Tuesday, May 07, 2019

சிங்கிள் சிங்கங்களுக்கு சமையல் டிப்ஸ்

1  லெஜண்ட் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் FDFS 15/4/1988 அன்னைக்கு  காலைல 11 மணிக்கு நடந்தது, இந்த வருச அக்னி நட்சத்திரம் இன்னைக்கு மதியம் 12 மணிக்கு FDFS


===============
2  கேரளாவில் பலாப்பழம் பழுக்கும் முன்பே காயாக இருக்கையில் அதன் சுளையை முட்டைக்கோஸ் பொரியலுக்கு அரிவது போல் சிறிதுசிறிதாக பொடியாக்கி ”சக்க பொடிமாஸ்” பண்றாங்க ( மலையாளத்தில் சக்கபழம் =பலாப்பழம்)



=============




3 அக்‌ஷய திருதியை



நகைக்கடைகளில்

நகை வாங்க வந்த மனைவிகளுக்கு மேல் நோக்கு நாள்..
கணவன்களுக்கு பர்ச்சேஸ் பண்ணவந்த மத்த female் நோக்கு நாள்!



==============


4 நெட் தமிழன் பக் வீட் பிகரையோ ,எதிர் சீட் பிகரையோ நினச்சு ஒரு கவிதை எழுதி FB ல அப்டேட் பண்றான்,கமெண்ட்ஸ்ல எந்தப்பொண்ணு வந்து "இது யாரை நினைச்சு எழுதுனது?"னு கேட்டாலும் அத்தனை பேர்ட்டயும் ஒரே பதில் "u only ,only u"



==============



5 'ஒருகட்சிஆட்சிமுறை' இந்திய மக்களுக்கு நல்லது செய்யாது..என்ற கருத்து நிஜமா?

அது தெரில ஆனா கூட்டணிக்கட்சி ஆட்சின்னா எல்லாரும் சேர்ந்து திருடி சாப்டபின் இவன் அவனைக்குறை சொல்வான்,அவன் இவனைக்குறை சொல்வான்


============



6 தலைவரே!நீங்க எப்பொழுதும்
One man army போன்றே
செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்தீங்களாமே?நிஜமா?

ஆமா,அது கிடக்குது கழுத.a man and two women (lake consequences) கேசட் கேட்டேனே வந்தாச்சா?


===========



7 சேவை

சந்தகை
சந்தவை

இடியாப்பம்
சேமியா

எல்லாம் கிட்டத்தட்ட
ஒன்றே!


===========


8 இயற்கைக்காட்சி
மழை
மரம்
கோயில் கோபுரம்

இப்டி போட்டா அப்டேட் பண்றவங்க 90% பேர் காருக்குள்ள இருந்து (கார் கிளாஸ் கவர் ஆகற மாதிரி) போட்டா போடறது எதேச்சையானதா?எதுனா நோக்கம் கொண்டதா?


============


9 வாழ்நாட்கள்ல 25% பகுதி"சம்பாதிச்சதை தமிழன் சொந்த வீடு கட்ட செலவு பண்றான்.செலவு ஆன"பணத்துக்கு வட்டிக்கணக்கு போட்டா அழகா வாடகை வீட்ல இருப்பதே உத்தமம்னு தோணுது.500 வருசமா இருக்கப்போறோம்.சராசரி ஆயுள் 72 வயசு



=================




10 கொடுத்த"கடனை திருப்பிக்கேட்க கூச்சப்படறவனும்

யாராவது"கடன்"கேட்டா எப்போ திருப்பித்தருவீங்க?னு"கேட்காம கொடுத்தவனும் பொருளாதார ரீதியா சிறப்பான வாழ்க்கை வாழ இயலாது


===============


11 அண்டாவுக்குள்ள 4 பேரு இருந்துக்கிட்டா அவங்க உடம்பு வேணா குளிரும்.பூமி எப்டி குளிரும்?கேட்டா யாகம் பாங்க
நீங்க எந்தக்கட்சியா வேணா இருந்துக்குங்க,ஆனா மழை விஷயத்துல மரம் நடுநிலை எடுக்கவும்


==============


12 சால்ட் மேட்டர்தானே னு அசால்ட் டா படிக்காம விட்ற வேணாம்காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க. உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora scienceனுசொல்வாங்க.

நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும். எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.

உலகில் அனைத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கின்றன. நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் சில தீமைகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன. கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை அளிக்கும் சக்தி நாம் உணவிற்கு பயன்படுத்தும் “உப்பு” பெற்றிருக்கிறது. இந்த உப்பை கொண்டு நமக்கு செய்துகொள்ள கூடிய சில நன்மை அளிக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். உப்பு பரிகாரம் ஒரு சிறு கிண்ணத்தில் நிறைய சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் நீர் படாத ஒரு மூலையில் வைக்க வேண்டும். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும். கழிவறை, குளியலறை சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், அந்த அறையின் குளிக்கும் இடம் பகுதியில் தண்ணீர் படாத இடத்தில் இந்த உப்பு கிண்ணத்தை வைக்க வேண்டும். 
வாரத்தில் ஒரு நாள் வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை சேர்த்து கரைத்து வீட்டை சுத்தப்படுத்தி வந்தால். வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி வீட்டில் நன்மைகள் பெருக தொடங்கும். உங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பணப் பை போன்றவற்றில் சில கல்லுப்பு தூள்களை போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும். கணவன் மனைவிக்கிடையேகருத்துவேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்பட்டிருக்கும் போது, ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை நிறைத்து, தம்பதிகள் உறங்கும் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் வைப்பதால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனை கூடிய விரைவில் தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வார்கள். நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வாகனங்களை சுத்தப்படுத்துதினால், அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும். எதிர்பாரா விபத்துகள் ஏற்படாமல் காக்கும். வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும்!!


==============


13 மத்த எந்தக்கம்பெனி ஐஸ்க்ரீம் கிட்டயும் இல்லாத ருசி+ கெட்டித்தன்மை அருண் ஐஸ்க்ரீம் க்கு இருக்கு,அந்த பார்முலாவை இதுவரை யாராலும் அட்லீ வேலை பண்ண இயலவில்லை



=============


14 கிணறுகள்ல ஊற்றுக்கிணறு னு 1 இருக்கு,அமைஞ்சா வரப்பிரசாதம்தான்.இறைக்க இறைக்க ஊறும்.ஒரு மழை வந்தா போதும் ,1 பர்லாங் தூர நிலத்தடிநீரை இழுத்துக்கும்


=============


15 தட்டில் சாப்பிட்டால் Limited ஆரோக்யம்

வாழை இலையில் பரிமாறி சாப்பிட்டால் unlimited ஆரோக்யம்


=============

16 ஊரொடு ஒத்து வாழ்பவன் சிறந்த தலைவன் ஆக முடியாது, தான் சொல்வதை ஊரையே ஒத்துக்கொள்ள வைப்பவனே தலைவன் ஆக முடியும்


=============



17 டாஸ்மாக் அருகே வீடிருந்தால்

"குடி" இருக்கிற இடத்தில் தான் குடியிருக்கறேன் னு சொல்லிக்கலாமில்ல?



===============


18 கண்டக்டர் டிக்கெட் கேட்கும்போது ஜாக்கெட்க்குள்ள இருந்து பர்ஸ் எடுக்க சில பொண்ணுங்க அந்தப்பக்கமா திரும்பிக்கறாங்க,அந்தப்பக்கம் பயணிகள் இருக்காங்களே?பரவால்லியா?


=============

19  அரசாங்க நூலகம்னு 1 இருக்கறதையே ஜனங்க மறந்துடறாங்க.எத்தனை புக்ஸ்,பேப்பர்ஸ் வார மாத இதழ்கள்.,தினம் 1 மணி நேரம் ஒதுக்குனாப்போதும். அதை விட்டுட்டு சந்தா கட்றேன் சாந்தாவைக்கட்றேன்னு காச வேஸ்ட் பண்றாங்க


==============


20 சிங்கிள் சிங்கங்களுக்கு சமையல் டிப்ஸ்

2 நாட்களுக்கு (6 வேளை ) ஒரே குழம்பை பயன்படுத்த நினைச்சா

1 வெண்டைக்காய் குழம்பு..

2 சுண்டைக்காய்க்குழம்பு

3 மோர்க்குழம்பு.
4 கத்திரிக்கா தக்காளி பஜ்ஜிக்குழம்பு

5 கொள்ளு
செய்யலாம், புளி சேர்க்கவும்
6 மொச்சைப்பயிறுக்குழம்பு



==================

0 comments: