Tuesday, June 04, 2019

8 பேர் ஜெயிச்சு நீங்க தோற்றதால உங்களுக்கு ஏழரை?

1  மோடி வென்று விட்டார் என்பதற்காக, ராகுல் தன் தலைவர் பதவியிலிருந்து, விலக வேண்டிய அவசியமில்லை. - வீரப்ப மொய்லி : 

ராகுல் படு தோல்வி அடைந்து விட்டார் என்பதற்காகத்தானே இந்த ராஜினாமா(நாடகம்)

================

பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த கட்சி காங்கிரஸ்-வீரப்ப மொய்லி :


பல கோஷ்டிப்பூசல்களையும் சந்தித்த கட்சி அதை விட்டுட்டீங்களே?

===============


3 , ஒரு லோக்சபா தேர்தலோ, சில சட்டசபை தேர்தல்களோ, கட்சியின் வளர்ச்சியை நிர்ணயித்து விட முடியாது. -வீரப்ப மொய்லி :

சுமாரா எத்தனை லோக்சபா தேர்தல்ல தொடர்ந்து தோத்தா உங்க பலவீனத்தை ஒத்துக்குவீங்க? 

================

4  கட்சியின் தலைவர் பதவியில், ராகுல் தொடர வேண்டும். அவர் தான், கட்சிக்கு ஊக்கமே.-வீரப்ப மொய்லி :

ஆமா , அவரும் பதவி விலகிட்டா கட்சி இன்னும் பலவீனம் ஆகிடும்


தோல்வியைக்கண்டு பயப்படுபவன், தலைமைப்பொறுப்பைத்துறப்பவன்
நல்ல தலைவன் ஆகிட முடியாது, தோல்வியை சரி செய்து,அதற்கான காரணங்களை அறிந்து வெற்றிக்கு வழி காண்பவன் தான் தலைவன்
================

5  தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற, 37 எம்.பி.,க்களால், எந்தப் பலனும் கிடைக்காது என, செய்யப்படும் பிரசாரம் தவறானது. - டி.கே.ரங்கராஜன் 

ஆமா, 37 எம் பி களூக்கும் சம்பளம், சலுகைகள் கிடைக்குதே,அது அவங்களுக்கு லாபம் தானே?

================

8  தி.மு.க., கூட்டணி, எம்.பி.,க்களால், தமிழக மக்களுக்கு, நிறைய நன்மைகள் கிடைக்கும். தவறான பிரசாரம் செய்பவர்களுக்கு தான், பலன் கிடைக்காது- டி.கே.ரங்கராஜன் 

அரசியல்வாதிகளால் மக்களுக்கு ஆதாயம் கிடைச்சுதா? ஆதாரம் கொடுங்க பார்ப்போம்

==============


.9  : லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைக்காததால் தான், குறைவான ஓட்டுகள் பெற்றோம் என்பதை, ஏற்க முடியாது. -தினகரன் 
சரி , ஏத்துக்க வேணாம், இப்ப என்ன ஆகிடும்? ஏத்துக்கிட்டா என்ன? ஏத்துக்கலைன்னா என்ன?

==============


10 எங்கள் ஓட்டுகள் எங்கு சென்றன என்பதை, விசாரித்து வருகிறோம்.-தினகரன் 

காணாமல் போன ஓட்டுக்கள் பற்றிய அறிவிப்புனு டி வி ல நியூஸ் வராம இருந்தா சரி

அதெல்லாம் ஸ்லீப்பர் ஓட்டுக்களா இருக்குமோ?தகுந்த சமயத்தில் வெளிபடுமோ?

=====================


11  தமிழக அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தினால், எங்கள், 'சிலீப்பர் செல்'கள் வெளியில் வருவர். அப்போது, அவர்கள் யார் என்ற உண்மை, மக்களுக்கு தெரிய வரும்.-தினகரன்

புலி வருது புலி வருது கதை தான்2  வருசமா இதே டயலாக்கைதான் சொல்லிட்டு இருக்காரு
================== 





12  
: லோக்சபா தேர்தலில், கேரளா, பஞ்சாபில், காங்., மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. எனவே, கட்சி அழிந்து விட்டதாக தெரிவிக்க இயலாது.=சசி தரூர்

தமிழகத்தை விட்டுட்டாரே?


கேரலாவில் முஸ்லீம்கள் கிறிஸ்டியன்கள் அதிகம் , அது காங் கோட்டை மத்ததைப்பத்தி பேசுங்க 

==================

13  அடுத்தடுத்து, நான்கு முதல், ஐந்து மாதங்களில், பல மாநில தேர்தல்கள் வருகின்றன. ஆதலால், காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்காமல், விரைந்து அத்தேர்தலுக்கு, கட்சி தயாராக வேண்டும்.-சசி தரூர்

பட்ட காலிலே படும் கெட்ட கட்சியே கெடும்னு பழமொழி இருக்கே?

==================



14  பா.ஜ., கட்சியில், அமைப்பு ரீதியாக தேர்தல் நடக்கும் நேரத்தில், எந்தெந்த மாநிலத்தில், தலைவர்கள் பொறுப்புக்கு மாற்றங்கள் செய்வரோ, அப்போது தான் செய்வர்=வானதி சீனிவாசன்  

தமிழிசைக்கு ஆல்ட்டர்நேட்டிவா நீங்க வரப்போறீங்களாமே? அது நிஜமா?

===============

15 . தேர்தலுக்காக, தலைவர் மாற்றம் இருக்காது.-வானதி சீனிவாசன்  

தேர்தல் தோல்விக்காக  தலைவர் மாற்றம்  என்பதே சரி  

===================

16  யார் தலைவர் என்பதை, கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.-வானதி சீனிவாசன்  


பின்னே கட்சியின் தொண்டன் சொல்லறதையா கேட்கப்போறாங்க?

==============


17 தேனியில், என் தோல்வி உருவாக்கப்பட்ட ஒன்று.= EVKS

தெரின்சே ஏன்  பலியாடு ஆனீங்க? கொங்கு மண்டலமே வேணும்னு கேட்டிருக்கலாமே?சிங்கத்தை அதன் குகைகலதானே கம்பீரமா பார்க்க ,முடியும்?

=================


 18 காங்கிரசில் உள்ள, எட்டு பேர் வெற்றி பெறும் போது, திருஷ்டி பரிகாரம் போல, தோற்கடிக்கப்பட்டுள்ளேன்.-EVKS

8 பேர் ஜெயிச்சு  நீங்க தோற்றதால உங்களுக்கு ஏழரை?


==================

19  கச்சத்தீவை தாரை வார்த்தது, தி.மு.க., -- காங்., கூட்டணி. இப்போது, அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன், கச்சத்தீவை மீட்க வேண்டும் எனக் கூறுவது,  நாடகம்= தமிழிசை:


 இயல் இசை நாடகம் இவற்றுக்கு எல்லாம் பேர் போன  கட்சி ஆச்சே?> 


===============
20    லோக்சபா தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி. ஒரு தலைவரால் தான், அந்தக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்.-ரஜினிகாந்த்:


அப்போ ஸ்டாலினால்தான் திமுக ஜெயிச்சுதுனு ஒத்துக்கறாரா? அப்டி ஒத்துக்கிட்டா சிஸ்டம் சரி இல்லை ஸ்டேட்மெண்ட் தப்பாகிடுமே?

===============

0 comments: