1 : புதிய மின் இணைப்புக்கான, 'டிபாசிட்' தொகையை உயர்த்துவது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தான் முடிவு செய்கிறது. அது குறித்து, கருத்து கூற முடியாது.- தங்கமணி
அப்போ மின்சாரத்துறை அமைச்சர் பதவி டம்மி போஸ்ட்டா?
ஷாக்கிங் நியூசா சொல்றாரே மின் துறை அமைச்சர்
===================
2 தமிழக மக்கள், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு தான் வைத்துள்ளனர். இதை, நடிகர் விஜயை கேட்டுத் தான், மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.-அமைச்சர் ராஜு:
பட ரிலீஸ் டைம்ல பரபரப்புக்காக ஹீரோக்கள் எதுனா அடிச்சு விடறதுதான்,. அதை எல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டு மெனக்கெட்டு பதில் சொல்லிட்டு
பிகில் பத்தி ஒரு டகில் கருத்து சொல்ல்ஜுதே அடடே!
===================
3 நடைபெற இருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க.,வும், நாங்குநேரியில், காங்கிரசும் போட்டியிடும். புதுச்சேரியில்,
காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ் போட்டியிட முடிவாகியுள்ளது-ஸ்டாலின்:
காமராஜ் பேரைக்கேட்டாலே திமுக வுக்கு பயம் வந்துடுது போல
கூட்டணி காட்சிக்கு 2 தனக்கு 1 என நிர்ணயித்த முதல் கட்சி நம்முதுதான். கட்சி அவ்ளோ பலவீனமா?
====================
. 4
கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை, உலகம் அறியச் செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. விரைவில், டில்லி சென்று, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்ந்த மந்திரிகளை சந்தித்து பேச உள்ளேன். ௧௧ புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அடுத்த கட்ட அகழாய்வு நடத்தப்படும்.-பாண்டியராஜன்
தமிழ் நாட்டுக்கு உதவி செஞ்சுட்டுதான் மத்த வேலையைப்பாப்பாங்க , அட ஏங்க நீங்க வேற
==================
'5 அமெரிக்காவில், 75 ஆண்டுகளாக மனித நேயத்திற்கு குரல் கொடுத்து வரும் அமைப்பு, வீரமணிக்கு, மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளது. முதன் முதலாக, இந்தியர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது, மகிழ்ச்சி அளிக்கிறது.- ஸ்டாலின்
ஓஹோ , 75 வருசமா இருக்கற அமைப்பு பெரியார் , அண்ணா , காமராஜர் , கலைஞர் இவங்க ளை எல்லாம் விட்டுட்டு வீரம்ணிக்கு ஏன் தந்தாங்க?
வீரமணிக்கு விருதா? money மணி விஷயத்துல விளையாண்டிருக்குமோ?
=================
6, நிறுவனங்களின் வரியை, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதனால், இந்தியாவின் மதிப்பு கூடும்; முதலீடுகள் வரும்; ஏற்றுமதி அதிகரிக்கும்; வேலைவாய்ப்புகள் கூடும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்; நிறுவன பங்குகள் வைத்து இருப்பவர்களுக்கு, கூடுதல் லாபம் கிடைக்கும்.- அமித் ஷா
நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
ஜக்கம்மா சொல்றா மொமெண்ட்
கேட்கறதுக்கு நல்லாதான் இருக்கு , சர்க்கரைனு பேப்பர்ல எழுதுனா இனிக்குமா?
===============
7 ஸ்டாலினை, நட்சத்திர ஓட்டல் ஒன்றில், நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அதன் தாக்கம் தான், சமீபத்தில் நடந்த, அவரின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழக அரசு மீது சாடியது. அந்த உண்மை இப்போது தான் தெரிய வந்துள்ளது- அமைச்சர், ராஜு
உளவுத்துறை ரொம்ப லேட் போல
அப்போ நீங்க ஒரு டைம் விஜயை சந்திச்சுப்பேசுனா திமுக வைக்குறை கூறி மேடைல பேசுவாரோ?
====================
8 உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. அது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்திய மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால்,
உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1-தபன்சென்
ஆனா டாஸ்மாக் மட்டும் அமோகமா விற்பனை ஆகுதே அது எப்படி?
===================
9 நேரு, படேல் இருவரும் நல்ல மனிதர்கள் தான். நல்லவர்களை விட, வல்லவர்கள் தான், நாட்டை ஆள வேண்டும். படேலின் புத்திசாலித்தனத்தால் தான், அரசியல் அமைப்புச் சட்டத்தின், ௩௭௦வது பிரிவில், 'தற்காலிகமாக' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அவரின் புத்திசாலித்தனம் தான், இப்போது நமக்கு உதவியுள்ளது. - எஸ்.குருமூர்த்தி
தற்காலிகமாக நீங்க சொல்றதை ஏத்துக்கறோம்
அப்போ மோடி வல்லவர் ஆனா நல்லவர் இல்லைனு சொல்ல வர்றீங்களா?
=================
10 ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, சோனியாவும், மன்மோகன் சிங்கும் நேரில் சென்று சந்தித்தனர்.
ஆறுதல் சொல்லப்போனாங்களா?காட்டிக்கொடுத்துடாதேனு சொல்லப்போனாங்களா?
============
11 எனக்கும், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கும் இடையே, நல்ல புரிந்துணர்வுடன், சுமுகமான போக்கு உள்ளது. நீங்கள் தான், பிரிக்க நினைக்கிறீர்; அது நடக்காது.- பன்னீர்செல்வம்:
2 பேரும் ஒற்றூமையா இல்லைன்னா 2 பேருக்குமே நல்லது இல்லை என்ற புரிந்துணர்வா?
அப்போ தர்ம யுத்தம் இப்போதைக்கு இல்லையா?
================
12 : நாட்டின் அடையாளமாக, ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என கூறிய, அமித் ஷா, தமிழகம் வரும் போது, அவருக்கு, காங்கிரஸ் சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும் என, காங்கிரஸ் தீர்மானம் - பத்திரிகை செய்தி
நீங்க காட்டுன கறுப்புக்கொடியை அவர் பார்க்கலைன்னா?
இத்தாலி மொழின்னா ஓக்கேவா?
==============
13 :பெங்களூருவிலிருந்து, 150 கி.மீ.,யில் உள்ள பெம்மணஹள்ளி என்ற கிராமத்திற்கு நான் சென்ற போது, தலித் என்ற காரணத்திற்காக, என்னை அந்த கிராமத்திற்குள் விட, மக்கள் தடுத்தனர். நான் அந்த ஊருக்குள் சென்றால், தெய்வ குற்றம் ஆகிவிடும் என்றனர். அவர்களிடம் பேசிப் பார்த்தேன்; அவர்கள் மசியவில்லை. அவர்கள் மீது, போலீசில் வழக்கு தொடர விரும்பவில்லை. அறிவு புகட்ட முடிவு செய்துள்ளேன்-சித்ரதுர்கா லோக்சபா, பா.ஜ., - எம்.பி., நாராயணசாமி
அத்தனை பேருக்கும் அறிவு புகட்டறதுக்குள்ள அடுத்த எலக்சனே வந்துடுமே?
====================
.
14 ' 'காவிரி கடை மடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை' என, 10 நாட்களுக்கு முன் கூறியோர், இப்போது அதை அப்படியே மாற்றி, 'காவிரி நீர், வீணாக கடலில் கலக்கிறது' என்கின்றனர். கடைமடையின் கடைசி பகுதி தான் கடல். இதன் மூலம், கடை மடைக்கு தண்ணீர் சென்றடைந்து விட்டது உறுதியாகியுள்ளது.-தமிழக உணவுத்துறை அமைச்சர், காமராஜ் :
எல்லா ஆறுகளும் கடலில் கலப்பதுதானே இயற்கை?
=============
15 : வைகோவுக்கு, சமீபத்தில் உடல் நலமில்லாமல் போய்விட்டது; அதை அறிந்து துடித்துப் போனேன். அவருக்கு ஒரு அறிவுரை. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்; உணர்ச்சி வயப்படாதீர்கள். இனிமேல் அவர் கோபப்பட மாட்டார் என, நம்புவோம்.-வீரமணி
கோபத்தைக்குறைக்கனும்,. அதே சமயம் நிருபர்கள் ஏதாவது கேள்வி கேட்டா வள் வள்னு குரைக்கக்கூடாது
==================
16 நான், பைக் ஓட்டி, பல ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரண்டாண்டுகளுக்கு முன் தான், மீண்டும் ஓட்டினேன்-ஜக்கி வாசுதேவ்
அதான் சமூக வலைத்தளங்கள்ல உங்களை ஓட்டிட்டு இருக்காங்களே?
==================\
17
. காவிரி கூக்குரலுக்காக, கர்நாடகாவின் தலைக்காவிரியிலிருந்து பைக் பயணத்தை துவக்கியுள்ளேன். இவ்வளவு நீண்ட துாரம் நான், இது வரை பைக் ஓட்டியதில்லை. கர்நாடகாவில் பயணத்தை துவக்கிய போது, மழை கடுமையாக இருந்தது. வழுக்கும் சாலைகளில், நிதானமாக ஓட்டி வந்தேன்.- ஜக்கி வாசுதேவ்
உங்களோட ஆயிரக்கணக்கான பைக் வந்ததே , அந்த புகை எல்லாம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுக்கலையா?
==============
18 அன்னை தமிழை காப்பது தான் நமக்கு பெரு மகிழ்ச்சி. அதற்கான போராட்டமே, நம் திருவிழா! - ஸ்டாலின்
நம்ம வாழ்க்கை பூரா போராடிட்டே இருக்க வேண்டியதுதான் போல
=================
19 'மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது பற்றி பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்'' - மம்தா பானர்ஜி
கண்ணாடியைத்திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?
பேரை மாத்தற மாதிரி முதல்வரை மாத்திடப்போறாங்க ஜாக்கிரதை
மாற்றம் முன்னேற்றம்கற பாமக் கொள்கையை இவரு இப்படிப்புரிஞ்சுக்கிட்டார் போல
==================
20 'குடிமக்கள் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும் - அமித்ஷா
அதுக்கு டாஸ்மாக் வாசல்ல ஒரு ஆளை அமர்த்துனா போதுமே?
இவரு கணக்கெடுத்து அடுத்து என்ன குண்டு தூக்கிப்போடப்போறாரோ?
=======================
0 comments:
Post a Comment