1 பா.ஜ., அரசு, ஐந்து ஆண்டுகளில், உலகளவில், இந்தியாவின் நன்மதிப்பை பெருமளவு உயர்த்தியுள்ளது. -மோடி
நாம வெளிநாடு போஉ பாக்கவா போறோம்னு குத்து மதிப்பா சொல்றாரா?
உலக நாடுகள் அனைத்துக்கும் டூர் போன ஒரே பிரதமர் என்ற நன்மதிப்பா?
===============
2 காங்கிரஸ் கட்சியினர் ஹிட்லர், முசோலினி, தாவூத் இப்ராஹிம் என்றெல்லாம் என்னை வசை பாடினர்.- மோடி
பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை செஞ்சீங்கனு சொல்லி ஓட்டுக்கேட்காம டீச்சர் அவன் என்னை கிள்ளிட்டான் ரேஞ்சுக்கு [புகார் பண்ணிட்டு கிருக்காரு
=================
3 என்னை, பூச்சி என்றார் ஒருவர்; இன்னொருவர், வெறி நாய் என்றும், மற்றொருவர், பஸ்மாசூரன் என்றும் கூறினர். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஒருவர், என்னை, குரங்கு என்றார்.-மோடி # எதிர்க்கட்சிக்காரங்க ஜூ ல இருந்துக்கிட்டு அறிக்கை விடுவாங்க போல , ஒரே விலங்குகள் பேரா வருது
=================
4 ஹரியானாவில், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்த, சோனியா மருமகன், ராபர்ட் வாத்ரா, இப்போது, அமலாக்கத் துறை விசாரணைக்கும், ஜாமின் பெறவும், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். - மோடி # காங்கிரஸ்ல ப சிதம்பரத்துக்கு அடுத்து டெய்லி கோர்ட் போறது இவருதான் போல
=================
5 நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், நாட்டின் முக்கிய பிரச்னைகளான, வேலைவாய்ப்பின்மை, ஊழல், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவைக்கு எதிராக போராடுவார் என, அனைவரும் எதிர்பார்த்தனர். -, ராகுல் :
எதிர்பாராததை எதிர்பாருங்கள்
ப சிதம்பரம் ஃபேமிலி மீது இவளோ ஊழல் வழக்குகள் வரும்னும் எதிர்பார்க்கல தானே?
================
, 6 மோடி , தன் குருவான, அத்வானியை கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டார். இது, குத்துச்சண்டை வீரர் போட்டி வட்டத்திற்குள் நுழைந்து, தன் போட்டியாளருக்கு எதிராக சண்டையிடுவதற்கு பதிலாக, பயிற்சியாளரின் முகத்தில் குத்தியது போல் உள்ளது.-, ராகுல் :
ஒரு உறைக்குள்:ள ஒரு வாள் தான் இருக்கனும் ஃபார்மு,லா
---------------
: 7 தி.மு.க., பொருளாளரான, நண்பர் துரைமுருகனுக்கு, நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால், அதற்காக இன்று, 70 வயதைத் தொடும் ஸ்டாலின், 25 ஆண்டு கழித்து, ஜனாதிபதி ஆவார் என்பது, 'டூ மச் -
, ஹெச்.ராஜா,
ஸ்டாலினை காமெடி பீஸ் ஆக்கறாங்க ளே அவரோட கட்சிக்காரங்களே?
===========
,8 முதல்வர்: ஜெ., உடல் நலம் குன்றி, நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததற்கு, தி.மு.க., தொடுத்த பொய் வழக்கு தான் காரணம்.-
இ.பி.எஸ்.
அந்த கஞ்சா கேஸ் , ரேப் கேஸ் எல்லாத்தையும் அவன் மேலயே எழுது மொமெண்ட்
\======================
9 மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், பதவிக்காக ஆசைப்படுபவன் அல்ல- தினகரன்:
இதையே தான் அந்த டெய்லரும் சொன்னான்கற மாதிரி எல்லா ரும் இதே டயலாக்தான் சொல்றாங்க, ஆனா தேர்தல்ல போட்டி இட்ஃபறாங்க
================
10 மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளதால், ராகுல், பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன -நாராயணசாமி:
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது குடுகுடுப்பைக்காரன் ரேஞ்சுக்கு போய்ட்டாரே?>
=============
11
அ.தி.மு.க.,விற்கு கடைசி தேர்தல்: துரைமுருகன் கணிப்பு # பகுத்தறிவுக்கட்சி ஜோசியம் எல்லாம் சொல்லுதே அடடே!
============
12 பிரதமர் மோடி குறித்து விமர்சிப்பதில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி எல்லை தாண்டியுள்ளார்.-சுஷ்மா சுவராஜ், # காஷ்மீர் பார்டர் தாண்டிப்போய் பேட்டி கொடுத்துட்டாரா?
===============
13 மோடி இந்த நாட்டின் பிரதமர்; நீங்கள்( மம்தா பானர்ஜி)ஒரு மாநிலத்தின் முதல்வர். பின்னாளில் அவருடன் நட்பு பாராட்டும்போது, வெட்கப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகாதீர்கள்.-
சுஷ்மா சுவராஜ், # வை கோ திமுக வை திட்டாத திட்டா? இப்போ கூட்டணி சேரலையா? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
==================
14 பிரதமர் மோடி வீட்டுப்பாடம் எழுதாத குழந்தை மற்றவரை குறைகூறிக் கொண்டிருக்கிறார் -பிரியங்கா
குழந்தைங்க செய்ய்ற சின்ன சின்ன தப்பை எல்லாம் கண்டுக்கக்கூடாது
அவருதான் வீட்லயே இருக்கறதில்லையே? எப்படி ஹோம் ஒர்க் பண்ணூவாரு? ஃப்ளைட்ல பறந்துட்டேதானே இருக்காரு?
==================
15 ராஜிவ், தனது வாழ்க்கையை நம்பர் 1 ஊழல்வாதியாக முடித்துக் கொண்டார்-மோடி
அதுக்கு நெம்பர் ஒன் ஊழல்வாதி
நோ ஒன் ஊழல்வாதி -னு 2 விஉதமா அர்த்தம் வருதே? ( NO 1)
==============
16 அரவக்குறிச்சி தொகுதியில், வெற்றிலை வியாபாரிகளிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், குறைகள் கேட்டறிந்தார் # வெற்றி இலை ( இரட்டை இலை) அப்டினு அர்த்தம் வருதே?
================
17 தி.மு.க.,வில் இணைய, தங்கத் தமிழ்செல்வன் ஆயத்தமாகி வருகிறார்,'' -, கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு # திமுக கூடாரத்துலயே தங்கப்போறாரா தங்க தமிழ் செலவன்?
==================
18 பா.ஜ., - த.மா.கா., இணைப்பு? டில்லியில் வாசன் ரகசிய பேச்சு # தாமாக முன் வந்து இணைத்த த.மா.க ? நு வரலாறு [பேசுமா?
=============
19 அ.தி.மு.க.,வின் சகாப்தம் தேர்தலோடு முடிவடையும்,'' = தங்க தமிழ்ச்செல்வன் # நம்ம சகாப்தம் இனிமே தான் தொடங்கப்போகுதா>திமுக கூட ஐக்கியம்?
================
20 அரசியல் கட்சிகளுக்கு முறையாக தகவல் தெரிவித்த பின்னரே, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 'விவிபேட்' கருவிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்,'' என, தலைமை தேர்தல் ஆணையருக்கு, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி கடிதம்
இப்படி ஒரு சட்டம் இருக்கற மாதிரி தெரியல. இவரா உருவாக்கிட்டார் போல
==================
0 comments:
Post a Comment