விக்ரம் ரசிகர்கள் சண்டைக்கு வந்தலும் பரவால்ல , ஆரம்பத்துலயே ஒரு உண்மையை சொல்லிடறேன் , இதுல ஹீரோ விக்ரம் கிடையாது , அவர் ஒரு கெஸ்ட் ரோல் தான். நடிகர் நாசரின் மகனான அபிஹாசன் தான் ஹீரோ . அக்சரா ஹாசன் தான் ஹீரோயின்.
இதுல விக்ரம் என்னவா வர்றார்? என்ன கேரக்டர் அப்டிங்கறதை இயக்குநர் கடைசி வரை ரகசியமாவே வெச்சிருக்கார். கடைசி வரைன்னா கட்டங்கடைசி வரை அவர் யாரு? டபுள் ஏஜெண்ட்டா? ரகசிய போலீசா? ஒண்ணும் விளக்கம் இல்லை
ஹீரோ ஒரு டாக்டர். அவருக்கு ஒரு சம்சாரம், நிறை மாச கர்ப்பிணி. அவங்க 2 பேருக்கும் ரொமான்ஸ் , டூயட் , ஊடல்னு 2 ரீல் ஓடுனதும் நான் வெளீல டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே போய் கேட்டேன் ,. பொட்டி வந்திடுச்சா? இது விக்ரம் படம் தானா? அப்டினு அவரும் கன்ஃபர்மா இது அவர் படம் தான்னார்
சரினு உள்ளே வந்தா விக்ரமை அப்போதான் காட்டறாங்க . படம் போட்டு 20 நிமிஷம் மேல ஆகிடுச்சு
விக்ரம் வந்து பெருசா ஏதும் செய்யலை . திடீர்னு இடைவேளை வந்துடுச்சு
ஆங் , எதுல விட்டேன் ? டாக்டர் பணி புரியும் ஹாஸ்பிடல்ல விக்ரம் விபத்தில் அடிபட்டதுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கார். டாக்டரோட சம்சாரத்தைஒ கடத்தி வெச்சு ஒரு க்ரூப் விக்ரமை நைசா ஹாஸ்பிடலை விட்டு கடத்தி கூட்டிட்டு வந்தா தான் மனைவியை ரிலீஸ் பண்ணுவோம்னு மிரட்றாங்க
டாக்டர் என்ன [பண்றார்? விக்ரம் என்ன ஆகறார்? மலேசிய போலீசின் இரு வெவ்வேறு தரப்பு போலீஸ் குழுக்கள் என்ன பண்றாங்க என்பதே மீதிக்கதை
விக்ரம் செம கெட்டப் . டாட்டூ எல்லாம் குத்தி ஜிம் பாடி வித்தியாச ஹேர் ஸ்டைல்னு கலக்க்கறார். ஆனா படத்துல் அவருக்கு ஆக்சன் காட்சிகள் கம்மி . நல்ல வாய்ப்பு இருந்தும் அவரை அடக்கி வாசிக்க சொல்லிட்டாங்க போல
நிஜ ஹீரோ அபிஹாசன் அப்பாவி மாதிரி இருக்கார் ,. அவரு என்னென்னமோ சாக்சம் எல்லாம் பண்றார் , நம்பவே முடியல. திமுக ஊழலை எதிர்த்துப்போராடும்னு அக்கா கனிமொழி சொன்னதைக்கூட நம்பிடலாம் போல
அவருக்கு ஜோடியா வர்ற அக்சரா ஹாசன் , நடிப்பு ஓக்கே .குணச்சித்திர கேரக்டர்னா தமிழன்"கண்டுக்க"மாட்டான்
மலேசிய ஹையர் ஆஃபீசரா வர்ற அந்த லேடி குட் ஆக்டிங்’ இன்னொரு ஜூனியர் பில்லா நயன் தாரா மாதிரி ட்ரை பண்ணி இருக்கு . நல்ல செழுமை வளமை இளமை தெரியுது , எதிர்காலம் உண்டு
வில்லி மாதிரி ஒரு லேடி வருது , தம் அடிக்குது , கர்ப்[பிணிப்பொண்ணை அடிக்குது , நம்ப முடியாத கேரக்டர் அமைப்பு
இசை பிஜிஎம் குட்/. ஒளிப்பதிவு லொக்கேஷன் ஹாலிவுட் தரம்
ஆக்சன் காட்சிகள் கோட்டை விட்டுட்டாங்க
மொத்தத்துல படம் பிரமாதமும் இல்லை , மொக்கையும் இல்லை , பரவால்ல பாக்கலாம் ரகம்
நச் டயலாக்ஸ்
1 வேலை சரியான நேரத்துக்கு நடக்கனும்னா ப்ரொசீஜர்ஸ் பாலோ பண்ணிட்டு இருந்தா முடியாது #KadaramKondanreview
2 அவ்ளோ தான் , மொத்தப்படத்துக்கும் இந்த ஒரு டயலாக் தான் , அதுவும் ஹீரோ வுக்கு இல்லை
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஓப்பனிங்க் காட்சிகள் அபாரம்.ஹாலிவுட் ஆக்சன் படத்துக்கு இணையான பரபரப்பு,படப்பிடிப்பு #KadaramKondanFromJuly19
சொதப்பல்கள் + ;லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 லாஜிக் மிஸ்டேக் 1−அவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்ல எக்ஸ்ரே எடுக்க 12 வது மாடிக்குப்போகனும்னு ஒரு டாக்டர் பொய் சொல்றதை நம்பி செக்யூரிட்டி ஆபீசர் போலீசால் தேடப்படும் கைதியை அனுப்புவாரா? #kadaramkondaan
2 வசனகர்த்தா விடம் ஒரு கேள்வி
அக்கம் பக்கம் விசாரிங்க
neighbours also
மேஜர் சுந்தர்ராஜன் ரசிகரோ? #KadaramKondanreview
ரெண்டும் 1 தானே?
3 லாஜிக் மிஸ்டேக் 2 − அவ்ளோ கஷ்டப்பட்டு அலைஞ்சு தேடி ஹீரோவைக்கண்டுபிடிக்கும் வில்லன் தன் கையால்"அப்பவே சுடாம தன் அடியாள்ட்ட ,நீ முடிச்சுடு னு சப் காண்ட்ராக்ட் விடறாரே?அவரு முடிக்க மாட்டாரா?#KadaramKondan
3 2010 ரிலீஸ் ஆன Point blank ஹாலிவுட்"படத்தை 2019 ல அவங்களே திரும்ப ரீ மேக் ப்ண்ணி இருக்காங்க,நம்மாளுங்க மறுபடி"அதை ரீ மேக்.இட்லி அவிச்சு உப்புமா ஆக்கி அடுத்த நாள் மறுபடி சூடாக்கி சாப்பிடறமே அப்டி #KadaramKondan
4 திரைக்கதையில் பெரிய தவறு என்னன்னா கதை ஹீரோ பார்வைல போகாம அவர் கூட இருக்கற டாக்டர் பார்வைல போகுது.அந்த கேரக்டருக்கு விஜய்சேதுபதி,அருண் விஜய் மாதிரி ஆளை போட்டிருந்தா பட்டாசா இருந்திருக்கும் #KadaramKondan
( படம் முடிஞ்சதும் தான் விக்ரம் இதுல ஹீரோவே இல்லைங்கற ராணுவ ரகசியத்தை கண்டு பிடிச்சேன்)
5 லாஜிக் மிஸ்டேக் 3−வில்லி நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணான நாயகியை கைல துப்பாக்கி இருந்தும் சுடாம மொட்டைமாடில இருந்து பலவந்தமா குதிக்க வைக்க அரை மணி நேரமா சண்டைபோட்டுட்டு இருக்காப்டி,ஷப்பா டேய் #KadaramKondan
6 டைட்டில் ல வர்ற கடாரம் கொண்”டான்” ல ஹீரோ க்கு டாண் கேரக்டரோனு நினைச்சேன் , அது இல்லை. டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை ,. வலிய கே கே அப்டினு தான் ஹீரோவைக்கூப்பிடுவாங்கனு சொல்லிக்கறாங்க . அதுக்கு இன்னொரு அர்த்தம் இருக்குனு நம்ம ஆளுங்க தெரிஞ்சுக்கலை
7 நிறை மாத கர்ப்பிணிப்பெண்ணை அந்த லேடி போலீஸ் சித்ரவதை பண்றதெல்லாம் ஓவரோ ஓவர் , லேடீஸ் ஆடியன்சை கவர் பண்ண ட்ரை ;பண்றாங்க போல , மலையாளப்படங்களீல் இதுபோல காட்சி வந்தால் பெண்களை சித்ரவதைப்படுத்துவது குற்றம்னு சப் டைட்டில் மாதிரி ஓடும் . இங்கே ஒண்ணையும் க்லாணோம்,
கடாரம் கொண்டான் @கேரளா கோட்டயம் அனுபமா 60% full ,ரெட் அலர்ட் விட்டு அடாத மழையிலும் விடாத"ரசிகர் கூட்டம் #KadaramKondan
ஃபைனல் கமெண்ட் - கடாரம் கொண்டான் − 2010- Point blank பிரெஞ்ச் பட ரீமேக் ,முதல் பாதில ஹீரோ"30 நிமிஷம் கூட வர்லை ,பின் பாதில ஒரே துரத்தல்"மயம் ,சேசிங்"காட்சிகள்"அதிகம்.ஹீரோ சார்பாக"ஆடியன்ஸ் அனுதாபப்படும்படி"காட்சிகள் இல்லாதது பலவீனம், விகடன் 41 ரேட்டிங் 2.5 / 5 , ஏ சென்ட்டர் பிலிம் #KadaramKondan
0 comments:
Post a Comment