Thursday, October 10, 2019

ரகசியமா டைரிலயே எழுதி,,,,,

1   நம் நாடு, சர்வாதிகாரத்தை நோக்கி போகிறது. -ராகுல்:

 மோடி டிரம்ப்ப்பை போய் சந்திச்சதை சொல்றாரா?

சர்வ அதிகாரமும் (133) திருக்குறள்ல தான் இருக்கு, நாடு அதன்படி அல்லது அதை நோக்கி பயணிப்பது நல்லதுதானே?

================
 2 
ஊடகங்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மாற்றுக் கருத்துகளுக்கு நாட்டில் தற்போது இடமில்லை.-ராகுல்:

 மாற்றுக்கருத்து இருந்தா ரகசியமா டைரிலயே  எழுதி அப்பப்ப எடுத்து பார்த்துக்க வேண்டியதுதான்

==================
 3 
 பிரதமர் மோடியை யார் விமர்சித்தாலும், சிறையில் தள்ளப்படுகின்றனர்.-ராகுல்:
 

நீங்க கூடத்தான் விமர்சிச்சீங்க? இப்போ ஜெயில்லயா இருக்கீங்க?

=============
4  : 'சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது-ஸ்டாலின்
 

 இடைத்தேர்தல் வருதா? சரி சரி புரியுது


==============
; 5  பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதற்காக அவர்களுக்கு  தண்டனை.. தேசிய பாதுகாப்பு சட்டப்படி வழக்கு. இது என்ன கொடுமை!-ஸ்டாலின்

 இது தப்புனு நீங்க ஒரு கடிதம் மோடிக்கு எழுதுங்க

=================
 
6 : பல நாடுகளில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும், 'ஆன்லைன்' மூலம் வழங்கப்படுகின்றன. அரசு உதவிக்காக அங்கு யாரும், அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. அந்த நிலையை, தமிழகத்திலும் ஏற்படுத்துவோம். அதற்கேற்ப, இ-சேவை வளர்ச்சி இருக்கும் = தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலர் சந்தோஷ்

 அப்போ அரசு அலுவலகங்களீல் பணி புரிவோர் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படுமே? அவங்க போராட்டம் பண்ண மாட்டாங்களா?

================
7     ஜெ., வழியில் செயல்படும் முதல்வர், இ.பி.எஸ்., வெளிநாடுகளுக்குச் சென்று, தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு, பல  கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை, தமிழகத்தில் துவங்குவதற்கு, பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். -அமைச்சர் சம்பத்


2021லும் அதிமுக ஆட்சி   மலர்ந்தால்தான் அது பூர்த்தி ஆகும்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

=====================

8  நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவர். அதற்காக, எங்கள் கட்சியினர் பாடுபடுவர்.-தொல்.திருமாவளவன்:
 

 பார்த்துக்கொஞ்சம் போட்டுக்கொடுங்க ஸ்டாலின் அவர்களே

================
 9  ராதாபுரம் மறு ஓட்டு எண்ணிக்கையிலும், தி.மு.க., தான் வெற்றி பெறும்-தொல்.திருமாவளவன்:
 
ராதாபுரம் கோபாலபுரம் ஆகும்

===============


10  ஜி.எஸ்.டி.,யால் தான், தமிழகத்தில்,  சிறு, குறு தொழில்கள் பாதித்துள்ளதாக தமிழக அரசே தெரிவித்துள்ளது. எனினும், ஜி.எஸ்.டி., ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், வரி குறைப்பு கோரவில்லை-ஜி.ராமகிருஷ்ணன் :
 

ஓனரைக்குறை  கூற லேபருக்கு தைரியம் இருக்குமா?

================
.' 11 . வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் இருக்கும் தமிழ் உணர்வை விட, தமிழகத்தில் உணர்வு குறைந்து வருகிறது. - பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகள்


அப்போ எல்லாரையும் வெளிநாடு அனுப்பிட்டு பின் இங்கே வர வைத்தா பிரச்சனை சால்வ் ஆகிடும்

===================

12  : 'பேனர்' சரிந்து விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ இறந்த நிலையில், 'காற்றால் தான் விபத்து நடந்தது; காற்று மீது தான் வழக்கு போட வேண்டும்' - எக்ஸ்  அமைச்சர் பொன்னையன்

2021ல் காற்று உங்க பக்கம் வீசும்னு நினைச்சுடாதீங்க

===================

13   'மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரியில், தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது' -அன்புமணி 

 ஆமா டேம் கட்ன பின்னாடி டேமிட்னு பேசி பிரயோஜன்ம் இல்ல, இப்பவே நடவடிக்கை எடுக்கனும்

========================

14  எம்.பி., பதவியை இழந்து, ஐந்து மாதங்களாகியும், டில்லியில் அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்யாத, 50 பேரை, வலுக்கட்டாயமாக வெளியேற்ற, மத்திய அரசு முடிவு
--

பேய் பங்களானு வதந்தி கிளப்பிப்பார்க்கலாமே?

=================


15   நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் -அமைச்சர் பி.தங்கமணி.

தேர்தல் முடிஞ்சு ஜெயிச்சு எம் எல் ஏ ஆன பின் 5 வருசம் பூரண ஓய்வு?>




==================== 

0 comments: