1 எங்கள் கட்சியின் சின்னமான, 'டார்ச்லைட்' வெளியே தெரியக்கூடாது என, மறைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். -கமல் # லைட்டா எடுத்துக்குங்க, இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
--------------
2 பூரண மது விலக்கு கொண்டு வந்தால், மாபியாக்கள், கள்ள மார்க்கெட், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் உருவாவர். மது விலக்கு சாத்தியமில்லாதது - கமல்ஹாசன்: @
= இவருக்கு குஜராத்ல பூரண மதுவிலக்கு இருப்பது தெரியாது போல, அங்கே எப்படி சமாளிக்கறாங்கனு கேட்டு தெரிஞ்சுக்கலாமே?
=================
3 : தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையே, ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது தான் -ஸ்டாலின் # ஊழல்வாதிகளை தண்டிப்பீங்களா? அப்போ உங்க கட்சி ஆளுங்க மனம் புண்படாதா?
=================
4 : கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றவன் நான். தி.மு.க.,வில் உறுப்பினராகவில்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இன்றி, அக்கட்சியுடன் பழகி வருகிறேன் - திருமாவளவன் # 2016 ல மானசீக குரு விஜயகாந்த்தா?2019 ல கலைஞர், அப்போ 2021 ல யாரு?
=================
5 . ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், விலைவாசி தொடர்ந்து உயர்கிறது. லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆறு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி # ஜிஎஸ்டி பற்றி முதன்முதலா திட்டம் போட்டதே காங்கிரஸ்தானே? மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம்?
================
6 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காங்., ஆட்சியில், 163 ரூபாயாக இருந்த ஊதியம், 229 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. -பொன்.ராதா # பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாதிரியா?
==========
7 பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை, ரஜினிகாந்த் உட்பட, அனைவரும் வரவேற்றுள்ளனர்.-அமைச்சர் சீனிவாசன் # இதுதான் சாக்குன்னு ரஜினியின் ஆதரவு பெற்ற கட்சினு பிரச்சாரத்த ஆரம்பிச்சிடுவாரோ?
=================
8 : நாட்டுக்குள் ஊடுருவியவர்களை களையெடுக்க, பா.ஜ., விரும்புகிறது- அமித் ஷா # அப்டியே லோன் வாங்கிட்டு நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்ல ஊடுருவறங்களையும் தடுங்க
==============
9 பாகிஸ்தானில் இருந்து, ஒரு துப்பாக்கி தோட்டா சுடப்பட்டால், இங்கிருந்து, வெடிகுண்டுகள் வழியாக பதிலடி தரப்படும்-அமித் ஷா # ஆளீல்லாத இடத்துல குண்டு போட்டுட்டு வந்துடுவாங்களா?
===============
10 மோடி ஆட்சியில், பல துறைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது-முத்தரசன் # இப்போ நீங்க பேசிட்டு இருக்கறதே பேச்சுரிமை பறிக்கப்படலை என்பதற்கு சாட்சி தானே?
==================
11 தெலுங்கானா மாநிலத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் எடுத்த, ஆளும் கட்சி பிரமுகர், கைது # செல்பி மோகம் உயிரைப்பறிக்குது, ஜெயிலுக்கும் அனுப்புது
==============
12 ராகுலை புத்தராக பார்க்கிறேன் - காங்., தலைவர் அழகிரி # அப்போ திடீர்னு எல்லாத்தையும் துறந்துட்டு போய்டுவாரா? அப்போ அவர் பிர்தமர் ஆனாலும் பிரயோஜனம் இல்லையே?
============
13 தேர்தலில், மக்கள் தான் எஜமானர்களாகவும், நீதிபதிகளாகவும் செயல்படுகின்றனர்-ஓபிஎஸ் # அதனால தேர்தல் வரும்போது மட்டும் ஜனங்களுக்கு பயந்து நடக்க வேண்டியதா இருக்கு?
==============
14 ''நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்யப் போகிறோம். நானே அப்பிராணியாக இருக்கிறேன்,'' - கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு # ஒரு அமைச்சரே அப்பிராணியா இருக்கலாமா? உஷரா இருக்க வேணாம்?
==================
15 'எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக வரப் போவதில்லை,''- சரத்குமார் # ராகு(ல்) காலம் வந்தாலுமா?
===============
16
ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது: ஓ.பி.எஸ்., # இப்போ நடக்கறது நாடாளுமன்றத்தேர்தலா? சட்டமன்றத்தேர்தலா? ஆளாளுக்கு இதையே சொல்றீங்க?
=============
17 இரட்டை இலை, துரோகிகள் கையில் உள்ளது,'' - அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் # சின்னத்தைப்பற்றி எங்களூக்கு கவலை இல்லைன்னீங்களே?
===============
18 நான் நடித்த, கரகாட்டக்காரன் படத்தில், 'காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை, இப்ப யார் வைச்சிருக்காக...' என்று கேட்பது போல, அ.தி.மு.க., இப்போது பன்னீர் செல்வத்திடமா அல்லது பழனிசாமியிடமா அல்லது மோடியிடமா என, தெரியவில்லை.-
நடிகர் செந்தில் # போன தேர்தல்ல வடிவேலுக்கு மார்க்கெட் போன மாதிரி இந்தத்தேர்தல்ல செந்திலுக்கா?
=============
19 மற்ற கட்சிகளின் கூட்டங்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டன. 'ஆனால், மக்கள் நீதி மையத்திற்கென யாரையும் அழைக்காமல் தொண்டர்கள் தானாக வருகின்றனர்.-கமல் # நேரில் பேசறதைப்பார்த்தாலாவது உங்க பேச்சு புரியுமா?னு பார்க்கவா இருக்குமோ?
=================
20 பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய பின், அதில் இருந்த கறுப்பு நிற பெட்டி, இன்னோவா கார் ஒன்றில் ஏற்றப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த வேண்டு-காங்., செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, # கறுப்புப்பெட்டி என்பதால் கறுப்புப்பணம் இருக்கும்னு நினைக்கறாரோ?
=================
0 comments:
Post a Comment