Friday, May 24, 2019

இன்னொரு செருப்பு எங்கே?

எடப்பாடி ஆட்சி 23ம் தேதிக்கு பின்னர் தானாகவே கவிழும் : மு.க.ஸ்டாலின்
//நாமா எதுவும் செய்ய முடியாது,செய்யத்தெரியாது,சம்பவம் அதுவா நடந்தாதான் உண்டுங்கறாரு


2 ஜுன் 3ம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் - உதயநிதி # கவர்னருக்கு தகவல் சொல்லியாச்சா?அவர் பாட்டுக்கு சம்மர் ட்ரிப் போய்டப்போறாரு


=============


3 கைதுக்கு பயப்படவில்லை, பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் முன்ஜாமின் கோரினேன் - கமல் # அப்போ பிரச்சாரம் முடிஞ்சதும் முன்ஜாமீன் கேன்சல்?


============


4 தமிழகத்தில் என்று அதிமுக ஆட்சி முடிவுக்கு வருகிறதோ அதற்கு அடுத்த நாளே ரஜினிகாந்த் தனது கட்சியை தொடங்குவார்!" - தமிழருவி மணியன் இது ஆகறதில்ல.அடுத்தவன் எப்போ வீழ்வான் னு காத்துட்டு இருப்பவர் தலைவர் ஆகிட முடியாது.எதிரியை மோதி வீழ்த்துபவரே "மன்னன்"


============


5 நான் காந்தியின் ரசிகன்; ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னோரு செருப்பும் வரும், எனக்கு அந்த அருகதை உண்டு - கமல் ஒரு தீர்க்கதரிசி ,இவரு இப்டி கேட்டதைத்தான் பல வருடங்களுக்கு முன்பெ "இன்னொரு செருப்பு எங்கே?"னு நாவல் எழுதிட்டாரு


===========


6 4 தொகுதி இடைத்ததேர்தல்; வாக்காளர்களுக்கு திமுக பிரியாணி: அதிமுக புகார் # இது நம்பற மாதிரி இல்லையெ? வழக்கமா பிரியாணி திருடிதானே அவங்களுக்குப்பழக்கம்?தந்து பழக்கம் இல்லையே?கேஸ் நிக்காது


=============


7 ஒரு நாளுக்கு ரூ.990! மோடி தியானம் செய்த குகை வாடகைக்கு!- ரவுண்டா 1000 பண்ணவேண்டியதுதானே?அதென்ன பேட்டா கடை செப்பல் ரேட் மாதிரி...?


=============


8  சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள், கண்டிப்பாக, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்காது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஆட்சி அமைப்போம் -ராகுல்:  #  தேர்தலுக்கு முன்பே அதை செஞ்சிருக்கலாமே? பிரதமர் வேட்பாளர் யார்?னு சண்டை வந்திருமா?
==============

 9   காங்., மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வருவது தான், சரியான தீர்வாக அமையும்.-திருநாவுக்கரசர்  

கோஷ்டிப்பூசல் ஒழிய , ரெய்டு பயம் குறைஉய சரியான தீர்வு?

===============


10   , காங்கிரசை ஒதுக்கிவிட்டு, மூன்றாவது அணி அமைப்பது சாத்தியமற்றது, தேவையற்றது. இந்நிலையில், 'ஸ்டாலின் எங்களுடன், கூட்டணி தொடர்பாக பேசி வருகிறார்' என, தமிழிசை கூறுவது அபத்தமானது.-திருநாவுக்கரசர்  

 ஆபத்தானதும் கூட 


==============


11 தமிழிசை   கூறுவதைப் போல், பா.ஜ.,வுடன் நான் பேசவில்லை; பா.ஜ., ஆட்சியின் அக்கிரமங்களைத் தான் பேசி வருகிறேன்.-ஸ்டாலின் # அப்டியே பாஜ க ஆட்சியின் ரெய்டுகளால் நம்ம கட்சியினர் படும் சிரமங்களையும் பேசிடுங்க   

===========

12 பொய் பேசுவதில், பிரதமர் மோடியைப் பின்பற்றுகிறார் தமிழிசை.- ஸ்டாலின்    #  நீங்க கலைஞரை பின்பற்றுகிற மாதிரி?

===========

13 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், தில்லுமுல்லு செய்ய முடியும் எனில், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வியை சந்தித்திருக்காது.-



, அஜித் பவார்  

சின்ன மீனை இழந்து பெரிய மீனைப்பிடிக்கற டெக்னிக்கோ என்னவோ?

=============


14  பா.ஜ., அரசு, எத்தனையோ நலத் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறுகிறது; அத்தனையும் அரைவேக்காட்டு திட்டங்கள். ஒரு திட்டம் கூட, மக்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டவில்லை -, பிரியங்கா @


ஜிஎஸ் டி  திட்டம் காங்கிரசோடதுதானே? அப்போ காங் ஆஃப் பாயிலா? நீங்க ஃபெயிலா?


--------------------
15   சூலுாரில், நான் கடைசி நாள் பிரசாரம் செய்வதை, சட்டம் -- ஒழுங்கை காரணம் காட்டி தடை செய்துள்ளனர். பதற்றம் நிலவினால், தேர்தலை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என்பது தான், எங்கள் கேள்வி.-கமல்: 

 நீங்க ஒரு ஆள் பதட்டப்பட்டதற்கெல்லாம் தேர்தலை ஒத்தி வைக்க முடியுமா?

 சட்டத்தை மதிக்க வேண்டிய நீங்களே அதை மீற நினைக்கலாமா?

==================

===============
16 ,  மே, 23ல், தமிழக அரசியல், ஒரு புதிய துவக்கத்தை காணப்போகிறது; துரோக கும்பலை அப்புறப்படுத்தப் போகிறது. மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது.-தினகரன்:

 நல்ல காலம் பொறக்குது  நல்ல காலம் பொறக்குது  தொனிலயே இருக்கே?


மாற்றம்  ஏமாற்றம்


 நீங்களும் 2 வஎஉஷமா இதே டயலாக்கைத்தான் சொல்றீங்க, ஒண்ணும் நடந்தபாடில்லை


=============


============='


17   அண்ணா பல்கலையில், அரசியல் தலையீடு உள்ளது என்ற, துணைவேந்தர் சுரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது-இ.பி.எஸ்.,


என்ன> உங்க பேச்சுல சுரத்து கம்மியா இருக்கு?


சுரப்பா வின் குற்றச்சாட்டு தவறப்பா?

 அரசியல்வாதியின்   தலையீடுதான் இருக்கா?


================


.18   எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஒழுங்காக செயல்படவில்லை என, புகார் வந்தால், அவர்களை ராஜினாமா செய்ய வைப்போம்.
-   கமல்


முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்


பதவி கிடைச்சதும் அவங்க கட்சி மாறிட்டா?


===============


19     கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது,'' = எச்.ராஜா

  மாற்றம் முன்னேற்றம்  ஃபார்முலா ட்ரை பண்றாரா?


இந்து மதத்தை குரை சொன்னா உடனே இப்ப்டி சொல்லிடறதா?


================

20  பா.ஜ., அல்லாத பிற கட்சிகளுக்கு, சோனியா அழைப்பு விடுத்துள்ளார். கமலுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறித்து, காங்., உயர்மட்டக் குழு தான் சொல்ல வேண்டும்.-கே.எஸ்.அழகிரி : 


6% வாக்குபெற்று தேர்தல் கமிஷனின் அங்கீகரம் பெறட்டும் முதல்ல அப்டின்னு  நினைக்கறார் போல 


==============

0 comments: