1 த.மா.கா., தனித்தன்மையோடு, ஐந்தாண்டுகளாக வளர்ந்து வருகிறது. -வாசன்:
தி மு க , அதிமுக இப்டி மாறி மாறி கூட்டணி வெச்சா அதுக்குப்பேரு வளர்ச்சிங்களா?
----------------
2 தமிழகத்தில், மரியாதைக்குரிய கட்சிகளில், எங்கள் கட்சி முதலிடத்தில் இருக்கிறது.- வாசன்:
மரியாதை இருக்கு , வாக்கு வங்கி இருக்கா? யுவர் ஆனர்?
===================
3 : எதிரிகளை தோல்வி அடையச் செய்ய, பதவியை விட்டு இறங்குவது தான் சரி. பதவிக்கு வரத் துடிக்கும் நாம், பதவியை தியாகம் செய்து தான் தீர வேண்டும்.- ராகுல்
அப்போ தேர்தலுக்கு முன்பே நீங்க பதவி விலகி இருந்தா காங் ஜெயிச்சிருக்குமா? இது என்ன லாஜிக்?
==================
4 நடிகர் கமல், ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வர முடியாது. நடிப்பு துறையில் மட்டும் கவனம் செலுத்தினால், சிறப்பாக இருக்கும்.-அமைச்சர், ராஜு:
நீங்க என்ன ஜோசியரா?
===============
5
=: மக்களை கவர்ந்து இழுக்கக்கூடிய தலைவராக, ராகுல் உள்ளார். =திருநாவுக்கரசர்
வாக்கு வாங்கக்கூடிய தலைவரா இருக்காரா? அதுதான் முக்கியம்
================
6 இடைக்கால தலைவரை நியமித்தால், அரங்கக் கூட்டங்களில் பேச முடியுமே தவிர, மக்களை கவர்ந்து, மக்கள் கூட்டத்தில் பேசக்கூடிய ராகுலை விட, வலிமையான தலைவராக இருக்க முடியாது.-திருநாவுக்கரசர்
அதுவுமில்லா,ம இடைக்கால நிவாரணம் தமிழகத்துக்கு ஒர்க் அவுட் ஆகாது , உதாரணம் ஓபிஎஸ்
====================
7 அந்தந்த மாநிலங்களில், காங்., வெற்றிக்கு ஒத்துழைக்காதவர்களை ஒதுக்கி வைக்கக்கூடிய அதிகாரம், ராகுலுக்கு உள்ளது; ராகுல் ஒதுங்க வேண்டிய அவசியமில்லை.-திருநாவுக்கரசர்
வயசான சீனியர்களை கட்டம் க்ட்ட தான் இந்த டிராமா
==============
8 தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி பேச,, கிரண் பேடிக்கு தகுதியில்லை.- நாராயணசாமி
அவ்ளோ மட்டமானவங்களா தமிழக அரசியல்வாதிகள்?
=============
9 கிரண் பேடி தேவையில்லாமல், மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு, கெட்ட பெயரை சம்பாதித்து கொள்கிறார். - நாராயணசாமி
பாண்டிசேரில விவகாரத்துலயும் தலையிடக்கூடாது ,மற்ற மாநில விவகாரங்களில் தலையிடக்கூடாதுnனா அவர் என்ன தான் பண்ணூவார்? பாவம்
===========
10 கவர்னர் பதவிக்கே தகுதி இல்லாதவர் கிரண் பேடி.- நாராயணசாமி
அப்போ புதுச்சேரி முதல்வர் ஆக்கிடலாமா? 2 பேரும் பதவியை எக்சேஞ்ச் பண்ணீக்கறீங்களா?
==============
11 புதுச்சேரியில், காங்., அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு, கிரண் பேடியை அனுப்பி வைத்துள்ளது.- நாராயணசாமி
இப்படி ஓப்பனா சொன்னா அவங்களுக்கு கொண்டாட்டம் ஆகிடாது ?
=============
12 மாநிலங்களுக்கான பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்து, மக்கள் நலப் பணிகளைச் செய்ய ஏதுவாகத்தான், 'ஒரே நாடு... ஒரே தேர்தல்' முறையைத் தேர்ந்தெடுத்தோம். -நாராயணன் திருப்பதி
செலவைக்குறைக்க அப்டினு நாங்க நினைச்சோம்
அதென்ன தேர்ந்தெடுத்தோம்? தேர்ந்தெடுத்தாங்க அப்டினு சொல்லுங்க
===============
13 ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடந்தால், மாநிலங்களில் நிலையான அரசு இருக்கும்; மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு இருக்கும் என்பதால், அந்தந்த மாநிலத்திற்குரிய வளர்ச்சி திட்டங்களில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்-நாராயணன் திருப்பதி
எதுக்கு சுத்தி வள்ஐச்சுட்டு , மாநில கட்சிகளின் பவரைக்குறைக்கனும்னு சொல்லுங்க
===============
14 . மத்திய, மாநில அரசுகள் தனித்துச் செயல்படும்போது, பொருள், நேர விரயம் அதிகமாகிறது.-நாராயணன் திருப்பதி
அப்போ மாநில முதல்வர் பதவியே இல்லாம பண்ணிடலாமா?
============
15 - தேர்தலுக்காக, எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடமும், மார்க்.கம்யூ., கட்சி பணம் பெறுவதில்லை.-டி.கே.ரங்கராஜன்
யாரும் கொடுப்பதில்லைனு சொல்லுங்க்\
=============
16 பணத்தைப் பெற்றால், அது நியாயமானதாக இருக்காது. அத்தகைய நிலையை உருவாக்க, அரசியல் கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்கள் நிதி அளிப்பதை, தடை செய்ய வேண்டும்.-டி.கே.ரங்கராஜன்
நமக்குக்கிடைக்கலைன்னா ஒரு பயலுக்கும் கிடைக்கக்கூடாது அதானே?
==============
17 அதற்கு மாற்றாக, அரசே தேர்தல் செலவினங்களுக்கு பணம் வழங்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும். விகிதாசார பிரதிநிதித்துவம் கட்டாயமாக இருக்க வேண்டும்.-டி.கே.ரங்கராஜன்
மக்கள் வரிப்பணத்தை தண்டமா செலவு பண்ணச்சொல்ல்றாரு
================
18 ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி, தேர்தலில், பா.ஜ., வென்றுள்ளதாக, எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன-ரவிசங்கர் பிரசாத்
சரியாகத்தான் பயன்படுத்தி ஜெயிச்சோம்கறீங்களா?
=============
19 . இதுபோல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, நாட்டில் உள்ள வாக்காளர்களை அவமதிப்பதை, எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். தேர்தல் தோல்வியையும், எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். -ரவிசங்கர் பிரசாத்
அவங்க ஒத்துக்கலைன்னா என்ன ஒத்துக்கிட்டா என்ன? மோடி தானே பிரதமர்?
===============
20 வீடுகளில், பீர் தயாரிப்பதற்கான அனுமதி வழங்க மாட்டோம்,'' என, அமைச்சர், தங்கமணி
வீட்டுக்கு வெளீல வந்தோ கொல்லைப்புறமாவோ தயாரிசுச்க்கலாமா?
அரசோட மெயின் வருமானத்துல்கயே கை வைக்க நினைச்சா விட்ருவமா?
0 comments:
Post a Comment