Monday, May 20, 2019

இந்த ஐடியா ஸ்டாலினுக்கு வராம போய்டுச்சே?

1 : நதிநீர் இணைப்பு, நாட்டிற்கு தேவையான திட்டம். மோடி, மீண்டும் பிரதமாக பதவி ஏற்கும்போது, நதிநீர் இணைப்பு குறித்து, நாங்கள் நிச்சயம் வலியுறுத்துவோம். -   பிரேமலதா 

 # வலியுறுத்த வாய் வலிக்குதா என்ன? அவங்க செவி சாய்க்கனுமே?

பிரதமாக பதவி ஏற்கும்போது,     வலியுறுத்துனா பதவிப்பிரமாணம் பண்ண இடைஞ்சலா இருக்கும், அடுத்த நாள் செய்ங்க  

 நதி நீர் இணைப்பு இயற்கைக்கு எதிரானது, சாத்தியமே இல்லைனு சிலர் சொல்றாங்களே? 


============

2 பீஹார் முதல்வர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் சின்னமான, அம்பு, வன்முறையை குறிக்கிறது. எங்களுடைய சின்னமான, லாந்தர் விளக்கு, மக்களுடைய அறியாமையை நீக்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கும்.-  லாலு பிரசாத் யாதவ் :

   #  ஜெயில் வாழ் சக மக்களையா? 


அம்பு வன்முறையா? இது என்ன புது வம்பு?

=============

  :3 ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஏழு பேரை விடுதலை செய்ய, உச்சநீதிமன்றமே பச்சைக்கொடி காட்டிய பிறகும், தமிழக கவர்னர் மவுனம் சாதிப்பது, வருத்தத்திற்குரியது. -


, துரைமுருகன்  # மவுனம் சம்மதம்னு எடுத்துக்க முடியாது

 கோர்ட் பச்சைக்கொடி காட்டலை, கவர்னர்தான் முடிவு எடுக்கனும்னு செக் வெச்சிருக்கு 

=============


4  நதிகள் இணைப்பு, காலத்தின் கட்டாயம். இது தொடர்பாக, மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளேன். நதிகள் இணைப்பு குறித்து,  நிதின் கட்காரியிடமும் பேசி உள்ளேன். நதிகளை இணைப் பதன் மூலம், கலாசாரம், பொருளாதாரம் மேம்படுவதுடன், நாடும் வளம் பெறும்.-பன்வாரிலால் புரோஹித்  

 அரசியல்வாதிகள் வளம் பெறுவாங்களா? அப்போதுதான் திட்டம் நடைமுறைக்கு வரும் போல 

============



5  தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக, மதுரை தொகுதியில், தேர்தல் அதிகாரிகள் நடந்துக் கொண்ட விதம், அதிகார வரம்பு மீறல் என, நீதிமன்றம் கண்டித்துள்ளது -  ராமகிருஷ்ணன் :


கோர்ட் உத்தரவைஉ இப்ப யார் மதிக்கறாங்க? காவேரி பிரச்சனைல கூட கர்நாடகா மதிக்கலையே?

=============


6 .  கோவையிலிருந்து, தேனிக்கு கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரம் சம்பந்தமாக, ஏராளமான கேள்வி, சந்தேகங்கள் எழுந்துள்ளன.-  ராமகிருஷ்ணன் :#  எதிர்க்கட்சின்னாலே டவுட் வர்றது சகஜம் தானே?குட்டையைக்குழப்புனாத்தானே மீன் பிடிக்க முடியும்?

===========


7   தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சரியாக நடந்துக் கொள்ளாததால், வேறு ஒருவரை பார்வையாளராக நியமித்து, அவர் தலைமையில், ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்.-  ராமகிருஷ்ணன் : # அப்போ தலைமைத்தேர்தல் அதிகாரி எதுக்கு? சும்மா அலங்காரத்துக்கா?

=============


: 8   இந்த ஆண்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பொறியியல் படிப்புகளில் சேர, கூடுதலாக ஐந்து மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல். இதற்கு, மாநில அரசுகள் துணை போகாமல், நீதிமன்றம் மூலம் தடை பெற வேண்டும்.-செ.கு.தமிழரசன் 

 பொறியிய்ல் படிப்புக்கே இப்போ மவுசு போய்டுச்சே?

==============

9  தமிழகத்தில் நடக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும், திருமாவளவன் தான் காரணம் என,  ராமதாஸ் கூறி வருவது, நகைப்பிற்குரியது.-திருமா

ஜாதிக்கட்சிகளான பாமக வும் விசிக வும் அடிக்கடி மோதிக்கொள்வது திகைப்புக்கு உரியது

=============


 10  தி.மு.க.,வுடன் நான் கூட்டணி வைப்பது, ராமதாசுக்கு மிகப் பெரிய அச்சத்தைத் தருகிறது. -திருமா  # அதிமுக வுடன் பாமக கூட்டணி வெச்சது உங்ப்களுக்கு கடுப்பைத்தந்தது மாதிரியா?

================


11  தி.மு.க.,வுக்கும், வி.சி., கட்சிக்கும் இடையே, எந்த உறவும் இருக்கக் கூடாது. வி.சி.,க்களைப் பிரித்துவிட்டால், தி.மு.க.,வை எளிதாகக் கையாள முடியும் என, அவர் நம்புகிறார். அதன் தொடர்ச்சியாகவே, என் மீது அவர், அபாண்டமான பழிகளை சுமத்துகிறார்.-திருமா  # திமுக வை அவர் நல்லா ஹேண்டில் பண்றாரோ இல்லையோ நீங்க நல்லா ஹேண்டில் பண்றீங்க 

============


 12  மத்திய, மாநில அரசுகளைத் துாக்கி எறியும் சக்தியை, கருணாநிதி பெற்றிருந்தார்-துரைமுருகன் 

 அவர் என்ன சக்தி மானா?அவெஞ்சர் ஹீரோவா?

=============

13  .  மத்திய, மாநில அரசுகளைத் துாக்கி எறியும் சக்தியை, , ஸ்டாலின் பெற்றிருக்கிறார் -துரைமுருகன் 

 அவரோட சட்டையை வேணா அவரே கிழிக்கும் அளவு சக்தி பெற்றிருக்கிறார்

================

14  .  லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.-துரைமுருகன் 

மீதி 2  மட்டும் ஏன் விட்டுட்டீங்க?


=============
15   ஒன்று அல்லது இரு தொகுதிகளில் மட்டுமே, அ.தி.மு.க., வெற்றி பெற வாய்ப்புள்ளது.-துரைமுருகன் 

 இரட்டை இலை க்கு 2 தொகுதிகள்? அடடே!

============


16   என் அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன்... 18 தொகுதி இடைத்தேர்தலிலும், தி.மு.க.,வுக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும்.- துரைமுருகன் 

 அனுபவம் பேசுகிறது ஆனா ஓவர் கான்ஃபிடண்ட்ல பேசுது


=============


 17  எங்களிடம், 18 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும்போதே, நம்பிக்கையில்லா தீர்மானத்தை,  , ஸ்டாலின் கொண்டு வந்திருந்தால், இந்த ஆட்சி, அப்போதே போயிருக்கும். ஸ்டாலினோடு சேர்ந்து, நாங்களும் அந்த முடிவை எடுத்திருந்தால், அன்றைக்கே ஸ்டாலினை, முதல்வராக்கி இருக்கலாம்-புகழேந்தி 

இந்த ஐடியா ஸ்டாலினுக்கு வராம போய்டுச்சே?

===============

18  தி.மு.க.,வோடு எந்தக் காலத்திலும், எக்காரணத்தைக் கொண்டும், எங்களுக்கு உறவு கிடையாது. அனைவரும் சேர்ந்து, இந்த ஆட்சியை அகற்ற வேண்டுமென்பது இல்லை; விரைவிலேயே, காட்சி மாறும்; ஆட்சி மாறும்; தினகரன் முதல்வராவார். -புகழேந்தி


ஆட்சியை அகற்றனும்னு முடிவு பண்ணிட்டா அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்தாதான் என்ன?ஊர் கூடித்தேர் இழுத்தாத்தானே தேர் நிலை சேரும்? 


===============

19   மோடி, தான் ஒருவர் தான், இந்த நாட்டை வழிநடத்துவதாக கருதுகிறார். அவருக்கு, மக்கள் தான் இந்த நாட்டை ஆள்கின்றனர் என்பது தெரியவில்லை,-, ராகுல்

 அப்போ எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியை எதிர்த்தா  மக்களை எதிர்ப்பதாக அர்த்தமா?


================


20    மோடி ஆட்சிக்கு வந்த போது, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கை கேலி செய்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மக்கள், தற்போது மோடியை கேலி செய்கின்றனர்.-ராகுல்

 அடுத்து நீங்க ஆட்சிக்கு வந்தாலும் யாராவது உங்களை கேலி செய்வாங்க , உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?


================

0 comments: