1 : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழக மக்கள், ஸ்டாலின் சொன்ன பொய்யை நம்பினர். ஆனால், நாம் சொன்ன உண்மையை நம்பவில்லை-அன்புமணி
ஸ்டாலின் பொய் சொல்றார்னு நீங்க இப்போ சொல்ற உண்மையைக்கூட ஜனங்க நம்ப மாட்டாங்க
அப்போ அடுத்த தேர்தல்ல நீங்க முந்திக்குங்க, மாற்றம் முன்னேற்றம்னு
==================
2 : அரசியலில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன்.--குமாரசாமி
அதோ ராகுல் போய்க்கிட்டு இருக்காரே? அவர் பின்னாலயே போங்க
ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் நரிக்கதை மாதிரியா?
==================
3 முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே, அவருக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை, மத்திய அரசு வழங்க வேண்டும். இது, தமிழக மக்களின் கோரிக்கையாகும்.-ராஜேந்திர பாலாஜி:
தமிழக மக்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
ஓனர் கிட்டே டைட்ரக்ட்டா கேட்காம பிரஸ் மூலமா ஏன் தூது விடறீங்க?
==================
4 ஏற்கனவே, தனி நபர்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ள நிலையில்,சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது-தினகரன்
திருத்த,ம் செய்ததுக்கு வருத்தம் தெரிவிக்கனுமா?
============
. 5 விசாரணையின் போதே, சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என்பது தேவையற்றது. -தினகரன்
சொத்து இருக்கறவங்க தானே கவலைப்படனும், நீங்க ஏன் கவலைப்படறீஇங்க?அப்போ உங்க கிட்டே ஏகப்பட்ட சொத்து இருக்குனு ஒத்துக்கறீங்க?
====================
6 இதனால், தனி நபர்கள் பழிவாங்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட பிரிவினரை ஒடுக்கவே, இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்ற புகாரை புறந்தள்ள முடியாது. -தினகரன்
பக்கத்துக்கு இலைக்கு பாயாசம்னு கூவற கதை தான், இவருக்கு ஆபத்துங்கறதைத்தான் அப்டி சுத்தி வளைச்சி சொல்றாரு
==================
7 இது நிறைவேற, நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை நின்ற, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் கண்டனத்துக்குரியவை-தினகரன்
உங்க ஸ்லீப்பர் செல்கள் கிட்டே சொல்லி எதுனா நடவடிக்கை எடுக்க சொல்லலாமே?
==============
8 அயோத்தி விவகாரத்தில், சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வரும், மூன்று அமைப்பினருக்கும் இடையே, சமரசம் ஏற்படுத்த, முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில், மத்தியஸ்த குழு நியமிக்கப்பட்டது. அதன் முயற்சி தோல்வியடைந்து விட்டதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. -யோகி ஆதித்யநாத்
சமரசம் பலிக்கலைங்கற விஷயம் உங்களுக்கு அதிரசம் சாப்ட்டது மாதிரி இருக்குமே?
================
9 இதுபோன்ற சமரசப் பேச்சால் பலன் கிடைக்காது என, எனக்கு முன்பே தெரியும்.-யோகி ஆதித்யநாத்
எல்லாவ்ற்றையும் முன் கூட்டியே யூகிப்பவரே யோகினு ஒரு க்ரூ[ப் கிளம்புமே?
===================
10 மகாபாரத காலத்திலேயே, சமரச முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.,
என்றாலும், முயற்சிப்பது நல்லது தான்.-யோகி ஆதித்யநாத்
2019 உலகக்கோப்பை கிரிக்கெட்ல இந்தியா தோத்துடுச்சு அப்டிங்கறதுக்காக 2021 ல விளையாடாம இருக்குமா?
=================
11: வாரிசுகள், அரசியலுக்கு வருவது தவறு அல்ல. - முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு
ஓபிஎஸ் க்கு ஆதரவா?
================
12 ஆனால், ஓர் இயக்கத்தின் தலைமை பதவிக்கு, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் வர வேண்டும் என்பது, மன்னர் ஆட்சி போன்ற சர்வாதிகார முறை. அதைத்தான், தி.மு.க.,வில் காண முடியும்.- முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு
உதயநிதி மகனுக்கு பதவி ஏதும் இன்னும் வழங்கலையா?
==================
13 நீண்ட காலமாக, தி.மு.க., தலைவராக, கருணாநிதி இருந்தார். பின், அவரது மகன், ஸ்டாலின் தலைவரானார். தொடர்ந்து, அவரது மகன், உதயநிதியை தலைவராக்க முயற்சி நடக்கிறது.- முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு
அப்பா சொத்து பிள்ளைக்குத்தானெ சொந்தம்?
=============
14 இதற்காகவே, அவர் சினிமாவில் நடிக்க வைக்கப்பட்டார்.- முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு
சினிமா ல நடிச்சா முதல்வர் ஆகிடலாமா? அப்போ ஓபிஎஸ் மகனை சினிமால நடிக்க வைக்கப்போறாரு
================
15 பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காதவர்களை பற்றி, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அவர்களது குறைகளையும் கேட்டு, அவற்றைநிறைவேற்ற வேண்டும் என்றும், பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு, பிரதமர் மோடி கோரிக்கை
பாஜக வுக்கு ஓட்டுப்போடாதவங்களை எப்படி கண்டு பிடிப்பீங்க?
================
16 கர்நாடகாவில் தற்போது, பா.ஜ., ஆட்சிக்கு வந்திருப்பதால், நிச்சயம், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தருவோம்.- தமிழிசை:
அப்டித்தந்தா அடுத்த தேர்தல்ல கர்நாடகால உங்க ஆட்சி அமையாதே பரவால்லியா?
தமிழகத்தில் தாமரை விரைவில் மலரும்னு சொல்ற மாதிரிதான், இதையும் யாரும் சீரியசா எடுத்துக்க மாட்டாங்க
மத்தியில் இருப்பது உங்க அரசுதானே? பிரதச்மர் சொன்னா கேட்க மாட்டாங்களா? கோர்ட் உத்தரவையே மதிக்காதவங்க ....
=================
17 போர் முனையில் எதிரிகளை வீழ்த்த, போர் வீரன் கையில் வாளுடன், ஒரே திசையில் பார்வையை செலுத்தக் கூடாது. மற்ற திசைகளிலும், பார்வை இருக்க வேண்டும். இதைப் போல தான், மாணவர்களும், 'நீட்' தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.=ராஜேந்திர பாலாஜி:
நீட் தேர்வு போர் கிடையாது , செம போர் அடிக்கும் விஷயம்
===============
18 ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்கள் பிரச்னைகளுக்காக, தி.மு.க., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.-ஸ்டாலின்:
எதிர்க்கட்சியா இருக்கும்போதுதான் அப்டி, அதனால ஜனங்க உங்களை எதிர்க்கட்சியாவே வெச்சிருக்க ஆசைப்படப்ப்லொறாங்க
==================
19 : அணை பாதுகாப்பு மசோதா நிறைவேறினால், தமிழகம் தான் பாதிக்கும். இந்த மசோதா நிறைவேறினால், கேரளாவின் முல்லைப் பெரியாறு, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது எனக் கூறுவர். அப்போது, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது-
வைகோ
வழக்கம் போல நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம், எப்படியும் எதுவும் யாரும் செய்யப்போறதில்லை
================
20 பார்லிமென்டில் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதில், பல சட்டங்கள், பொதுமக்களை அச்சுறுத்துவது போல உள்ளன. தற்போது, மத்திய அரசு எடுத்து வந்துள்ள சட்டங்கள், நாடு சிதைந்து போகும் அளவுக்கு உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கை வழியாக, குலக்கல்வி திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்த முயற்சி செய்கிறது-முத்தரசன்
குலக்கல்வியை விட ஆபத்தானது குல அரசியல், தாத்தா முதல்வர்/பிரதமர் அவருக்குப்பின் அவர் மகன், பேரன் கொள்ளுப்பேரன் அதே பதவிக்கு வருவது , இதை முதல்ல ஒழிக்கனும்
=======================
0 comments:
Post a Comment