1 லோக்சபா தேர்தலில், மோடியின் பிரபலத்துக்கு முன்பாக, எவராலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை- சல்மான் குர்ஷித்:
நீங்க காங்கிரசா? பாஜகவா?திடீர்னு டவுட்
============
2 . இதை ஒப்புக் கொள்ளாவிட்டால், தேர்தலையே புறக்கணிப்பதாக அமைந்துவிடும்.-சல்மான் குர்ஷித்:
தேர்தல் முடிவையே என்பதே சரி
\============
3 உயர் நீதிமன்றத்தில், தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி, அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும்.- ராமதாஸ்
நாட்டுக்கு ரொம்ப முக்கியம். தண்ணீர் பிரச்சனை தண்ணி காட்டிட்டு இருக்கு, அதைக்கவனிங்க
=============
4 : காங்கிரஸ் தொண்டர்கள், லோக்சபா தேர்தல் தோல்வியால் சோர்வடைய வேண்டாம். மக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே, அவர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் - பிரியங்கா
ராகுல் தலைவர் தானே? தொண்டர்னு குறிப்பிடறாரு?
==============
5 போதிய மழையின்றி, சென்னையின் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி
40 ஏரிகளின் மேல் பில்டிங் கட்டிட்டா எப்படி தண்ணி இருக்கும்?
==============
6 அதற்கு மாற்று ஏற்பாடாக, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம். -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி
சென்னையின் தண்ணீர் தேவை ஒரு நாளுக்கு 4 கோடி லிட்டர், நீங்க பண்ற சப்ளை 10% கூட வராது
==============
7 இதில், சிலர் அரசியல் செய்கின்றனர். 'வேலுாரிலிருந்து தண்ணீர் கொண்டு சென்றால், போராட்டம் நடக்கும்' என்றார், தி.மு.க., துரைமுருகன். மக்களிடம் எதிர்ப்பு வந்ததால், 'நான் சொல்லவில்லை; மக்கள் போராடுவர்' என, மாற்றி பேசுகிறார். -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி
அதிமுக வுக்கு திமுக தண்ணி காட்டுது போல
====================
8 சென்னைக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதே, துரைமுருகனின் நிலைப்பாடு.-தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி
கழகம்னா கடமை கண்ணியம் கட்டுப்பாடு
ஆனா புரிஞ்சுக்கலை தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாடு
=============
9 சந்திரபாபு நாயுடு, தேர்தலில் இம்முறை, தனித்துப் போட்டியிட்டார். ஆனால், மக்களுடன் எப்போதுமே அவர், கூட்டணி வைக்கவில்லை; மக்கள் மன உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டார்.-நடிகை ரோஜா:
மக்களுடன் கூட்டணி என அறிவிச்ச கேப்டனின் ம ந கூ கூட தோல்விதானே?
============
10 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 23 தொகுதிகளிலும், லோக்சபா தேர்தலில், மூன்று தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் வெற்றி பெற்றுள்ளது. இது தான், அவரது கட்சியின் உண்மையான பலம்.0நடிகை ரோஜா:
அரசியல்வாதிகள் தங்கள் பலத்தை தேர்தல் முடிவுக்கும் முன் அறிந்து கொள்ள முடியாதது அவர்கள் பலவீனம்
===============
11 கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம், அ.தி.மு.க., இதில், சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஜெ., காலத்திலும், கோஷ்டி பூசல் இருந்தது; இப்போதும் இருக்கிறது. ஆனால், கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை.-அமைச்சர், ஜெயகுமார்
இல்லைன்னா அரசியல்வாதி அகராதில இருக்குனு அர்த்தம்
=============
12 ஜெ., இல்லாத சூழ்நிலையிலும், இவ்வளவு துாரம் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறோம். கட்சியின் முடிவுக்கு, எல்லாரும் கட்டுப்படுவோம்.-அமைச்சர், ஜெயகுமார்
வேற வழி? முடிவுக்கு கட்டுப்படலைன்னா ஆட்சி கலையும், பதவி போய்டும்
=============
13 , ': தமிழகத்தில், பருவ மழை பெய்ய தவறியதால், தண்ணீர் பிரச்னை ஆங்காங்கே எழுந்துள்ளது-அமைச்சர், ராஜு
ஆங்காங்கேவா?அங்கிங்கெணாதபடி அனைத்து இடங்களிலுமா?
==============
14 . மழை பெய்ய வேண்டி, அ.தி.மு.க., சார்பில், கோவில்களில் யாகமும், பூஜையும் நடத்தப்படுகிறது-அமைச்சர், ராஜு
பூஜை பண்றதுக்கா ஆட்சியில் உக்கார வெச்சோம்?
==========
15 2015ல், சென்னையில் வெள்ளம் வந்தபோது, மக்களுக்கு நோய் பரவாமல், அரசு காப்பாற்றியது. தற்போது, வறட்சியால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது; இதையும் சமாளிப்போம்.-அமைச்சர், ராஜு
நல்லா சமாளிக்கறீங்க
=================
16 கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம், அ.தி.மு.க., .-அமைச்சர், ஜெயகுமார்
தமிழக மக்கள் தொகையே 7 கோடிதான்
==============
17 எதிர்க்கட்சிகள் வில்லன்களாக விளங்கியதால் தான், கதாநாயகன் போல, மோடி உருவானார் =, பிரதாப் சாரங்கி
அப்போ மோடியின் பலத்தால ஜெயிக்கலை? எதிர்க்கட்சிகளின் பலவீனத்தாலதான் ஜெயிச்சீங்க?
===============
18 இனி அனைத்து தேர்தல்களிலும், நாங்கள் தனித்து போட்டியிடுவோம்,'' = மாயாவதி
கூட்டணி வைச்சே ஜெயிக்க முடியல, இனி தனியா நின்னா உள்ளதும் போச்சுடா கதை ஆகிடும்
============
19 அடுத்த தேர்தல் வந்து தான், ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்ற, அவசியம் கிடையாது; தேர்தல் வராமலேயே,ஆட்சி மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு,'' = ஸ்டாலின்
ஆசை பேராசை நிராசை
ஆசை தோசை அப்பள வடை
இதே டயலாக்கை 2 வருசமா சொல்லிட்டு இருக்காரு
=================
அரசியல் உல்கில் உங்க முடிவு நெருங்கிடுச்சுனு ஒத்துக்கறீங்களா?
==================
1 comments:
good...
Post a Comment