1 எந்த சாதனையும் செய்யாத, தி.மு.க.,வினர், மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களைப் பற்றி குறை கூற முடியாமல், அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து விடும் என, ஜோதிடம் கூறி வருகின்றனர்.-ஓபிஎஸ் # பகுத்தறிவுப்பகலவரின் கட்சி ஜோசியம் சொல்வது கூட ஒரு சாதனை தானே?
================
2 ஸ்டாலின் ஒருபோதும், முதல்வராக முடியாது. -ஓபிஎஸ் # அது தெரிஞ்சுதான் துரை முருகனே இன்னும் 25 வருசம் க்ழிச்சு அதாவது ஸ்டாலினோட 96 வது வயசுல ஜனாதிபதி ஆவார்னாரா?
==============
3 அ.தி.மு.க., மிகப்பெரும் ஆல மரம்.-ஓபிஎஸ் # அதனாலதான் முதல்வர் துணை முதல்வர்னு ஏகப்பட்ட விழுதுகள் இருக்கோ?
===============
4 28 ஆண்டு காலம் நாட்டை ஆளும் பெரும் இயக்கம், அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., அரசில், எந்தக் குறையும் இல்லை -ஓபிஎஸ் # குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ரேஞ்சுக்குப்போய்ட்டாரே? குறை இருக்கா? இல்லையா?னு ஜனங்க தானே சொல்லனும்?
==============
5 எங்கள் கட்சிக்கு, ஜாதி, மதம் கிடையாது. -கமல் # ஆனா தேவர் மகன் , தேவர் மகன் 2 -னு சினிமால மட்டும் ஜாதிக்குக்கொடி பிடிப்பது ஏனோ?
=============
6 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டவர்களால், குடிநீர் பிரச்னையை கூட தீர்க்க முடியவில்லை. '-கமல் # அந்தத்தண்ணீரை விடுங்க , டாஸ்மாக் தண்ணி க்கு எந்தக்குறையும் இந்த ஆட்சி வைக்கலையே? அது போதாதா?
=============
7 டிவி'யில் பேசும் அரசியல்வாதிகள், மிக நேர்மையானவர்கள் போல், மக்களை குழப்புகின்றனர். மக்கள் மனது வைத்தால், மாற்றத்திற்கான விதையை துாவ முடியும்-கமல் # இனிமே விதையைத்தூவி அது வளர்ந்து வர சமயம் எடுக்குமே?
================
8 முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 1 லட்சம் கோடி ரூபாய் 'ஆர்டர்' தந்ததை நினைவுபடுத்த விரும்புவதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
# ராகுலுக்கு செலக்டிவ் அம்னீஷியா , பழசை எல்லாம் மறந்துடுவார்
================
9 வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதாக கூறி ஆட்சி என்ற குத்துச் சண்டை வளையத்தில் குதித்த மோடி அதற்கு பதிலாக தன் பயிற்சியாளர் அத்வானியை தாக்கி அவர் கதையை முடித்து விட்டார்' - ராகுல் # அமைதிப்படை அமாவாசை நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ ஆன மாதிரி?
=================
ஆமா 2021 ல சட்டம்னறத்தேர்தல் வருது
===============
11 தேர்தல் களத்தில், மோடிக்கு போட்டியாக, ராகுலை பிரதமர் வேட்பாளராக உருவாக்கிய பெருமை, ஸ்டாலினுக்கு உண்டு.-துரைமுருகன்: அந்த ஒரு பெருமையாவது மிஞ்சுச்சே?
=============
12 மோடியா, ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு காரணமே, ஸ்டாலின் தான். அவரது இந்த ஆளுமை தான், தி.மு.க.,வின் பலம்-துரைமுருகன்: $ துரை முருகனோட பலமே கண்மை , லிப்ஸ்டிக் மை தான்
================
13 தி.மு.க., ஆட்சியில், வெளிப்படையான நிர்வாகம் இருக்கும்.- ஸ்டாலின்: # நில ஆக்ரமிப்பு பண்றப்பக்கூட வெளிப்படையா சொல்லிட்டு தான் செய்வாங்க , வன்முறை அராஜகம், பஸ் எரிப்பு கூட வெளீப்படையா நடக்கும்
=============
14 தி.மு.க., ஆட்சியில், மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தீர்வு காணப்படும்-ஸ்டாலின்: # மக்களோட முக்கியப்பிரச்சனைகளே நம்ம கட்சிக்காரங்க டீக்கடை பஜ்ஜிக்கடை பிரியாணீக்கடை ;ல ஓசி ல சாப்ட்டுட்டு காசு குடுக்காம போய்டறதுதான், அதைக்கவனிங்க முதல்ல
================
15 மறைந்த பிரதமர் ராஜிவ் மீது, தொடுக்கப்பட்ட போபர்ஸ் ஊழலில், போதுமான ஆதாரம் இல்லை என, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவரை ஊழல்வாதி என, பிரதமர் மோடி பேசி வருவது, கண்டிக்கத்தக்கது-அழகிரி: # ரபேல் விவகாரத்துல கூட தான் கோர்ட் தீர்ப்பே வராத நிலைல ராகுல் மோடியை களாவாணின்னாரு
====================
16 அரசியல்வாதி பொய் பேசுவதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அதை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்'' = முதல்வர் பழனிசாமி # அப்டிப்பார்த்தா எல்லா அரசியல்வாதிகளுக்கும் நோபல் ;பரிசு கிடைச்சிடும்
===============
17 வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களை, பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகள் வஞ்சித்ததாகக் கூறும் ஸ்டாலின், டில்லி மாணவர்களின் வாய்ப்பை, தமிழக மாணவர்கள் பறிப்பதாக, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது தொடர்பாக, ஏன் வாய் திறக்கவில்லை? - எச்.ராஜா # ஸ்டாலினுக்குதான் ஹிந்தி தெரியாதே? அர்விந்த் சொன்னது எப்படி புரியும்னு கேட்பாங்களோ அவங்க கட்சிக்காரங்க ?
============
18 ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகளாக, மன நோயால் பாதிக்கப்பட்டு, உளறிக் கொண்டிருக்கிறார் - எச்.ராஜா # விரைவில் அதிமுக ஆட்சி கவிழும் , திமுக ஆட்சி அமைக்கும்னு அடிக்கடி கனவு காண்பாரு, அது ஒரு குத்தமா?
=================
.19 ஜெயலலிதா மறைவுக்குப் பின், சட்டசபை உறுப்பினர்கள், பா.ஜ.,வில் இணைந்துள்ள நிலையில், ஒரு முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட, தி.மு.க.,வில் சேரவில்லை. ஆளுமை திறனற்ற நபர், ஸ்டாலின் என்பதை அனைவரும் புரிந்துள்ளனர்- எச்.ராஜா
ஆளுங்கட்சிக்குத்தான் ஆளுங்க கட்சி மாறுவாங்க. எதிர்க்கட்சிக்கா மாறுவாங்க?
=============
20 தமிழகத்தில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மூன்று எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.-முத்தரசன் # அதிமுக இடத்துல நீங்க இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அவங்க 3 பேருக்கும் பிரமோஷன் , இன்க்ரீமெண்ட் தந்திருப்பீங்களா?
===============
===========
0 comments:
Post a Comment