1 மேலிட தலைவர்களை, நான் எதிர்த்து பேசவில்லை. இப்போது, எதற்காக நீக்கினர் என்றே தெரியவில்லை.-கராத்தேதியாகராஜன்:
எதற்காக நீக்கினீங்க?னு ஒரு சவுண்ட் விட்டுப்பாருங்க
கூட்டணிக்கட்சி திமுக வை விமர்சிச்சா அவங்களால தாங்கிக்க முடியாது
”தியாக” ராஜன்
நீங்களும் உங்களுக்குனு ஒரு கோஷ்டியை உருவாக்குங்க, மீண்டும் சேர்த்துக்குவாங்க
==================
2 : ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பெட்ரோல், டீசலை கொண்டு வருவது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைப்படி தான், முடிவு எடுக்க முடியும்-பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான்
அவங்களைக்கேட்டா அமைச்சர் தான் முடிவெடுக்கனும்பாங்க,
இப்படியே மாறி மாறி விளையாடுங்க
==============
3: ஹிந்தி எதிர்ப்பு எனக்கூறும், தி.மு.க.,வினர் தான், அவர்கள் நடத்தி வரும், 45 பள்ளிகளில்,ஹிந்தியை கற்றுக் கொடுத்து,தமிழில் பேசினால் அபராதம்போடுகின்றனர்- எச்.ராஜா
அப்போ 45 பள்ளிகளுக்கும் சீல் வைங்க
திமுக மேல்மட்டத்தலைவர்கள் வீட்டில் அனைவருக்கும் ஹிந்தி பேச எழுத தெரியும் , இது கட்சில இருக்கற அடிமட்டத்தொண்டர்களுக்குத்தெரியுமா?
===============
4 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' திட்டம், இந்தியாவுக்கு பொருந்தாது. -ஆனந்த் சர்மா
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் பாலிசி ஒத்து வரார்தா?
===============
5 ஓட்டுகளுக்காக, பிரித்தாளும் அரசியலில், பா.ஜ., ஈடுபடக் கூடாது. அது, ஆபத்தான போக்கு.-ஆனந்த் சர்மா
ஆளும் கட்சியா? பிரித்தாளும் கட்சியா?ங்கறாரா?
================
6 நாட்டின் பன்முகத் தன்மைக்கு மரியாதை அளிப்பதுடன், அதை முழு மனதுடன், பா.ஜ., ஏற்க வேண்டும். -ஆனந்த் சர்மா
மாநில கட்சிகளின் செல்வாக்குக்கு உலை வைக்கப்பார்க்கறாங்களா?
================
7 நாட்டின் ஒற்றுமையிலும், பாதுகாப்பிலும், எந்த சமரசமும்இருக்கக் கூடாது.-ஆனந்த் சர்மா
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துட்டுதானே இருக்காங்க?
“கூட்டு” நல்;லாருந்தா சமரசமும் நல்லாருக்கும்
=============
8 நாட்டுக்காக இரு பிரதமர்களை இழந்துள்ள காங்கிரசுக்கு, அது நன்றாக தெரியும்.-ஆனந்த் சர்மா
நீங்க மட்டும் இறந்தவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா?
=============
9 அ.ம.மு.க.,வில் இருந்தபடியே, குழப்பத்தை உருவாக்குங்கள்' என, தங்க தமிழ்செல்வனுக்கு யாரோ, 'அசைன்மென்ட்' கொடுத்ததால் தான், அவர் இவ்வளவு நாள், இப்படிச் செயல்படுகிறார்--அ.ம.மு.க., மாரியப்பன் கென்னடி '
அதென்ன யாரோ? திமுகனு நேரடியா சொல்லுங்க
==============
10 .கொள்கை இல்லாத கட்சி என்று சொல்லும் தங்க தமிழ்செல்வன, எப்படி இரு ஆண்டுகளாக, அ.ம.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலராக இருந்தார்? =
அ.ம.மு.க., மாரியப்பன் கென்னடி '
ஜனங்க மூளை இல்லாதவங்க, நாம எது சொன்னாலும் நம்பிடுவாங்கனு நம்பிக்கைதான்
எல்லாக்கொள்கையையும் மக்களிடையே பரப்பிட்டாரே? அதனால கொள்கை காலி ஆகிடுச்சோ?
=================
11 தலைமையை விமர்சித்த தங்க தமிழ்செல்வன வருத்தம் தெரிவிக்க வேண்டும்.-
அ.ம.மு.க., மாரியப்பன் கென்னடி '
இப்போ அவரு திமுக தலைமையை ஏத்துக்கிட்டாரு, சாரி சொல்ல மாட்டாரு, சாரி
==============
'12 , தமிழகத்தில் உள்ள, ஆறு, குளங்களை துார் வாராதது, அனைவரும் செய்த தவறு=இல.கணேசன்
அப்போ மத்திய அரசு மேலயும் தவறு இருக்கு?
============
13 . குளங்கள், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், இரக்கமின்றி அகற்றப்பட வேண்டும். =இல.கணேசன்
குறிப்பா எரிகளின் மேல் காலேஜ் எல்லாம் கட்டி வெச்சிருக்காங்க , அதை இடிக்கனும்
============
14 அதை, மாநில அரசு செய்ய வேண்டும்.தி.மு.க., விரும்பினால், அவர்களுக்கு வேண்டிய அரசு நடக்கும் கர்நாடகத்துடன் பேசி, காவிரியில் தண்ணீரை திறந்துவிடக் கூறலாம். -இல.கணேசன்
அப்போ பாஜக அரசு வேண்டாத அரசா? மத்திய அரசுன்னா எல்லாருக்கும் பொதுதானே?
============
15 தண்ணீர் உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளை வைத்து, அரசியல் லாபம் அடையக் கூடாது.-இல.கணேசன்
அரசியல் லாபம்னாலே பொது பிரச்சனைகளை வைத்து அடைவதுதான்
==============
16 காவிரி மேலாண்மை ஆணையம், தபால் அலுவலகம் போல் செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. -ஸ்டாலின்
காலைல 10 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடிடறாங்களா?
==============
17 காவிரி மேலாண்மை ஆணையம் போட்ட முதல் உத்தரவையே, கர்நாடக அரசு அவமதித்துள்ளது.இதை தட்டிக் கேட்க முடியாமலும், மத்திய, பா.ஜ., அரசிடம் வலியுறுத்த துணிச்சல் இல்லாமலும்,அ.தி.மு.க., அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.-ஸ்டாலின்
உங்க கூட்டணிக்கட்சி தானே கர்நாடகா காங் அரசு? நீங்க தட்டி குட்டி கேட்கலாமே?
=========
18 காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, உடனடியாக, நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.-ஸ்டாலின்
பிரச்சனைகளை தண்ணி பட்ட பாடா சமாளிக்கற ஆளா இருக்கனும்
================
19 கல்வி அறிவில்லாதவர்கள் மத்தியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை' எனக் கூறுவது, தவறானது. -ஸ்மிருதி இரானி
சிறுமிகள் [பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதற்கு வேறு என்ன காரனம்?
============
20 மெத்த படித்தவர்களும், பாரபட்சம்காட்டுகின்றனர் என்பது தான் உண்மை-ஸ்மிருதி இரானி
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் பயம் வரும் , ஒரு ரேப் கேஸ்க்கு தீர்ப்பு வர 10 வருசம் ஆகிடுது, அதுக்குள்ள குற்றவாளி செத்தே போய்டுவான்
====================
0 comments:
Post a Comment