Wednesday, June 26, 2019

வட்டி கட்ட செயலாளர்கள் அசலைக்கட்ட மக்கள்


1  : நாங்க மட்டுமல்ல, தமிழகமும், இந்தியாவும் கடனில் தான் இருக்கின்றன.-பிரேமலதா


அது சரிதான், ஆனா உங்களுக்கும் உங்க பையனுக்கும் வாய் நீளம், உங்க கணவருக்கு கை நீளம், அதுதான் பிரச்சனை

============
கர்நாடகாவில், மத சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்திருக்கா விட்டால், 15 முதல், 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். இது, 100 சதவீதம் உண்மை.-வீரப்ப மொய்லி: 


 எல்லாரும் தனித்தனியா நிக்கலாமே? எப்போப்பாரு தோல்விக்குப்பின் கூட்டணிக்கட்சிகளைக்குத்தம் சொல்றது

=============

3   நெல்லை மாவட்டம், களக்காடு பகுதிகளைச் சேர்ந்த, அ.ம.மு.க., பொறுப்பாளர்கள், முதல்வர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்ததாகக் கூறினர். ஆனால், அவர்கள், 'எங்களை ஏமாற்றி அழைத்துச் சென்றனர்' எனக் கூறி, திரும்பி வந்து விட்டனர்.-தினகரன்:

 பால்வாடி ஸ்கூல் குழ்க்ஷந்தைகளா? பஞ்சு மிட்டாய் வாங்கித்தர்றேன்னு ஏமாற்றிக்கூட்டிட்டுப்போக?

==============


,  புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிட்டவுடன், தி.மு.க., வினர் மொழி என்ற ஒன்றை மட்டும் எடுத்து பேசினர்; வேறு அம்சங்கள் குறித்து எதுவும் பேசவில்லை =வானதி சீனிவாசன்

 அவங்களுக்குத்தெரிஞ்சதெல்லாம் ரெண்டு தான்
 1 கனி மொழி
2 தமிழ்மொழி

==================

5 , ஸ்டாலின், ஒவ்வொரு அம்சம் குறித்தும், ஆலோசனை வழங்க வேண்டும்.-வானதி சீனிவாசன்


துண்டுச்சீட்டு பார்த்து ஆலோசனை வழங்கலாமா?

==============

6  பல ஆண்டுகளுக்கு பின், புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உணர்ச்சிகளை துாண்டும் அரசியலை விட்டு, ஆக்கப்பூர்வமாக, வரப்போகும் தலைமுறைக்கான ஆலோசனைகளை, அவரிடமிருந்து வரவேற்கிறோம்.-வானதி சீனிவாசன்



“ஆக்க”ப்பூர்ப்வமான அறிக்கை சிரமம்
“தாக்க”ப்பூர்வமா?ன்னா பழக்கம், ஈசி அவங்களுக்கு

=============
7  தமிழக அரசு, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், சரி செய்யவும் முயற்சித்ததாக தெரியவில்லை. இனியும் மெத்தனம் காட்டாமல், போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக குடிநீர் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு, உடனே சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். - திருமா 


 மத்திய அரசு ஒதுக்குனாலும் இவங்க அதை அவங்க  பக்கம் ஒதுக்கிக்காம நம்ம பக்கம் ஒதுக்கனும்

================

8    இந்தியாவில், முதல் முறையாக, இரண்டு ஆண்டுகளில், 12 வகுப்புகளுக்கும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 99 சதவீதம் மாணவர்கள், பள்ளிக்கு வருகின்றனர். கட்டமைப்பு மற்றும் குடிநீர் வசதியின்றி, எந்த பள்ளிகள் இயங்கினாலும், தடையின்மை சான்றை அரசு திரும்ப பெற்றுக்கொள்ளும். அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள், மாணவர் சேர்க்கை அதிகரித்தபடி உள்ளது.- செங்கோட்டையன்

அரசுப்பள்ளிகளில் குடி நீர் கிடைக்கலைன்னா?

============
9 மக்களுக்கு நன்மை செய்ய, கடவுள் என்னை, எம்.பி.,யாக வெற்றி பெற செய்திருக்கிறார்.=
, வசந்தகுமார், எம்.பி.,  

 உங்க மனைவி மகன் மகள் மக்களுக்கா? தொகுதி மக்களுக்கா? விளக்கமா சொல்லவும்

===============

.10   தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக, அரசிடம் மக்கள் முறையிடுகின்றனர். ஆனால், ஆட்சியாளர்களோ, தங்களால் முடியாது எனக்கூறி, ஆண்டவனிடம் முறையிடுகின்றனர்.-துரைமுருகன்

தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் அறிஞர் அண்ணா, காமராஜர் , எம் ஜி ஆர், ஜெ , கலைஞர், அவங்க சமாதில போய் முறையிட்டாங்களா?

=================


 11 கோவில்களில் பூஜை செய்து, யாகம் வளர்க்கின்றனர். இதன் வாயிலாக, அவர்களால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை என்பதை அறியலாம். அவர்களே, தானாக ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்; இல்லா விட்டால், அவர்களை மக்கள் வெளியேற்றி விடுவர்-துரைமுருகன்


 மின்சாரப்பற்றாக்குறை காரணமா அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால திமுக ஆட்சியை விலக்கின ,மாதிரியா?


=================
12  காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்! # தண்டமா அங்கே"முழங்குனதுக்கு இவங்க"கூட்டணிக்கட்சித்தலைவர்க்கு ஒரு போன்"போட்டா ராகுல்"கர்நாடகா க்கு ஒரு போன்"அடிச்சா போதாதா?சும்மா டிராமா"பண்ணிக்கிட்டு,மக்கள்"மடையர்களா?



=============


13   காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பதை, நான் முடிவு செய்யப்போவதில்லை; கட்சி தான், அந்த பொறுப்பை மேற்கொள்ளும். அதில் நான் தலையிடுவது பொருத்தமாக இருக்காது,'' -ராகுல்


 எப்படியும் பிரியங்கா காந்தியைத்தான் தேர்ந்தெடுக்கப்போறாங்க, நீங்க தலையிட்டா குடும்ப அரசியல்ம்பாங்க , அதானே? 

================


14  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும் =தேவகவுடா


அவங்க தெளிவாதான் இருக்காங்க, அரசியல்வாதிகள்தான் பயப்படறாங்க 

=============


15 கேரள தண்ணீரை பெறுவதில் தமிழக அரசு...அலட்சியம்!


கவுரவம் பார்க்கறாங்க போல , வறட்டுக்கவுரவம் வாழ்க்கைக்கு ஆகாது


===============


16  'எங்கள் ஆட்சியை கவிழ்க்க, எதிர்க்கட்சியால் முடியவில்லை,'' =முதல்வர் எச்.டி.குமாரசாமி 

 இவரே  உசுப்பேத்தி கவிழ்க்க வெச்சிடுவார் போல 

================




 மீதி 500 கட்சிகளா இருக்கு? தேசியக்கட்சிகள் 2 தான் மெயின், 1 பாஜக் ,2 காங்- இதை யாராவது அவர் கிட்டே எடுத்து சொல்லுங்க

-==============



 மறுபடி அவ்ங்க ஆட்சிப்பொறுப்புக்கு வந்தா துடைச்சு எடுத்துடுவாங்களா?

===============



 மக்களுக்கு தண்ணிக்குடம் நிரப்பவே , வரிசைல்; நிற்கவே டைம் சரியா இருக்கு

============

20  கடனுக்கு வட்டி கட்ட, தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


 வட்டி கட்ட செயலாளர்கள்
அசலைக்கட்ட மக்கள்

=================

================

0 comments: