1 எனக்கு, இந்த பொறுப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கவே இல்லை. -உதயநிதி
நாங்களும் எதிர்பார்க்கலை, திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லைனு கலைஞர் சொன்னதால ஜனநாயக முறைப்படி தேர்தல் வெச்சு தேர்ந்தெடுப்பாங்கனு நினைச்சோம்
=================
2 இது, எனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக நான் கருதவில்லை; ஒட்டுமொத்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே நினைக்கிறேன்.-உதயநிதி
அங்கீகார்ம் மட்டும் இல்லை , அதிகாரம் அதி காரம்
===============
3 தொண்டர்களில் ஒருவனாக இருப்பதையே, நான் விரும்புகிறேன். -உதயநிதி -
அப்போ ராகுல் மாதிரி பதவி வேணாம்னு சொல்லிடப்போறீங்களா?
================
4 இந்தப் பொறுப்பில், நிறைய சவால்கள் இருக்கின்றன. அதுபற்றி பேசுவதை விட, செயல்களில் காண்பிக்க விரும்புகிறேன்.-உதயநிதி
ஹிந்தி ல சவால் அப்டின்னா கேள்வி , அப்போ இது சம்பந்தமா நிறைய கேள்விகள் கேட்பாங்க ஜனங்க
---------------
5 அ.தி.மு.க., தலைமை, பணத்தை வைத்து, அ.ம.மு.க., நிர்வாகிகள் மற்றும் கட்சியினரை இழுக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளது. -
அ.ம.மு.க., செயலர், ஹென்றி
நாம தான் பணத்துக்கு விலை போக மாட்டோமே? கொள்கை தானே முக்கியம், ஏன் கவலை?
================
6 என்னிடமும் பேரம் பேசினர். ஆனால், நான் பணத்திற்கு விலை போக மாட்டேன்.-
அ.ம.மு.க., செயலர், ஹென்றி
தங்கம் , நிலம் இப்டி எதிர்பார்க்க்றார் போல , நான் எதற்கும் விலை போக மாட்டேன்னு சொல்லலையே?
================
7 ஓ.பி.எஸ்., உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அவர்களுக்கு பாதகமாக தீர்ப்பு வரும் சூழ்நிலை உள்ளதால், ஆட்சியையும், கட்சியையும் தக்க வைப்பதற்காக, இது போன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.-
அ.ம.மு.க., செயலர், ஹென்றி
இதுக்குப்பேரு அரசியல் சாணக்கியத்தனம், அதாவது மொள்ளமாரித்தனம்
=============
8 பயம் உள்ளவர்கள், பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க, தனியாக செல்லும்போது, தானாக கத்தியபடி செல்வர். அது போல் தான், தற்போது தினகரன், கத்தி வருக்கிறார். -தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் :
தினக்ரன் தனியாவா இருக்காரு? கூட 18 சாரி 17 எம் எல
ஏ க்கள் இருக்காங்களே?
===============
9 தனி மரம், எப்போதும் தோப்பாகாது. தமிழகத்தில் எடுபடாத கட்சி என்றால் அது, அ.ம.மு.க., தான். -தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் :
கமல் , சீமான், தினகரன் மூவரும் தனிமரம் தான் , இவங்க சேர்ந்தா தோப்பாகுமோ?
================
10 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு மட்டுமன்றி, வேதாந்தா நிறுவனத்திற்கும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவை மாநில அரசின் அனுமதியின்றி அந்த நிறுவனங்கள், திட்டங்களை மேற்கொள்ள முடியாது.-நாராயணசாமி
இருங்க கவர்னர் கிரண்பேடியை அனுப்பி வைக்கறோம் - மோடி
--------------
11 லோக்சபா தேர்தலில், அசாம் மாநிலத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காத நிலையில், கட்சியின் மாநில பொறுப்பாளர் என்ற முறையில், தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்., பொதுச்செயலர் பதவியை, ராஜினாமா செய்கிறேன்-ஹரீஷ் ராவத்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜீவ் குமாரா?( ராகுல்)
==========
12 . என்னைப் போன்றவர்களுக்கு பதவி முக்கியமல்ல. ஆனால், தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும், ராகுல் போன்ற தலைவர், கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்தால் தான், பா.ஜ.,வை தோல்வியடையச் செய்ய முடியும்.-ஹரீஷ் ராவத்
சரி சரி கிளம்புங்க காத்து வரட்டும்
=================
13 தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை அதிகரித்து வருகிறது.-தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழி:
அப்போ உங்க கட்சி ஆளுங்க நடத்தற ஆலைகளை எல்லாம் முதல்ல மூடச்சொல்லுங்க, மாற்றத்தை நம்ம கிட்டே இருந்து தொடங்குவோம்
=================
14 *ஆலைகளில் உரிய ஆய்வு செய்த பிறகே, மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. அளவாக மது குடித்தால், எந்த பிரச்னையும் இருக்காது. அதிகம் குடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும்.-மதுவிலக்கு துறை அமைச்சர், தங்கமணி:
அப்போ மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு இல்லை , அளவா குடிங்க அப்டினு ஸ்லைடு போட,லாமே?
====================
15 *: மாநகராட்சிகளில், பல இடங்களில், சொத்து வரி அதிகளவில் இருப்பதாக, புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக, ஆய்வு நடந்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-**உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி
சொத்து வரி கட்ட முடைப்பட்டு சொத்துக்கணக்கை பிளாக்ல கொண்டு போய்டப்போறாங்க
=================
6 தி.மு.க.,விற்கு, குடும்ப முன்னேற்ற கழகம் என, பெயர் வைத்துக் கொள்ளலாம்,'' என, பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி
குடும்ப அரசியல் பண்ணாதீங்கனு இனி சொல்ல முடியாது, குடும்பம் பூரா அரசியலுக்கு வந்திடுச்சு
==============
17 என்னை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஆர்எஸ்எஸ், பா.ஜ., வழக்கு போடுகிறது - ராகுல்
அந்த மிரட்டல் படி தான் பதவியை ராஜினாமா பண்றீங்களா?
=============
18 வாய்மையே வெல்லும் -ராகுல்
அப்போ லிப்ஸ்டிக் போட்டா ஜெயிச்சுடலாமா?
=============
அவங்கவங்க் டெபாசிட் பண்ண ப்ணத்தை அவங்க்வங்க தேவைக்கு அவங்கவங்க எடுத்தாலே வரின்னா எப்படி?
===============
20 நாட்டில், 2024ம் ஆண்டுக்குள், அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான குடிநீர் வழங்கப்படும்,'' = நிர்மலா சீதாராமன்
அதுவரை அட்ஜஸ் பண்ணி இருக்கற தண்ணியைக்குடிச்சுக்குங்கங்கறாரா?
2024 ல ஆட்சிக்காலமே முடிஞ்சிடுமே? யார் கிட்டே கேள்வி கேட்கறது?
==============
0 comments:
Post a Comment