Monday, April 15, 2019

90 பாடல்கள் 90 நாட்களில் எழுதி 90 லட்சம் சம்பாதிச்ச தமிழ் சினிமாப்பாடல் ஆசிரியர் யார்?

1  மோடி ஒன்றும் வீழ்த்தப்பட முடியாத நபர் அல்ல; பா.ஜ., வினர், 2004 தேர்தல் முடிவை மறக்க வேண்டாம்,'' -சோனியா  # அப்போ அந்தக்காலகட்டத்துல மோடி அலை இல்லையே?


==============

2   லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றதும், மாயாவதி தான் பிரதமராவார்'- பகுஜன் சமாஜ் # இந்த விஷயம்  மாயாவதிக்கே அதிர்ச்சியா இருக்குமே?


============


3   



அதிக ஓட்டுப்பதிவு பா.ஜ.,வுக்கு சாதகம்  -செய்தி  # பொதுவா ஓட்டுப்பதிவு அதிகமா இருந்தா அது ஆளுங்கட்சிக்கு எதிரான அலைனு தான் சொல்லுவாங்க 



==============

4  

தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி திடீர் அழுகை:  $ அழுத பிள்ளைக்குத்தான் பால்-னு கண்டுபிடிச்ட்டாரா?



===============

5  எல்லா இடத்திலும் மோடி அலை வீசுகிறது என்கிறார்களே, நான் சவால் விடுக்கிறேன், மோடிக்கு தமிழகத்தில் போட்டியிட தைரியம் உள்ளதா?

குஷ்பு  $  தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைதானே இருக்கு? ராகுல் குஜராத்லயோ ம த்திய பிரதேசத்திலோ போட்டி இடுவாரா?


==============

6  உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?- மோடி குறித்து குஷ்பு கிண்டல் # வடிவேல் காமெடி க்ளிப்புகள் நிறைய பார்ப்பார் போல , பிரச்சாரம் பூரா வடிவேல் ப ஞ்ச்சாவே இருக்கு


============


முதல்வராக வேண்டும் என்பது என் கனவு: பவர் ஸ்டார் சீனிவாசன்  # இன்னும் எத்தனை பேரு தான் முதல்வர் கனவில் இருக்காங்களோ? பவர் ஸ்டார்  இனி ட்ரீம் ஸ்டார்


=============
8   கலைஞன் என்பதால் என்னால் பேசாமலேயே வாக்கு கேட்க முடியும்'' =கமல்ஹாசன்  # இவரு பேசுனாலே அது ஜனங்களுக்குப்புரிய 2 வருஷம் ஆகும், சைகை பண்ணீட்டாலும்


==============


ரஃபேல் விவகாரம் மோடி அரசுக்கு சரியான பின்னடைவு- கி.வீரமணி   #  ரபேல் விவகாரத்தால் மோடி அம்பேல் அப்டிங்கறாரா?


==============


10 

ஸ்டாலினைப் போல மிமிக்ரி செய்த டிடிவி தினகரன்; தொண்டர்கள் ஆரவாரம் # அரசியல் தலைவரா ஜெயிக்கறாரோ இல்லையோ மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டா ஆகிடுவாரு போல



==================

1  அரசியல் காரணங்களுக்காக, பழிவாங்கும் நோக்கத்துடன், எதிர்க்கட்சியினரை குறிவைத்து, வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக கூறுகின்றனர்; இது, தவறு. தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான், சோதனை நடத்தப்படுகிறது- அருண் ஜெட்லி:  # அப்போ ஆளுங்கட்சி ஆளுங்க வீட்டில் ஏன் ரெய்டே நடக்கலை?


===============


2    : பா.ஜ.,வின், 2014 தேர்தல் அறிக்கை, மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. அப்படியானால், 2014ல், பா.ஜ., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது  - இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்  # எந்தக்கட்சி தன் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்கு?

================


3     அ.தி.மு.க.,வில், தினகரன் இருந்தால், கட்சி மேலும் வலுப்பெறும். தேர்தலுக்கு பின் இணைந்தால், ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் இருக்கலாம்; இது, என் கருத்து  - மத்திய அமைச்சர், ராமதாஸ் அத்வாலே:   #  யாரு முதல்வர்? யார் யார் துணை முதல்வர்னு அதுக்கு ஒரு தர்மயுத்தம் நடக்குமே?


=================


4      துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் வீட்டில், வருமான வரி சோதனை நடந்தது, எதிர்க்கட்சிகளை பழி வாங்கும் போக்கை காட்டுவதாக, பலர் கூப்பாடு போடுகின்றனர். பறக்கும் படையினருக்கு வந்த தகவலின்படி, சோதனை நடத்தப்பட்டது. இதில், அரசியல் சூழ்ச்சி இல்லை.  - பிரேமலதா # தேமுதி க வை நக்கல் அடித்தால் என்ன நிகழும் என நீங்கதானே எச்சரிச்சீங்க?உங்க வேண்டுகோளின்படிதான் ரெய்டோ என்னவோ?

================== 

5   காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கே, பல்வேறு தடைகள், அரசியல் குறுக்கீடுகள் இருக்கும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் ஓடும் நதிகளை ஒன்றாக இணைப்பது, சாத்தியம் இல்லாதது. இதெல்லாம் நடிகர் ரஜினிக்கு, மிகவும் தெளிவாகத் தெரியும். ஆனாலும், நதிநீர் இணைப்புகளை அவர், தீவிரமாக ஆதரிப்பதை பார்க்கும்போது, தெரிந்து செய்கிறாரா, வார்த்தை ஜாலமாக பேசுகிறாரா என்பது புரியவில்லை -தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி # நதிநீர் இணைப்பால் வறுமை ஒழியும்கறார், இது அரசியல்வாதிகளுக்குப்பிடிக்கலையோ என்னவோ?


================

6   எம்.ஜி.ஆர்., - ஜெ., போன்ற தலைவர்களைப் போல் தன்னை, முதல்வர், இ.பி.எஸ்., நினைக்கிறார். எல்லா இடத்திற்கும், ஹெலிகாப்டரில் செல்வதும், மைக்கை கூட கையில் பிடித்து பேச நேரம் இல்லாமல், வாயில் கட்டி பேசுவதும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பில் இருப்பதும் என, தடபுடலாக இருப்பவரை, எளிமையாக மக்களை சந்திக்கிறார் என, எப்படிச் சொல்கின்றனர்? ஜெ.,வை விட கூடுதல் ஆடம்பரத்தோடு, இ.பி.எஸ்., வாழ்ந்து வருகிறார்=சென்னை முன்னாள் மேயர், மா.சுப்பிரமணியன் # கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா , பல்லு இருக்கறவங்க பக்கோடா சாப்பிடறாங்க, நமக்கு என்ன? 


==================
7   தமிழகத்தில், எவ்வளவு பெரிய அநியாயம் நடந்து வருகிறது... சாதாரண சிறு வியாபாரி நடத்தும் சாராய வியாபாரத்தை, அரசு எடுத்து நடத்தி, ஜாக்கிரதையாக பாதுகாக்கிறது-கமல்# கள்ளச்சாராயம் குடிச்சு குடிமகன்கள் கெட்டுடக்கூடாது னு நல்ல எண்ணம் தான்


=============


8  20 சதவீத கமிஷன் வாங்கும் கூட்டணி அரசு; காங்.,--ம.ஜ.த., அரசை சாடிய மோடி  $  எங்களைக்குறைச்சு மதிப்பிட்டுட்டீங்கனு அவங்க கோபப்படப்போறாங்க


==============


9  'எங்களுக்கு என்ன தலையெழுத்தா... சினிமாவில் ஒரு பாட்டு எழுதினா ஒரு லட்சம். ஒரு மாதத்திற்கு, 10 பாட்டு எழுதினா, 10 லட்சம் ரூபாய். 'ஏசி'யிலேயே உட்கார்ந்து ஜாலியாக இருக்கலாம் -சிநேகன்   # பிக்பாஸ் நிகழ்ச்சில 90 நாட்கள் பங்கேற்றதுக்கு 90 பாடல்கள் 90 நாட்களீல் எழுதி 90 லட்சம் சம்பாதிச்சு இருக்கலாமே?



================


10-சிவகங்கைக்கு வரும் போது, 'ஆப்பிள்' பழமாக வந்தேன். இப்போ, 'நாவல்' பழமா இருக்கேன்--சிநேகன்  #  அதாவது முதல்ல சிவப்பு, இப்ப கறுப்பு, ஆனா சிவப்பு கறுப்பு ( திமுக )க்கு நாம எதிர்ப்பு அதானே?


===================

0 comments: