Saturday, June 29, 2019

சிந்துபாத் - சினிமா விமர்சனம் #Sindhubaadh

sindhubath માટે છબી પરિણામ

ஆபத்தில் சிக்கிக்கொண்ட சொந்த சம்சாரத்தை மீட்கறதுக்காக ஹீரோ கடல் தாண்டி பயணித்து நிகழ்த்தும் நம்ப முடியாத சாகசக்கதையே சிந்து பாத், இந்த ஒன் லைன் ஸ்டோரியை இதுதான் கதைனு கண்டு பிடிக்கவே 1 மணி நேரம் ஆகிடுது



ஹீரோவா நம்ம விஜய் சேது பதி . இவர் கூட இயக்குநர் அருண்குமார் இதுக்கு முன்னாடி செஞ்ச 2 படங்களும் அவ்ளோ யதார்த்தம், பண்ணையாரும் பத்மினியும் ஆர்ட் ஃபிலிம் ( இது குறும்படமாக வந்து பின் டெவலப் பண்ணி பெரிய படம் ஆக வந்தது ) சேதுபதி கமர்ஷியல் மசாலா . இந்த 2 படங்களிலும் இவர்கள் இருவருக்கும் கிடைச்ச நல்லபேரை இந்த ஒரு படம் போக்கடிச்சிடுச்சு


'
படம் போட்டு முதல் 50 நிமிஷங்கள் செம ஜாலி கலாட்டா காதல் காமெடி ரகளை என படம் பறக்குது, அதுக்கப்புறம்தான் மெயின் கதைக்கு வர்றாங்க அப்றம் படம் படுத்துக்குது ( இனிமே மெயின் கதைக்கே வராதீங்கப்பா)

 விஜய் சேதுபதியின் மகன் இதுல அவரோட வளர்ப்பு மகனா வர்றார் , நல்ல யதார்த்த நடிப்பு. இதுவே நம்ம இளைய தளபதி மகனா இருந்தா அவர் வர்ற இண்ட்ரோ சீன்ல இந்த சீனில் உங்கள் முன் தோன்றுவது உங்கள் அபிமான ஹீரோவின் மகன் அப்டினு டைட்டில் கார்டுல போட்டிருப்பாங்க )


நானும் ரவுடிதான்ல நயன் தாரா எடுத்துக்கொண்ட காது சரியாக்கேட்காத கதாபாத்திரம் இதுல ஹீரோவுக்கு , ;பர்ஃபெர்க்ட் ஆக்டிங் . நண்பரிடம் ஒவ்வொரு டைமும் ஒரு சோக டஹால்டிக்கதையை எடுத்து விடுவது அழகு, ஹீரோயின் உடனான ரொமான்ஸ் காணக்கண் கோடி வேண்டும் ( வழக்கமா இந்த உவமையை தெய்வத்துக்கு தீபாராதனை காட்டும்போதுதான் சொல்வாங்க )


அஞ்சலிதான் அந்த ஆராதனை செய்யக்கூடிய அழகிய அம்சம் கொண்ட நாயகி, அடி பொலி ஆக்டிங் . ஆர,ம்பத்தில் ஹீரோவை ஒதுக்குவது , பின் பம்முவது , வலிய போய் கமல் கிஸ் அதாங்க லிப் கிஸ் தருவது எல்லாம் அமர்க்களம் , மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுனு கொங்கு மண்டல கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு , அந்தப் பழமொழியைப்பொய்ப்பித்து இருக்கிறார் அஞ்சலி , புரிஞ்சவன் பிஸ்தா


ஹீரோயின் மலேசியா போனதுக்கப்புறம் நம்ம காதுல சரம் சரமா பூச்சரம் , சும்மா சுத்தி விடறாங்க , லாஜிக் லாஜிக் அப்டினு ஒண்ணு இருக்கா? மலேசிஅயால போலீஸ்னு 1 இருக்கா ? இல்லையா? எது பற்றியும் கவலை இல்லை

ஒளிப்பதிவு , இசை, பின்னணி இசை அனைத்தும் ஓக்கே ரகம்

ஸ்டண்ட் சீன்கள், ஆக்சன் காட்சிகள் பயங்கர சொதப்பல்கள்


anjali hot માટે છબી પરિણામ

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்



1 நட்புக்காக நடிக்கறது
கெஸ்ட் ரோல்
மொக்கை காமெடி
ஆர்ட் பிலிம் காதல்
இப்டி வெரைட்டியா நடிச்ட்டு லாங் கேப்க்குப்பின் கமர்ஷியல் ஆக்சன் படம் ,விஜய்சேதுபதி க்கு லக்தான்



============
2 அங்காடித்தெரு அஞ்சலி

கலகலப்பு அஞ்சலி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி,அஞ்சலி இதுல அஞ் தான்,துரும்பா இளைச்சிடுச்


========
3 நான் சின்னப்பையனா இருக்கும்போது தமிழ் சினிமா ஹீரோ தான் (குறிப்பா கமல் )ஹீரோயினுக்கு கிஸ் தருவாரு,இப்ப எல்லாமே தலைகீழ்,ஹீரோயின் வான்ட்டடா லிப்கிஸ் அடிக்குது


=============

4 முதல் 45 நிமிஷம் கலகலப்பான லவ் போர்ஷன்,அதுக்கப்புறம் கதை ஆரம்பிச்சதும்தான்.......


============


5 பின் பாதி திரைக்கதை ல ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்,இயக்குநர் நம்ம காதுல சுத்தற பூச்சரத்தை சேகரிச்சா ஒரு பர்ஸ்ட்நைட் ரூமையே அலங்கரிச்சடலாம்


==========

6  

ஒருத்தரைத்தேடிட்டு ஒவ்வொரு நாடா ,ஒவ்வொரு ஊரா ஹீரோ போறது ரொம்ப ரிஸ்க்கான சப்ஜெக்ட் ,இயக்குநர் துணிச்சலா அதை கைல எடுத்திருக்கிறார்,ஆனா சுவராஸ்யமா எடுத்திருக்கிறாரா?



=========
anjali hot માટે છબી પરિણામ

நச்   டயலாக்ஸ்

1  மாமா ,நீ பேசாம மாடு மேய்க்கப்போய்டு

இவ்ள்வ் வயசுக்குப்பின் எப்டி மாடு மேய்க்க?
அப்போ யானைமேய்க்கப்போ!



========
2 இந்த உலகத்துலயே நமக்கு நெருக்கமானது நம்ம சாவு தான் !


============

சபாஷ் இயக்குநர்


1  கதையைப்பற்றிக்கவலைப்படாம முதல் 50 நிமிடங்களை ஜாலியாகக்கொண்டு போன லாவகம்


2  விஜய் சேதுபதி யின் மகனின் யதார்த்த நடிப்பு


3  ஹீரோ - ஹீரோயின்  பாடி  கெமிஸ்ட்ரி , பிசிக்கல் டச் , பயலாஜிக்கல் மூவ்மெண்ட்ஸ் 

=============




anjali hot માટે છબી પરિણામ
 லாஜிக் மிஸ்டேக்ஸ் - + இயக்குநரிடம் சில கேள்விகள்


1   ஒரு சீன்ல வில்லனின் அடியாள் ஹீரோயின் கிட்டே உன்னை நாடு நாடா அனுப்பி  தினமும் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட வைக்கறேன்னு கோபமா சொல்றாரு , அடுத்த சீன்ல மேப்ல ஒவ்வொரு நாடா மார்க் பண்ணி காட்டறாங்க, அதுக்கடுத்த சீன்ல ஹீரோயின்   அப்போதான் பறிச்ச மல்லிகைப்பூ கணக்கா இருக்காரு .ரேப் நடந்ததா? இல்லையா? முகத்துல , உடம்புல ஒரு கீறல் கூட விழாதா? 


2  மாடி  டூ மாடி ஹீரோவும்  மகனும் தாண்டும் ஜம்ப் சீன், இது சுறா இஒண்ட்ரோ சீனையே தூக்கி சாப்ட்டுடுச்சு


3  ஹீரோயின் எதிரிகளிடமிருந்து எஸ் ஆகும் ,காட்சி அபத்தம்


4   எம் ஜி ஆர் நடிச்ச ராமன் தேடிய சீதை + ஷாம் நடிச்ச 6 மெழுகு வர்த்திகள் இந்த 2 படத்தையும் அட்லீ வேலை பார்த்த மாதிரி கிருக்கு 



சிந்துபாத் − முதல் பாதி காதல்,காமெடி ,பின் பாதி ஹீரோ ஹீரோயினைத்தேட ஓடறார்,வில்லன் ஹீரோவைத்தேடறார் ,ஹீரோயின் ஹீரோவைத்தேடறார்,நாம கதை எங்கே?னு தேடறோம் ,பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மொமெண்ட் ,விகடன்,40 ,ரேட்டிங் 2.25 / 5


===============



anjali hot માટે છબી પરિણામ

Friday, June 28, 2019

வாய்;லயே வடை சுடுவது எப்படி?

1    எங்கள் கவனம் முழுவதும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலேயே இருக்கிறது.-ராஜேந்திர பாலாஜி: 


தண்ணீர்ப்பஞ்சம்  பற்றிக்கேட்டா அது வதந்தி ,தண்ணீர்ப்பற்றாக்குறைதான் என அறிக்கை விட்டு பிரச்சனையை தீர்ப்பது போலவா?
===========

2   , உள்ளாட்சி தேர்தல் குறித்த சிந்தனை இப்போது எங்களிடம் இல்லை.-ராஜேந்திர பாலாஜி: 

இப்பவாவது வெளிப்படையா  உண்மையை , மனசுல உள்ளதை சொல்லிட்டாரே?


 ஆட்சியைத்தக்க வைக்கறதே உன் பாடு என் பாடுனு போராட்டமா இருக்கு

==============
3   கருணாநிதி சென்னைக்கு செய்த புண்ணியம், ஏரியை அழித்து, வள்ளுவர் கோட்டம் கட்டியது தான்.- எச்.ராஜா:

வள்ளுவர் கோட்டம் இல்லைன்னா தண்ணீர்ப்பஞ்சமே இராதா?

நில ஆக்கிரமிப்பு செஞ்ச அவங்க கட்சிக்காரங்க சாதனையை விட்டுட்டீங்களே?

===============


 தேர்தல் காலங்களில் அலை எப்படி வீசுகிறதோ, அதைக் கணக்கிட்டுத் தான், பா.ம.க., கூட்டணி அமைக்கும்-விஷ்ணு பிரசாத்:

 நாம எப்படி? எது தோற்கப்போகுதுனு தெரிஞ்சு அந்தக்கட்சி கூட கூட்டணி வைப்பமா? எல்லாருமே ஜெயிக்கத்தானே பார்ப்பாங்க?

===============


5 லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க.,வுக்குக் கிடைத்த தோல்வி, மக்களால் மட்டுமே தரப்பட்டது அல்ல. என்னைப் பொருத்தவரை, ஓட்டு இயந்திரம் மீது சந்தேகப்படுகிறேன்.-சி.ஆர்.சரஸ்வதி 

பொண்ணுங்கன்னாலே சந்தேகப்படறது இயல்புதானே?

=============
6  1,380 பூத்களில், அ.ம.மு.க.,வுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?=சி.ஆர்.சரஸ்வதி 

சரி , ஏத்துக்க வேணாம், இப்போ என்ன பண்ணனும்கறீங்க? 

=============

7  சட்டசபை இடைத்தேர்தலில், இப்படிப்பட்ட தோல்வியை, அ.ம.மு.க., எதிர்பார்க்கவில்லை.-சி.ஆர்.சரஸ்வதி 

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

===============



8  காங்., கட்சியின் தலைவராக, ராகுல் தொடர்வதே சிறப்பானது. அதேசமயம், அவரது சொந்த விருப்பங்களும், மதிக்கப்பட வேண்டும். -  மணிசங்கர் அய்யர்  


நடுநிலைமையா பேசறாராம்

===============

9   காங்., கட்சியின் தலைவர் பொறுப்பை, நேரு - காந்தி குடும்பத்தைச் சாராதவர் ஏற்க முடியும்; ஆனால், கட்சியில், நேரு - காந்தி குடும்பத்தினரின் பங்களிப்பு, எப்போதும் போல் தொடர வேண்டும்.=  மணிசங்கர் அய்யர்  

தென்னை மரத்துல ஒரு குத்து , பனை மரத்துல ஒரு குத்து மொமெண்ட், நேரு  குடும்பத்துக்கு ஜால்ரா அடிச்ச மாதிரியும் ஆச்சு,  புதிய தலைமைக்கு ஆதரவு தெரிவிச்ச மாதிரியும் ஆச்சு

 ================

10   - தமிழகத்தில், தொழில் வளர்ச்சி இல்லாததால், வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, தமிழக ஆட்சியாளர்கள், கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.-கே.எஸ்.அழகிரி

அதுதான் எதிர்க்கட்சிங்க நீங்க கவலைப்படறீங்களே ? போதாதா?

=============


11  தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சரிகட்டுவதில் தான், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெரும்பான்மை நேரம் செலவழிக்கப்படுகிறது.=கே.எஸ்.அழகிரி

 பின்னே மக்கள் பிரச்சனையைத்தீர்க்கவா நேரம் ஒதுக்க முடியும்?

================
12 இந்தியாவில், விரைவான போக்குவரத்திற்காக, சாலை விரிவாக்க திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது, முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.-நிதின் கட்கரி  

எட்டு வழி சாலைக்கு அச்சாரம் வைச்சதே மத்திய அரசுதான், இப்போ மாநில அரசு மேல பழி போடறாரு

================
13  வறட்சி, வெள்ளம் என, எந்த இயற்கை இடர்பாடுகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது, அ.தி.மு.க., அரசு. எனவே, அரசியல் காழ்ப்புணர்வோடு, தி.மு.க., நடத்தும் போராட்டங்கள், மக்கள் மத்தியில் எடுபடாது.-ஜெயகுமார்  

வாய்;லயே வடை சுடுவது எப்படி?னு இவர் கிட்டே கத்துக்கனும்

============

14  தமிழகத்தில் வெற்றி பெற்று என்ன பயன், மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லையே' என, தி.மு.க., - எம்.பி.,க்கள் குறித்து, சில மூடர்கள் விமர்சிக்கின்றனர்=ஸ்டாலின் '

இவருக்கும் மனசுக்குள்ளே அந்த ஆதங்கம் இருக்கு போலயே?

=================


15 . எம்.பி.,க்களாக பதவி ஏற்பதற்கு முன்பே, மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு எனும் மும்மொழி கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து, அதை வாபஸ் பெறச் செய்தனர். தெற்கு ரயில்வேயில், தமிழ் மறுக்கப்பட்டபோது, உறுதியாக போராடி, தமிழை காத்தனர். மக்களுக்காக என்றும் பாடுபடுபவர்களே, தி.மு.க., - எம்.பி.,க்கள்.-ஸ்டாலின் '


 இந்த ஹிந்தி எதிர்ப்புங்கற ஒரு பாய்ண்ட்டை வெச்சே பல வருசமா திமுக காலம் தள்ளிட்டு இருக்கு

==============
16   மோடியின் முகத்தில் விவேகானந்தரை காண்கிறேன் =அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் 


 நல்ல கண் டாக்டரைக்காணவும், சரி ஆகிடும்

அப்போ விவேகானந்தர் முகத்துல மோடியைக்காண்கிறாரா?


 அப்பா எட்டு அடி நெடுஞ்சாண் கிடையா விழுந்தா இவரு 16 அடி படக்னு விழுந்துட்டாரே?


 அமைச்சர் பதவிக்கு துண்டு போட்டுட்டாரு

=====================


17 ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூரு சென்று காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அமைச்சரிடம் கோரியிருக்கலாம்' -தமிழிசை ..

 அட்லீஸ்ட் ஒரு ஃபோனாவது பண்ணி இருக்கலாம்

 தண்ணீர்ப்பிரச்சனையை அவ்வளவு சுலபமா தீர்த்துட்டா அதை வெச்சு எப்படி அரசியல் பண்ண  முடியும்?

===================



கடைசில நீங்க சொன்ன ஸ்லீப்பர் செல் இவருதான் போல 


நீங்க என்ன நீக்கறது? அவரே வெளில வந்துட்டாரே?>

================

19  ஊழல் குறித்து, யார் பேசுவது என்ற, விவஸ்தை இல்லாமல் போய் விட்டது,'' -, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்

  இது என்ன திமுக வுக்கு வந்த அவஸ்தை?

===============


20 , ஊழலுக்காக கலைக்கப்பட்டது, தி.மு.க., ஆட்சி. பழைய வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், விவசாய இடுபொருட்கள் வாங்கியதில் ஊழல், சர்க்கரை பேர ஊழல், அரிசி பேர ஊழல் என, ஊழலின் மொத்த உருவம், தி.மு.க., தான். வேறு எந்த ஆட்சியும், ஊழலுக்காக கலைக்கப்படவில்லை


 தண்ணீர்ப்பிரச்சனையை தீர்க்காம  திமுக வுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காரு


=====================

Thursday, June 27, 2019

ஆசை தோசை அப்பள வடை

1  லோக்சபா தேர்தலில்,  மோடியின் பிரபலத்துக்கு முன்பாக, எவராலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை- சல்மான் குர்ஷித்: 

நீங்க காங்கிரசா? பாஜகவா?திடீர்னு டவுட்

============

2  . இதை ஒப்புக் கொள்ளாவிட்டால், தேர்தலையே புறக்கணிப்பதாக அமைந்துவிடும்.-சல்மான் குர்ஷித்:

தேர்தல் முடிவையே என்பதே சரி

\============



 உயர் நீதிமன்றத்தில், தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி, அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும்.-  ராமதாஸ்

 நாட்டுக்கு ரொம்ப முக்கியம். தண்ணீர் பிரச்சனை தண்ணி காட்டிட்டு இருக்கு, அதைக்கவனிங்க 

=============
4  : காங்கிரஸ் தொண்டர்கள், லோக்சபா தேர்தல் தோல்வியால் சோர்வடைய வேண்டாம். மக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே, அவர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் - பிரியங்கா

ராகுல் தலைவர் தானே? தொண்டர்னு குறிப்பிடறாரு?

==============

போதிய மழையின்றி, சென்னையின் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

40 ஏரிகளின் மேல் பில்டிங் கட்டிட்டா எப்படி தண்ணி இருக்கும்?

==============
6  அதற்கு மாற்று ஏற்பாடாக, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம். -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

சென்னையின் தண்ணீர் தேவை ஒரு நாளுக்கு 4 கோடி லிட்டர், நீங்க பண்ற சப்ளை 10% கூட வராது
==============
7   இதில், சிலர் அரசியல் செய்கின்றனர். 'வேலுாரிலிருந்து தண்ணீர் கொண்டு சென்றால், போராட்டம் நடக்கும்' என்றார், தி.மு.க.,  துரைமுருகன். மக்களிடம் எதிர்ப்பு வந்ததால், 'நான் சொல்லவில்லை; மக்கள் போராடுவர்' என, மாற்றி பேசுகிறார். -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

அதிமுக வுக்கு திமுக தண்ணி காட்டுது போல 

====================
8  சென்னைக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதே, துரைமுருகனின் நிலைப்பாடு.-தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

கழகம்னா கடமை கண்ணியம் கட்டுப்பாடு
ஆனா புரிஞ்சுக்கலை தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாடு

=============

9    சந்திரபாபு நாயுடு, தேர்தலில் இம்முறை, தனித்துப் போட்டியிட்டார். ஆனால், மக்களுடன் எப்போதுமே அவர், கூட்டணி வைக்கவில்லை; மக்கள் மன உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டார்.-நடிகை ரோஜா:

 மக்களுடன் கூட்டணி என அறிவிச்ச கேப்டனின் ம ந கூ கூட தோல்விதானே? 
============
10   நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 23 தொகுதிகளிலும், லோக்சபா தேர்தலில், மூன்று தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் வெற்றி பெற்றுள்ளது. இது தான், அவரது கட்சியின் உண்மையான பலம்.0நடிகை ரோஜா:


அரசியல்வாதிகள் தங்கள் பலத்தை  தேர்தல் முடிவுக்கும் முன் அறிந்து கொள்ள  முடியாதது  அவர்கள் பலவீனம் 

===============
11   கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம், அ.தி.மு.க., இதில், சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஜெ., காலத்திலும், கோஷ்டி பூசல் இருந்தது; இப்போதும் இருக்கிறது. ஆனால், கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை.-அமைச்சர், ஜெயகுமார்


இல்லைன்னா அரசியல்வாதி அகராதில இருக்குனு அர்த்தம்

=============

12  ஜெ., இல்லாத சூழ்நிலையிலும், இவ்வளவு துாரம் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறோம். கட்சியின் முடிவுக்கு, எல்லாரும் கட்டுப்படுவோம்.-அமைச்சர், ஜெயகுமார்

வேற வழி? முடிவுக்கு கட்டுப்படலைன்னா ஆட்சி கலையும், பதவி போய்டும்

=============
13  , ': தமிழகத்தில், பருவ மழை பெய்ய தவறியதால், தண்ணீர் பிரச்னை ஆங்காங்கே எழுந்துள்ளது-அமைச்சர், ராஜு


 ஆங்காங்கேவா?அங்கிங்கெணாதபடி  அனைத்து இடங்களிலுமா? 

==============
14 . மழை பெய்ய வேண்டி, அ.தி.மு.க., சார்பில், கோவில்களில் யாகமும், பூஜையும் நடத்தப்படுகிறது-அமைச்சர், ராஜு

பூஜை பண்றதுக்கா ஆட்சியில் உக்கார வெச்சோம்?

==========

15  2015ல், சென்னையில் வெள்ளம் வந்தபோது, மக்களுக்கு நோய் பரவாமல், அரசு காப்பாற்றியது. தற்போது, வறட்சியால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது; இதையும் சமாளிப்போம்.-அமைச்சர், ராஜு

 நல்லா சமாளிக்கறீங்க 
=================


16  கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம், அ.தி.மு.க., .-அமைச்சர், ஜெயகுமார்

 தமிழக மக்கள் தொகையே 7 கோடிதான்


==============

17  எதிர்க்கட்சிகள் வில்லன்களாக விளங்கியதால் தான், கதாநாயகன் போல, மோடி உருவானார் =, பிரதாப் சாரங்கி 

அப்போ மோடியின் பலத்தால ஜெயிக்கலை? எதிர்க்கட்சிகளின் பலவீனத்தாலதான் ஜெயிச்சீங்க?


===============


18  இனி அனைத்து தேர்தல்களிலும், நாங்கள் தனித்து போட்டியிடுவோம்,'' = மாயாவதி

 கூட்டணி வைச்சே ஜெயிக்க முடியல, இனி தனியா நின்னா உள்ளதும் போச்சுடா கதை ஆகிடும்

============


19  அடுத்த தேர்தல் வந்து தான், ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்ற, அவசியம் கிடையாது; தேர்தல் வராமலேயே,ஆட்சி மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு,'' = ஸ்டாலின்


ஆசை பேராசை நிராசை


 ஆசை தோசை அப்பள வடை


இதே டயலாக்கை 2 வருசமா சொல்லிட்டு இருக்காரு

=================



 அரசியல் உல்கில் உங்க முடிவு நெருங்கிடுச்சுனு ஒத்துக்கறீங்களா?

==================

Wednesday, June 26, 2019

வட்டி கட்ட செயலாளர்கள் அசலைக்கட்ட மக்கள்


1  : நாங்க மட்டுமல்ல, தமிழகமும், இந்தியாவும் கடனில் தான் இருக்கின்றன.-பிரேமலதா


அது சரிதான், ஆனா உங்களுக்கும் உங்க பையனுக்கும் வாய் நீளம், உங்க கணவருக்கு கை நீளம், அதுதான் பிரச்சனை

============
கர்நாடகாவில், மத சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்திருக்கா விட்டால், 15 முதல், 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். இது, 100 சதவீதம் உண்மை.-வீரப்ப மொய்லி: 


 எல்லாரும் தனித்தனியா நிக்கலாமே? எப்போப்பாரு தோல்விக்குப்பின் கூட்டணிக்கட்சிகளைக்குத்தம் சொல்றது

=============

3   நெல்லை மாவட்டம், களக்காடு பகுதிகளைச் சேர்ந்த, அ.ம.மு.க., பொறுப்பாளர்கள், முதல்வர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்ததாகக் கூறினர். ஆனால், அவர்கள், 'எங்களை ஏமாற்றி அழைத்துச் சென்றனர்' எனக் கூறி, திரும்பி வந்து விட்டனர்.-தினகரன்:

 பால்வாடி ஸ்கூல் குழ்க்ஷந்தைகளா? பஞ்சு மிட்டாய் வாங்கித்தர்றேன்னு ஏமாற்றிக்கூட்டிட்டுப்போக?

==============


,  புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிட்டவுடன், தி.மு.க., வினர் மொழி என்ற ஒன்றை மட்டும் எடுத்து பேசினர்; வேறு அம்சங்கள் குறித்து எதுவும் பேசவில்லை =வானதி சீனிவாசன்

 அவங்களுக்குத்தெரிஞ்சதெல்லாம் ரெண்டு தான்
 1 கனி மொழி
2 தமிழ்மொழி

==================

5 , ஸ்டாலின், ஒவ்வொரு அம்சம் குறித்தும், ஆலோசனை வழங்க வேண்டும்.-வானதி சீனிவாசன்


துண்டுச்சீட்டு பார்த்து ஆலோசனை வழங்கலாமா?

==============

6  பல ஆண்டுகளுக்கு பின், புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உணர்ச்சிகளை துாண்டும் அரசியலை விட்டு, ஆக்கப்பூர்வமாக, வரப்போகும் தலைமுறைக்கான ஆலோசனைகளை, அவரிடமிருந்து வரவேற்கிறோம்.-வானதி சீனிவாசன்



“ஆக்க”ப்பூர்ப்வமான அறிக்கை சிரமம்
“தாக்க”ப்பூர்வமா?ன்னா பழக்கம், ஈசி அவங்களுக்கு

=============
7  தமிழக அரசு, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், சரி செய்யவும் முயற்சித்ததாக தெரியவில்லை. இனியும் மெத்தனம் காட்டாமல், போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக குடிநீர் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு, உடனே சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். - திருமா 


 மத்திய அரசு ஒதுக்குனாலும் இவங்க அதை அவங்க  பக்கம் ஒதுக்கிக்காம நம்ம பக்கம் ஒதுக்கனும்

================

8    இந்தியாவில், முதல் முறையாக, இரண்டு ஆண்டுகளில், 12 வகுப்புகளுக்கும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 99 சதவீதம் மாணவர்கள், பள்ளிக்கு வருகின்றனர். கட்டமைப்பு மற்றும் குடிநீர் வசதியின்றி, எந்த பள்ளிகள் இயங்கினாலும், தடையின்மை சான்றை அரசு திரும்ப பெற்றுக்கொள்ளும். அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள், மாணவர் சேர்க்கை அதிகரித்தபடி உள்ளது.- செங்கோட்டையன்

அரசுப்பள்ளிகளில் குடி நீர் கிடைக்கலைன்னா?

============
9 மக்களுக்கு நன்மை செய்ய, கடவுள் என்னை, எம்.பி.,யாக வெற்றி பெற செய்திருக்கிறார்.=
, வசந்தகுமார், எம்.பி.,  

 உங்க மனைவி மகன் மகள் மக்களுக்கா? தொகுதி மக்களுக்கா? விளக்கமா சொல்லவும்

===============

.10   தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக, அரசிடம் மக்கள் முறையிடுகின்றனர். ஆனால், ஆட்சியாளர்களோ, தங்களால் முடியாது எனக்கூறி, ஆண்டவனிடம் முறையிடுகின்றனர்.-துரைமுருகன்

தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் அறிஞர் அண்ணா, காமராஜர் , எம் ஜி ஆர், ஜெ , கலைஞர், அவங்க சமாதில போய் முறையிட்டாங்களா?

=================


 11 கோவில்களில் பூஜை செய்து, யாகம் வளர்க்கின்றனர். இதன் வாயிலாக, அவர்களால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை என்பதை அறியலாம். அவர்களே, தானாக ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்; இல்லா விட்டால், அவர்களை மக்கள் வெளியேற்றி விடுவர்-துரைமுருகன்


 மின்சாரப்பற்றாக்குறை காரணமா அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால திமுக ஆட்சியை விலக்கின ,மாதிரியா?


=================
12  காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்! # தண்டமா அங்கே"முழங்குனதுக்கு இவங்க"கூட்டணிக்கட்சித்தலைவர்க்கு ஒரு போன்"போட்டா ராகுல்"கர்நாடகா க்கு ஒரு போன்"அடிச்சா போதாதா?சும்மா டிராமா"பண்ணிக்கிட்டு,மக்கள்"மடையர்களா?



=============


13   காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பதை, நான் முடிவு செய்யப்போவதில்லை; கட்சி தான், அந்த பொறுப்பை மேற்கொள்ளும். அதில் நான் தலையிடுவது பொருத்தமாக இருக்காது,'' -ராகுல்


 எப்படியும் பிரியங்கா காந்தியைத்தான் தேர்ந்தெடுக்கப்போறாங்க, நீங்க தலையிட்டா குடும்ப அரசியல்ம்பாங்க , அதானே? 

================


14  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும் =தேவகவுடா


அவங்க தெளிவாதான் இருக்காங்க, அரசியல்வாதிகள்தான் பயப்படறாங்க 

=============


15 கேரள தண்ணீரை பெறுவதில் தமிழக அரசு...அலட்சியம்!


கவுரவம் பார்க்கறாங்க போல , வறட்டுக்கவுரவம் வாழ்க்கைக்கு ஆகாது


===============


16  'எங்கள் ஆட்சியை கவிழ்க்க, எதிர்க்கட்சியால் முடியவில்லை,'' =முதல்வர் எச்.டி.குமாரசாமி 

 இவரே  உசுப்பேத்தி கவிழ்க்க வெச்சிடுவார் போல 

================




 மீதி 500 கட்சிகளா இருக்கு? தேசியக்கட்சிகள் 2 தான் மெயின், 1 பாஜக் ,2 காங்- இதை யாராவது அவர் கிட்டே எடுத்து சொல்லுங்க

-==============



 மறுபடி அவ்ங்க ஆட்சிப்பொறுப்புக்கு வந்தா துடைச்சு எடுத்துடுவாங்களா?

===============



 மக்களுக்கு தண்ணிக்குடம் நிரப்பவே , வரிசைல்; நிற்கவே டைம் சரியா இருக்கு

============

20  கடனுக்கு வட்டி கட்ட, தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


 வட்டி கட்ட செயலாளர்கள்
அசலைக்கட்ட மக்கள்

=================

================