1 காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல், ராஜினாமா செய்யக் கூடாது. அவரிடம், இது தொடர்பாக, நானும், எங்கள் கட்சி நிர்வாகிகளும், வற்புறுத்த முடிவு செய்துளோம்- தேவகவுடா:
அது வும்சரி தான், அவரு ராஜினாமா பண்ணிட்டா இவரு பையன் குமாரசாமி பதவ் இக்கு ஆபத்து வந்துடுமே?கட்சியின் பழைய தலைகள் எல்லாம் விஆர் எஸ் வாங்க வேண்டி வருமே?
================
.2 காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பதை, நான் முடிவு செய்யப் போவதில்லை; கட்சி தான், அந்த பொறுப்பை மேற்கொள்ளும்- ராகுல்
பிரியங்கா காந்தி தானே? என்ன சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு?
இதுவும் ந்ல்ல ஐடியாதான், இவரா அறிவிச்ட்டா பிரச்சனைஉ இல்லை, அறிவிக்கலைன்னா கட்சிக்குள் குழப்பம் வரும் , கோஷ்டி மோதல்; வரும், பிறகு நானே தலைவரா இருந்துக்கறேன்னு சொல்லிக்கலாம்
===============
3 குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, அரசிடம் எந்த திட்டமும் இல்லை.=துரைமுருகன்:
சீனியர்ங்கற முறைல நாம தான் ஐடியா தர்றது?
========
4 கல்குவாரிகளில் இருக்கும் தண்ணீரை கொடுக்கிறேன் என்பது, விஷத்தைக் கொடுப்பதற்குச் சமம் -துரைமுருகன்:
அமைச்சர்களுக்கு அதைக்கொடுத்து டெஸ்ட் பண்ணிடலாம்
==============
5 : மாணவர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தருவதாகக் கூறித்தான், தனியார் பள்ளிகள், அனுமதி பெற்றுள்ளன. தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி, பள்ளியை மூடப்போவதாக, தனியார் பள்ளிகள், அரசை மிரட்டக் கூடாது. பிரதமரோ, முதல்வரோ நினைத்தால், மழையை பொழிய வைக்க முடியாது. அது, பருவ காலங்களில் தான் பெய்யும்.- ராஜேந்திர பாலாஜி
மக்களுக்கு நல்லது பண்றோம், தேவையான அடிப்படை வசதிகளை செய்வோம்னு வாக்குறுதி தந்துதானே அரசியல் கட்சிகள் வ் ஆக்கு சேகரிக்குது? ஆட்சிக்கு வந்த பின் இயற்கை மீது பழி போட்டா எப்படி?
==============
6 வனத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, 'அந்த துறையில் என்ன இருக்கிறது... யானை, புலி, சிங்கம், கரடி இருக்கும்' என்று தான் நினைத்தேன். பணியாற்றத் துவங்கியபோது தான், இதில் அனைத்துத் துறைகளும் உள்ளடங்கி இருக்கின்றன என்பது தெரிந்தது. இந்தத் துறையில், மனதார செயல்பட்டால், பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும், கிடைக்கச் செய்ய முடியும்.- சீனிவாசன் :
வனத்துறைன்னா என்ன? அதன் அதிகாரங்கள் , பொறுப்புகள் என்ன?ன்னு தெரியாதவருக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்திருக்கு மேலிடம்?
==================
7 லோக்சபாவில், 'தமிழ் வாழ்க' என, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள், போலியாக கோஷமிட்டு, அங்கே, ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுகின்றனர். இது, தமிழகத்தில் திராவிட கட்சிகள், தமிழை அரசியல் வியாபாரம் செய்தது போல், லோக்சபாவில் தமிழை அரசியலாக்கி, வியாபாரம் செய்யத் துவங்கி விட்டனர் என்பதையே காட்டுகிறது.- அர்ஜுன் சம்பத்
நமது ஆட்சியில் வியாபாரம் நலிவடைந்து விட்டது என யாரும் இனி சொல்ல முடியாதே?
அதுய்க்கும் ஜிஎஸ்டி போட்டு தாளிச்சிடலாமா?
==================
8 பா.ஜ., அளித்த வாக்குறுதியும், செயலும், வேறு வேறாக இருக்கிறது; ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை. மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குறுதிகளை, பா.ஜ., அளித்து வருகிறது. ஆனால், செயல்பாடுகளில் ஒன்றுமே இல்லை. ரண்தீப் சுர்ஜேவாலா
வாக்குறுதிகளை அள்ளி வீசறதும் அதை தேர்தலுக்குப்பின் காற்றில் பறக்க விடுவதும் எல்லா அரசியல் கட்சிகளும் செய்யறதுதானே?
================
9 இந்தியாவின், 65 ஆண்டு கால பார்லிமென்ட் வரலாற்றில், கடந்த ஐந்தாண்டுகளை தவிர, மற்ற எல்லா காலங்களிலும், எதிர்க்கட்சியினருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதில்லை. ஆனால், கடந்த ஐந்தாண்டு, பா.ஜ., ஆட்சி தான், அதை முற்றிலும் மறுத்தது. இம்முறை, பிரதமர் மோடி, கடந்த காலத்தைப் போல் இருக்க மாட்டார் என்று நம்புகிறோம்.- விருதுநகர் லோக்சபா தொகுதி, காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்
புதிய சரித்திரம் படைப்போம்னாரே? அது இதுல தானா?
===============
10 எங்கள் கட்சியில், இரண்டு, எம்.பி.,க்கள் இருக்கிறோம். 543 எம்.பி.,க்கள் இருக்கும் லோக்சபாவில், இரண்டு பேர் என்ன செய்ய வேண்டும் என்பதில், எங்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது; அதன்படி செயல்படுவோம். ஜனநாயக முறையில், அனுமதிக்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்-வி சி க விழுப்புரம் எம்.பி., ரவிகுமார்
சமபளம் , அலவன்ஸ் வாங்கறதைப்பற்றி சொல்றார் போல
=============
11 தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தி.மு.க., தான் காரணம்,''-அமைச்சர் செல்லுார் ராஜு
கேரள அரசு தர்றதா சொன்ன 20 லட்சம் லிட்டர் குடிநீரை வேணாம் என மறுத்தது திமுக வா? அதிமுகவா?
எல்லா கேசையும் அவங்க மேலேயே எழுதுனா எப்படி?
===============
12 அமைச்சர்கள் வீடுகளுக்கு தினமும் இரண்டு லாரி குடிநீர் வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு முதல்வர் ஆவேசமாக பதில் அளித்தார் அமைச்சர் வீட்டில் நான்கு பேர் வரை இருப்பர். அதிகாரிகள் வருவர்; மக்கள் வருவர். அவர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்
அப்போலோ ஆஸ்பிடல்ல்ல ஜெ இட்லி சாப்பிட்ட பில் மட்டும் கோடிக்கணக்குல வந்தது , கேட்டதுக்கு அவரைப்பார்க்க வந்தவங்க சாப்பிட்ட பில்னாங்க, அது மாதிரியா?
===========
13
எனக்கு 2 பக்கெட் தண்ணீர் போதும்!'- இபிஎஸ்
எதுக்கு? தண்ணீர் தட்டுப்பாடு இல்லை, அது வதந்தினு சொல்லி ஐ வாஷ் பண்ணவா?
===============
14 கேரளாவில் இருந்து தண்ணீர் பெறுவதில் என்ன வெட்கம் இருக்கிறது-? துரைமுருகன்
என்ன வளம் இல்லை இந்தத்திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்; மாநிலத்தில் ? பாலிசி போல
இப்போ இப்படிப்பேசுவீங்க, நாளைக்கே ஏன் அண்டை மாநிலங்களில் கை ஏந்தனும்?னு பிளேட்டை திருப்பிப்போடுவீங்க
===========
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது குடுகுடுப்பைக்காரன் வாக்கு மாதிரியே இருக்கே?
==================
16 இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள் பிரிவை சேர்ந்த நாய்களுக்கும், யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.காங்., தலைவர் ராகுல், இந்த புகைப்படத்தை, தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்து, 'புதிய இந்தியா' என, கிண்டலாக பதிவிட்டார்.
ராகுல் ராஜினாமா பண்ணிட்டா புதிஹ்ய காங்கிரஸ் இப்படித்தான் இருக்கும்கறாரா?
==================
17 நாடு முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் கூடுதலாக பாதிப்புகள் இருக்கின்றன. எனவே மஹாராஷ்டிராவுக்கு வழங்கியதை போல தமிழகத்திற்கும் சிறப்பு நிதியாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்'-ஓபிஎஸ்
மழைநீர் சேகரி[ப்பில் கவனம் இல்லாததுக்கு மக்களிடையே விழிப்புணர்வைக்கொண்டு வராததுக்கு அபராதச்ம் தான் போடனும்
==================
தேவா பிழைச்சுக்குவான்
டாக்டர் சொன்னாரா?
தேவாவே சொன்னான்
மொமெண்ட்
==================
கட்சி நடத்த புதிதாக் வரும் நடிகர்களுக்கு இவர் வாழ்க்கை ஒரு பாடம், எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் மொமெண்ட்
==================
20 தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், ஒரு சில இடங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது= இபிஎஸ்
ஒரு சில இடங்களா?பெரும்பான்மையான இடங்க்ஜளில்னு சொன்ன்னா கவுரவம் குரைஞ்சிடுமா?
===================
0 comments:
Post a Comment