Saturday, November 30, 2019

எனை நோக்கி பாயும் தோட்டா - சினிமா விமர்சனம்

ennai nokki paayum thotta के लिए इमेज परिणाम

1972 ல்  மேஜிக் ரைட்டர் சுஜாதா  லண்டன் டூர் போனார், அந்த ஏரியா பின்னணில குமுதம் வார இதழில்  ப்ரியா என்ற பெயரில்  தொடர் எழுதினார், அது பின்னர் நாவலாக வெளிவந்து   செம ஹிட் ஆச்சு அதை  ரஜினி ஸ்ரீதேவி காம்போல  படமா 1978 ல சில பல சொதப்பல்களோட வெளிவந்தது


 அந்தக்கதைக்கருவை மையமா எடுத்துக்கிட்டு  இந்தப்படம் பண்ணி இருக்காங்க , ஆனா அட்லீ மாதிரி அப்பட்டமா ஆட்டையைப்போடாம லைட்டா முருகதாஸ் மாதிரி மேம்போக்கா எடுத்திருக்காங்க 


ஹீரோயின் ஒரு நடிகை , அவரை பார்த்ததுமே காதலிக்க ஆரம்பிக்க்றார் ஹீரோ , ஹீரோயினும் தான், வழக்கமான கவுதம் படங்கள் போல ஹீரோ ஹீரோயின் லவ் போர்ஷன்ம் ஜாலி பைக் ரைடு கார் ரைடு டூயட்னு படம் இடைவேளை வரை பிரமாதமா போகுது , சும்மா இல்லை 12 லிப் லாக் சீன் 4 டாப் ஆங்கிள் லோ கட் ஜாக் சீன் எல்லாம் இருக்கில்ல 


 இடைவேளைக்குப்பிறகுதான் கதையை ப்ரியா சாயலில் கொண்டு போகாம சொந்தமா  யோசிச்சு சொதப்பிட்டாங்க . ஹீரோவுக்கு ஒரு அண்ணன்  அவன் ஒரு போலீஸ் ஆஃபீசர் , அவருக்கு ஒரு ஆபத்து , ஹீரோயினுக்கு ஆபத்து . 2 பேரையும் ஹீரோ காப்பாத்துனாரா? இல்லையா? என்பது நம்ப முடியாத  காதுல பூ வகை திரைக்கதை 


ஹீரோவா தென்னக ப்ரூஸ்லீ தன்னடக்க தனுஷ், அசுரன் வெற்றிக்குப்பின் வந்திருக்கும் படம் என்றாலும் ஷூட்டின்ப்க் எல்லாம் 3 வருசம் முன்பே முடிச்ச படம் என்பது இளமையான தனுஷை பார்த்தாலே தெரியுது


ரொமான்ஸ் காட்சிகளில் கலக்கறார்,ஆக்சன் காட்சிகளில் சொல்லவே வேணாம்

megha akash के लिए इमेज परिणाम

ஹீரோயினா புதுமுகம் மேகா ஆகாஷ் .பேட்ட நாயகி.அதுக்குப்பின் புக் ஆகி ரிலீசுமாகிடுச்சு . கண்கள் , பல் ஈறுகள் , சிரிப்பு , கூந்தல் இவரது பிளஸ்
அந்தக்காலத்துல லிப் லாக் சீன் அப்டினா ஹீரோயின்கள் பதறுவாங்க இப்ப எல்லாம் ஒரு கிஸ் குடுக்கச்சொன்னா 10 கிஸ் தந்துட்டு அடுத்து வேற வேற அப்டினு நிக்கறாங்க . இவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு


 எம் சசிகுமார் ஹீரோவுக்கு அண்ணன். இவரது கேரக்டரை சஸ்பென்சா காட்றேண்ட்டு குழப்பி அடிச்ட்டாங்க, இன்னும் விரிவா காட்டி இருக்கலாம்

கிராமியப்படங்களீல் நிஜமான வெறியோடு ஃபைட் போட்டு பார்த்த நமக்கு இதில் ஏனோ தானோ என ஃபைட் போடறது உறுத்தலா தெரியுது

 இசை புதுமுகம் தர்புகா சிவா . மறு வார்த்தை பேசாதே செம ஹிட் ஆல்ரெடி, மற்ற பாடல்களும் குட் . பிஜிஎம் ஓக்கே   ரக ம்


 ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள்  அருமை 

 பின் பாதி திரைக்கதை இழுவை 

 ஹீரோ ஜெயிப்பார்னு எப்படியும் ஆடியன்சுக்கு தெரியும் என்பதால் இயக்குநரின் செத்து செத்து பிழைக்கும் டெக்னிக் எடுபடலை. பல  இடங்களில் வாய்ஸ்  ஓவர் படுத்துது


நச் வசனங்கள்


1  (காதலை வெளிப்படுத்துவதில்,காதல் கொள்வதில்) பொண்ணுங்க ஒரு ஸ்டெப் முன்னால எடுத்து வெச்சாதான் நாம 3 ஸ்டெப் வைக்க முடியும் #enainokkipaayumthottaa


2  அழகான பொண்ணு யாரையும் தேடிப்போனதில்லை , ஆனா உன் முகத்தைத்தாண்டி  எதையும் யோசிக்க முடியலை


என்"கூட வா,என் பெற்றோர்ட்ட உன்னை அறிமுகப்படுத்தறேன்
எத்தனை நாட்கள்?எத்தனை டிரஸ் பேக் பண்ணனும்?
கட்டுன புடவையோட கிளம்பி வா
புடவை கட்டிட்டு வா னு சொல்றே ?


4 எதில் நான் அவளிடம் வீழ்ந்தேன்?முகமா?அகமா?சுகமா?

5 சும்மா உட்கார்ந்துட்டு இருந்தா அதிசயம் நடக்காது,இறங்கி வேலை செய்யனும்,விளக்கை நாமதான் ஏத்தனும் #enpt

megha akash के लिए इमेज परिणाम



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேணனிடம் ஒரு சிறப்பு உண்டு.அவரது எல்லாப்படங்களிலும் ஹீரோ,ஹீரோயின்களை அவர்களை"இதற்குமுன் வேறு"யாரும்"இவ்வளவு அழகாக,ஸ்டைலிஷாகக்காட்டியதில்லை என அடித்துக்கூறும் அளவுக்கு கெட்டப்,உடை விஷயத்தில் மெனக்கெடுவார் .இவருக்கு நேர் எதிர் பாலா. வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் கெட்டப் மட்டும் விதிவிலக்கு,கமலின்லைப் டைம் அழகு கெட்டப் பேசும் படம் ,சாணக்கியன் (மலையாளம்). அவரது"படங்களில் அதிகபட்ச"அழகு"பெற்றது"சிம்பு


2  தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்டைலிஷ் ரொமாண்டிக் டைரக்டர் (விதிவிலக்கு நடுநிசிநாய்கள்)கவுதம் இயக்கி 3 ஆண்டுகள் லேட்டா வரும் எனை நோக்கி பாயும் தோட்டா fdfs @கேரளா,கோட்டயம் ,அனஸ்வரா 11 amஷோ
78 பேர் / 840 சீட்ஸ் ,அசுரன் வெற்றி இந்தப்படத்தின் மார்க்கெட்டிங்க்கு பெரிதாக உதவவில்லை போல #enainokkipaayumthotta

3  
கமர்ஷியல் மசாலாப்படங்களில் ஹீரோயினைக்காட்ற மாதிரி லவ் சப்ஜெக்ட் படங்களில் ஹீரோயின் ஓப்பனிங் சீனில் கிளாமராக்காட்டக்கூடாது,கிரேஸ் போய்டும்,இந்த விதியைஸ்ரீதர் தென்றலேஎன்னைத்தொடுவில் உடைத்தார் ,ஹீரோயின் வரும் அனைத்துக்காட்சிகளிலும் லோ கட் ,லோ ஹிப் சீன்கள் ,இதுலயும் டாப் ஆங்கிள் லோ கட் ஷாட் #enainokkipaayumthotta


நாயகியின் கேரக்டர் வடிவமைப்பு,திரைக்கதை பயணிக்கும்திசை எல்லாம் மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா வின் ப்ரியாவைஞாபகப்படுத்துது,கவுதம் ஒரு அட்லீ ஆகிடக்கூடாதுனு வேண்டிக்கனும் #enainokkipaayumthotta


 


Image may contain: sky, cloud, tree, house and outdoor





No photo description available.

சபாஷ் டைரக்டர்

1 வழக்கமா கவுதம் படங்கள்ல ஹீரோ 10 இடத்துலயாவது கெட்ட வார்த்தை பேசுவாரு,வில்லன் அதுக்கும் மேல. ஆனா இந்தப்படத்துல கெட்ட வார்த்தை சீனே இல்லை(நன்றி − ம்யூட் பண்ண சென்சார்)
2 படத்தின் கதாபாத்திரங்கள் ஆங்கில வசனங்களைப்பேசுவது அதிகமா இருக்கும்,இதுல அவாய்டு பண்ணி இருக்காரு
3 ஆயில் பெயிண்ட்டிங் மாதிரி இருக்கும் நாயகி தலையில ஆயிலே வைக்காம லூஸ் ஹேர் ல படம் பூரா உலவ விடுவது தேவதை அம்சம் என கொண்டாட வைக்கிறது
4 நாயகன் நாயகி லிப் லாக் சீன்கள் −12 (இ.மு − 7 இ.பி−5) #enpt


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  லாஜிக் மிஸ்டேக் 1 − ஒரு நடிகை குளிக்கற நிர்வாண போட்டோக்களை வெச்சு ஒருத்தன் மிரட்டி 4 வருசமா அவ"சம்மதம் இல்லாம சினிமா படங்கள்ல நடிக்க வைக்கறது சுஜாதா வின் ப்ரியா நாவல் வந்த காலகட்டத்துல ஓகே. த்ரிஷா வீடியோ ரிலீஸ் ஆன பின்பும் மார்க்கெட்டை அதை"வெச்சே மேல ஏத்துன இந்தக்காலத்துக்கு"பொருந்துமா?மார்பிங் னு சொல்லி போய்ட்டே இருக்கலாமே? #enpt



2  லாஜிக் மிஸ்டேக் 2 − சைடு வருமானம் பார்க்க காலேஜ் ல"யே சினிமா ஷூட்டிங் பல மாசம் நடத்த அனுமதிக்கறதா காட்சி வருது.காலேஜ் காம்பஸ்ல ஷூட்டிங் நடந்தா எவன் க்ளாசுக்கு போவான்?ஷூட்டிங் வேடிக்கை பாக்கத்தான் போவான், இதுக்கு அரசாங்கம் ஒத்துக்குமா? #enpt


லாஜிக் மிஸ்டேக் 3− ஹீரோவோட வாய்ஸ் ல கதை சொல்ற மாதிரி கதையை கொண்டு போறாங்க,புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சு சில இடங்கள்ல "போக்கிரி"படத்துல வர்ற மாதிரி,
"கஜினி"படத்துல வர்ற மாதிரினு இவங்களே கலாய்ச்சுக்கிட்டா நமக்கு என்ன வேலை? #enpt


லாஜிக் மிஸ்டேக் 4 − பாத்ததுமே முதல் பார்வைல காதலில் விழும் ஹீரோ தன்னை பைக்ல ஒரு இடத்துக்கு,டிராப் பண்ண முடியுமா?னு ஹீரோயின் கேட்கறப்ப அவரு போவாம தன் நண்பனை டிரைவரா அனுப்பி வைக்கறாரே?அது எதுக்கு?அவரு வெட்டியாதானே இருக்காரு?ஐஏ எஸ் ஆபிசர் கிடையாதே?


5  லாஜிக் மிஸ்டேக் 5− தன் காதலியை 4 வருசமா கஸ்டடில வெச்சு மிரட்டுன வில்லனை ஒரு பலவீனமான தருணத்துல சந்திக்கும் வாய்ப்பு வர்றப்ப ஹீரோ அவன் கை ,காலை அக்கக்கா (அக்கு வேறு ஆணி வேறு) பிச்சு இருக்க வேணாமா?அசால்ட்டா 4 அடி பேருக்கு அடிச்ட்டு விட்டுட்டுப்போறாரே? (அவன் திரும்ப வந்து வில்லத்தனம் காட்டுவான்னு தெரியாதா? )

megha akash hot के लिए इमेज परिणाम
6  லாஜிக் மிஸ்டேக் 6− ஹீரோவொட அண்ணன் மும்பைல இருக்கார்,குடும்பத்தொட எந்த டச்சும் இல்ல. ஹீரோ ஒரே மாசம் பழகி காதலித்த காதலியை அண்ணன் எப்டி அடையாளம் கண்டுக்கறார்? தம்பியின் காதலி னு டேக் போட்டு கழுத்துல மாட்னாதான் சாத்தியம் #enpt


7  லாஜிக் மிஸ்டேக் 7−ஊர்ல தங்கச்சிக்கு 5 நாள்ல கல்யாணம்னு ஹீரோ தன் அண்ணன் கிட்ட சொல்றாரு,அதுக்குப்பின் வில்லனால் நெஞ்சுல ஒரு வாட்டி ,வயித்துல ஒரு வாட்டி சுடப்பட்டு குண்டு பாய்ந்து சீரியசா இருக்காரு.5 வது நாள் கல்யாணத்துக்கு ஆஜர் ஆகறப்ப எந்தக்காயமும் இல்ல,அதுக்குள்ள சரி ஆகீடுமா? #enpt


8  லாஜிக் மிஸ்டேக் 8− நாயகி 4 வருடங்களாக நாயகனைப்பிரிந்திருந்த சமயத்தில் ஒரு முறை கூட கால் பண்ணலை ,மெசேஜ் பண்ணலை,வாட்சப்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பலை,அதுக்கு என்ன காரணம்?னு ஆடியன்ஸ் கேட்பாங்களேங்கற கவலையே இயக்குநருக்கு இல்லை, #enpt


9  லாஜிக் மிஸ்டேக் 9− வில்லன் நாயகியை நிர்வாணப்படம் எடுத்து 4 வருசமா மிரட்டி காரியம் சாதிக்கிறான் ,பணம் சம்பாதிக்கிறான் ,ஆனா ஒரு தடவை கூட நாயகியை கில்மாக்கு கூப்பிடலை,க்ளைமாக்ஸ்ல ஹீரோ கிட்ட வில்லன் போன்ல சொல்றான் = உன் ஆளு ,தோழி 2 பேரும் என்கிட்ட தான் இருக்காங்க, நான் நினைச்சா அவங்களை என்ன வேணா பண்ண முடியும்!னு மிரட்றான் ,கடைசி வரை எதுவுமே செய்யலை,ஆட்சி கலைஞ்சிடும் ,தேர்தல் வரும்னு 2 வருசமா நம்ம இரண்டாம் கலைஞர் சொல்ற மாதிரி #enpt


10 லாஜிக் மிஸ்டேக் 10− நேருக்கு நேர் எதிரியை சந்திக்கும்போது எதிரியிடம் துப்பாக்கி இருந்தா எப்படி அவங்களை எதிர்கொள்ளனும்னு பல கமல்,ஜாக்கிசான் படங்கள்ல பாத்திருக்கோம்,அருகில் இருக்கும் ஜீப்ல ,பில்டிங்க் சுவர் ஓரம் மறையாம நேருக்கு நேர் நின்னு நெஞ்சைக்காட்டி M.சசிகுமார் குண்டு வாங்கறது நம்பும்படி இல்லை #enpt






 விகடன் மார்க் ( யூகம்)  40

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5 / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 2.5 / 5( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-எனை நோக்கி பாயும் தோட்டா − முதல் பாதி வழக்கமான"கவுதம் காதல் மேஜிக் ,பின் பாதி நம்ப முடியாத ஆக்சன்"சீக்வன்ஸ்,மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதாவின்"ப்ரியா"கதை சாயல்(ரஜினி,ஸ்ரீதேவி )
,தனுஷ் ஆக்டிங்,பாடல்கள் ,(மறு வார்த்தை பேசாதே செம ஹிட்)இசை + ,பின்"பாதி திரைக்கதை − ,விகடன் 40 , ரேட்டிங் 2.5 / 5 #enainokkipaayumthottaa
megha akash hot के लिए इमेज परिणाम

Sunday, November 24, 2019

ஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்

adithya varma posters के लिए इमेज परिणाम

ஹீரோ  ஒரு ப்ரைவேட் மெடிக்கல் காலேஜ்ல ஹவுஸ் சர்ஜன் படிப்புல இருக்கார் , அவருக்கு ஜூனியரான ஹீரோயினை பார்த்ததும் காதல் வருது. இதயம் முரளி மாதிரி  எல்லாம் பம்மாம அடுத்த சீன்லயே கிஸ் அடிச்சுடறாரு. ஹீரோயினும் தேமேனு அதை வாங்கிக்குது, என்னமோ ரேஷன் கடைல குடுக்கற இலவச கோதுமை யை வாங்கற மாதிரி, ஹீரோயின் ரொம்ப அமைதியான டைப் , அதனால கில்மா க்கு கூப்பிட்டப்பக்கூட ஹீரோவை எதிர்த்து எதுவும் பேசல , அதான் அமைதியான டைப் ஆச்சே? 2 பேரும் காலேஜ் முடிக்கறதுக்குள்ள 549   தடவை தப்பு பண்ணீடறாங்க , இதை வேலை வெட்டி இல்லாம எண்ணிட்டு இருந்திருக்கான் பாருனு என்னை யாரும் கேட்டுடாதீங்க , அந்த கவுண்ட்டிங்கை ஹீரோ , ஹீரோயின் 2 பேருமே சொல்றாங்க 

அதான் மேட்டர் முடிஞ்சுதே , இனி என்னத்தை திரைக்கதைல சொல்லிடப்ப்போறாங்க அப்டினு யாரும் அல்ப சொல்பமா நினைக்க வேண்டாம்.


 லவ் மேட்டர் , மேட்டர் பண்ண மேட்டர் எல்லா மேட்டர்களும்  வீட்டுக்கு தெரிஞ்சுடுது, அடுத்த நாளே மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி ஹீரோயினுக்கு மேரேஜ் பண்ணீ வெச்சுடறாங்க , கல்யாண மண்டபம் எல்லாம் 6 மாசம் முன்பே புக் ;பண்ணனும், எப்படி அவங்களுக்கு மட்டும் மண்டபம் கிடைச்சுது?னு மடத்தனமா யாரும் கேட்க வேண்டாம், சினிமான்னா அப்டித்தான்


 அதுக்குப்பின்  திரைக்கதைல ஒரு பெரிய தொய்வு . ஹீரோ தம் அடிக்கறாரு , சரக்கு அடிக்கறாரு .கஞ்சா அடிக்கறாரு , அபின் அடிக்கறாரு, மொத்தத்துல நம்மை நோக அடிக்கறாரு


2 வது பாதில ஒரு கிளு கிளு வேணாமா , ஹீரோ ஒரு நடிகையை சந்திக்கறாரு. 

 என்னமோ பிளஸ் டூ ;படிகறப்ப உங்க பிசிக்ஸ் புக் தர்றீங்களா>னு கேட்கற மாதிரி ஹீரோ நடிகை கிட்டே எனக்கு பிசிக்கலா ஒரு ஹெல்ப ;பண்ண முடியுமா?னு ஹீரோ ஒரு பிட்டைப்போடறாரு, நடிகைக்கு அதிர்ச்சி


 இப்போ ஹீரோ நடிகை கூட மேட்டர் பண்ணாரா?? க்ளைமாக்ஸ் யார் கூட பர்மணண்ட் க்ளைமாக்ஸ் ரெகுலரா பண்ணப்போறார் என்பதை வெண் திரையில் காண்க 

ஹீரோவா த்ருவ் விக்ரம்  புதுமுகம் மாதிரியே தெரியல அவ்ளோ இன்வால்வ்மெண்ட்டோட நடிச்சிருக்காரு , பல காட்சிகள் அப்பா விக்ரம் நடிச்ச சேது படத்தை  நினைவு ”படுத்தறார்.:குறிப்பா தண்ணீ அடிக்கற காட்சி , தம் சீன் எல்லாம் உணர்ந்து நடிச்சிருக்காரு 
\
 படத்துல மொத்தம் 29 லிப் டூ லிப் சீன்கள்  தமிழ் சினிமால இதுக்கு முன் கிஸ் சாதனை நிகழ்த்தியவர் கமல் படம் சூரசம்ஹாரம், நாயகி நிரோஷா 19 லிப் கிஸ் + நாக்கு கிஸ் 1

ஹீரோயினா  பனிதா சந்துனு ஒரு ஃபிக்ர். பாவமா இருக்கு, ட்விட்டர் ச்ந்து அவரை க;லாய்க்கப்ப்லோகுது


 தமிழன் நடிகைக்கு எது பெருசா இருந்தாலும் பொறுத்துக்குவான் , பல் பெருசா இருந்தா பொறுத்துக்க மாட்டான் ( புன்னகை அரசி கே ஆர் விஜயா, புன்னகை இளவரசி சினேகா இவங்களுக்குக்கூடக்த்தான் பல் பெருசு, ஆனா நாம ரசிக்கலைல்யா?னு கேட்கக்கூடாது )

ஹீரோயின் இடது கண் இமை மேல ஒரு ம்ரு இருக்கு அழகா இருக்கு . மற்றபடி நடிப்பு சுட்டுப்போட்டாலும் வர்லை


 ஒரிஜினல் வெர்ஷன் அர்ஜூன் ரெட்டி ஹீரோயின்   ஷாலினி பாண்டே நடிச்சதுல , ஹிந்தி வெர்ஷன் கபிர்சிங்க் நாயகி  க்யாரா அத்வானி நடிச்சதுல பாதி கூட இந்த பாப்பா நடிக்கல. அவருக்கு நடி[ப்பு வர்லைங்கறதுக்காக முக்க்கியமான க்ளோசப் ஷாட்களில் அவரது முகத்தைக்காட்டாமயே  படம் பிடிச்ச இயக்குநருக்கு ஒரு கொட்டு , இதே ; பாலாவா இருந்தா முகரையைப்பேத்து  இருப்பாரு 


ஹீரோவுக்கு நண்பரா வர்ற அன்புதாசன் கவனிக்க வைக்கறார்


 நடிகையாக வரும் ப்ரியா ஆனந்த் ரொம்ப இளைச்சிருக்கார் ., மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்,காதுனு  பழமொழி சொன்ன  ஆளை தேடிட்டு இருக்கேன்

 நடிகையா எத்தனையோ பேரை சந்திச்சவரு சிடுமூஞ்சி டாக்டர் கிட்டே ஏன் காதல்ல விழறார் என்பதற்கு பதில் இல்லை 

 இசை சுமார் தான். ஒளீப்பதிவு ஓக்கே ரகம் 

  படம் நீளம் அதிகம் நீலமும் அதிகம்



 படத்தில் கவனிக்க வைத்த மற்ற நடிகர்களில் கடலோரக்கவிதைகள் ராஜா ஹீரோவுக்கு அப்பாவா வர்றார், பாட்டியா லீலா சாம்சன்

adithya varma heroin के लिए इमेज परिणाम

நச் வசனங்கள்

1  அழகான பொண்ணுங்க Loyal லா இருக்க மாட்டாங்க ,மீரா,உன் பக்கத்து சீட்ல ஒரு குண்டு பொண்ணை உட்கார வைக்கறேன்,அவங்க கடைசி வரை நட்புக்கு நம்பிக்கை யா இருப்பாங்க ( சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ,சிவப்பு+கறுப்பு டிரஸ் போட்டவன் திருட மாட்டான்கற மாதிரி இருக்கு ) #aadhithyavarma


2  நீ பொறுமையாவே இருக்க மாட்டியா? உன்னை பெத்தாங்களா?  நீயே எகிறிக்குதிச்சு வந்துட்டியா?


18 +
ஓ,இங்கேதான் நம்ம பர்ஸ்ட் நைட்டா?
என்னது?பர்ஸ்ட்நைட்டா? 549 வது நைட்னு நினைக்கறேன்
அடப்பாவி! எண்ணிட்டு இருந்தியா?எப்படி கரெக்டா சொல்றே?
கரெக்டா னு நீ எப்டி கண்டுபிடிச்சே?நீயும் எண்ணிட்டு இருந்தியா? #Adhithyavarma


4  டியர்  என் கிட்டே உங்களுக்கு பிடிச்சது என்ன?

 உன் சுவாசிக்கும் ஸ்டைல் , உன் ப்ரீத்திங் ஸ்டைல் எனக்குப்பிடிக்கும்

5  ஏண்டா அவ  ஃபோனை எடுக்கலை

 தெரில, அவ எடுத்தா ஏன் ஃபோனை எடுக்கலை?னு நீயே கேட்டுக்கோ


6 நாம் சந்தோஷமா இல்லாத உலகத்துல யாருமே சந்தோஷமா இருக்கக்க்கூடாது

7  பொண்ணுங்க காதல்ல விழுந்தா அவங்களுக்கான ப்ரியாரிட்டிகள் மாறுபடும்

8  நாம விரும்பறவங்க இறந்து போறதுங்கறது வேற ,நம்மை விட்டுட்டுப்போறதுங்கறது வேற. விட்டுட்டுப்போனதுல வலி அதிகம் ( மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்தறது இந்த ஒத்த டயலாக் தான்) #Adhithyavarma

9  (குடிகாரனா இருந்தாலும் சரி ,தம் அடிக்கறவனா இருந்தாலும் சரி )
லைப்ல ஒரு தடவை பெல் அடிக்கும் நம்ம பாடி ,இனி எனக்கு தாங்கற கெப்பாசிட்டி இல்லைனு ,அத்தோட எல்லாத்தையும் நிறுத்திடனும் #aadhithyavarma



10 என் கிட்ட எனக்கேபிடிச்ச ஒரே விஷயம் என்னோட பர்பெக்சன்தான்.என்னோட முன்னேற்றத்துக்காக என் தனித்துவத்தை இழக்க மாட்டேன்""#Adhithyavarma

11   நாள் பட்ட சோகத்துக்கு குட் பை சொல்லிட முடியாது , ஃபிளாஸ்பேக் நம்மை துரத்திட்டே இருக்கும்


12   குடிச்சுட்டியா?

 ம்


முடிச்சுட்டியா?

 டேய், ஓவரா திங்க் பண்ணாத , ஓவர் ஸ்மார்ட்னெஸ் உடம்புக்கு ஒத்துக்காது


\
priya anand hot के लिए इमेज परिणाम

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  தமிழ் சினிமாக்குனு ஒரு செண்ட்டிமெண்ட்ஸ் உண்டு.ஹீரோ போதைப்பழக்கத்துக்கு ( குடி,தம் அல்ல , ட்ரக் அடிக்ட்) அடிமை ஆனவனா காட்னா அந்தப்படம் பிளாப் ,உதா− சூரசம்ஹாரம் (விதிவிலக்கு − தூங்காதே தம்பி தூங்காதே) . அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகப்போகுதுனு தெரில

2  படத்துக்கு ஓப்பனிங் சுத்தமா இல்லை ., 18 பேருதான் , அட்லீஸ்ட் 18+ படத்துக்கு ஒரு 19 பேராவது வந்திருந்தா மேட்சிங்கா இருந்திருக்கும்



சபாஷ் டைரக்டர்

1  ஈ அடிச்சான்  காபிம்பாங்களே சீன் பை சீன் கேமரா ஆங்கிள் முதற்கொண்டு அர்ஜூன் ரெட்டியை காப்பி பண்ணிய திறமை 

2  தமிழ்க்கலாச்சாரத்துக்கு  ஒத்து வராத சில காட்சிகளை வெட்டியது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1 − ( கன்ட்டினியூட்டி மிஸ்சிங்)

ஹீரோ பைக் ல ஹீரோயின் முத முத ஏறும்போது ஒரு ஹேர் ஸ்டைல் , பைக்ல ட்ராவல் பண்றப்ப ஒரு ஹேர்ஸ்டைல் ,பைக்கைவிட்டுஇறங்கும்போது ஒரு ஹேர்ஸ்டைல் ( காத்துல கலைஞ்சிருக்கும்னு சால்ஜாப் சொல்ல வழியில்லை, டோட்டலி டிப்ரண்ட் ) #Aadhithyavarma



லாஜிக் மிஸ்டேக் 2 − ஹீரோ வும் ,ஹீரோயினும் மொட்டை மாடி மாதிரி ஒரு லொக்கெஷன்"ல மெத்தையைப்போட்டு ,மேல மெத்தை விரிப்பை விரிச்சு விட்டு ரொமான்ஸ் பண்றாங்க ,சந்தோஷம்,ஆனா 2பேரும செருப்பை/கட்ஷூ வை கழட்டவே இல்லை. ஒரிஜினல்ல தெலுங்குல,ஹிந்தி ல அப்டி இருந்தா இருக்கட்டும் ,தமிழ்க்கலாச்சாரப்படி செருப்பை கழட்டிட்டு ரொமான்ஸ் பண்ணி இருக்கலாம் (எடு செருப்பை னு யாரும் கமெண்ட் போட வேணாம் ) #AdhithyaVarma

3  க்ளைமாக்ஸ் ல ஹீரோயின் சொல்றாரெ  நீ நடிகை கூட நெருக்கம்கறதை  பேப்பர்ல பார்த்தேன்னு அதை விஷூவலா  காட்டி இருக்கனும்.பேப்பர் நியூசோ அல்லது டி வி நியூஸ்லயோ கிசு கிசு வர்றதை காட்டனும்


4 ஹீரோயின் உடம்பு பூரா ஹோலி பொடி தடவுன வில்லனுக்கு ஹீரோ தண்டனை தர்றாரு ஓக்கே ஆனா காலேஜ் நிர்வாகம்   கண்டுக்கவே இல்லையே?


5  க்ளைமாக்ஸ்ல ஹீரோயினோட அப்பா தப்பெல்லாம் என் மேல தான் என டிராமா வசனம் பேசுவது எடுபடலை


6 பொறுப்பே இல்லாத முன் கோபக்காரரான கஞ்சா பார்ட்டியான ஹீரோ தன் அப்பாவோட அம்மா இறந்ததுக்கு அப்பாக்கு ஆறுதல் சொல்லும் வசனங்கள் கூட பொருந்தலை

7  ஹீரோ என்ன சொல்ல வர்றாருனு ஈசியா நமக்கெ புரியுது, ஆனா ஹீரோவோட அப்பா டேய் இவன் என்னடா சொல்ல வர்றான்?னு திரும்ப் திரும்ப கேட்பது கொடுமை 


8 ஹீரோயின்  க்ளைமாக்ஸ் ல  தன்னிலை விளக்கம் தர்றாரு அதையும் விஷூவலா காட்டி இருக்கனும்,  என் புருசன் என்னை தொடவே இல்லை என புனிதம் காட்டுவது எல்லாம் நாடகத்தனம்



 விகடன் மார்க் ( யூகம்)   42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5 / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்  3/ 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-
ஆதித்ய வர்மா − அர்ஜூன் ரெட்டியின் அச்சு அசல் ரீமேக்.சில"சீன்கள் ஒரிஜினலில் உள்ளது இதில் இல்ல,புதுசா,எதையும் சேர்த்தலை .( அப்படி சேர்த்ததாலதானே பாலா வை தூக்கிட்டாங்க) துருவ் விக்ரம் நடிப்பு குட்.நாயகி நடிப்பு ,தோற்றப்பொலிவு ஓகே ரகம்.க்ளைமாக்ஸ் ல நாயகி இன்னும் நல்லா நடிச்சிருந்திருக்கலாம்,ஓவர் ஆல்"படம் ஓகே தான் ,விகடன் 42 , ரேட்டிங் 3 /5 ,முக்கியமான காட்சிகளில் ஹீரோயினுக்கு க்ளோசப் ஷாட் வைக்காமல் ஹீரோவுக்கு"மட்டுமே க்ளோசப் ஷாட் வைத்தது உறுத்தல் ,லிப் டு லிப் சீன்கள் 19. கமல் கூட இவ்ளோ பண்ணலை #AdhithyaVarma


 கேரளா  கோட்டயம் தன்யா தியேட்டரில் படம் பார்த்தேன், தியேட்டர் கெபாசிட்டி 259 சீட்ஸ், ஃபுல் ஆனது 18 சீட்ஸ்,  இடைவேளை முடிஞ்சதும் ஓடிப்போனவங்க 6  பேர். படம் முடியும் முன்னே போனவங்க 4 பேர்


priya anand hot के लिए इमेज परिणाम

Friday, November 15, 2019

ஆக்சன் -சினிமா விமர்சனம்

சுந்தர் சி  விஷால்  காம்போ ல இது 3 வது படம், மதகஜ ராஜா எப்போ  ரிலீஸ் ஆகும்கறதும் ரஜினி எப்போ அரசியலுக்கு வரப்போறாரு , நம்ம இரண்டாம் கலைஞர் எப்போ முதல்வர் ஆகப்போறார்ங்கறதும்  யாருக்கும்  தெரியாது



மாநில முதல்வர்க்கு 2 பசங்க ( உடனே கலைஞர் , ஸ்டாலின், அழகிரி ரெஃப்ரென்ஸ்னு குதிக்கக்கூடாது)ஒருத்தரு மிலிட்ரி ஆஃபீசர் , இன்னொருத்தர் நாளைய முதலவர் . இவங்க கட்சி கூட கூட்டணி பேச்சு வார்த்தைக்கு மத்திய கட்சில இருந்து ஒரு பெரிய கட்சித்தலைவர் வர்றாரு , அவரை தீவிரவாதிகள் போட்டுத்தள்ளிடறாங்க ( ராஜீவ் காந்தி  கொலை ரெஃப்ரென்ஸ்)

 கொலைப்பழி மாநில முதல்வர் குடும்பம் மேல விழுது .இதை மாநில முதல்வரின்  மகனான ஹீரோ  எப்படி கொலைப்பழியில் இருந்து காப்பாற்றி வில்லன்களை பிடிக்கிறார் என்பதே க்தை 


 விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் , ஹாலிவுட் படங்கள் பலவற்றில் இருந்து அட்லீ ஒர்க் ( திருட்டு வேலை ,கவுரவமா சொல்லனும்னா இன்ஸ்பைரேஷன்) பண்ணி இருக்காரு இயக்குநர்   சுந்தர் சி 


ஹீரோவா புரட்டாசி தளபதி விஷால் . மிலிட்ரி ஆஃபீசர் என்பதால் மிலிட்ரி கட்டிங் ஜிம் பாடி , ஜம் ஃபைட் என அசத்தறார். விக்ரம் , டிக் டிக் டிக் படத்துல கமல் ஓடிட்டே இருப்பாரே  அது மாதிரி படத்துல பாதி நேரம் இவருக்கு ஓடறது துரத்தறதுதான் வேலை . நல்லா பண்ணி இருக்கார் 

 ஒரு ஹீரோயின் ஐஸ்வர்ய லட்சுமி . சுமார் ஃபிகர்  50 மார்க் போடலாம். அதிக காட்சிகள் இல்லை

 இன்னொரு நாயகி  லெமனா பள பளக்கும் தமனா.  அயர்ன் பாக்ஸ் அழகி என இளைஞர்களால் அழைக்கப்படுபவர் அதை பொய்யாக்க  என்னென்னமோ டைட் டாப்ஸ் எல்லாம் போட்டு கிளாமர் காட்றார். எந்த கேவலமான கட்சி கூட்டணிக்கு வந்தாலும் வேணாம்னு அனுப்பாம சேர்த்துக்கற நம்ம தானைத்தலைவர் கட்சி மாதிரி நாங்க எல்லாம் எந்த நடிகை கிளாம்ர் காட்னாலும் வருக வருக முடிஞ்ச வரை சீன் தருக என வரவேற்போம்

தமனாவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு, சேசிங்கும் உண்டு 


டி வி ஃபிகர் ச்மோஷா பூரி சாரி சன்சா பூரி தான் வில்லி . நல்ல ஃபிகர், என்னைக்கேட்டா இந்த ஃபிகரை மெயின் ஹீரோயினா போட்டிருக்கலாம்


 காமெடியன் கற பேர்ல யோகி பாபு 4 சீன் வந்து 2 ஜோக் சொல்றாரு, சி செண்ட்டர் ஆடியன்ஸ் அவர் வரும்போது கை தட்னாங்க 


பழ கருப்பையா  , ராம்கி , சாயாசிங்  என நட்சத்திரப்பட்டாளம் உண்டு 


 படம் செம ஸ்பீடா போகுதுனு எல்லாரும் சொல்லனும்கற்துக்காக படம் பூரா நாயகன் நாயகி ஓடிட்டே இருக்காங்க 


இசை ஹிப்ஹோப் தமிழா , எடுபடலை பாட்ல்கள் . பின்னணி இசை பரவால்லை

 ஆக்சன் காட்சிகள் நல்லா பண்ணி இருக்காங்க  குறிப்பா ஹீரோ வில்லி  ஃபைட் சீன்   அருமை . அதை ஏதோ ஹாலிவுட் படத்துல இருந்து உருவி இருக்காங்கனு பட்சி சொல்லுது

சுந்தர் சி யின் டச் எங்கேயும் இல்லை, வில்லிக்கு ஒரு லோ கட் சீன் உண்டு ஆனா சைனீஷ் படங்களில் சீன் வரும்போது அலை அலையா போட்டு மறைக்கற மாதிரி சாதா க்ளிடவேஜ் சீனைக்கூட  மறைக்கும் உத்தியை வன்மையாகக்கண்டிக்கிறேன்

லண்டன் ,ம் இஸ்தான்ஃபுல் , பாகிஸ்தான்  அல்கோர்னியா  என ஃபாரீன் லொக்கேஷன்கள்  ஒளிப்பதிவு அருமை 

 ஆக்சன் ரசிகர்களுக்குப்பிடிக்கும்





 நச் வசனங்கள்

1  திருடறதுக்கு பயப்படறவன் பிச்சை எடுப்பான் ,பிச்சை எடுக்க கூச்சப்படறவன் திருடுவான்.இந்த இரண்டையும் செய்ய கூச்சப்படாதவன்தான் லஞ்சம் வாங்குவான் #action

2  ஹீரோயின் = ஒரு மாசத்துக்கு முன்ன நீங்க தூங்கறப்ப உங்களுக்குக்குடுத்த முத்தத்தோட கறையே இன்னும் போகல,அதுக்குள்ள அடுத்த முத்தமா?
கறை போகாத இடம் எதா இருக்கும்?
கண்டுபிடிங்க


3 கறுப்பா இருக்கற பசங்களுக்குத்தான் களையான பிகருங்க மாட்டுது #action


4 நெருப்பை அப்புறமா அணைக்கலாம்னு விட்டுடக்கூடாது #action


5  ஓடறவனுக்குப்பல வழி,ஆனா துரத்தறவனுக்கு ஒரே வழி தான் #action

6  என் கிட்ட வில் பவர் தவிர எந்த பவரும் இல்ல #action

7 உனக்கு அவ ஒருத்தி கிடைக்கலைனு கவலைப்படறே!எனக்கு ஒருத்தி கூட
கிடைக்கலைனு கவலை #action


8  உங்களுக்கு சிவப்பா இருக்கற பொண்ணுங்களை விட கறுப்பா/மாநிறமா இருக்கற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்,சரியா?
எப்டி கரெக்டா சொல்றே?
கரெக்ட் பண்றவனுங்க பூரா இந்தபார்முலாவைத்தானடா யூஸ் பண்றீங்க? #action


9  வில்லன் பஞ்ச்−நான் 1000பேரை எதிர்த்து நின்னு இருக்கேன் ,ஆனா ஒரே ஒரு ஆளைக்கூட எதிர்பார்த்து நின்னதில்லை #action


 


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  கேரளா ,கோட்டயம் தன்யா 63 ஆடியன்ஸ் சூழ புரட்டாசித்தளபதியின் "ஆக்சன்" #action


காமெடி சிச்சுவேஷன் இல்லாத படம் எடுக்கும்போதெல்லாம் சுந்தர்.சி சந்தேகத்துக்கு ஆளாகிறார்,இயக்கியது அவர்தானா?மண்டபத்துல யாராவது உதவி பண்ணாங்களா?னு. உதா அன்பே சிவம் #action


இன்ட்டர்வெல் பிளாக் இணைந்த கைகள் இடைவேளை சீன் போல #action


4  மோடி பார்முலாவை சுந்தர்.சி பாலோ பண்றாரு,வில்லன் முஸ்லீம்,பாகிஸ்தான் அடைக்கலம்குடுக்குது.ஹீரோ தனி ஆளா நாடு விட்டு நாடு போய் அங்கே இருக்கற 42658 அடியாட்களை அடிச்சுப்போட்டுட்டு வில்லனைப்பிடிக்கறாரு #action







சபாஷ் டைரக்டர்

1  குறைவான சம்பளம் தந்து 3 நாயகிகளை புக் பண்ணினது . முடிஞ்சவரை கிளாம்ர் காட்டவெச்சது


2  தயாரிப்பாளர் காசுலயே  ஓசி டூர் போனது


3  தன் மனைவி குஷ்பூ காங் கட்சியில் இருந்தாலும் அதன் கூட்டணிக்கட்சியான  திமுக வை நக்கல் பண்ணூவது போல் காட்சிகள் வைத்தது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1   பிரதமரை , முதல்வரைக்கொல்ல போடப்படும் பிளானை ஹீரோ முறியடிப்பது ஆல்ரெடி பல படங்கள்ல வந்தாச்சு , தவிர்க்கலாம், அல்லது திரைக்கதையில் ஜிம்மிக்ஸ் காட்டலாம், இப்படி  அரைச்ச மாவை வேகவேகமா அரைக்கக்கூடாது


2   ஓப்பனிங்க்ல  ஹீரோயின் கீழே கார் ஷெட் வந்து ஃபோனைஒ  எடுத்து  ரிட்டர்ன் போறப்ப அடியாட்கள் அவர் குரல் வளையை கட் பண்ணிடறாங்க . ஹீரோ எண்ட்ரி ஆகும்போது அவரால பேச முடியல 5 அடி தூரத்துல  ஹீரோ . தன் கைல இருக்கற செல் ஃபோனை ஹீரோ முதுகு  மேல எறிஞ்சிருந்தா திரும்ப வெச்சிருக்கலாமே?


3   டைட் செக்யூரிட்டி .4 அடுக்கு பாதுகாப்பு என்றால்  எப்படி இருக்கும்னு தயவு செஞ்சு இயக்குநர் உணரனும் முதல்ல 


4   பாகிஸ்தான் , இஸ்தான் ஃபுல் பேங்க்  இங்கே எல்லாம் ஒர்க் பண்ற ஆஃபீசர்கள் மடையர்களா நினைக்கக்கூடாது

5  போலீஸ்  ஆஃபீசர்ஸ் மிலிட்ரி ஆஃபீசர்ஸ் எல்லாருக்கும் ஹேக்கிங் பண்ற தொழில் வித்தை எல்லாம் தெரியாது









 விகடன் மார்க் ( யூகம்)   39

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்   2.25 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-ஆக்சன் − சுந்தர்.சி ,விஷால்,தமனா 3 பேரும் புரொடியூசர்"காசுல பாகிஸ்தான்,லண்டன் னு பல நாடுகளை சுத்திப்பார்க்கறதுக்காக எடுத்த"படம் போல,காமெடி சுத்தமா இல்ல,ஒரு தமிழ்நாட்டுக்கு ஒரு அட்லீ போதாதா?காதுல 10 முழம் பூ, விகடன் 39 ,ரேட்டிங் 2.25 / 5 #action


Saturday, November 02, 2019

ரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்?!!

1  மன்னா! மகாராணியைப்புகழ்ந்து பரிசு பெற வந்துள்ளேன்

புலவரே!அதெல்லாம் பழசு ,யுக அழகி ,மொட்டை மாடி போட்டோசூட் பேரழகி ரம்யா பாண்டியன் பற்றி பாடும்

==============


2  மன்னா! இந்த சமஸ்தானத்தின் கவர்னர் ஆக எனக்கு ஆசை ,என்ன வழி?

பக்கத்து சமஸ்தானம் போய் "இங்கே தாமரை நிச்சயம் மலரும்"னு டெய்லி சொல்லு,உன்னை கவர்னர் ஆக்கிடுவாங்க

===============


3  மன்னா!பதுங்கு குழியில் படுத்து தூங்காதீர்கள் என்றால் கேட்கிறீர்களா?

ஏன்?என்ன ஆச்சு?

ப"தூங்கு"குழினுபோர்டு வெச்டடாங்க பாருங்க

=================

4   தளபதி!என் வாளுக்கு வேலை வந்து விட்டது

பாவம் ,உங்களுக்குத்தான் எந்த வேலையும் கிடைக்க மாட்டேங்குது


=================


5  அமைச்சரே!மாதம் மும்மாரி பொழிகிறதா?

அது தெரில,ஆனா மாரி1  மாரி 2  ரிலீஸ் ஆகிடுச்சு மாரி3 வந்துடுச்சுன்னா  மும்மாரி  ஆகிடும்

====================


6  சாகோ போலாம்னு இருக்கேன்

வாழற வயசு,ஏன் சாக போறே?

=================


7  தலைவரே! நம்ம கட்சி மாநாடு க்கு கூட்டம்வருமா?

மெகா மாநாடு னுபேரு மாத்துங்க ,அட்லீஸ்ட் சிம்பு ரசிகர்களாவது வரட்டும்

-------------------- 


8 தலைவரே!உலகம் பூரா கொண்டாடும் ரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்னு போராடறீங்களே?ஏன்?பிகர் ஷோக்காத்தானே கீது?

"ரம்"யா பாண்டியன் பேர்லயே மது இருக்கே?

=================


9   மன்னா!போர் வரும்போது பாத்துக்கலாம்னுசொன்னீங்களே!வந்துடுச்சு

சரிபோர் வந்துடுச்சு,போரை பார்ப்போம்

அப்ப போரிட வர்லையா?

அய்யோ,போர் வரும்போது போரை பாத்துக்கலாம்னுதான் சொன்னேன் போரிடறேன்னு சொல்லலையே?

=====================

 10     கவர்னர் ஆகனும்னு தலைவருக்கு ரொம்ப  ஆசை ,எதுனா குறுக்கு வழி இருக்கா?

தமிழகத்தில் தாமரை மலர்நதே தீரும்னு  டெய்லி    100 ^தடவை இம்ப்போசிசன் எழுதுங்க


=================


11மன்னா!போர் "நடக்கும் "சூழல் நிலவுது

அப்போ நாம "ஓட வேண்டிய நேரம்  


=========

12   மன்னா!அரண்மனை யில் உள்ள கஜானாக்களை இணைக்கப்போறீங்களா?ஏன்?

பொருளாதார தேக்கநிலையை சரிப்படுத்தத்தான்

========

13  மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே?
;
ஏன் மன்னா?உங்களுக்கு கண்ணு தெரியாதா?

=======

14  மன்னா!பல்லக்குத்தூக்கிகளுக்கு பல மாத சம்பள பாக்கி

அப்போ பல்லக்கு தூக்கிகளை தனியாருக்கு ஏலம் விட்ருவோமா?

=======

15   மன்னா!நீங்க போர்க்களத்துக்கு வந்து மாமாங்கம் ஆகுது

அப்டியா?ஒரு தடவை தோத்துட்டா அந்தஇடத்துக்கு மறுபடி நான் போக மாட்டேன்

==================