1 சமீபகாலமாக, மோடி தன்னை, காவலாளி என, அழைத்துக் கொள்கிறார். அவர் சொல்வது, உண்மை தான்... மோடி, அம்பானியின் காவலாளி; அதானியின் காவலாளி; வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, திருப்பி கட்டாமல் இருக்கும், பண முதலைகளின் காவலாளி. அவர், சாதாரண மக்களின் காவலாளி கிடையாது-ஜவாஹிருல்லா #
எதுக்கு சுத்தி வளைச்சிக்குட்டு?முதலாளிகளின் காவலாளி, அதானே?
=================
2 கமல் கட்சிக்கு, மக்களிடம் ஈர்ப்பு தென்படவில்லை. நல்ல நடிகர்; வெளிநாட்டு தொண்டு நிறுவனம் மூலம் அவர் இயக்கப்படுகிறார். புதிய வாக்காளர்கள், தி.மு.க.வுக்கு செல்லக்கூடும் என்ற நிலையில், அதைத் தடுக்க, உள் நோக்கத்தோடு, கமல் கட்சி தேர்தலில் நிற்கிறது. ஆனால், மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.-அர்ஜுன் சம்பத் #
கமல்-னாலும் கமலம்னாலும் தாமரைனு தான் அர்த்தம்னு சொல்ல வர்றாரு
================
3 எந்த கட்சியில் தான் வாரிசு அரசியல் இல்லை! 'போட்டு தாக்குகிறார் லாலுவின் மகன் # வாரிசு அரசியல் . சி[பாரிசு அரசியல் இரண்டும் அரசியலின் இரு கண்கள்ங்கறாரா?
=============
4 ''காங்., பொதுச் செயலர் பிரியங்கா, அழகானவர் தான்; ஆனால், தேர்தல் ஒன்றும் அழகி போட்டியில்லை,'' - கேரள மாநில, பா.ஜ., முன்னாள் தலைவர், பத்மநாபன் #அழகு ஆபத்துனு பிரச்சாரம் பண்ணுவாரோ?
================
5 கன்னியாகுமரி தொகுதியில், பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து, இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற கருத்து, பொதுவாகஉள்ளது. அதை மாற்றும் வகையில் சரித்திரம் படைக்க வேண்டும்,'' -, பொன்.ராதா # தவளை தவளை , கப்பல் கவுந்திடும்னு கப்பல் கேப்டனே பயப்படற மாதிரி இருக்கு
================
6 ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களில், 'விசில்' அடிப்பதை தவிர்க்கும்படி, கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு, தி.மு.க., மாவட்ட செயலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் # குக்கர் விசில்னு பயந்திருப்பாரோ?
குக்க்ரால டெபாசிட்டே போனதுல இருந்து தலைவருக்கு விசில்னாலே பயம்
=================
7
ஓபிஎஸ் போன்று தியானம் செய்து காட்டிய ஸ்டாலின்: பிரச்சாரக் கூட்டத்தில் சிரிப்பலை # அதிமுக வை எதிர்த்து ஜெயிக்கத்தான் முடியலை, இமிடேட் பண்ணீயாவது இரிடேட் பண்ணலாம்னு நினைக்கறாரு ;போல
==================
8
துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து $ ஆட்சி கவிழப்போகுதுஞு குறியீடா? சகுனமே சரி இல்லையே?
=============
9
தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்; முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் # வாண்ட்டடா வடிவேலு மாதிரி ஜீப்ல ஏற வேண்டியது ,அப்றம் கைது பண்ணிட்டா ஆளுங்கட்சி அராஜகம் ஒழிகனு கோஷம் போட வேண்டியது
===================
10
தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்படும்: திருப்பூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி # இருக்கற குடிசைகளை எரிச்சிடுப்வாங்களோ?
====================
11
பாஜகவினர் தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது: ஸ்டாலின் விமர்சனம் # என்னமோ உதய சூரியன் 40/40 ஜெயிக்கற மாதிரியே பில்டப் தர்றாரே?
சூரியன் உதிச்சாத்தானே தாமரை மலரும், இரண்டுக்கும் வாய்ப்பில்லை
=================
12 திமுக – அதிமுக கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது- கமல்ஹாசன் # இதையே தான் அந்த டெய்லரும் ( டாக்டர் அய்யா) சொன்னாரு, இப்போ அதிமுக கூட கூட்டணீ வைக்கலையா?
=================
13 திமுக வெற்றி பெற பண பலத்தை நம்பி தான் உள்ளது. -தினகரன். # டோக்கன் இருக்க நமக்கு கவலை எதுக்கு?
===============
14 சசிகலாவின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.# டைட்டில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்னு வைங்க , எல்லா கம்ப்ளெக்சிலும் நல்லா ஓடும்
================
15 விவசாயி முதல்வராவது இதுவே முதல்முறை - எடப்பாடி பழனிச்சாமி # முதல் முதலா ஒரு விவசாயி முதல்வர் ஆகறப்ப தேர்தலை சந்திச்சு முறைப்படி முதல்வர் ஆகி இருக்கலாம், கொல்லைப்புறம் வழியா வந்தது விவசாயிக்குதான் அவமானம்
==================
16 மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரிகளை குறைப்போம்' - அருண் ஜெட்லி # அப்ப ஏற்கனவே நடந்த ஆட்சில அநியாய வரி விதிச்ட்டோம்னு ஓப்புதல் வாக்குமூலம் தர்றாரோ?
இதுக்கு ஏன் சேர் டேபிளை எல்லாம் உடைச்சுக்கிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வராம இருந்தாலே ஆட்டோ மேடிக்கா வரி குறைஞ்சுடாதா?
==========\\\
17 அதிமுகவை விட எங்களை பற்றிதான் அதிகம் பேசுகிறார் ஸ்டாலின் - அன்புமணி # கூட்டணியை திமுக கூட வெச்சிருந்தா அதிமுக வைப்பற்றிப்பேசி இருப்பாரோ?
===========
18 எங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளது ,பணம் இல்லை - - அன்புமணி # அரசியல்வாதிகளோட திட்டமே பணம் சம்பாதிப்பதுதானே? அது எப்படி நல்ல திட்டம் ஆகும்?
===========
19 பஞ்ச் டயலாக் எனக்கு வராது - எடப்பாடி # ஆனா உங்க அறிக்கைகள்., பிரச்சாரத்தை வெச்சு தினமும் மீம்ஸ், பஞ்ச் கள் பறக்குதே?
==============
20 ஓபிஎஸ் போன்று தியானம் செய்து காட்டிய ஸ்டாலின்: பிரச்சாரக் கூட்டத்தில் சிரிப்பலை # அவரும் பதிலுக்கு துண்டு சீட்டைப்பார்த்து தப்பு தப்பா பழமொழி சொல்லப்போறாரு
0 comments:
Post a Comment