1 கமல் முதலில், தன்னை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் யாருடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும். அவர் நம்மவரா, இல்லை வேறு ஒருவரா என்பதைக் கூறவேண்டும்.-கே.எஸ்.அழகிரி :
அவரு தெளிவாதான் இருக்காரு , ஜனங்க தான் குழம்பி இருக்காங்க
அவர் நம்மவர் தான், உன்னைப்போல் ஒருவன் , ஆளப்பிறந்தவன், அரசியலில் விஸ்வரூபம் எடுக்கப்போறார்
=============
2 வரலாற்று உண்மையைத் தான், நடிகர் கமல் கூறினார். ஆனால், அவர் மீது, செருப்பு, முட்டை வீசியது அக்கிரமம்.இதை, பா.ஜ., தலைமை ஏன் கண்டிக்கவில்லை?-வைகோ :
எப்படியோ கமல் பேசறது இப்பவாவது எல்லாருக்கும் புரியுதே சந்தோஷம்
===============
'3 கோட்சே கொடியவன்' என்று பதிவிட்டவரை, 'நடமாட விடக் கூடாது; நாக்கை அறுப்பேன்' என்று பேசுவது, கூட்டத்தில் ஆட்களை அனுப்பி, செருப்பு வீசச் செய்வது, அநாகரிகமான செயல்.இந்த அநாகரிகமான அரசியலுக்கு, ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை துாண்டிவிடும் செயலை கண்டிக்கிறேன்.-வைகோ :
கமலுக்கு ஆதரவு தெரிவிச்ட்டீங்க இல்ல , உங்க ராசி இனி ஒர்க் அவுட் ஆகிடும்
===============
, 4 கமல் தேவையில்லாமல், சில கருத்துகளை பதிவு செய்கிறார். =தமிழிசை :
அரசியலில் பரபரப்பா பேசப்படனும், மீடியா லைம் லைட் டார்ச் லைட் மேல விழனும்னு தான் அப்படிப்பேசறார்
=============
5 முதிர்ச்சியின்மையால் கமல் இப்படி பேசுகிறாரா அல்லது சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கும் என்பதால் பேசுகிறாரா என, தெரியவில்லை=தமிழிசை :
டூ இன் ஒன்
===============
6 சினிமாவில் பிரபலமாக இருப்பதால், எதைப் பேசினாலும், மக்கள் ஏற்றுக் கொள்வர் என,கமல் நினைக்கிறார். -தமிழிசை :
முதல்ல பேசரது புரியனும், அப்புறமா ஏத்துக்கறதா வேணாமானு பார்க்கனும்
=================
7 அரசியலில், கமலுக்கு இன்னும் அதிக பக்குவம் தேவை-தமிழிசை :
பிக் பாஸ்க்கு பேரு செம லாஸ் போல
=============
. 8 கமல் மீதான தாக்குதலை வரவேற்க முடியாது; ஆனால், பிரிவினைவாத கருத்துகளை அவர் கூறக் கூடாது. எதிர்விளைவுகளை உணர்ந்து, பேச வேண்டும்.-தமிழிசை :
பிள்ளையையும் கிள்ளி விடனும் தொட்டிலையும் ஆட்டி விடனும்
================
9 சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டோர் திட்டமிட்டு சதி செய்து, மூன்று, எம்.எல்.ஏ.,க்கள் பதவியை பறித்து விடலாம் என, ஒரு நோட்டீஸ் கொடுத்தனர்.அது கொடுக்கப்பட்ட அரை மணி நேரத்தில், சபாநாயகர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என, நான் ஒரு நோட்டீஸ் அனுப்பினேன். இது, அரசியல் ராஜதந்திரம். -ஸ்டாலின்
ஓ இதுக்குப்பேருதான் ராஜ தந்திரம்ங்களா? நீங்க சொல்லித்தான் தெரியும்
=============
10 கருணாநிதியின் மகன் நான்; அவரது ராஜ தந்திரத்தில், 5 சதவீதமானது எனக்கிருக்காதா.-ஸ்டாலின்
அப்போ அவரை விட 19 மடங்கு சாமார்த்தியம் குறைவுனு ஒத்துக்கறாரா?
==================
.. 11 காங்கிரஸ் தலைமையில், வரும், 21ல் திட்டமிடப்பட்டிருந்த கூட்டம், 23ம் தேதிக்கு மாற்றப்பட்டதற்கான காரணம், அவர்களுடன் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும், பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பது தான். =பொன்.ராதா
அதில்லைங்க , 21 = 2+1 =3 கூட்டுத்தொக 3 வருது , நாம தான் அப்டினு செண்ட்டிமெண்ட்டா யாராவது ஜோசியம் சொல்லி இருப்பாங்க
-----------------
12 23ம் தேதி, அருதி பெரும்பான்மையுடன், பா.ஜ., ஆட்சி அமையும்.-பொன்.ராதா
இது கருத்துக்கண்ணிப்பா? எச்சரிக்கையா?
==============
13 தமிழகத்தில், 22 இடைத்தேர்தல்களிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்று, இந்த ஆட்சி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.-பொன்.ராதா
இவரு பாஜகவா? அதிமுகவா?
==============
14 மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை, நாடு முழுவதும் காணப்படுவதை உணர்கிறேன். மத்தியில் ஆட்சி அமைக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும். தலைமை தாங்குவதில், ராகுல் மிகுந்த பக்குவமான தலைவராக திகழ்கிறார்.=தேஜஸ்வி
அவரு பக்குவமா இருந்து என்ன [பிரயோஜனம், மற்ற கடசிகள் அவர் தலைமையை ஏத்துக்கற பக்குவம் காணலையே?
==============
15 மோடி அரசின் கொள்கைகளை, ராகுல் நன்கு விமர்சிக்கிறார். மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில், அவர் முக்கிய பங்காற்றுவார் என, நம்புகிறேன். - தேஜஸ்வி
ஆமாமா, கோர்ட் கிட்டே சாரி எல்லாம் கேட்டாரெ?
==========
16 தி.மு.க., ஆட்சிக்கு வர, அ.ம.மு.க., ஒருபோதும் துணை போகாது- புகழேந்தி
ஆனா அமமுக ஆட்சிக்கு வர திமுக துணை நின்னா வரவேற்பீங்க?
=========
================
17 .வரும்,23க்குப் பின், அ.தி.மு.க.,வை, தினகரன் தான் வழிநடத்துவார்- புகழேந்தி
என்? ஈபிஎஸ் ஓபிஎஸ் சம்மர் வெகேசனுகு ஃபாரின் போறாங்களா?
========
18 .எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா எதிர்த்த, தி.மு.க.,வுக்கு, எந்தக் காலத்திலும் நாங்கள், துணை போக மாட்டோம். இப்போதும் பிரசாரத்தில், தி.மு.க.,வைக் கடுமையாக விமர்சித்துள்ளார், தினகரன்.- புகழேந்தி
நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன் நீ அழற மாதிரி அழு மொமெண்ட்
===============
=================
19 இந்தக் கோடைக் காலத்திலும், 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி, மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றி இருக்கும், அ.தி.மு.க., அரசை, மக்கள் விரும்பவில்லை என்கிறாரா ஸ்டாலின்? = தங்கமணி
இப்போ கோடை காலத்துல கரண்ட் கட் ஆகிட்டு இருக்கறது இவருக்கு தெரியாது போல
==============
20 இதே, தி.மு.க., ஆட்சியில், நிலைமை என்ன? எப்போது மின்வெட்டு ஏற்படும் என்று தெரியாமல், இருட்டில் வாழ்ந்தனர்- தங்கமணி
இல்லையே தினசரி 16 மணீ நேரம் மின்வெட்டுனு நியூஸ் குடுத்தாங்களே?
=============
0 comments:
Post a Comment