Monday, May 13, 2019

வெற்றி கானல் நீர் தான் என்பதன் குறியீடோ கொடைக்?கானல்? டூர்

 1  தி.மு.க.,வுக்கும், தினகரனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, தி.மு.க.,வும், தினகரனும் கூட்டு சேர்ந்திருக்கின்றனர் என, ஒரு பொய்யான தகவலை, அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.- முத்தரசன் 

அதை தினகரனோ, ஸ்டாலினோ சொன்னாதான் நம்புவோம், நீங்க யாரு தானாவதி?


==============
2   காங்., ஆட்சியில், 14 ஆண்டுகள் அங்கம் வகித்த, தி.மு.க., எத்தனை பேருக்கு, வேலைவாய்ப்பு பெற்றுத் தந்தது - ஈபிஎஸ்

திமும கட்சிக்காரங்க பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கே?


===============

3  இ.பி.எஸ்., தினகரன், சசிகலா ஆகியோருக்கு இடையே தான், ரகசிய கூட்டு உள்ளதாக, தகவல் உள்ளது. அதனால் தான், ஓ.பி.எஸ்.,சுக்கு எந்த அதிகாரமும், செல்வாக்கும் இல்லாமல் முடக்கிப் போட்டு வைத்துள்ளாகச் சொல்லப்படுகிறது-முத்தரசன்   #  ஈபிஎஸ்  ஓபிஎஸ் இடையே பிரச்சனை வரனும்கறதுக்காகவே அடிச்சு விடறது மாதிரி தோணுது

==============

 4 லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டுக்குமே, தனிப் பெரும்பான்மை கிடைக்காது. இம்முறை தொங்கு பார்லிமென்ட் அமைய வாய்ப்பு உள்ளதால், காங்., ஆதரவுடன், முன்பு ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்தது போல், மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.-, எஸ்.சுதாகர் ரெட்டி :


 மே 23  வரை இன்னும் எத்தனை ஜோசியர்கள் கிளம்புவாங்களோ தெரியல


=-=-------
5  தி.மு.க.,வில் இணைய, தங்க தமிழ்ச்செல்வன் ஆயத்தமாகி வருகிறார்.- ராஜு:

OPS  -பாஜக வில் இணைய ஆயத்தம் ஆகி வருகிறார்னு அவங்க சொல்றாங்களே?


================


6 தி.மு.க., - அ.ம.மு.க., இரண்டு கட்சிகளும், 'ஏ மற்றும் பி டீம்' ஆக செயல்படுகின்றன. அவர்களால் முடியாததை இவர்களும், இவர்களால் முடியாததை அவர்களும் செய்து வருகின்றனர்.-பொன்.ராதா:   # அதாவது அதிமுக பாஜக வின் சி  டீம் ஆக செயல்படுவது ,மாதிரி?


============



7 ஆட்சியை கலைப்பதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும், இயல்பாக கை கோர்ப்பது நிதர்சனமான உண்மை; அதற்கு கூட்டணி என்ற பெயர் இல்லை -

தங்க தமிழ்ச்செல்வன்:   # வேற்றுமையில் ஒற்றுமை?

===============
8 இந்தத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது.  -ஜோதிராதித்யா சிந்தியா   #  இது உங்க கணிப்பா? சாபமா?


==============

10 நாங்கள், எத்தனைத் தொகுதியில் வெற்றி பெறுவோம் என, அறுதியிட்டுக் கூற முடியாது.-ஜோதிராதித்யா சிந்தியா  #  வெற்றி பெஏஉவோம்னு குத்து மதிப்பா அடிச்சு விட்டுடுட்ங்க 


 உங்களுக்கே டவுட்டா? அப்போ கட்சி அவுட்டா?


==============


11     பள்ளிக்கூட மாணவனைப் போல, பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். தன்னுடைய ஆட்சி காலத்தில் என்ன செய்தோம் என்பது குறித்து அவர் பேசுவதில்லை.-பிரியங்கா

 அதான் ஜிஎஸ்டி   பணமதிப்பிழப்புனு வெச்சு செஞ்சாரே? அதைப்பத்தி பேசுனா ஓட்டு வாங்க முடியாதில்ல?

---------------
12   . பா.ஜ., ஒழுங்காக வீட்டுப் பாடம் செய்யாத மாணவர்கள்.-பிரியங்கா  # அப்போ அவங்களை  வீட்டுக்கு அனுப்பப்போறீங்களா?

 அவங்களை வீட்டுக்கு அனுப்பப்[போறக்தே அவங்க ஹொம் ஒர்க்கை சரியா செய்யட்டும்னுதானா? 


===============


13  நீங்கள் என்னைப் பற்றியோ, எங்களுடைய தந்தை ராஜிவ் பற்றியோ பேசுங்கள். அதே நேரத்தில், 'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை பற்றியும் பேசுங்கள்- ராகுல்


 நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அது பற்றிப்பேசக்கூடாதுனு இவருக்கு யாராவது சொல்லுங்களேன்


===========


14   'நாட்டுக்காக செயல்படும், பா.ஜ., அரசு, போர்க் கப்பல்களை, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்துகிறது. 'ஆனால், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், சுற்றுலா செல்வதற்கு அதை பயன்படுத்தினார்'-, அருண் ஜெட்லி


 இது என்ன அக்கப்< போர்>? 


===============


 இவரோட வீடு மனைவி மக்கள் மகிழ்ச்சியைப்பற்றி சொல்றார் [போ,ல 


===============


 வெற்றி கானல்  நீர் தான் என்பதன் குறியீடோ கொடைக்?கானல்? டூர்

-------------------

1 7   மம்தா பானர்ஜி, என்னை அறைய விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவரை நான் எப்போதும் சகோதரியாகவே கருதி மதிக்கிறேன். அவர் அறைந்தால், அது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக ஏற்று கொள்வேன்,'' - மோடி

  எந்த பால் போட்டாலும் சிக்சர் அடிக்கறாரே?- மம்தா மைண்ட் வாய்ஸ்

---------------


18   நிலக்கரி சுரங்கங்களில், திரிணமுல் கட்சியின், 'மாபியா' கூட்டம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது; இதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் முழுமையாக கிடைப்பதில்லை' என, மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை அவர் நிரூபித்துவிட்டால், மேற்கு வங்கத்தில், 42 தொகுதிகளிலும், திரிணமுல் வேட்பாளர்கள், போட்டியிலிருந்து விலகி விடுவார்கள். நிரூபிக்காவிட்டால், மோடி, 100 தோப்புக்கரணம் போட வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி 


==================



==============


 19  மக்கள், பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிக்கும் மனநிலையில் உள்ளதால், ஐ.மு., கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சி அமைக்கும். -ஜோதிராதித்யா சிந்தியா #  ஆனா பிரதமர் வேட்பாளர் யார் அப்டிங்கறதை மட்டும் கடைசி வரை சொல்ல மாட்டோம்?

===============


30     ஒத்தக் கருத்துடைய கட்சிகளை, கூட்டணிக்கு எதிர்நோக்கி உள்ளோம். -ஜோதிராதித்யா சிந்தியா 

 அதாவது தேர்தலை முன்னிட்ட சந்தர்ப்பவாத கூட்டணி?


==============

0 comments: