Monday, April 01, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

 பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., நடவடிக்கைகள் மூலம், ஏழை எளிய மக்களிடம் இருந்த பணம், பறிக்கப்பட்டது. இதை மீட்டு, மக்களிடமே மீண்டும் ஒப்படைக்கும் பணியை, காங்., அரசு செய்யும்.- ராகுல்: #இலவசமா மாசம் 6000 ரூபா தர்றதா சொன்னதையே ஜனங்களால நம்ப முடியல, இதுல கட்டுன ஜிஎஸ்டியை ரிட்டர்ன் தர்றீங்களா? சும்மா அடிச்சு விடுங்க, காசா? பணமா?


==================


 காங்கிரஸ் தலைவர் ராகுல், குழந்தையை போன்றவர். அவர் கூறும் விமர்சனங்களை பெரிதுபடுத்த விரும்பவில்லை-மம்தா பானர்ஜி: # பப்புங்கறாரா? பாப்பாங்கறாரா?


================


3   ஏழைகளுக்கு வங்கியில் கணக்கு திறக்க கூட வழி செய்து தராதவர்கள் தான், இன்று, மக்கள் வங்கி கணக்கில், மாதந்தோறும், 6,000 ரூபாய் போடுவேன் என்கின்றனர் -மோடி:  # கறுப்புப்பணத்தை  மீட்டு ஆளுக்கு  ஒன்றரை லட்சம் தர்றதா யாரோ சொன்னாங்களே? அதே மாதிரி இதுவும் சும்மானாச்சுக்கும்

================ 

4  மே, 23க்குப் பின், முதல்வர், இ.பி.எஸ்., புழல் சிறைக்கு செல்ல வேண்டுமா அல்லது சேலம், மத்திய சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் முடிவு செய்வார். -செந்தில் பாலாஜி # அதுக்குள்ளே  அவர் ( ஸ்டாலின் ) பிரதமர் ஆனா வேணா வாய்ப்பு உண்டு


=============


எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையில் இருக்கும் உறுப்பினர்களை, அக்கட்சியில் கொண்டு போய் சேர்க்கணும்; அவ்வளவு தான் என்னோட வேலை. தீபா # ஒரு 10 பேர் இருப்பாங்களா? ஒரு ஷேர் ஆட்டோ பிடிச்சா போதுமே? கொண்டு போய் சேர்த்துடலாமே?


==========


6  - தி.மு.க.,வின் வெற்று தேர்தல் அறிக்கை திண்டிவனத்தில் முதல்வர் பேச்சு  # அவங்க அதை வெற்றி தேர்தல் அறிக்கைஞு நினைக்கறாங்க போல


===============


7  

ஜாதி மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்காது- திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி # அப்புறம் ஏன் கட்சிங்க எல்லாமே அந்தந்த தொகுதில எந்த ஜாதி ஓட்டு அதிகம் இருக்குனு பார்த்து அந்த ஜாதி வேட்பாளரை களம் இறக்குது?



==================

8  

மோடிக்கு எதிராக யார்? என்ற கேள்வி 2024-ல் வரலாம்; 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி #  யோகி தான்  அடுத்த பிரதமர் வேட்பாளர்னு பேச்சு இருக்குதே?



 மோடிதான் மோடிக்கு எதிரிங்கறாங்களே?


===========


மோடியை எதிர்த்து போட்டியிடட்டுமா?- தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிரியங்கா # இதைக்கூட சுயமா சிந்திக்க முடியலை, மற்றவர்களிடம் கருத்துக்கேட்க்றார்



==============

10   

‘நானும் காவலாளி’ விளம்பரத்தை வாபஸ் பெற்றது ரயில்வே  #  எல்லா ரயில்கள்லயும் எம் ஜி ஆர் நடிச்ச காவல்காரன், ராமராஜன் நடிச்ச எங்க ஊரு காவக்காரன் பட போஸ்டரை ஒட்டிடுங்க, யாரும் ஆட்சேபிக்க முடியாது



===================

11    பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டையே மாற்றிவிடுவார்கள்= கே.எஸ்.அழகிரி # அரசியல்வாதிகளின் பண்பாடு என்ன? வேற்றுமை கொள்கைகள் வேறு பட்ட கொள்கைகள் உள்ள கட்சியாக இருந்தாலும் தேர்தல் ச்மயத்துல மட்டும் ஒற்றுமையா கூட்டணீ வைப்பதுதானே?

============

12    

தமாகா கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம் # அண்ணாமலை சைக்கிள் இல்லாட்டி என்ன? பாட்ஷா ஆட்டோ  கிடைச்சிருக்கே?



==============


13 

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: ஆ.ராசா எச்சரிக்கை   #  ஏன்? தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களை எல்லாம் ஒளிச்சு வெச்சுடுவாரா?



==============


14 

பாஜக, அதிமுகவுக்கு வாக்களித்தால் நாடே சுடுகாடாகி விடும்: கனிமொழி எச்சரிக்கை  # கொளுத்தற வெய்யில்ல இப்பவே சுடு(கிற) காடாத்தாங்க நாடே இருக்குது



=================


15   

அமமுக வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெறாமல் இருந்தால் சரிதான்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்  # நோட்டா வுக்குப்போட்டியா இப்போ ஏகப்பட்ட கட்சிகள் இருக்கு போலயே?



==================


16  

வன்முறையே திமுகவின் கலாச்சாரம்; பிரியாணி சாப்பிட்டு பணம் கொடுக்காதவர்கள் திமுகவினர்: ஓபிஎஸ் விமர்சனம்  #  பிரியாணி சாப்பிட்ட பணம் ஆட்சிக்கு வந்த பின் தர்றதா சொல்லி இருப்பாங்களோ?



==============


17 

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் # மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு, மாட்டினால் ஜெயில் உண்டு



================

18 

ஸ்டாலின் தேர்தல் ஜுரத்தில் இருக்கிறார்; தோல்வி பயத்தில் என்னென்னவோ பேசுகிறார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்  # எது பேசுவதாக இருந்தாலும் துண்டுச்சீட்டு பார்த்துத்தானே பேசுவார்?



====================


19 

மோடி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் இந்தியா பின்தங்கிவிட்டது: மதுரை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு  # வரி வசூல்ல ஜி எஸ் டி வசூல்ல முன்னணி ல இருக்கே?



=============


20   வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலனை என ஆரம்பக் கட்டத்திலேயே 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  # நாளைக்கு  ட்தேர்தலில் தோற்றாக்கூட இந்த 4 க்கும் விளக்கம் தரத்தேவை இல்லை


==================
 

0 comments: