச் சின்னது , அவங்க ஹேண்ட் பேக் சின்னது , இதெல்லாம் ஓக்கே , ஏத்துக்கலாம் , ஆனா அவங்க கொலை பண்ண யூஸ் பண்ற கத்தி சின்னதா இருந்தா எப்படி ஆள் உயிர் போகும் ?
4 படத்துக்குப்பொருத்தமான டைட்டில்
தங்கைக்காக
நண்பனா? எதிரியா?
பெண்ணுக்கும் கோபம் உண்டு
தங்கைக்காக
நண்பனா? எதிரியா?
பெண்ணுக்கும் கோபம் உண்டு
விகடன் மார்க் ( யூகம்) -41
குமுதம் ரேட்டிங் ( யூகம்) 3 / 5
அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் -2.75 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2 அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி, பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)
C.P.S கமெண்ட்-சீறு− ஓவர் ஹீரோயிசம் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை,மாஸ் மசாலா,ஒரு விஷாலோ,சரத்குமாரோ பண்ண வேண்டியது.சண்டைக்காட்சிகளை ரசிப்பவர்கள் பார்க்கலாம்
ஜீவா நடிப்பு ,ஸ்டண்ட் சீன்ஸ் + மொக்கைவில்லன் − ,விகடன் −41 , ரேட்டிங், 2.75 / 5 #seerureview
ஜீவா நடிப்பு ,ஸ்டண்ட் சீன்ஸ் + மொக்கைவில்லன் − ,விகடன் −41 , ரேட்டிங், 2.75 / 5 #seerureview
0 comments:
Post a Comment