Wednesday, April 10, 2019

குஜராத்திலோ , மத்தியப்பிரதேசத்திலோ போட்டி இட ராகுலுக்கு தைரியம் உள்ளதா?

1   'ஜெ., ஒரு குற்றவாளி, அவர் உயிருடன் இருந்தால், சிறையில் இருந்திருப்பார்' எனக் கூறிய, பா.ம.க.,வுடனும், 'ஜெ., படத்தை, சட்டசபையில் திறக்கக் கூடாது' என்ற, தே.மு.தி.க.,வுடனும், அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது  - தினகரன்


2 பேரும் உண்மையைத்தானே சொன்னாங்க, ? அதுவுமில்லாம ஜெ வைப்பற்றிப்பேசுனதால அவங்களுக்கு என்ன ஆகப்போகுது?கட்சியோட எதிர்காலம்தானே முக்கியம்/?


================


2   முதல்வர், துணை முதல்வரை பதவியில் அமர வைத்த நமக்கும், உண்மை தொண்டர்களுக்கும், ஜெ.,க்கும் துரோகம் செய்து விட்டனர் -தினகரன் # காலை வாரி விடுபவனை நம்பு , ஆனால் காலில் விழுபவரை நம்பாதே அப்டினு உலகத்துக்கு உணர்த்தி இருக்காங்க


===============


3     லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 24 கட்சிகள், 450 சமுதாய அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன-ராமதாஸ்  #  இத்தனை உதிரிக்கட்சிகள் , இத்தனை தண்ட அமைப்புகள் இருக்குங்கறதே இன்னைக்குதாங்க தெரியும்



==================


4   மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு என, பலருக்கும் பிரதமராகும் ஆசை உள்ளது.-ராமதாஸ்  #  மாற்றம் , முன்னேற்றம்னு எல்லாரும்தான் ஆசைப்படறாங்க , ஆனா நினைக்கறது ந்டக்குதா?



================


5     ராகுலை, யாரும் பிரதமராக ஏற்கவில்லை.  -ராமதாஸ்  # இல்லையே, தளபதி ஸ்டாலின் ஏத்துக்கிட்டாரே? ஆனா என்ன ஒண்ணு ஜனங்க ஏத்துக்கிட்டு வாக்களிக்கனும்


=====================


 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் கொடுக்க சாத்தியம் உண்டு. சாத்தியமில்லாதவற்றை தேர்தல் அறிக்கையில் நாங்கள் குறிப்பிடவில்லை -சிதம்பரம்:  # ஏழைகளை ஒழிப்போம்னு 60 வருசமா சொல்லிட்டு இருக்கீங்க, செஞ்சீங்களா?


===================


: காங்., கட்சி இருக்கும் வரை, நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்க முடியாது. காங்.,கை ஒழித்தால் மட்டுமே வறுமை ஒழியும். -மோடி  # 5 வருஷமா காங் இல்லை, நீங்கதான், எத்தனை ஏழைகளை ஒழிச்சிருக்கீங்க?


=================


8  : மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு வினாடியில், தமிழகத்தில் உள்ள ஆட்சி அகற்றப்படும்-ஸ்டாலின்  # அவ்ளோ  வேகமா காத்திருக்காரு போல 



--------------------

9  உலகிலேயே, ஹிந்து மதத்தில் தான் அதிக வன்முறை நடப்பதாக, மும்பையில் நடந்த பிரசாரத்தின் போது, ஊர்மிளா பேசியுள்ளார். மேலும், ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையிலும், சில கருத்துகளை தெரிவித்துள்ளார்  #  இந்துக்கள்தான் அதிகம் அப்டினு கூட அர்த்தம் வருது


===================


10    

ஹிந்து மதத்தை அவமதித்த ஊர்மிளா மீது போலீசில் புகார்  # திமுக  வுக்கு ஒரு போட்டி உருவாகிடுச்சு



==============

11  பிரசாரத்தில் கூடும் கூட்டத்தை பார்த்து ஏமாந்து விடாமல், வெற்றிக்கு தேவையான யுக்திகளை வகுக்க வேண்டும்- ஸ்டாலின்  #  குவாட்டரும், கோழி பிரியாணியும் குடுத்தா எந்தக்கூட்டத்துக்கும் வந்து போக ஒரு கூட்டமே இருக்கே?


===============
12  'தெர்மொகோல் விஷயத்தில், பொறியாளர் செய்த தவறால், ராஜுவான என்னை, 'தெர்மொகோல் ராஜு' என்று சமூக வலைதளங்கள் பரவ செய்தன,'' - கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு  # இப்போ  ஜெ செய்த தவறால உங்களை எல்லாம் நாங்க சகிச்சுக்கிட்டு இருக்கலையா? அதுமாதிரி தான்


===================


13  

பிரேமலதாவுடன் இணைந்து பிரசாரம்: தீபா ஆசைக்கு தே.மு.தி.க., வெடி  #  ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும், இப்போ அடுத்தவங்க செலவுல மக்களை பரிச்சியப்படுத்திக்கிட்டே அடுத்த தேர்தல்ல தனியா நிக்கலாமில்ல?


==============

14    'ஓட்டுச்சாவடியில், நாம் தானே இருப்போம்' என்று மிரட்டும் விதமாக, அன்புமணி பேசியது கண்டிக்கத்தக்கது-, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்   #  அன்புமணி அதட்டல் மணீ ஆகிட்டாரே?


====================


15  

தங்கள் கட்சி வேட்பாளர்களின் பெயர் கொண்ட சுயேச்சைகளுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடால் அமமுகவுக்கு நெருக்கடி  # ஜனங்க கிட்டே இந்த போலி குக்கர் ஐடியா  ப்ருப்பு வேகாது



==================
16  

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர், உதவியாளர் வீடுகள் உட்பட 60 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.9 கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்  # எலக்சன் ஸ்பெஷல் ரெய்டு விட்டா பல பெரிய தலைகள் மாட்டும் போலயே



================


17  

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: பேஸ்புக் விளம்பரத்தில் பாஜக முதலிடம்  # ஃபேஸ்புக்ல பொண்ணுங்கதான் அதிக்ம் இருக்காங்கனு தெரிஞ்சுக்கிட்டு பெண் வாக்காளர்களைக்குறி வைத்திருக்காங்க ;போல



================


18   

ஊழல் குறித்து விவாதிக்க தயாரா?- மோடிக்கு ராகுல் மீண்டும் சவால்  #   சர்காரியா கமிஷன் ஊழல்

 2 ஜி ஊழல் 

 போபர்ஸ்  ஊழல்’
ஹெலிகாப்டர்  ஊழல்  எதைப்பத்தி சொல்றாரு?


================


19   

தமிழகம், கேரளாவில் இருந்து போட்டியிடும் தைரியம் உள்ளதா? - பிரதமர் மோடிக்கு சசி தரூர் கேள்வி  # குஜராத்திலோ , மத்தியப்பிரதேசத்திலோ போட்டி இட ராகுலுக்கு தைரியம் உள்ளதா?



=============

20    

குடிமக்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு  # அடடா வடை போச்சே



=====================

==================

0 comments: