Tuesday, April 23, 2019

சூரியனே தாமரையை ஆதரிக்குதே

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாரா முதல்வர் பழனிசாமி?- அதிமுக விளக்கம் # கரகாட்டக்காரன் வாழைப்படக்காமெடிக்கு அடுத்து இந்த வாழைப்பழ சேல்ஸ் வீடியோ தான் வைரல் ஆகிட்டு வருது


===============


2  

கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை # உடனே திமுக காரங்க மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பாங்களே?


===============


3  

மாநிலத்தில் நம் ஆட்சி; மத்தியில் நாம் 'கை' காட்டும் ஆட்சி: ஸ்டாலின் கடிதம் # கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்



ராகுல்தான் பிரதமர்னு சொல்லிட்டு இப்போ திடீர்னு ஸ்ருதி குறையுதே?


==============

  


நூறு சதவீதம் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ உறுதி # போன தேர்தல்ல மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைச்ச மாதிரியா?


===============

5    பொதிகைத் தென்றலைப் போல திமுக மக்களை அரவணைக்கும் -வைகோ  # பொதிகை சேனலையும் வாங்கிடும் போல , ஆக்ரமிக்கும் என்பதைத்தான் அரவணைக்கும்கறாரோ?


================


6    

திமுக அணிக்கு வாக்களிப்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்: ராமதாஸ் விமர்சனம்  # எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?



=============


7   

யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும்.. வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார்: சர்ச்சையான பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் பேச்சு # இந்த 2000 ரூபா நோட்டுல சாட்டிலைட் மூலம் கண்காணிக்கற சிப்ஸ் வெச்சிருந்த மாதிரியா?


===============

8  

தேசம் மக்களால் ஆளப்பட வேண்டும்; தனிமனிதரால், ஒற்றை சித்தாந்தத்தால் அல்ல: ராகுல் காந்தி தாக்கு # ஜோசியர் ஒற்றைப்படை ராசி இல்லைன்னுட்டார் போல, மன்மோகன் எனும் பொம்மை ஆள் பின்னால் இருந்து சோனியுஆ இயக்க ஆட்சி நடக்குமோ?>


===============

9  

நான் பாஜகவுக்கு ஆதரவு': ரவிந்திர ஜடேஜா வெளிப்படை: பிரதமர் மோடி வாழ்த்து # ரவின்னா சூரியன், சூரியனே தாமரையை ஆதரிக்குதேனு பேசப்போறாங்க



==============



10    

நோயாளியின் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா.. 20 இடத்தில் எடுப்பீர்களா?- தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி # ரத்தம் வர்லைன்னா வர்ற இடம் தேடுவது டாக்டர் வழக்கம் தானே?


================


11  நிதின் கட்கரி, சேலத்தில் பிரசாரம் செய்த போது, 'சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை, கட்டாயம் அமைக்கப்படும்' என்றார். கூட்டணி கட்சி தலைவர் பேசும்போது குறுக்கிடுவது, தவறு என்பதால் தான், முதல்வர், இ.பி.எஸ்., அதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.-அமைச்சர், ராஜேந்திர பாலாஜி #சரி , இப்போதான் அவர் பிரச்சாரத்தை முடிச்சுட்டுப்போய்ட்டாரே?இப்ப உங்க முதல்வரை அறிக்கை விடச்சொல்லுங்க் பார்ப்போம்

----------------


12   'சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை-மக்கள் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் முடிவு எடுப்பார்.-அமைச்சர், ராஜேந்திர பாலாஜி # மத்திய அரசை எதிர்த்து? இதை நாங்க நம்பனும்?


=================


13   ரொம்ப கோபத்தில், நான் அரசியலுக்கு வந்தவன்; வியாபாரத்திற்காக வரவில்லை. மக்களின் கோபம் தணியும்போது தான், என் கோபமும் தணியும் -கமல் # கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு தப்பு பண்ணிட்டேன்னு பின்னாளில் வருத்தப்படப்போறாரு


உங்க கோபம் கலைஞர் , ஜெ உயிரோட இருந்தப்போ ஏன் வரலை?

================


14 'ஸ்டாலினின் கொடுக்கு உதயநிதி' என  அன்புமணி பேசுகிறார். அது உண்மை தான்... நான் கொடுக்கு தான்; தவறு செய்பவர்களை, கொட்டிக் கொண்டு தான் இருப்பேன். -உதயநிதி #  அதாவது ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைத்தானே?


===============

15 : ஜி.எஸ்.டி.,யால், தொழில்கள் பாதிக்கப்பட்டு இருப்பது போலவும், கோவையில் தொழில்கள் வளர்ச்சி அடையாதது போலவும், பொய்யான தோற்றத்தை உருவாக்க, தி.மு.க., - காங்., - கம்யூ., கூட்டணி கட்சிகள் முயல்கின்றன. ஜி.எஸ்.டி.,யில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என, தொழில் துறையினர் விரும்புகின்றனரோ, அவை ஒன்றன் பின் ஒன்றாக, சரி செய்யப்பட்டு வருகின்றன. -  ராதாகிருஷ்ணன் # இன்னும் 5 வருஷம் ஆகுமா? அதுக்கு?

=================

16  அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், தமிழக நலன்களை கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என, தேர்தல் களத்திலும், கூட்டணி அமைத்துள்ளன-தினகரன்:   # ஜனாதிபதி தேர்த;ல்ல நாம  மட்டும் பாஜகவை ஆத்ரிக்கலையா?நமக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வ்ந்தா தக்காளிச்சட்னியா?


=============

17  எனக்கு எந்த கிராமத்தில் அதிக ஓட்டு கிடைக்கிறதோ, அங்கு முன்னுரிமை அடிப்படையில் வசதிகளை செய்து தருவேன் -மத்திய அமைச்சர் மேனகா # என்ன ? ஏலம் போடறாரு? ஒரு வேட்பாளரா இப்படிப்பேசறதே தப்பு, ஒரு அமைச்சர் இப்படிப்பேசலாமா?

================


18    லோக்சபா தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவது இல்லை-சித்தராமையா: # காங்கிரஸ்காரருக்கே காங் மேல நம்பிக்கை இல்லைன்னா ஜனங்க எப்படி நம்பி ஓட்டுப்போடுவாங்க?


================


19  ''ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருப்பது தான், காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டது,'' ...-பிரதமர் மோடி  # இவருக்கு இன்னும் திமுக பற்றித்தெரியல போல

==============

20  
தமிழகத்தில் மோடி ஆட்சி நடக்குது:  சந்திரபாபு நாயுடு  # ரமணா படத்துல யூகிசேது சொன்ன மாதிரி இதையே இப்போதான் கண்டுபிடிக்கறாங்களா?


=================

0 comments: