Saturday, July 13, 2019

கூட்டத்து ல கண்ணாடி போட்ட ஆள் ஓடப்பாக்கறாரு,விடாதே,பிடி

1  'காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்ததும், முதல் வேலையாக, காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டப்படும்' என, ராகுல் சொன்னார். இதற்கு, காங்கிரசிடம் இருந்தோ, தி.மு.க.,விடம் இருந்தோ, எந்தப் பதிலும் இல்லை.- இ.பி.எஸ்.,  

 எப்படியும் ஆட்சி அமைக்க முடியாதுனு   தெரிஞ்சு அடிச்சு விட்டுட்டோம் - ஸ்டாலின் + ராகுல்

==============

2   'ஒரே தேசம்; ஒரு குடும்ப அட்டை' என்பது சிறப்பான திட்டம். இந்த திட்டத்துக்கான அடிப்படை, 2011- - 2012ம் ஆண்டிலேயே, காங்., ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. -தமிழிசை: 


 அப்போ காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் சிறப்பான திட்டம்னு ஒத்துக்கறீங்க?

 அப்போ நீங்க சொந்தமா யோசிச்சு கொண்டு வந்த் நலத்திட்டம் இல்லைனு ஒத்துக்கறீங்க?

=================

3 : நான், வெறும், 48 நாடகள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என, தினகரன் கிண்டல் செய்கிறார். இது, தலைவருக்கு அழகல்ல.  -இசக்கி சுப்பையா

 நீங்களும் திருப்பி தாக்குங்க , நான் ஏழாவது பாசுண்ணே , நீங்க எட்டாவது  ஃபெயிலுண்ணே ,பாஸ் பெருசா? ஃபெயில் ;பெருசா? 

==================

3 சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து, கிரண்பேடி, தான் வகிக்கும் பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில், சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருப்பது, அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.-

பா.வளர்மதி  


பொதுப்பிரச்சனையைப்பற்றி பதவி ல இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கக்கூடாதுனு சட்டம் இருக்கா?

=================


4   பெண்மைக்கே உரிய உயர்ந்த தயையும், தாயுள்ளமும் சிறிதுமின்றி, கிரண்பேடி தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.-

பா.வளர்மதி  

அட்வைஸ் பண்றதுதானே அம்மாக்களின் குணம்?அதுல என்ன தப்பு?>

===============

 5  ஏதோ ஒரு காரணத்தைத் தேடி, கட்சியில் இருந்து சிலர் வெளியேறுகின்றனர். -அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல்


சரி , நீங்க எப்போ கிளம்பறீங்க? 


===============
6  அப்படி என்றால், இருப்பவர்கள் எல்லாம், எந்த மரியாதையுடன் இருக்கின்றனர்? -அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல்


 மரியாதையா முக்கியம்? பதவி கிடைச்சா சரி
=============


7  இது, தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி. தனிப்பட்ட நபரால், கட்சி உருவாக்கப்படுவது இல்லை.-அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல்

 அப்போ தினகரன் அல்லது சசிகலா போன்ற தனி நபரால் கட்சி  ( அமமுக)ஆரம்பிக்கப்படலங்கறீங்க?

=================


8   சசிகலா, தினகரனை நோக்கித்தான், அ.ம.மு.க., நகரும். அவர்களை விரும்புபவர்களும், ஏற்றுக் கொள்பவர்களும் தான், கட்சியில் இருக்க முடியும்.-அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல்

சசிகலா ஜெயில்ல இருக்காங்க , அப்போ கட்சி அங்கே நகருமா?

==============


9   : லோக்சபா தேர்தல், நமக்கான தேர்தல் இல்லை என்பது, தினகரனுக்கு புரியவில்லை.-தங்க தமிழ்ச்செல்வன்

இதை தேர்தல் அப்பவே சொல்லி இருக்கலாமே? 


==============


10    '33 இடங்களை ஜெயித்து, நாம் தான், மத்தியையே தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம்' என, மிதப்பில் சொன்னார்.-தங்க தமிழ்ச்செல்வன் 

நீங்களும் அதை நம்பித்தானே இர்நுதீங்க?

============== 


11 ஆனால், 18 பேரின் வாழ்க்கையை சந்தியில் நிறுத்தி விட்டோமே என, தினகரன் ஒரு நிமிடம் கூட நினைக்கவில்லை. -தங்க தமிழ்ச்செல்வன்

பகடைக்காயா பயன்படுத்திக்கிட்டாரா? 


===========


12   தன்னை தவிர, வேறு யார் முகமும், மக்களுக்கு தெரிந்த முகமாக இருக்கக் கூடாது என்பது, தினகரனின் எண்ணம். ரொம்ப நல்ல மனசு!-தங்க தமிழ்ச்செல்வன் 

உங்க முகம் தான்   டி வி ல டெய்லி காட்டறாங்களே?

===================


'13 நாட்டில், உற்பத்தி துறையில் சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டது உண்மை தான். இதற்கும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கும், எந்த தொடர்பும் இல்லை- நிர்மலா சீதாராமன் : 

சிறிது சுணக்கமா? அடி வாங்கி ஆஸ்பிடல்ல இருக்குங்க


==============


14  . ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், பல நன்மைகள் கிடைத்தன. முக்கியமாக, பயங்கரவாதத்திற்கு நிதி செல்வது தடுக்கப்பட்டது; - நிர்மலா சீதாராமன் :

இதை நம்பித்தாங்க ஜனங்க மீண்டும் உங்களுக்கே ஓட்டு போட்டிருக்காங்க 

================


15   சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், செல்லாக் காசானது; நாட்டில், புழக்கத்தில் இருந்து கள்ள நோட்டுகள், முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன.- நிர்மலா சீதாராமன் : 

 அப்போ தேர்தல் நேரத்தில் விளையாண்ட , பிடிபட்ட கறுப்புப்பணத்துக்கு என்ன சால்ஜாப் சொல்லப்போறீங்க ?

=================


16   சத்தியமங்கலம், நகை கடை அதிபரின் மகள் திருமணத்தில் வெள்ளி பலகையில் தங்க தட்டு வைத்து சாப்பாடு மற்றும் விருந்தினர் அனைவருக்கும் ஒரு தங்க செயின் அன்பளிப்பு # சாப்டுட்டு பிளேட்டை வெச்ட்டு போகனுமா?வீட்டுக்கு எடுத்துட்டுப்போய்டலாமா?னு தெரில.




================




17 வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடவில்லை : டிடிவி தினகரன்.

# கூட்டத்து ல கண்ணாடி போட்ட ஆள் ஓடப்பாக்கறாரு,விடாதே,பிடி

=============


18 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், இன்று, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் பேச உள்ளார் # இன்றைய சிலபஸ் பத்துப்பாட்டு எட்டுத்தொகையாம், எல்லாம் ரெடியா இருங்க, அங்கங்கே கேள்வி வேற கேட்பாரு


================

1 9  தமிழகத்தில், ஒரு தற்காலிக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என, உறுதியாகக்கூறுகிறேன். -துரைமுருகன்: 

எப்போ ? 20121லா?


=================

2 0 : ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே கல்வி, ஒரே மின்கொள்கை என்பது, சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்கிறதோ என்றஅச்சத்தை ஏற்படுத்துகிறது.-முத்தரசன்

ஒரே அச்சம்?


21: உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணி தொடரும்  -


 , அன்புமணி


நல்ல வேளை,  உள்ளாட்சி தேர்தலிலும் tஹோல்வி தொடரும்னு சொல்லல 

-- 
 

0 comments: