கேஜிஎஃப் -னு ஒரு படம் கன்னடத்தில் ரிலீஸ் ஆகி செம ஹிட் அடிச்சுது. குருவி படத்தை பட்டி டிங்கரிங் பண்ணி எடுத்த அந்தப்படம் ஹிட் ஆக முக்கியக்காரணம் பன்ச் டயாக்ஸும் பிஜிஎம்மும். அதே மாதிரி கன்னடத்தில் இருந்து வந்த இன்னொரு காமெடி ஹிட் இது
கதை என்ன?னு சொல்றேன், யாரும் தமிழக அரசியல் நிலவரத்தை இந்தக்கதையோட கனெக்ட் பண்ணிக்க வேண்டாம்
ஒரு ஊர்ல ஒரு வயசான திருடன். ஒரு வயசாச்சுன்னா அது குழந்தை தானே?னு கடிக்கக்கூடாது . 90+ வயசான திருடன். அந்தத்திருடனுக்கு 2 பசங்க. திருடனோட பசங்க ஐ ஏ எஸ் ஆஃபீசராவா இருப்பானுங்க? அவனுங்களும் அப்பா மாதிரியே திருடனுங்க . அப்பா கிட்டே ஒரு புதையல். அதை ஒரு நாடக ட்ரூப் ஆட்டையைப்போட்டுடுது. அப்பாவோட கடைசி ஆசைப்படி அந்த புதையலை திருட்டுப்பசங்க 2 பேரும் கண்டுபிடிக்கறதுதான் கதை , ஊடால ஹீரோவான போலீஸ் ஆஃபீசரும் புதையலை தேடறார். யாருக்கு புதையல் கிடைச்சது என்பதே கதை
ரக்சித் ஷெட்டி தான் ஹீரோ , அதகளம் பண்ணி இருக்கார் . பருத்தி வீரன் கார்த்தியின் தெனாவெட்டு , புதிய பாதை இரா பார்த்திபனின் குறும்பு என கலந்து கட்டி அடித்ததில் ஆடியன்சிடம் அப்ளாஸ் மழை ( சிலர் அவரது ஓவர் ஆக்டிங்கையும் தொண தொண பேச்சையும் ரசிக்க வில்லை )
திரைக்கதை உத்தியில் பல புதுமை கள் , ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கான இந்தக்கதை எல்லாத்தரப்பு மக்களூக்கும் புரிய அவங்க மெனக்கெட்டதில் பல பளிச் ஐடியாக்கள். சம்பவம் நடந்த ஃபிரேமை அப்படியே ஃப்ரீஸ் பண்ணி அங்கே ஹீரோ போய் ஒரு கைடு மாதிரி நம்மிடம் விளக்குவது எல்லாம் அட! போட வைக்குது
நாயகியாய் நடித்திருப்பவர் சான்வி ஸ்ரீ வத்சவா ,பேரே வாய்ல நுழையல, ஆனா ஆள் மனசுல நுழைஞ்சுடறார். எளீமையான அடக்கமான அழகு
எதிரிகளை அவரது அடியாட்களை நாயகன் கையாளும் விதம் அடடே!பல இடங்களீல் வசனம் ஓவர் டோஸ் என்றாலும் ரசிக்க முடியுது
ஆர்ட் டைரக்சன் அபாரம் . செட்டிங்ஸ் எல்லாம் கடின உழைப்பு . இசை சோடை போகலை . பாட்டு கேட்கற மாதிரி இருக்கு
சண்டைக்காட்சிகள் கன கச்சிதம்
நச் வசனங்கள்
1 வழி தப்பிப்போனவங்களை மன்னிக்கலாம்,ஆனா தப்பான வழில போனவங்களை மன்னிக்கவே கூடாது #ASN
2 அரியாசனத்துல அமர்ந்திருக்கறவன் தான் ஆசைப்பட்டதை அடைஞ்சே ஆகனும்,இல்லைன்னா அந்த அரியாசனத்துக்கே அவமானம் #ASN
3 ஹீரோ ஓப்பனிங் பஞ்ச் தெலுங்குப்படம் மாதிரி....
ஜானினு ஒருத்தன் என்னை எதிர்த்தான்,அவன் கதை என்னாச்சு தெரியுமா?
ஜானி ஜானி நோ பாப்பா #ASN
4
அண்ணே!...
என்னபா?
துரை வரச்சொன்னாரு
அப்போ போய்ட்டு வந்துடு....
அய்யோ ,அவரு உங்களை கூட்டிட்டு வரச்சொன்னாரு #ASN
5 என் ஆசையை பலவீனமா ஆக்காதே!#ASN
6 அப்பாவுக்கு அடிபட்ட இடத்துல மறுபடி அடிச்சேன்,அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்துடுச்சு
ஒரு நிமிஷம்...அவருக்கு அடிபட்ட இடம் எது"?னு உனக்கு எப்டி தெரிஞ்சுது?
முதல்ல அடிச்சதும் நான்தான் #ASN
7 நாடகம் முடிஞ்சதும் வேஷத்தைக்கலைச்சிடனும்,இல்லைனா பைத்தியக்காரன்னு சொல்லிடுவாங்க #ASN
8 உடம்புக்கு ஒரு நோய் வந்தா அது சீக்கிரம் சரி ஆகிடும்,ஆனா மனசுக்கு நோய் வந்தா சரி ஆக லேட் ஆகும் #ASN
=9 ஒருத்தரை கன்வின்ஸ் பண்றது கஷ்டம்,ஆனா அவரை கன்பியூஸ் பண்றது ஈசி #ASN
10 புத்திசாலித்தனத்துக்கும்,முட்டாள்தனத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?புத்திசாலித்தனத்துக்கு வரையறை உண்டு,முட்டாள்தனத்துக்கு வரையறையே இல்லை #ASN
11 நம்ம எல்லார்க்குள்ளேயும் ஒரு ராவணன் ஒளிஞ்சுட்டு இருக்கான்,ஆனா நாராயணன் மட்டும் வெளில தெரியற மாதிரி காட்டிக்கறோம் #ASN
12 அரியாசனம் ஏறுன முத நாளே தன் கோட்டையை எரிச்ச முத துரை நானா தான் இருப்பேன் #ASN
13 உன் புத்திசாலித்தனம் வரம்பு மீறினா நீ முட்டாள் ஆக்கப்படுவாய்#ASN
14 உன் புத்திசாலித்தனத்தைப்பணயம் வெச்சு நீ தோத்துட்டே #ASN
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஹீரோவோட பாடிலேங்க்வேஜ் ,டயலாக் டெலிவரி பிரமாதம்.ஓவர்டோஸ்தான்,ஆனா ரசிக்கலாம்,புதியபாதை பார்த்திபனின் தெனாவெட்டு,பருத்திவீரன் கார்த்தியின் லொள்ளு சேர்ந்து செய்த கலவை #ASN
2 படம் ரொம்ப நீளம் , கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு 10 நிமிசம் கம்மி. ஆனா ரசிகர்கள் போர் அடிக்குதுனு சலிச்சுக்கலை , எஞ்சாய் பண்ணீப்பார்க்கறாங்க

சபாஷ் டைரக்டர்
1 படத்தின் அடிநாதம் ஆக்சன் சேசிங் சர்ச்சிங் என்றாலும் எல்லாத்தையும் காமெடி பேஸ்ல கொண்டு போன விதம்,
2 ஹீரோ ஹீரோயினை படம் பூரா மரியாதையாகவே அழைப்பது , சொல்லுங்க லட்சுமி அவர்களே... இது சினிமாக்கு புதுசு
3 வாய்ப்பிருந்தும் ஒரு சீன்ல கூட வன்முறையோ , ஆபாசமோ தலை தூக்காம பார்த்துக்கிட்டது

லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 மணலால் மூடப்பட்ட பெட்டிக்குள் இருக்கும் ஹீரோ மூச்சை அடக்க முடியாமல் தவிப்பார்னு பார்த்தா ஒண்ணூமே ஆகலை . ஆக்சுவலா புதைக்கப்பட்ட பெட்டிக்குள் இருக்கும் ஆளுக்கு சுவாசிப்பதில் பிரச்சனை வரும், வேர்க்கும், ஆனா அசால்ட்டா ஹீரோ இருக்கார்
2 ஹீரோ சொல்வதை எல்லாம் வில்லன்கள் நம்புவது , போனா போகட்டும்கற கதையா “ எதுக்கும் அவன் மேல ஒரு கண் இருக்கட்டும்னு வசனம்
3 பட டைட்டில் பாரிஜாதம்னே வெச்சிருக்கலாம், மேட்சா இருக்கும். புதையல் இருக்கும் இடம் பாரிஜாத மரம் அருகே , நாயகி பாரிஜாத மலர் போல இருக்கார்னு சமாளீக்கலாம்
4 நீளமான திரைக்கதை இன்னும் ஷார்ப் ஆக்கலாம்.

விகடன் மார்க் ( யூகம்) 43 ( விகடன் நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே மார்க் போடும்)
குமுதம் ரேட்டிங் ( யூகம்) 3.5/ 5
அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 3/ 5( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2 அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி, பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)
C.P.S கமெண்ட்-ASN ( kannadam)- ( அவனே ஸ்ரீமன் நாராயண்)− புதையலைத்தேடி அலையும் இரு திருடர்கள் கூட்டம் + ஒரு போலீஸ் கதை,கிட்டத்தட்ட இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மாதிரி காமெடி ஆக்சன் பிலிம்,KGF போல ஹிட் அடிக்கும்,புதியபாதை பார்த்திபன் போல ஹீரோ நடிப்பு ,BGM + , ஏ சென்ட்டர் பிலிம் , 3 / 5 #ASN
0 comments:
Post a Comment