1 ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் நடந்த பலாத்கார சம்பவத்தை வைத்து, பிரதமர் மோடி, மோசமான அரசியல் செய்கிறார். -மாயாவதி:
எதுவுமே பேசலைன்னா பிரதமர் மவுனம் காப்பது ஏன்?னு கேள்வி எழுப்புவீங்க?
ராஜஸ்தான் ல உங்க ஆதரவு பெற்ற ஆட்சி தானே நடக்குது? நீங்கதானே அதுக்கு பொறுப்பு? இப்படி பொறுப்பில்லாம பேசுனா எப்படி>
===============
2 இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே, நேரடி போட்டி நடக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறப் போகிறது. -ராகுல்:
கடசி வரை பிரச்சாரத்துல நாந்தான் பிரதமர் வேட்பாளர்னு நேரடியா சொல்லவே இல்லையே அது ஏன்?
=================
3 மத்தியில், பா.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்தால், ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அதிகாரம் வழங்கும், 370வது சட்டப்பிரிவை நீக்குவோம். -அமித் ஷா:
2014 லயும் இதே டயலாக் தான், 2019 லயும் ரிப்பீட்டு
2024லயும் இதே தானா? நாம என்னைக்கும் பேச்சு மாற மாட்டோம். அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும், இன்னைக்கு சொல்றதுதான் என்னைக்கும்?
================
4 தமிழகத்தில், விழுப்புரம் பகுதியிலும், புதுச்சேரியிலும், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, தகவல்கள் வருகின்றன. . அத்திட்டத்தை, எக்காலத்திலும் ஏற்க மாட்டோம்.
=நாராயணசாமி
பவர் ஆஃப் ஹைட் டை காண்பிச்சு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முடக்கிடுவீங்க ?
=============
5 ஆற்று மண், மண், ஹைட்ரோ கார்பன் என, தமிழகத்தில் என்னென்ன வளங்கள் உண்டோ, அவை எல்லாவற்றையும் எடுத்து, அரசியல்வாதிகள் விற்று விடுகின்றனர். -கமல் # பின்னே அரசியலுக்கு வர்றதே அதுக்குதானே? பொது சேவை செய்யவா வர்றாங்க?> என்ன சார் புரியாம பெசிக்கிட்டு?
=================
6 அரசியல்வாதிகளுக்கு, மக்களைப் பற்றி எந்த கவலையும் கிடையாது-. -கமல்
இல்லையே ? தன்னோட மனைவி தன்னோட வாரிசு மக்கள்னு கவலைப்படுவாங்களே? அதனாலதானே அவங்க மகனை வெட்பாளர் ஆக்கறாங்க ?
துரை முருகன் ஓபிஎஸ் இவங்க மகன் வேட்பாளர் ஆக்குனக்துக்குக்காரணமே அவங்க மக்கள் நலமா இருக்கனும்னு தானே?
===============
============
7 அரசியல்வாதிகள், ஓட்டுக்கு கொடுக்கும் பணம், அவர்களின் சொத்தல்ல; மக்களிடம் கொள்ளையடித்த சொத்து. =-கமல்
சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்கும் தந்திரம்
===============
8 அரசியல்வாதிகள், மக்களிடம் கொள்ளையடித்த சொத்தில், சில்லரை பணத்தை கொடுத்து, மக்களின் ஐந்து ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு எடுக்கின்றனர். அதை, மக்கள் அனுமதிக்கக் கூடாது. --கமல்
10% கேட்டுடலாமா? அல்லது கொள்ளை அடிப்பதில் பாதி அவங்களுக்கு மீதி மக்களுக்கு பிரிச்சுத்தரனும்னு சொல்லிடலாமா?
=============
9 அ.தி.மு.க., ஆட்சி மீது குறை சொல்ல வழி இல்லாமல், 'வரும், 23ம் தேதிக்குப் பின், ஆட்சி கலைந்துவிடும்' என, ஸ்டாலின் கூறி வருகிறார்.-ஓபிஎஸ்
அவரது கனவு தான் கலைந்து போகும்
================
10 கருணாநிதியால் செய்ய முடியாததை, எந்தக் காலத்திலும், ஸ்டாலினால் செய்ய முடியாது - ஓபிஎஸ் # ஏன் முடியாது? பழமொழியை தப்பு தப்பா மாற்றி சொல்றாரே? அது கலைஞர் செய்யாத சாதனை தானே?
==============
. 11 குறுக்கு வழியில் அவரால், முதல்வராக முடியாது-ஓபிஎஸ்
அரசியல்வாதிகள் ஷார்ட் கட்ல போவது வழக்கம் தானே? எதுக்கு ஷாக் ஆகனும்?
============
. 12 கடந்த எட்டு ஆண்டுகளாக, தி.மு.க., எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், வன்முறையை, தி.மு.க., விடவில்லை. -ஓபிஎஸ்
அரசியல்வாதிகள் எல்லாருமே வன்”முறைமாமன்”களா இருக்காங்களே!
==============
13 அ.தி.மு.க., ஆட்சியில், ஜாதி, மத சண்டை இல்லை. -ஓபிஎஸ்
அப்போ ஜாதிக்களவரங்கள் அடிக்கடி பல ஊர்களில் நடக்குதே அதை எல்லாம் இவரு கவனிக்கறதே இல்லையா? நியூஸ் கூடவா பார்க்,க மாட்டாரு?
=============
14 தமிழகத்தில் தான், சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்-ஓபிஎஸ் # அண்ணனுக்கு சிறுபான்மை ஓட்டுக்கள் ;பார்சல்
============
15 , மத்தியில், நரேந்திர மோடியின், பா.ஜ., ஆட்சி, துாக்கி எறியப்படும். காங்., ஆட்சி ஏற்படும்போது, தமிழகத்திற்கு எதிரான திட்டங்கள் கைவிடப்படும்.=வைகோ # அதுக்கு இன்னும் எத்தனை வருசங்கள் காத்திருக்கனும்?
============
16 ஐந்து சவரன் வரை, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என, ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதை, பெண்கள் புரிந்து, தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும்.-வைகோ
தமிழ்ல தானே அறிவிச்சிருக்காரு? அதை பொண்ணுங்க புரிஞ்சுக்க மாட்டாங்களா? தமிழ் டூ தமிழ் ட்ரான்ஸ்லேட் பண்ணனுமா?
===============
,17 தமிழகத்தில், லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, முறையாக நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது-பாலகிருஷ்ணன்
நாம ஜெயிச்சா தேர்தலெண்ணீக்கை முறையா நடந்தது , தோத்தா முறைகேடா நடந்தது, அதானே?
==============
.18 தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில், 46 ஓட்டுச் சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடக்கும் என்று அறிவித்துவிட்டு, தற்போது, 13 ஓட்டுச் சாவடிகளில் மட்டும், மறு ஓட்டுப்பதிவு நடத்துவது ஏன் என, தெரியவில்லை.-பாலகிருஷ்ணன்
மூணுல ஒரு பங்கு போதும்ஞு நினைச்ட்டாங்களோ? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஃபார்முலா
=========
19 மீதமுள்ள ஓட்டுச்சாவடிகளில், தவறு நடக்கவில்லையா? தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியின் கைப்பாவையாகவே உள்ளது.=பாலகிருஷ்ணன்
திருப்பாவை திருவெம்பாவையாகவா இருக்க முடியும்?>
==============
20 உலகம் முழுவதும், சித்தாந்த அடிப்படையில் நடக்கும், வன்முறைகளில் இருந்து மீண்டு வருவதற்கு, புத்தரின் போதனைகள் வழிகாட்டுகின்றன. எனவே, அவரது போதனைகளின் அடிப்படையில், பேச்சு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு, சர்வதேச நாடுகளின் தலைவர்கள், இன்னும் கூடுதலாக இணைந்து பணியாற்ற வேண்டும் -
வெங்கையா நாயுடு : --
புத்தர் ஃபேமசானதே இலங்கைல தான் ,ம் அங்கே தான் அதிக சண்டை , போர் உயிர் இழப்புகள்
=============
0 comments:
Post a Comment