ஹீரோ குப்பத்துல தண்டமா இருக்காரு . அவர் வீட்டுக்கு எதிர்ல ரசகுல்லா மாதிரி ஒரு குஜிலி குடி இருக்கு. குப்பத்துல எப்படி ரோஸ் கலர் குஜிலினு லாஜிக் மிஸ்டேக் எல்லாம் ஒரு பய கேட்கலை, ரசிக்கறாங்க, இது போக இன்னொரு ஃபிகரை ஹீரோ ஓட்றாரு. அனேகமா ஹீரோ திராவிடனா இருக்கனும், ஏன்னா 1 பத்தலை. 2 வேணும்கறார்.
திரைக்கதை எழுத டைம் இல்லாததால ஹீரோ வுக்கும் சேட்டு ஃபிகருக்கும் ஒரு சீன் , காதலியோட ஒரு சீன்னு மாத்தி மாத்தி படம் காண்பிக்கறாங்க
சேட்டு லட்டு வேலை செய்யற சாக்லெட் கம்பெனில ஒரு பொறம்போக்கு லட்டு மேல கை வைக்கப்பார்க்கறான்
இந்தப்பொடி வில்லன் இல்லாம இன்னொரு பெரிய வில்லன் ஹீரோவுக்கு இருக்காப்டி
ஹீரோவுக்கு ஹீரோயினும் 2 வில்லனும் 2
ஹீரோவோட அப்பா மர்மமான முறைல கொலை செய்யப்படறார் , இடைவேளை
இதுக்கு மேல என்னத்த பெரிய மேஜிக் நடந்துடப்போகுதுனு தூங்கிட்டேன்
ஹீரோவா தரலோக்கல் பாஷை பேசுகிற ,ஜிவிபி .நம்மாளுக்கு ஏ செண்ட்டர் ஃபிலிம்ல நடிக்கற ஐடியாவெ இல்ல போல ( விதி விலக்கு டார்லிங் )
ஓப்பனிங் சாங் ல் நல்ல டேன்ஸ். ஹீரோயினோட லிப் கிஸ் , இன்னொரு லட்டு கூட அப்பப்ப இடை தடவல் . இது போதாதா ஒரு ஹீரோவுக்குனு நினச்ட்டார்
போல
ஹீரோயினா பாலக் லால் வாநீ வராத நீனு ஒரு புது ஃபிகரு. சுமாரான ஃபிகரு, சுமாருக்கும் கீழான முக வசீகரம், பல இடங்களில் ஓவர் ஆக்டிங்
இன்னொரு அஜால் குஜால் ஹீரோயினா பிங்க் கலர் பஞ்சு மிட்டாய் பூனம் பாஜ்வா. பேக் ஓப்பன் ஜாக்கெட் போட்டு வருவது பெரிய அதிர்ச்சி அதாவது இன்ப அதிர்ச்சி. 6 ஜான் முதுகுல ஒரு ஜான் கூட ஜாக்கெட் துணி இல்லை.மிக்க மகிழ்ச்சி
ரா பார்த்திபன் படத்துல எதுக்கு வர்றார்னே தெரில . அனேகமா அவர் ஒரு கவுண்ட்டர் கூட தராம ஒரு ஜோக் கூட சொல்லாம வந்த ஒரே படம் இதுவாத்தான் இருக்கும்
யோகி பாபு படம் பூரா ஹீரோ கூட வர்றாரு தண்டமா , கவுண்டமணி மாதிரி எல்லாரையும் அடா புடானு கலாய்க்கறாரு , ஆனா ஜோக் தான் 1 கூட வர மாட்டேங்குது
பாடல்கள் இசை பரவால்ல , இசையும் நம்ம ஆளுதான். பேசாம இவரு இசையை மட்டும் கவனிக்கலாம்
நச் டயலாக்ஸ்
1 யார் வேணா படம் போடட்டும் ,ஆனா சீன் நம்முதா இருக்கனும் (யாருக்காவது பஞ்ச் அர்த்தம் தெரிஞ்சா சொல்லவும் ) #KuppathuRaja
2 லவ்ங்கறது ஏடிஎம் கார்டு மாதிரி,காசு இருந்தாத்தான் மதிப்பு,பிரண்ட்ஷிப்்ங்கறது ஆதார் கார்டு மாதிரி
எப்பவும் ,எல்லா இடத்துலயும் யூஸ் ஆகும் #KuppathuRaja
3 நாம நல்லது பண்றதுக்காகவாவது 4 பேரு நமக்கு வேணும், அல்லது நமக்கு நல்லது பண்றதுக்காகவாவது 4 பேரு நமக்கு வேணும், #குப்பத்துராஜா
4 தெரிஞ்சவங்க கிட்டே தெரியாத மாதிரி நடந்துக்கிட்டா தெரியாத விஷயங்களை யார் சொல்லித்தருவாங்க? #குப்பத்துராஜா
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 வருங்கால இளைய தளபதி, நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் ,சி சென்ட்டர் ஸ்பெஷல் ஹீரோ ஜிவி பி யின் குப்பத்து ராஜா @ கேரளா கோட்டயம் ரம்யா, எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு கூட்டம்
8 ஆடியன்ஸ் / 456 சீட்ஸ் #KuppathuRaja
2 ஹீரோ ஓப்பனிங்க ஷாங்க் கதம்பம்.அதாவது மச்சான் பேரு மதுர ஸ்டெப் + சிலம்பாட்டம் சிம்பு ஸ்டெப்.+ ஏழையின் சிரிப்பில் பிரபு தேவா ஸ்டெப் #kuppathuraja
3 சேட்டு வீட்டு லட்டு மாதிரி இருக்கற் ரோஸ்மில்க் பூனம்பாஜ்வா குப்பத்துல இருக்கு,அய்யோ பாவம் #kuppathuraja
4 போஸ்டர்ல ரா பார்த்திபன் ,யோகிபாபு படத்தைப்பாத்து வந்தவங்க படம் போட்டு 1 மணி நேரம் ஆகியும் 2 பேரும் இதுவரை ஒரு ஜோக் கூட சொல்லலை னு புலம்பறாங்க #KuppathuRaja
5
a
சபாஷ் டைரக்டர்
1 பூனம் பாஜ்வா வை புக் பண்ணதுதான் இவர் பண்ணுன ஒரே நல்ல காரியம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)
1 ஹீரோவோட அப்பாவை கொலை பண்ணிட்டாங்க , அதை யார் பண்ணினாங்கனு கண்டு பிடிக்கறதுதான் கதைனு முடிவான பின்னாடி சம்பந்தம் இல்லாம காட்சிகள் பிட்டு பிட்டா வருவது ஏன்? ( பிட்டு ஏதும் இல்லை அது வேற விஷயம் )
2 பூனம் பாஜ்வா ஒரு சீன்ல வீட்டு பூஜை ரூம்ல ஹீரோவோட அப்பா படத்துக்கு மாலை போடறாப்டி. க்ளோஷப் ஷாட்.
லாங் ஷாட்ல வீட்டுக்கு வெளீல வாசலுக்கு 6 அடி தள்ளி நிக்கற ஹீரோயின் அதை கரெக்டா கண்டுக்கறது எப்படி? சவுண்ட் வேற ஓவரா விடுது பாப்பா
3 ஒரு சீன்ல ஹீரோ ஹீரொயினை ஓடி வந்து இடுப்புலயே எட்டி உதைக்கறாரு. அந்த அளவு அது என்ன தப்பு பண்ணுச்சு? கேட்டா குப்பத்துல பசங்க அப்டித்தான்னு சப்பைக்கட்டு கட்டுவாங்க,
4 ரொம்பப்பேசுனே தொண்டைலயே இறக்கிடுவேன் கற கேவலமான வசனம் படத்தில் பல இடங்கள் ல வருது, கேட்டா குபத்து ஜனங்க அப்டித்தான் பேசுவாங்கனு சொல்வாங்கஅப்டியே பேசுனாலும் அதை அப்டியே காட்டி அவங்க இமேஜெ டேமேஜ் பண்ணனுமா?
சி.பி கமெண்ட் -குப்பத்து ராஜா - டைட்டில்லயே குறியீடு இருக்கு , கவனிக்காம வந்துட்டன் போல , குப்பைப்படம், சி செண்ட்டர் ரசிகர்களுக்கு ஏதோ கொஞ்சம் பிடிக்கலாம், ஆர் பார்த்திபன் , யோகிபாபு இருந்தும் ஒரு ஜோக் கூட இல்ல , விகடன் மார்க் 35 ரேட்டிங் 2 / 5 #KuppathuRajaFromToday
0 comments:
Post a Comment