Wednesday, June 19, 2019

இனிமே நயன் தாரா பற்றி என்ன வேணா பேசிக்கலாமா?

 1  தலைநகர் சென்னை துவங்கி, 22 மாவட்டங்களுக்கு மேற்பட்ட இடங்களில், தண்ணீர் பஞ்சத்தால், மக்கள் தவிக்கும் நிலை, வேதனை அளிக்கிறது.- வைகோ 


திமுக ஆட்சி மின்சாரப்பற்றாக்குறையால போன மாதிரி அதிமுக ஆட்சி தண்ணீர்ப்பிரச்சனயால் தண்ணி காட்டப்போகுது


==============


 குடிநீர் பஞ்சத்தை போக்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக, கடந்த, 7ம் தேதி தான், உள்ளாட்சி துறை அமைச்சர் கூறியுள்ளார்-வைகோ

டாஸ்மாக் தண்ணியைப்பர்ச்சேஸ் பண்ணீட்டாங்களோ?

=============


. 3  தமிழக அரசு இயந்திரம், போர்க்கால வேகத்தில் முடுக்கி விடப்பட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தி, தண்ணீர் பிரச்னையை தீர்க்க விரைந்து செயலாற்ற வேண்டும். -வைகோ


 போர்னு சொன்னாங்காட்டிதான் நினைவு வருது , நம்ம ரஜினி கூட போர் வரும்போது பார்த்துக்கலாம்னாரே?


============

4  இப்போதைய இளைஞர்களின் ஹிந்தி எதிர்ப்புக்கு, தி.மு.க., வின் கடந்த கால வரலாறு தான் காரணம்,'= ஸ்டாலின்

 ஆனா நம்ம குடும்பத்துல மட்டும் எல்லாரும்  ஹிந்தி ;படிச்சு டெல்லி போறாங்களே? அது எப்படி?


=================


5  நடிகர் ராதாரவி, நேற்று மீண்டும், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.திரைப்பட நடிகரான ராதாரவி, முதலில், தி.மு.க.,வில் இணைந்தார். 

 இனிமே நயன் தாரா பற்றி என்ன வேணா பேசிக்கலாமா?


வாழ்க்கை ஒரு வட்டம்னு விஜய் சொன்னதை இவருதான் நிரூபிக்கறாரு, அதிமுக =திமுக அதிமுகனு ரவுண் ட் அடிச்ட்டே இருக்காரு 


===================


6  "நீட் தேர்வால் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு முதல்வரும், ராமதாசும் தான் காரணம்!" - தயாநிதி மாறன் # சரி,அப்போ"நம்ம கட்சி ஆளுங்க நடத்தற சாராய ஆலை யால குடிகாரங்க சாகறாங்களே ,அதுக்கு யாரு பொறுப்பு ஏத்துக்கறது?





==================




7 மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடைபெற்றது

# மழை வரும்போது சந்தோஷ முன்னறிவிப்பா தவளை சவுண்ட் விடும்,ஜோடி கிடைக்கறப்பவும் சவுண்ட் விடும்,நம்மாளுங்க ஐடியா,லாஜிக் எல்லாம் கரெக்ட்,ஆனா மரக்கன்று நட்டாதான் மழை வரும் எதிர்காலத்தில்

===========


8 அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

# சசிகலா ஜெயிலில் இருந்து வரும் வரை காத்திரு(க்கவும்)

கட்சியோட சின்னமே இரட்டை இலைதான்,அதை ஒத்துக்கறீங்க,இரட்டைத்தலைமையை ஏத்துக்க மாட்டிகளா?



==============



9 ஆய்வுக்கு வர மறுத்த VAO வை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த திமுக எம்எல்ஏ!

இனி அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவு! # சபாஷ்,மக்கள் நலனுக்காக திமுக காரங்க 10 ருபா கூட செலவழிச்சதில்லைங்கற அவப்பெயர் இனி இல்லை


==============



10 சாப்பிடும் போது மோடிக்கு நன்றி சொல்லிட்டு சாப்பிடுங்கள்- தமிழிசை
# அதுதான் தமிழ்நாடும்,கேரளாவும் கை கழுவி விட்டுட்டாங்களே?எதுக்கு நன்றி?


==============



11 தமிழகத்தில் இரு மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழும் : ஆ.ராசா

# 2 வருஷமா"இதே கனவைத்தான் தளபதியும் கண்டுட்டு இருக்காரு,இவருக்கு ஆரம்ப,ஸ்டேஜ்தான்,இப்பவே டாக்டர்ட்ட காட்டினா குணம் ஆகிடும்

==============


12 "திமுக பள்ளி நடத்தினால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்!" - கனிமொழி# சாராய ஆலை நடத்துவதால் குவாட்டர் ,ஆப் ,புல் என 3 அளவை செயல்படுத்தப்படும்


=============



13 ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்
# யாருய்யா இவரு? அவரோட கருத்தே தலைமை சரி இல்லை,மாத்தனும்னுதான்


=============



14 ஹிந்தி தெரியாததால் என்னால் முன்னேற முடியவில்லை-தமிழிசை
# ஹிந்தி தெரிஞ்ச நிர்மலா சீதாராமன் அமைச்சர் ஆகிட்டார்,ஹிந்தி கத்துக்கிட்ட சுஷ்மா சுவராஜ் ஆளுநர் ஆகிட்டார்,இவருக்கு ஹிந்தி தெரிஞ்சிருந்தா ஒரு பதவி கிடைச்சிருக்கும்


==============



15 அதிமுக ஒரு வீடு போன்றது.-திண்டுக்கல் சீனிவாசன்.
# ஓஹோ,பிறந்த வீடா?புகுந்த வீடா?
நெடுஞ்சாண் கிடையா தரைல விழுந்து கும்பிட்டு தவழ்ந்த வீடு


=============



16 நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்தார் # ரா(தா)ர(வி) இப்ப
ர(த்தத்தின்)"ர(த்தம்) ஆகிவிட்டாரே!


=============


17    காங்கிரசுக்கு இப்போது, பெரிய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். -வீரப்ப மொய்லி:

எப்படி? இப்போதான் டாக்டர்கள் ஸ்ட்ரைக் நடக்குதே?

=================


18 கட்சியில் உள்ள கோஷ்டி பூசல்களை, இரும்புக் கரம் கொண்டு, ராகுல் அடக்க வேண்டும்.-வீரப்ப மொய்லி:

இருக்கற கோஷ்டிகள் போதாதுன்னு ராகுல் ராஜினாமா செய்யனும்னு ஒரு கோஷ்டியும் , செய்யக்கூடாதுனு இன்னொரு கோஷ்டியும் உருவாகி இருக்காம்

====================

19  வெற்றி பெற்றால் ஒரு விமர்சனமும், தோல்வி அடைந்தால் ஒரு விமர்சனமும் கூறப்படுவது இயற்கை. ஆனால், வெற்றி, தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்வது தான், உண்மையான வெற்றி.= பிரேமலதா: 

ஆமா, தோல்வி அடைஞ்சா சிலர் சாப்ம் எல்லாம் தர்றாங்க . எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்காத மக்களுக்கு மத்திய அரசின் எந்தத்திட்டமும் கிடைக்காதுன்னீங்களே?

=================

20   'தமிழகம் முழுவதும், குடிநீர் பிரச்னையை சமாளிக்க, தமிழக அரசு, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, த.மா.கா., கூட்டத்தில், தீர்மானம் - செய்தி:

த, மா, க கூட்டமா? ஒரு 10 பேரு வந்திருப்பாங்களா? 

======================



0 comments: