1 ஸ்டாலின் கட்டளையிட்டால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம் - வைகோ # அண்ணன் ஐடியா"பாத்தீங்களா?நைசா தளபதியை"களி திங்க வைக்க பிளான் போடறாப்டி.
===============
2 அதிமுகவில் உள்ள ஒருவரை கூட ஸ்டாலினால் விலைக்கு வாங்க முடியாது! - அமைச்சர் ஜெயக்குமார் # காசு செலவு பண்ணாம மார்க்கம் இருக்கானு கேட்பாரு.ஓசி ன்னா ரெடி
=============
3 இந்தி படிக்காததால்தான் தமிழகம் பின்தங்கியுள்ளது - இந்தி பிரசார சபை
# ஹிந்தி பிரச்சார் சபா வருமானத்துல பின்"தங்கி இருக்கறதைப்பத்தி சொல்றார் போல,ஹிந்தி கத்துக்கறது ஒரு கூடுதல் தகுதி,அவ்ளவ்தான்,அதனால முன்னேற்றம் பாதிக்காது
================
4 உ.பி.,யில் நடக்க உள்ள, 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தனித்து போட்டியிடுவோம். இதன்மூலம், மாயாவதிக்கு தகுந்த பதிலடி தருவோம். - அகிலேஷ் யாதவ்:
அப்போ நம்ம நோக்கம் ஜெயிப்பது இல்லை ? பதிலடி தந்தா போதும்?
அகிலேசை அகி”லேசா” நினைக்காதீங்க அப்டிங்கறாரு
============
5 பணபலம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது- மம்தா பானர்ஜி:
வழக்கமா தோல்வி அடைபவர்கள் சொல்ற பாய்ண்ட்ட விட்டுட்டீங்க, வாக்கு எந்திரத்தில் முறைகேடு?
===============
6 சமாஜ்வாதி கட்சியை, அகிலேஷ் யாதவ், முழுவதுமாக சரிசெய்ய வேண்டும். அதில் அவர் வெற்றியடைந்தால், மீண்டும் இணைவோம். மாறாக தோல்வியடைந்தால், தனித்தனியே செயல்படுவது தான் இருவருக்குமே நல்லது -மாயாவதி:
சரி செஞ்சுட்டா தனியா போட்டி இட்டுக்குவாரே? எதுக்கு கூட்டணிக்கு வர்றாரு?
=============
7 நல்லவர்களை, ஆண்டவன் நிறைய சோதிப்பார்; ஆனால், கைவிட மாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார்; ஆனால், கைவிட்டு விடுவார்' என ஓபிஎஸ் கூறியுள்ளார். இது, சினிமாவில், ரஜினி பேசிய வசனம்; நிஜ வாழ்க்கையில் எடுபடாது.-கே.எஸ்.அழகிரி '
நிஜ் வாழ்வில் ரஜினி பஞ்ச் எடுபடாதுனு சொ,ல்றீங்களா? ரஜினியே எடுபட மாட்டாரு அப்டிங்கறீங்களா?
=============\
8 இறைவன், தவறு செய்ய மாட்டார்; அதனால் தான், தி.மு.க., - காங்., கூட்டணிக்கு, தமிழகத்தில், 37 இடங்களைக் கொடுத்துள்ளார். தகுதியானவர்களுக்குத் தான், இறைவன் வாய்ப்பு கொடுப்பார் -கே.எஸ்.அழகிரி
அப்போ மத்தியில் ராகுல் ஆட்சி அமைக்க தகுதி இல்லாதவர்ங்கறீங்களா?
===============
9 நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், 'பெராரி' காருக்கும், சைக்கிளுக்கும் இடையேயான போட்டியாக இருந்தது. இதில், கார் தான் வெல்லும் என்பது, அனைவருக்கும் தெரியும் -அகிலேஷ் யாதவ்
கார் எப்படி வென்றதுனு பு”கார்” அளீக்கலையா யாரும்?
===============
10 கருணாநிதியை போல், ஸ்டாலினும் ஒரு ராஜதந்திரி என்பதை, நடந்து முடிந்த தேர்தல்கள் மூலம் உணர்த்தியுள்ளார்.- திருமாவளவன்
ஸ்டாலின் ஒரு ராஜ தந்திரிங்கற மேட்ட்ரை ஸ்டாலினே இப்பதான் கேள்விப்படறாராம்
==============
11 வட மாநிலம் முழுவதும், சனாதன கும்பல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் அது எடுபடாது என்ற வகையில், ஒட்டுமொத்த இந்திய தேசத்தையே, தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார், ஸ்டாலின்-திருமாவளவன்
இடைத்தேர்தல்ல சட்டசபைத்தேர்தல்ல இந்த அளவு வெற்றி பெற்றிருந்தா ஆட்சியையே பிடிச்சிருக்கலாமே? ஏன் கோட்டை விட்டுட்டாரு>
================
12 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், உரிய காலத்தில் கடன்களைச் செலுத்திய விவசாயிகளுக்கு, வட்டியை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 87 சதவீதம் கடன்கள் வசூலாகின்றன. எனவே, விவசாய கடன்களை, தள்ளுபடி செய்வதற்கான தேவை, இப்போது ஏதுமில்லை.-கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு : \
அப்போ கடனை கட்டாம விட்டா தள்ளுபடி பண்ணிடுவீங்க?
==============
13 வரவிருக்கும் சட்டசபை கூட்டத் தொடரில், புதிய அறிவிப்புகள் நிச்சயம் இருக்கும்-அமைச்சர், ராஜு : \
உள்ளாட்சித்தேர்தல் வருது போல
==============
14 அரசு ஊழியர்கள், கண்ணியமாக உடை உடுத்துவது, அரசு விதியாக இருக்கலாம். அதை எப்படி அணிய வேண்டும் என, சுற்றறிக்கை வெளியிடுவது கூடாது.-.மா.கம்யூ., மத்தியக்குழு உறுப்பினர், வாசுகி :
என்ன ? கமல் மாதிரி பேசறாரு>? சர்க்குலர் விட்டாத்தானே எல்லாருக்கும் தெரியும்?
==============
15 பிரபல வங்கதேச நடிகை அஞ்சு கோஷ், பா.ஜ.வில் இணைந்தார்
அஞ்சு”CASH" பார்ட்டி போல
============
16 ஆன்லைன் மூலம் பல்வேறு துறைகளில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பிரிவை தொடங்கிய மத்திய அரசின் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மீம்ஸ் போடறது கூட ஆன் லைன் தான் ,
===============
17
திமுகவினர் பள்ளிகளில் இந்தி: ஹெச் ராஜா அம்பலம்
திமுக சாராய ஆலை கூடத்தான் நடத்தறாங்க, அதையும் மூட முடியுமா?
==============
18 'காவி நிறத்தில், பாரதியார் தலைப்பாகை உடைய, பாட புத்தக அட்டையை மாற்ற வேண்டும்' =, திருமாவளவன்
புத்தகத்துக்கு அட்டை போட்டுக்குடுத்துடுவாங்களோ?
================
19 வரவிருக்கும் சட்டசபை கூட்டத் தொடரில், புதிய அறிவிப்புகள் நிச்சயம் இருக்கும்-அமைச்சர், ராஜு : \
உள்ளாட்சித்தேர்தல் வருது போல
==============
20 அரசு ஊழியர்கள், கண்ணியமாக உடை உடுத்துவது, அரசு விதியாக இருக்கலாம். அதை எப்படி அணிய வேண்டும் என, சுற்றறிக்கை வெளியிடுவது கூடாது.-.மா.கம்யூ., மத்தியக்குழு உறுப்பினர், வாசுகி :
என்ன ? கமல் மாதிரி பேசறாரு>? சர்க்குலர் விட்டாத்தானே எல்லாருக்கும் தெரியும்?
==============
0 comments:
Post a Comment