Thursday, October 10, 2019

3 சீட் ஜெயிச்சுட்டா ஆட்சி மாற்றம் வந்துடுமா?

1   மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, பிரதமருக்கு கடிதம் எழுதுவதை எல்லாம், தேச துரோகமாக கருதி, வழக்கு பதிவு செய்வது சரியல்ல-விஜயகாந்த்:

 மெயில் ல அனுப்பி இருந்தா பிளாக்”மெயில்”னு சொல்லி இருப்பாங்களோ?

=================
 


.2 : அ.தி.மு.க., ஆட்சிக்கோ, கட்சிக்கோ ஆபத்து ஏற்பட்டால், சிப்பாய்களாக வந்து காப்போம். என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. விரைவில் அவற்றை வெளியிடுவேன்.-**அ.ம.மு.க., அதிருப்தியாளர் புகழேந்தி

2019லும் ஒரு சிப்பாய் கலகம் உருவாகப்போகுதா?

===============
 3  தெலுங்கானா உள்ளிட்ட மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவு. இதுவரை டெங்கு பாதிப்பால், தமிழகத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.-விஜயபாஸ்கர்: 

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் முன்னேற்றிக்காட்டுவோம்னு அறிக்கை விடலை நல்ல வேளை

============
4  மின் இணைப்புக்கான கட்டணங்களை, 300 சதவீதம் வரை உயர்த்தி
 இருப்பது, கடும் கண்டனத்திற்குரியது.- தினகரன்  

ஷாக் அடிக்கும் படி வேலை பண்ணிட்டு கேட்டா ஷாக்கை குறை 
 ஷாக்கை குறை 
 அப்டீம்பாங்க, நாம கட்டணத்தைக்குறை  கட்டணத்தைக்குறை
 அப்டிங்கனும்’

-=============
5  மின் கட்டணத்தையும் 
அதிகம் உயர்த்த, அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்
 வருகின்றன- தினகரன் 

 தகவல் தந்தது நம்ம ஸ்லீப்பர் செல்களா?

=================


6 ஏற்கனவே, பால் மற்றும் பஸ் கட்டண உயர்வுகளால், பாதிக்கப்பட்டுள்ள 
மக்களுக்கு, இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாகிவிடும்.- தினகரன் 

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்க ரொம்ப நல்லவங்கனு 
நினைச்ட்டாங்களோ
==================?


7
 ஆட்சியாளர்கள் தங்களின் திறமையின்மையை, மக்கள் தலையில்
 இறக்குவது தவறானது.- தினகரன்  

 இதுக்கு தனியா ஒரு ஹெல்மெட் கண்டு பிடிக்கனும்

===============
எதிர்பாராத விபத்தில் தமிழக முதல்வர் ஆகிவிட்ட, இ.பி.எஸ்., 
ஆட்சியால், நமக்கு விபத்தா, இல்லை அவருக்கு விபத்தா?- கனிமொழி  

 எது எப்படியோ,  இவரு திமுக வுக்கு ஆபத்து 

==================

 9 ஈபிஎஸ்
ஆட்சியிலிருந்து, வீட்டிற்கு போக அச்சாரமாக, வரும் இடைத்தேர்தல் 
அமைந்து உள்ளது- கனிமொழி   

3  சீட் ஜெயிச்சுட்டா ஆட்சி மாற்றம் வந்துடுமா?

================

 10 . இடைத்தேர்தலில்  சரியான பாடம் புகட்டி, அடுத்த தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக 
பொறுப்பை ஏற்க, இந்த தேர்தலை 
முன்னோட்டமாக வைத்துக் கொள்வோம்.- கனிமொழி   

2021 தேர்தலுக்கு வெள்ளோட்டம் பார்க்கறாங்க போல 

=================


 11 , மத்திய அரசு
 திட்டங்களை விமர்சித்தால், தேச துரோக வழக்கு பாய்கிறது. 
பா.ஜ.,வும், 
அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்துள்ளதால், மாநில அரசு 
எதையும்
 எதிர்த்து கேட்பதில்லை.- ராமகிருஷ்ணன் :

அதுதானே கூட்டணி தர்மம்?

================= 

 12 இதனால், தமிழக மக்களின் உரிமை 
பாதிக்கப்படுகிறது. - ராமகிருஷ்ணன் : 

தமிழக மக்களின் உரிமையை[ப்பறீப்பதே ஆட்சியாளர்களின்
 கடமை போல 

==============
  13 அ.தி.மு.க., அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், விக்கிரவாண்டி, 
நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில், 
தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்-
ராமகிருஷ்ணன் :

 இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி ஜெயிக்குய்ம் என்பதுதானே திருமங்கலம் 
நமக்குக் கற்றுஹ்ட்தந்த பாடம்?

================ 
14  அசுரன்' படத்தில், 
குழந்தைகள் மனதில் வன்முறைகளை துாண்டும் வகையில், ரத்தம்
 தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவன்
 கொலை செய்வதும், வெடிகுண்டு வீசுவதையும் நியாயப்படுத்தி, 
காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இப்படத்திற்கு, 'யுஏ' சான்றிதழ் 
வழங்கப்பட்டுள்ளது. இது, தவறான செயல்= லிங்க பெருமாள்  

தமிழ் சினிமாக்களை இப்ப்லோதான் பார்க்கறாரு போல 
  பெரும்பாலான படங்கள் இப்[படித்தான் இருக்கு

================
15  : கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை விட, டெங்கு
 காய்ச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறைவு. - விஜய பாஸ்கர்

அதே மாதிரி பஸ் கட்டணமும் குறைவுனு அடிச்சு விட்டுடுங்க,
 நாளைக்கே பஸ் 
சார்ஜ் ஏறுனாக்கூஉட  சமாளிக்க உதவும்

================

16  தெலுங்கானாவில், 10 ஆயிரம் பேர் டெங்கு விஷயத்தில் 
 பாதிக்கப்பட்டு உள்ளனர்.- 
 விஜய பாஸ்கர்

 தமிழகத்தில் 9500 பேர்கள் தான் [பாதிப்பா?

=============
17  டெங்கு விஷயத்தில், அரசு வெளிப்படையாகவே உள்ளது.
 சென்னை, தர்மபுரி, சேலம் போன்ற பகுதிகளில், காய்ச்சல் 
அதிகளவில் பரவினாலும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயிரிழப்பு இல்லாத நிலையை, அரசு உருவாக்கி
 வருகிறது.- விஜய பாஸ்கர்

 அப்படியே உயிரிழப்பு ஏற்பட்டாலும் வெளில சொல்ல மாட்டோம்
 மொமெண்ட்

============
18  உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி,
 சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு துறைகளை மீண்டும், 
அவற்றிடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் குறுக்கீடு
 இல்லாமல், பொதுத் தொண்டில் ஆர்வம் உள்ளவர்கள் வருவதற்கு
, பஞ்., வார்டு உறுப்பினர் முதல், மேயர் பதவி வரை, 
அனைத்து பதவிகளுக்கும், சுயேச்சை சின்னம் கொண்டு, தேர்தல் 
நடத்த வேண்டும்.- நல்லசாமி

கட்சிக்காரங்க காசு பார்க்க முடியாதே?

===============

 அதுல மிஸ்டு கால் மூலம் சேர்த்தது எவ்வளவு? தானா சேர்ந்த கூட்டம் எவ்வளவு?ங்கறதையும் சொல்லிடுங்க 

===================


 மொத்தத்துல வாக்காளர்களுக்கு கொண்டாட்டம், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி  போட்டுட்டு தீபாவளி  போனஸ் தருது

==================

0 comments: