Wednesday, April 17, 2019

திருவள்ளுவர் கூட 133 அதிகாரமாத்தானே டீல் ;பண்ணாரு?

1  அழகிரியை பின்னுக்குத் தள்ளி, குறுக்கு வழியில் தலைவரானவர் ஸ்டாலின்.-வனத்துறை அமைச்சர் சீனிவாசன்: # நம்ம ஓபிஎஸ்   ஈபிஎஸ் எல்லாம் நேர் வழியில் முதல்வர் ஆனாங்களா:?


===============


ஜெயலலிதாவிற்கு, மோடியை பிடிக்காது. மோடியா, லேடியா பார்ப்போம் என்றார்.விஜயகாந்த்தை கூட பிடிக்காது. வன்முறையின் மறுபெயர், பா.ம.க., என, ஜெயலலிதா கூறினார்.- ஸ்டாலின்:   # ஜெயலலிதாவுக்குப்பிடித்த கட்சி திமுக தான் பிடித்த தலைவர் ஸ்டாலின் தான் அப்டினு பிரச்சாரம் பண்ணிடுவாரோ?


================


3 ஸ்டாலினுக்கு, தமிழக முதல்வரை திட்டவில்லை என்றால் தூக்கம் வராது.-   ராமதாஸ்:  # அடப்பாவமே, அப்படி ஒரு வியாதி இருக்கா? சரி திட்டிட்டுப்போகட்டும், அதிமுக வைத்திட்டுனவங்க எல்லாம் அதிமுக கூட கூட்டணீல இருக்காங்க இப்ப 


=================


4  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அது, மக்கள் கையில் தான் உள்ளது.-சிதம்பரம்  # அப்போ இவங்களை எம் பி ஆக்குனா இன்னொரு தேர்தல் வர வைக்க ஆவண செய்வாங்க, தண்டச்செலவு


===============

5  தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும். எனவே, நாம் தான் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுவோம்.-தினகரன்  # அது கிடக்குது க்ழுத், நம்ம சின்னப்படி பரிசுப்பெட்டில குக்கர் தருவீங்களா? வேற எதுனா மோதிரம், மூக்குத்தினு ஐடியா இருக்கா?



============

6   ம.ஜ.த., - காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே, குடும்ப அரசியல் செய்கின்றன.-மோடி:  # அதுதான் நெட்டிசன்கள் வெச்சு செய்யறாங்களே? போதாதா?


=============



7  தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருமே, முதலாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு விவசாயிகளின் பிரச்னை தெரியாது-அன்புமணி: # நீங்களூம் , அப்பாவும் கூட டாக்டர்தான், விவசாயிகள் பிரச்சனை உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்?



===============


 சர்வாதிகாரப் பாதையில், பா.ஜ., அரசு செல்கிறது.- ப. சிதம்பரம் 


திருவள்ளுவர் கூட 133 அதிகாரமாத்தானே டீல் ;பண்ணாரு?


===============


 9  மக்களை கண்டு அஞ்சும் அரசுக்கு பதிலாக, அரசைப் பார்த்து, மக்கள் அஞ்சும் நிலை உள்ளது. -ப. சிதம்பரம்


ஆமா, எப்போ ரெய்டு வரும்? எப்போ கைது நடவடிக்கை இருக்கும்?னு சொல்லவே முடியறதில்ல

================


10  தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், யாரும் சர்வாதிகாரம் செய்ய முடியாது என்பதை, மக்கள் இத்தேர்தலில் உணர்த்த வேண்டும். -ப. சிதம்பரம்  # தேர்தலில் வெற்றி பெற்றதும்  ஜெயிச்சவங்க பாட்டுக்கு அவங்க இஷ்டத்துக்கு எதுனா செய்வாங்க, அப்போ ஜனங்க என்ன செய்வாங்க?


============





11 

50 ஆண்டுகளாக இந்த கதையை கேட்டு வருகிறோம்; ஆட்சி அதிகாரத்துக்காகவே வறுமை ஒழிப்பு கோஷம்: ராகுல் காந்தி மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு   $  ஃபியூஸ் போன பல்புக்கோஷம்னு சொல்றாரா?



============


12  மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும்: தேனியில் ராகுல் காந்தி பேச்சு  # முதல்ல நீங்க படிங்க , காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதே  பெரியாரோட  முக்கியக்கொள்கை என்பதை மறந்துடாதீங்க


================


13 அண்ணாவும் கருணாநிதியும் இருந்திருந்தால் ராகுல் காந்தியை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்கள்: ஸ்டாலின் பேச்சு  # அப்போக்கூட உங்களைப்பாராட்ட மாட்டாங்க? இந்த தன்னடக்கம்தாங்க உங்க கிட்டே பிடிச்சதே



=============


14  மோடிக்கு ஆதரவாக வாக்குக் கேட்பவர்களை கன்னத்தில் அறையுங்கள், மோடி என்று கோஷமிடுபவர்களின் பல்லை உடையுங்கள் என்று கர்நாடக  மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். # பல் டாக்டர்களூக்கு வருமானம் வர வைக்கப்பார்க்கறாரா?


===============

15 ஸ்டாலின் அடிக்கடி லண்டன் சென்று வருகிறார். அதன் மர்மத்தை நாட்டு மக்களிடம் விளக்குவாரா?- முதல்வர் பழனிசாமி #  லண்டன் போறது அவ்ளோ பெரிய குத்தமா? நீங்க கூடத்தான் அடிக்கடி டெல்லி போறீங்க


==========================================


 16   உ.பி., மாநிலம், சுல்தான்பூர் லோக்சபா தொகுதியில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும், எனக்கு ஓட்டு போட வேண்டும்; இல்லா விட்டால், உங்களுக்கு உதவ மாட்டேன்-மத்திய அமைச்சர் மேனகா:# இவரு வாக்கு கேட்கறாரா? மிரட்றாரா?


அப்போ இந்துக்கள் , கிறிஸ்டியன்கள் ஓட்டு தேவை இல்லையா?


என்ன? ப்ளூ கிராஸ்  லெவல் கிராஸை தாண்டுதே?


====================


17   தமிழகத்தில், 'நீட்' தேர்வை எதிர்த்து, உயிர் விட்ட அனிதா போன்றவர்களின் துயரம், மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக, அத்தேர்வை ரத்து செய்ய, மாநிலங்களே முடிவு செய்யலாம் என்பதை தெரிவித்தோம் -ராகுல்:  # நீட்டான அறிவிப்பு


===============


18    தி.மு.க., ஆட்சியில், 100 சதவீதம் சிலை கடத்தல் நடந்தது என்றால், அ.தி.மு.க., ஆட்சியில், 10 சதவீதம் தான் நடந்திருக்கும். தி.மு.க., ஆட்சியில் கடத்தப்பட்ட சிலைகளை, அ.தி.மு.க., ஆட்சி மீட்டெடுத்துள்ளது -அமைச்சர் ஜெயகுமார்: # அப்போ அதிமுக ஆட்சியில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படனும்னா திமுக ஆட்சி வரனுமா?


===============

19   தி.மு.க., ஆட்சியில், 100 சதவீதம் சிலை கடத்தல் நடந்தது என்றால், அ.தி.மு.க., ஆட்சியில், 10 சதவீதம் தான் நடந்திருக்கும். -அமைச்சர் ஜெயகுமா  # அப்போ அவங்களை விட 90%  செயல்திறமை குறைவு?


=================

20   ம.ஜ.த., - காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே, குடும்ப அரசியல் செய்கின்றன-மோடி:   # குடும்ப அரசியல், வாரிசு அரசியல் பற்றி இவர் மேடைல பேசுனது ஓபிஎஸ் மகன் தேர்தலில் நிற்கற தொகுதில.. என்ன ஒரு நகை முரண்




=====================

0 comments: