Thursday, September 19, 2019

தனியார் மயம் ஆவதை ஒத்துக்க மாட்டோம்னு ஒரு கூட்டம் கிளம்புமே?

1 செங்கோட்டையன்: புதிய பாடத்திட்டம் என்பதால், 'டெட்' தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையவில்லை.

அப்போ  மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமா?ஆசிரியர்களே 1% பேர் கூட பாஸ் ஆகலைன்னா அவங்க கிட்டே படிச்ச மாணவர்கள் கதி?

 ஆத்தா , நான் ஃபெயில் ஆகிட்டேன்னு ஆசிரியர்கள் வருந்துவாங்களோ?

வெல் எஜுக்கேட்ட்”டெட்” டீச்சர்ஸ்க்கே இந்த கதியா?


வெற்றிக்கோட்டைத்தொட முடியாம கோட்டை விட்டுட்டாங்களா? மிஸ்டர் செங்கோட்டை?

=



================


2  கடந்த, 25 ஆண்டு கால வரலாற்றை பார்க்கும்போது, இந்திய பொருளாதாரத்தில், ஏற்றம், இறக்கம் இருந்தபடியே தான் இருக்கிறது. இதை, பா.ஜ., அரசு சரி செய்துவிடும்.- ஜெயகுமார்:  



பாஜக அதிமுக வையே கரெக்ட் பண்ணிடுச்சு,கர்நாடகா அரசை கரெக்ட் பண்ணிடுச்சு, இது பெரிய விஷயமா?

 அதுவா சரியானாதான் உண்டு

==================


3 , பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு போன்றவை அறிமுகம் செய்யப்பட்டதால், சிறு தொழில் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகரித்து, இன்று, இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை, அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்.-ராமதாஸ்:  

தேர்தல் பிரச்சாரத்துல இதை சொல்லலை, நல்ல வேளை , உள்ள கொஞ்ச நஞ்ச ஓட்டும் கிடைக்காம போய் இருக்கும்


================

4  சமீபத்தில், முதல்வர் குறித்து, ஸ்டாலின் பேசும்போது, 'உதவாக்கரை, துப்புகெட்ட...' என்பது போன்ற, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தினார்.-

, மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 

அரசியல்வாதிகள் எல்லாருமே உதவாக்கரை வேட்டிகள் தானே?


கரை வேட்டிகள்  கறை வேட்டிகள் ஆகிடுச்சா?

==============

ஸ்டாலின் பேசும்போது,  அமைச்சர் ஜெயகுமாரை, 'ஜோக்கர்' என்கிறார். =மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 

நிறைய ஜோக் சொல்வாரா?

================
6  நாம் பேசுவது, ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும்.-மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 

 அதுக்காக நாம பேசாமயே இருக்க முடியுமா? - துண்டுச்சீட்டில் உள்ளபடி ஸ்டாலின்


==============

 7 ஸ்டாலின் கொச்சையாகவும், ஆணவமாகவும் பேசுவது, அவர் வகிக்கும்பதவிகளுக்கு அழகல்ல.-மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 


மேடையில் கை தட்டல் கிடைக்கனும்கறதுதான் அரசியல்வாதிகளின் இச்சை, அதுக்காக அவங்க கைல எடுத்திருக்கும் ஆயுதம் தான் பேச்சு கொச்சை


===============
8 இந்தியா, இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.ஆனால், மத்திய நிதியமைச்சர், இதை மூடி மறைத்து வருகிறார்.- முத்தரசன் 


 மோடி மஸ்தான் , மூடி மஸ்தான் வேலை

===============
9   மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது.நாட்டின் பிரதமர் முதல், அதிகாரிகள் வரை அனைவரும், ஆர்.எஸ்.எஸ்., சொல்வதை கேட்பவர்களாக உள்ளனர்.- முத்தரசன் 


  ஆர் நோ நோ-னு இயக்கத்தோட பேரை மாத்தனுமா?

===================

10  ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட,பிரீமியம் கட்டண ரயில்களை, தனியார் இயக்க, ஒப்பந்தப்புள்ளி கோர, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான, ரயில்வே துறையை, தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில், கடும் விளைவுகளை ஏற்படுத்தும். - வைகோ : 

 சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு , வயித்தை கலக்குது பாரு இவங்க அரசியல் ஸ்டைலு

===============


11 பயணியர் கட்டணம் உயர்த்தப்படும்.ஏழைகளுக்கு ரயில் பயணம், எட்டாக்கனியாகி விடும். ரயில்வே துறையை, தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு கைவிட வேண்டும்.- வைகோ 


சாதா ரயில் கட்டணமே புல்லட் ரயில் கட்டண ரேஞ்சுக்கு மாறிடும்


===============: 

12    தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் என்பது உண்மையாக இருந்தால், மனம் திருந்தி, அவர்களாகவே வெளியேற வேண்டும். -தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன்

 கேப்டன் விஜயகாந்த் படத்தின் க்ளைமாக்ஸ்;ல தான் அப்படி நடக்கும்

====================


13  இல்லை என்றால், அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். தற்போது, தமிழகத்தில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.-தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன்

தயவு செஞ்சு வெளியேறிடுங்க நு கெஞ்சிட்டு , அப்டி  இல்லைன்னா நடக்கறதே வேறனு மிரட்றாரு

=====================

14  அக்., 2 முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கம்: 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மோடி அறிவிப்பு


 மூக்கு , கன்னம் , உதடுனு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ற நடிகைகள் கலக்கம்

===================

15  நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மற்றும் வணிக வளாகங்களில், 'பிளாஸ்டிக் கப்' பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து, மண்ணால் ஆன குவளைகள் பயன்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


 மன் கி பாத் தை விட இந்த மண் கி பாத் நல்லாருக்கு

 மண் பாண்டத்தை விட தேங்கா ஓடு நல்லது

================



 கடைசி வரை கட்சியை தூர் வாரும் ஐடியாவே இல்ல போல 


=================



 நல்லா அந்த தவில்காரன் காதுல விழற மாதிரி சொல்லுங்க , பணமே எடுக்கலைன்னாக்கூட சர்வீஸ் சார்ஜ் வருசா வருசம் தீட்டறாங்க 


====================


18 வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சரி பார்ப்பதை, ஏ.டி.எம்., இலவச பயன்பாடாக கருதி கணக்கில் சேர்க்கக்கூடாது' என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 


குறிப்பா எஸ்பிஐ பேங்க்குக்கு தான் சொல்லனும், ஒரு டம்ளர் தண்ணீர் பேங்க் ல குடிச்சாக்கூட அக்துக்கும் சர்வீஸ் சார்ஜ் ;போடுவாங்க போல 

======================


19   புதுக்கோட்டை:குழந்தைகள் அழுதால், தொட்டிலை ஆட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்து, விவசாயி சாதனை ..

அந்த இயந்திரத்தை ஆன் பண்ரது  யாரு? அம்மாக்கள் தான் டி வி சீரியல்ல பிசியா இருப்பாங்களே?


====================




தனியார் மயம் ஆவதை ஒத்துக்க மாட்டோம்னு ஒரு கூட்டம் கிளம்புமே?

=====================

0 comments: