1 இது, மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி கிடையாது. இதற்கான சாட்சி தான், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி.-உதயநிதி:
அப்போ இடைத்தேர்தல்களில் தோற்றது ஏன்? ஆர் கே நகரில்?
==============
மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ்
2 தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக, ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க., ஆட்சியில், துணை முதல்வராக இருந்த, ஸ்டாலின், மதுரையில் சுதந்திரமாக சுற்ற முடிந்ததா? அவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.-அமைச்சர், ராஜு:
(அழ )கிரிவலம் அப்போ இருந்தது , இப்போ இல்லை
=============
3 : எந்தவோர் அரசாலும், ஐந்து ஆண்டுகளில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது இயலாத காரியம். -
மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ்
அப்போ ஒரு 20 வருசம் காண்ட்ராக்ட் தந்தா போதுமா?
===============
4 'முத்தலாக் தண்டனை சட்ட மசோதா செல்லாது' என, மிக விளக்கமாக ராஜ்யசபாவில், அ.தி.மு.க., தலைவர் உரையாற்றினார். சபை உறுப்பினர்கள், அவரது உரையைப் பாராட்டினர். ஆனால், மசோதா மீதான ஓட்டெடுப்பின் போது, அ.தி.மு.க., உறுப்பினர்கள் யாரும், சபையில் இல்லை-சிதம்பரம்,
பாராட்றதோட அவங்க கடமை முடிஞ்சுது போல
===============
5 .முத்தலாக் தண்டனை சட்ட மசோதாவை, அ.தி.மு.க.,வினர் எதிர்த்தனரா, ஆதரித்தனரா என்பது விடுகதை.-சிதம்பரம்,
விடுங்க , அது பெரும் கதை
=============
, 6 : தமிழக கலாசாரத்துக்கு எதிராக, மோடி அரசு செயல்படுவதால், பா.ஜ.,வை தொடர்ந்து, மக்கள் எதிர்க்கின்றனர்.-ஸ்ரீவல்லபிரசாத்
இப்படித்தான் நம்ம பிரச்சாரம் எப்பவும் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாவே இருக்குமா?
=============
7 தமிழகத்திற்கு, பா.ஜ., ஒன்றும் செய்யவில்லை.-ஸ்ரீவல்லபிரசாத்
வெச்சு செய்யப்போறாங்க பாருங்க
==============
8 இவர்களின் ஒற்றை அதிகார முறை, ஹிந்தி திணிப்பு ஆகியவற்றால், கடந்த முறை, 37 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணியை, மக்கள் வெற்றி பெறச் செய்தனர்-ஸ்ரீவல்லபிரசாத்
அப்போ திமுக வுக்கு விழுந்தது அந்தக்கட்சிக்கான வாக்கு வங்கி இல்லை? பாஜக எதிர்ப்பு வாக்குகள் தான்?
==========
\
9 . தற்போது, முத்தலாக் தடை சட்டம் இயற்றியதால், வேலுார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி, உறுதி செய்யப்பட்டு உள்ளது.-ஸ்ரீவல்லபிரசாத்
வேலூர் தொகுதி பூரா முஸ்லீம் ஓட்டுக்கள் மட்டும் தான்னு நினைச்ட்டார் போல
=================
10 பொதுமக்களை மதம், ஜாதி ரீதியாக, தி.மு.க., தொடர்ந்து பிரிக்கிறது.-கிருஷ்ணசாமி
அப்போ தானே ஓட்டு சேர்க்க முடியும், ஜனங்களை ஜாதி வாரியா பிரிச்சாதான் வாக்குகள் சேகரிப்பது ஈசி
==============
11 தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களைப் பற்றி பேச, ஸ்டாலினுக்கு தகுதியில்லை.-கிருஷ்ணசாமி
துண்டு சீட்டு பார்க்காம பேசவே தகுதி இல்லையாம்
===============
12 தி.மு.க.,வில் இருக்கும் பட்டியலின மக்களுக்கே, அங்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு உதாரணமாக, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை சொல்லலாம்.-கிருஷ்ணசாமி
திமுக காரங்களுக்கு தனி பாதுகாப்பு தர முடியுமா?
==============
13 பார்லிமென்டில், மசோதாக்களை ஆய்வு செய்து, நிறைவேற்ற வேண்டும். ஆனால், 'பீட்சா'வை டெலிவரி செய்வது போல், கடந்த மூன்று நாட்களில், மூன்று மசோதாக்கள், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.- திரிணமுல் காங்., - எம்.பி., டெரிக் ஓ பிரையன்
மசோதா டேஸ்ட்டா இருந்ததா?
=================
14 , 'நீட்' தேர்வில் தோல்வியடைந்து, தற்கொலை செய்த மாணவி அனிதாவைப் போல், மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்.-ராஜேந்திர பாலாஜி :
4 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டா அதை வெச்சு ஓட்டு அரசியல் , அனுதாப ஓட்டு சேகரிக்கலாம்னு நிம்னைக்கறாரோ?
===============
15 போர் முனையில் எதிரிகளை வீழ்த்த, போர் வீரன் கையில் வாளுடன், ஒரே திசையில் பார்வையை செலுத்தக் கூடாது. மற்ற திசைகளிலும், பார்வை இருக்க வேண்டும். இதைப் போல தான், மாணவர்களும் நீட் தேர்வை, எதிர்கொள்ள வேண்டும்.-ராஜேந்திர பாலாஜி :
கோச்சிங்க் கிளாசுக்கு அரசு வழி எதுனா செய்யுமா?
===========
16 ,மாநில அரசு உரிமைகளில், மத்திய அரசு தலையிட்டு, மாநில அரசுகள், மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையை கொண்டு வருகிறது. - கே.பாலகிருஷ்ணன்
கை ஆட்சியில் இருக்கும்போதும் கை ஏந்தும் நிலை தானே?
=============
17 மாநில, அ.தி.மு.க., அரசை, தலையாட்டும் பொம்மையாகவே வைத்திருக்க, மத்திய அரசு விரும்புகிறது. = கே.பாலகிருஷ்ணன்
தஞ்சாவூர் கொலு பொம்மை மாதிரி
================
18 வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கட்டணம் மதிமுக தலைமை அறிவிப்பு - செய்தி #
ரொம்ப சீப்பா இருக்கு,மூன்றாம்"கலைஞர்"வாழ்க னு ட்வீட் போட்டாலே 300 ருபா தர்றாங்களாம்
18 வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கட்டணம் மதிமுக தலைமை அறிவிப்பு - செய்தி #
ரொம்ப சீப்பா இருக்கு,மூன்றாம்"கலைஞர்"வாழ்க னு ட்வீட் போட்டாலே 300 ருபா தர்றாங்களாம்
=================
19 காங்கிரஸின் தயவு தேவையில்லை: வைகோ
# திமுக கூட்டணிக்கட்சிக்கு தலைவர் இவரா?அவரா?
==============
20 சிம்பு குணத்துக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க அத்திவரதரால்தான் முடியும்: டி.ராஜேந்தர் # 40 வருசத்துக்கு ஒரு தடவைதானே"அத்தி வரதர் ஆக்டிவா இருப்பாரு?அப்றம் எப்டீ ஐஸ்வர்யா,நயன்தாரா,ஹன்சிகா எல்லாம் ஜோடி ஆனாங்க?
==================
0 comments:
Post a Comment