1972 ல் மேஜிக் ரைட்டர் சுஜாதா லண்டன் டூர் போனார், அந்த ஏரியா பின்னணில குமுதம் வார இதழில் ப்ரியா என்ற பெயரில் தொடர் எழுதினார், அது பின்னர் நாவலாக வெளிவந்து செம ஹிட் ஆச்சு அதை ரஜினி ஸ்ரீதேவி காம்போல படமா 1978 ல சில பல சொதப்பல்களோட வெளிவந்தது
அந்தக்கதைக்கருவை மையமா எடுத்துக்கிட்டு இந்தப்படம் பண்ணி இருக்காங்க , ஆனா அட்லீ மாதிரி அப்பட்டமா ஆட்டையைப்போடாம லைட்டா முருகதாஸ் மாதிரி மேம்போக்கா எடுத்திருக்காங்க
ஹீரோயின் ஒரு நடிகை , அவரை பார்த்ததுமே காதலிக்க ஆரம்பிக்க்றார் ஹீரோ , ஹீரோயினும் தான், வழக்கமான கவுதம் படங்கள் போல ஹீரோ ஹீரோயின் லவ் போர்ஷன்ம் ஜாலி பைக் ரைடு கார் ரைடு டூயட்னு படம் இடைவேளை வரை பிரமாதமா போகுது , சும்மா இல்லை 12 லிப் லாக் சீன் 4 டாப் ஆங்கிள் லோ கட் ஜாக் சீன் எல்லாம் இருக்கில்ல
இடைவேளைக்குப்பிறகுதான் கதையை ப்ரியா சாயலில் கொண்டு போகாம சொந்தமா யோசிச்சு சொதப்பிட்டாங்க . ஹீரோவுக்கு ஒரு அண்ணன் அவன் ஒரு போலீஸ் ஆஃபீசர் , அவருக்கு ஒரு ஆபத்து , ஹீரோயினுக்கு ஆபத்து . 2 பேரையும் ஹீரோ காப்பாத்துனாரா? இல்லையா? என்பது நம்ப முடியாத காதுல பூ வகை திரைக்கதை
ஹீரோவா தென்னக ப்ரூஸ்லீ தன்னடக்க தனுஷ், அசுரன் வெற்றிக்குப்பின் வந்திருக்கும் படம் என்றாலும் ஷூட்டின்ப்க் எல்லாம் 3 வருசம் முன்பே முடிச்ச படம் என்பது இளமையான தனுஷை பார்த்தாலே தெரியுது
ரொமான்ஸ் காட்சிகளில் கலக்கறார்,ஆக்சன் காட்சிகளில் சொல்லவே வேணாம்
ஹீரோயினா புதுமுகம் மேகா ஆகாஷ் .பேட்ட நாயகி.அதுக்குப்பின் புக் ஆகி ரிலீசுமாகிடுச்சு . கண்கள் , பல் ஈறுகள் , சிரிப்பு , கூந்தல் இவரது பிளஸ்
அந்தக்காலத்துல லிப் லாக் சீன் அப்டினா ஹீரோயின்கள் பதறுவாங்க இப்ப எல்லாம் ஒரு கிஸ் குடுக்கச்சொன்னா 10 கிஸ் தந்துட்டு அடுத்து வேற வேற அப்டினு நிக்கறாங்க . இவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு
எம் சசிகுமார் ஹீரோவுக்கு அண்ணன். இவரது கேரக்டரை சஸ்பென்சா காட்றேண்ட்டு குழப்பி அடிச்ட்டாங்க, இன்னும் விரிவா காட்டி இருக்கலாம்
கிராமியப்படங்களீல் நிஜமான வெறியோடு ஃபைட் போட்டு பார்த்த நமக்கு இதில் ஏனோ தானோ என ஃபைட் போடறது உறுத்தலா தெரியுது
இசை புதுமுகம் தர்புகா சிவா . மறு வார்த்தை பேசாதே செம ஹிட் ஆல்ரெடி, மற்ற பாடல்களும் குட் . பிஜிஎம் ஓக்கே ரக ம்
ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் அருமை
பின் பாதி திரைக்கதை இழுவை
ஹீரோ ஜெயிப்பார்னு எப்படியும் ஆடியன்சுக்கு தெரியும் என்பதால் இயக்குநரின் செத்து செத்து பிழைக்கும் டெக்னிக் எடுபடலை. பல இடங்களில் வாய்ஸ் ஓவர் படுத்துது
நச் வசனங்கள்
1 (காதலை வெளிப்படுத்துவதில்,காதல் கொள்வதில்) பொண்ணுங்க ஒரு ஸ்டெப் முன்னால எடுத்து வெச்சாதான் நாம 3 ஸ்டெப் வைக்க முடியும் #enainokkipaayumthottaa
2 அழகான பொண்ணு யாரையும் தேடிப்போனதில்லை , ஆனா உன் முகத்தைத்தாண்டி எதையும் யோசிக்க முடியலை
3 என்"கூட வா,என் பெற்றோர்ட்ட உன்னை அறிமுகப்படுத்தறேன்
எத்தனை நாட்கள்?எத்தனை டிரஸ் பேக் பண்ணனும்?
கட்டுன புடவையோட கிளம்பி வா
புடவை கட்டிட்டு வா னு சொல்றே ?
4 எதில் நான் அவளிடம் வீழ்ந்தேன்?முகமா?அகமா?சுகமா?
5 சும்மா உட்கார்ந்துட்டு இருந்தா அதிசயம் நடக்காது,இறங்கி வேலை செய்யனும்,விளக்கை நாமதான் ஏத்தனும் #enpt
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேணனிடம் ஒரு சிறப்பு உண்டு.அவரது எல்லாப்படங்களிலும் ஹீரோ,ஹீரோயின்களை அவர்களை"இதற்குமுன் வேறு"யாரும்"இவ்வளவு அழகாக,ஸ்டைலிஷாகக்காட்டியதில்லை என அடித்துக்கூறும் அளவுக்கு கெட்டப்,உடை விஷயத்தில் மெனக்கெடுவார் .இவருக்கு நேர் எதிர் பாலா. வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் கெட்டப் மட்டும் விதிவிலக்கு,கமலின்லைப் டைம் அழகு கெட்டப் பேசும் படம் ,சாணக்கியன் (மலையாளம்). அவரது"படங்களில் அதிகபட்ச"அழகு"பெற்றது"சிம்பு
2 தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்டைலிஷ் ரொமாண்டிக் டைரக்டர் (விதிவிலக்கு நடுநிசிநாய்கள்)கவுதம் இயக்கி 3 ஆண்டுகள் லேட்டா வரும் எனை நோக்கி பாயும் தோட்டா fdfs @கேரளா,கோட்டயம் ,அனஸ்வரா 11 amஷோ
78 பேர் / 840 சீட்ஸ் ,அசுரன் வெற்றி இந்தப்படத்தின் மார்க்கெட்டிங்க்கு பெரிதாக உதவவில்லை போல #enainokkipaayumthotta
3
கமர்ஷியல் மசாலாப்படங்களில் ஹீரோயினைக்காட்ற மாதிரி லவ் சப்ஜெக்ட் படங்களில் ஹீரோயின் ஓப்பனிங் சீனில் கிளாமராக்காட்டக்கூடாது,கிரேஸ் போய்டும்,இந்த விதியைஸ்ரீதர் தென்றலேஎன்னைத்தொடுவில் உடைத்தார் ,ஹீரோயின் வரும் அனைத்துக்காட்சிகளிலும் லோ கட் ,லோ ஹிப் சீன்கள் ,இதுலயும் டாப் ஆங்கிள் லோ கட் ஷாட் #enainokkipaayumthotta
4 நாயகியின் கேரக்டர் வடிவமைப்பு,திரைக்கதை பயணிக்கும்திசை எல்லாம் மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா வின் ப்ரியாவைஞாபகப்படுத்துது,கவுதம் ஒரு அட்லீ ஆகிடக்கூடாதுனு வேண்டிக்கனும் #enainokkipaayumthotta
சபாஷ் டைரக்டர்
1 வழக்கமா கவுதம் படங்கள்ல ஹீரோ 10 இடத்துலயாவது கெட்ட வார்த்தை பேசுவாரு,வில்லன் அதுக்கும் மேல. ஆனா இந்தப்படத்துல கெட்ட வார்த்தை சீனே இல்லை(நன்றி − ம்யூட் பண்ண சென்சார்)
2 படத்தின் கதாபாத்திரங்கள் ஆங்கில வசனங்களைப்பேசுவது அதிகமா இருக்கும்,இதுல அவாய்டு பண்ணி இருக்காரு
3 ஆயில் பெயிண்ட்டிங் மாதிரி இருக்கும் நாயகி தலையில ஆயிலே வைக்காம லூஸ் ஹேர் ல படம் பூரா உலவ விடுவது தேவதை அம்சம் என கொண்டாட வைக்கிறது
4 நாயகன் நாயகி லிப் லாக் சீன்கள் −12 (இ.மு − 7 இ.பி−5) #enpt
லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 லாஜிக் மிஸ்டேக் 1 − ஒரு நடிகை குளிக்கற நிர்வாண போட்டோக்களை வெச்சு ஒருத்தன் மிரட்டி 4 வருசமா அவ"சம்மதம் இல்லாம சினிமா படங்கள்ல நடிக்க வைக்கறது சுஜாதா வின் ப்ரியா நாவல் வந்த காலகட்டத்துல ஓகே. த்ரிஷா வீடியோ ரிலீஸ் ஆன பின்பும் மார்க்கெட்டை அதை"வெச்சே மேல ஏத்துன இந்தக்காலத்துக்கு"பொருந்துமா?மார்பிங் னு சொல்லி போய்ட்டே இருக்கலாமே? #enpt
2 லாஜிக் மிஸ்டேக் 2 − சைடு வருமானம் பார்க்க காலேஜ் ல"யே சினிமா ஷூட்டிங் பல மாசம் நடத்த அனுமதிக்கறதா காட்சி வருது.காலேஜ் காம்பஸ்ல ஷூட்டிங் நடந்தா எவன் க்ளாசுக்கு போவான்?ஷூட்டிங் வேடிக்கை பாக்கத்தான் போவான், இதுக்கு அரசாங்கம் ஒத்துக்குமா? #enpt
3 லாஜிக் மிஸ்டேக் 3− ஹீரோவோட வாய்ஸ் ல கதை சொல்ற மாதிரி கதையை கொண்டு போறாங்க,புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சு சில இடங்கள்ல "போக்கிரி"படத்துல வர்ற மாதிரி,
"கஜினி"படத்துல வர்ற மாதிரினு இவங்களே கலாய்ச்சுக்கிட்டா நமக்கு என்ன வேலை? #enpt
4 லாஜிக் மிஸ்டேக் 4 − பாத்ததுமே முதல் பார்வைல காதலில் விழும் ஹீரோ தன்னை பைக்ல ஒரு இடத்துக்கு,டிராப் பண்ண முடியுமா?னு ஹீரோயின் கேட்கறப்ப அவரு போவாம தன் நண்பனை டிரைவரா அனுப்பி வைக்கறாரே?அது எதுக்கு?அவரு வெட்டியாதானே இருக்காரு?ஐஏ எஸ் ஆபிசர் கிடையாதே?
5 லாஜிக் மிஸ்டேக் 5− தன் காதலியை 4 வருசமா கஸ்டடில வெச்சு மிரட்டுன வில்லனை ஒரு பலவீனமான தருணத்துல சந்திக்கும் வாய்ப்பு வர்றப்ப ஹீரோ அவன் கை ,காலை அக்கக்கா (அக்கு வேறு ஆணி வேறு) பிச்சு இருக்க வேணாமா?அசால்ட்டா 4 அடி பேருக்கு அடிச்ட்டு விட்டுட்டுப்போறாரே? (அவன் திரும்ப வந்து வில்லத்தனம் காட்டுவான்னு தெரியாதா? )
6 லாஜிக் மிஸ்டேக் 6− ஹீரோவொட அண்ணன் மும்பைல இருக்கார்,குடும்பத்தொட எந்த டச்சும் இல்ல. ஹீரோ ஒரே மாசம் பழகி காதலித்த காதலியை அண்ணன் எப்டி அடையாளம் கண்டுக்கறார்? தம்பியின் காதலி னு டேக் போட்டு கழுத்துல மாட்னாதான் சாத்தியம் #enpt
7 லாஜிக் மிஸ்டேக் 7−ஊர்ல தங்கச்சிக்கு 5 நாள்ல கல்யாணம்னு ஹீரோ தன் அண்ணன் கிட்ட சொல்றாரு,அதுக்குப்பின் வில்லனால் நெஞ்சுல ஒரு வாட்டி ,வயித்துல ஒரு வாட்டி சுடப்பட்டு குண்டு பாய்ந்து சீரியசா இருக்காரு.5 வது நாள் கல்யாணத்துக்கு ஆஜர் ஆகறப்ப எந்தக்காயமும் இல்ல,அதுக்குள்ள சரி ஆகீடுமா? #enpt
8 லாஜிக் மிஸ்டேக் 8− நாயகி 4 வருடங்களாக நாயகனைப்பிரிந்திருந்த சமயத்தில் ஒரு முறை கூட கால் பண்ணலை ,மெசேஜ் பண்ணலை,வாட்சப்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பலை,அதுக்கு என்ன காரணம்?னு ஆடியன்ஸ் கேட்பாங்களேங்கற கவலையே இயக்குநருக்கு இல்லை, #enpt
9 லாஜிக் மிஸ்டேக் 9− வில்லன் நாயகியை நிர்வாணப்படம் எடுத்து 4 வருசமா மிரட்டி காரியம் சாதிக்கிறான் ,பணம் சம்பாதிக்கிறான் ,ஆனா ஒரு தடவை கூட நாயகியை கில்மாக்கு கூப்பிடலை,க்ளைமாக்ஸ்ல ஹீரோ கிட்ட வில்லன் போன்ல சொல்றான் = உன் ஆளு ,தோழி 2 பேரும் என்கிட்ட தான் இருக்காங்க, நான் நினைச்சா அவங்களை என்ன வேணா பண்ண முடியும்!னு மிரட்றான் ,கடைசி வரை எதுவுமே செய்யலை,ஆட்சி கலைஞ்சிடும் ,தேர்தல் வரும்னு 2 வருசமா நம்ம இரண்டாம் கலைஞர் சொல்ற மாதிரி #enpt
10 லாஜிக் மிஸ்டேக் 10− நேருக்கு நேர் எதிரியை சந்திக்கும்போது எதிரியிடம் துப்பாக்கி இருந்தா எப்படி அவங்களை எதிர்கொள்ளனும்னு பல கமல்,ஜாக்கிசான் படங்கள்ல பாத்திருக்கோம்,அருகில் இருக்கும் ஜீப்ல ,பில்டிங்க் சுவர் ஓரம் மறையாம நேருக்கு நேர் நின்னு நெஞ்சைக்காட்டி M.சசிகுமார் குண்டு வாங்கறது நம்பும்படி இல்லை #enpt
விகடன் மார்க் ( யூகம்) 40
குமுதம் ரேட்டிங் ( யூகம்) 3.5 / 5
அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 2.5 / 5( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2 அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி, பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)
C.P.S கமெண்ட்-எனை நோக்கி பாயும் தோட்டா − முதல் பாதி வழக்கமான"கவுதம் காதல் மேஜிக் ,பின் பாதி நம்ப முடியாத ஆக்சன்"சீக்வன்ஸ்,மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதாவின்"ப்ரியா"கதை சாயல்(ரஜினி,ஸ்ரீதேவி )
,தனுஷ் ஆக்டிங்,பாடல்கள் ,(மறு வார்த்தை பேசாதே செம ஹிட்)இசை + ,பின்"பாதி திரைக்கதை − ,விகடன் 40 , ரேட்டிங் 2.5 / 5 #enainokkipaayumthottaa
0 comments:
Post a Comment