1 பாட்டனி மிஸ் பாரிஜாதம் =
மனிதனால் அதிகம் உட்கொள்ளப்படும் கனி எது?
தெரியாது டீச்சர்
பெஞ்ச் மேல ஏறி நில்லு
கொய்யா
அடங்"கொய்யா"ல.
சபாஷ் ,சரியான பதில்
==============
2 அட்சயதிரிதியை அன்னைக்கு தங்கம் வாங்குனா அந்த வருசம் பூரா"தங்கம் வாங்கற யோகம் அமையுமாமே? நிஜமா?
அன்னைக்கு(அம்மா) னு இல்லை.மனைவி,சகோதரி யாருக்கு வேணா வாங்கித்தரலாம்
=============
3 தமிழன்
சங்கத்தமிழன்
என்ன வித்யாசம்?
இளைய தளபதி VS மக்கள் செல்வன்
==============
4 நடுநிலைனா என்ன?
சமயம் கிடைக்கும்போதெல்லாம் மரக்கன்று நடும் நிலையை எடுப்பது
-----------------]]]
5 நான் ஜப்பான் நாட்டிற்கு துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் .....
தலைவரே!தமிழ் ஒரு"நுணுக்கமான"மொழி,ஆளாளுக்கு"கலாய்பானுங்க.
நான்" துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜப்பான் நாட்டிற்கு சென்ற"போது....
என்பதே"சரி.
==============
6 Pink பிடிக்காத பெண்கள் இருக்கவே முடியாதாமே?நிஜமா?
அது"தெரில,ஆனா "நேர்கொண்ட பார்வை"யை ரசிப்பாங்க
==============
7 தம்பி,உங்க ஜாதகத்தைக்குடுங்க
இந்தாங்க ஜோசியரே
ஆ!உள்ளே எதுவுமே எழுதலையே?
என்னோடது"சுத்த ஜாதகம் ஆச்சே?
சுத்தம்
==============
8 ஓ காதல் கண்மணி படத்துக்கும் arjun reddy படத்துக்கும் diff என்னனு சொல்லுங்க பாப்போம்...
கவித்துவம் vs கில்மாத்துவம்
=============
9 சம்பந்தி
பொண்ணு+அவுங்க அம்மா ஜாயிண்ட்ல பேங்க் லாக்கர் ஆரம்பிச்சு பொண்ணு நகைகள வச்சுக்குவாங்களாம்,இந்த"சம்பந்தம் ஓகேவா?
ஆ பு வே.அந்த லாக்கர்லயே பொண்ணையும் பத்திரமா பூட்டி வெச்சுக்குங்க
===========
10 அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது . என்பது உண்மையா?
எங்க ஊர்ல அதுக்கு"போரிங் பைப்னு பேர்"வெச்சிருக்காங்க
==============
11 சங்கத்தமிழன் ஒருநாளும் சங்கத்தலைவன் ஆக முடியாது
ஏன்?
சங்கத்தமிழன் ஒரு விஜய்சேதுபதி படம்; சங்கத்தலைவன் ஒரு சமுத்திரகனி படம்!
===========
12 குருவே!கொடுக்கின்ற மனதிற்கு யாரையும்
கெடுக்கின்ற எண்ணம் இருக்காது... என்ற கருத்து நிஜமா?
அமைதிப்படைல அமாவாசை கஸ்தூரிக்கு அல்வா குடுத்தாரு,ஆனா கெடுத்துட்டாரே?
==============
13 என் ஜாதகப்படி ரெண்டுகல்யாணம்னு போட்டு இருக்கு..
ரொம்ப சந்தோஷப்படாதீங்க,வாழைமரத்துக்கு தாலி கட்டச்சொல்லி ஒரு கல்யாணம்,பொண்ணுக்கு தாலி கட்டச்சொல்லி 2 வது கல்யாணம்கறதைத்தான் சுத்தி வளைச்சு விக்ஸ்னு எழுதி இருக்கு
=============
14 தலைவரே!கொடைக்கானல் டூர் போய் இருக்கீங்க,குணா குகை பாத்துட்டு வாங்க
ஆங் ,நான் மாட்டேன்
ஏன்?
அது கமல் சம்பந்தப்பட்டது.அவருதான் நம்ம வாக்கு வங்கில கை வெச்ட்டாரே?நான் அவர் ஏரியா ல எப்டி கால் வைக்க முடியும்?
==============
15 மேடம் ,எங்கே போனாலும் உங்க கூடவே வர்றாரே அவர் யார்?உங்க கார் டிரைவரா?புருசனா?
செல்பி எடுக்க ஒரு ஆளை சம்பளத்துக்கு வெச்சிருக்கேன்
=============
16 கண்ணாடில பாக்க அழகா இருக்க மாதிரி இருக்கு. சரி செல்பீ எடுப்போம்னு எடுத்தா கேவலமா இருக்கு.. என்ன,பண்ண?
கண்ணாடி"முன்னாடி நின்னு கண்ணாடி ல"வர்ற பிம்பத்தை போட்டோ எடுங்க,சிம்ப்பிள்
===============
17 Stock market மூலமாக வந்த லாபத் தொகைல (share trading /mutual fund) நீங்க வாங்கிய பொருள் என்ன?
வீடு ங்க
பிரமாதம்.எப்டி வாங்குனீங்க?
குடி இருந்த பங்களாவை வித்து ஷேர் ல வந்த லாஸ் சரி செஞ்சு மிச்சம் ஆனதுல வாங்குனதுங்க
=============
18 ஜட்ஜ்= பக் வீட் ஆண்ட்டியைப்
பற்்றி பால்ஸ் இன்பர்மேஷன் பரப்புனீங்களாமே?
கைதி = எதிர் வீட்டு ஏகாம்பரத்தோட மங்க்கி பால்ஸ்ல குளிச்ட்டு இருந்ததைப்பாத்தேன்,அத அவ புருசன் கிட்ட சொன்னேன்,இது faulse information இல்லீங்க. falls information
===============
19 மேடம்,வண்டியை நிறுத்துங்க,R.C புக் எடுங்க
இந்தாங்க சார்
என்னம்மா ஏதோ கதை புக் மாதிரி இருக்கு?
RC = ரமணி சந்திரன்
===============
20 கடைக்காரரே!லைட் ஆயில் கால் லிட்டர் குடுங்க
இதென்ன tea கடையா?லைட்டா குடு ,ஸ்ட்ராங்கா குடுன்ட்டு"?
லைட் = விளக்கு ,ஆயில் = எண்ணெய் லைட் ஆயில் == விளக்கெண்ணெய்
அட வெளக்கெண்ணெ!
============
0 comments:
Post a Comment