Monday, March 04, 2019

பாரதி காணாத புதுமைப்பெண் இயக்குநருடன் ஒரு நேர் காணல்

ஒவ்வொரு  7 1/2 வருடங்களுக்கு ஒரு முறை சனி இடம் பெயருமாம், அது மாதிரி புரட்சிப்பெண்களும் ஏழரை வருசத்துக்கு ஒரு தடவை அவதாரம் எடுக்கறாங்க, அப்படிப்பட்ட சமூக முன்னேற்றத்துக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட ஒரு பெண் இயக்குநருடன் ஒரு நேர் காணல்


வணக்கம் மேடம்


ம் ம்  இருக்கட்டும் , ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வாங்க


மேடம், நம்ம அடுத்த படத்தோட டைட்டில் என்ன? 


 கந்திரகோல விழா


இது என்ன மேடம் புதுசா இருக்கு ?


 10/7/2009 ல இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்தில்  ஸ்ரீகாந்த்- நமிதா நடிப்பில் வெளிவந்த இந்திர விழா கேள்விப்பட்டிருக்கீங்களா?


 தெரிலீங்களே மேடம், அது ஏ படம்னு  நினைக்கறேன், எங்க வீட்ல விட்டிருக்க மாட்டாங்க


சரியான பிற்போக்குவாதியா இருக்கீங்களே? காலத்துக்கு ஏற்ப மாறனும். அந்தப்படத்துல ஹீரோவை ஹீரோயின் ரேப் பண்ண முயற்சிப்பாரு


அய்யோ


என்ன அய்யோ? ஆம்ப்ளைங்க தான் ரேப் பண்ணனுமா?> பொண்ணுங்க ரேப் பண்ணக்கூடாதா? பெண்களுக்கும் ஆண்களைப்போல சம உரிமை வேண்டும், நீங்க மேல்சாவனிஸ்ட்னு நினைக்கறேன், அதான் பெண்கள் டெவலப் ஆகறதைப்பொறுக்க முடியல


 இதுக்குப்பேருதான் டெவலப்ங்களா> ? என்னமோ போங்க,சரி, மேல சொல்லுங்க


அந்தப்படத்துல ஹீரோயின் வெறும் முயற்சிதான் பண்ணும், ஆனா நம்ம புதுப்படத்துல நிஜமாவே ஹீரோயின்  ஹீரொவை ரேப் பண்ணிடும், அதுக்குப்பின் ஹீரோவுக்கு ஹீரோயின் வாழ்க்கை கொடுத்தாரா? இல்லையாங்கறதுதான் க்ளைமாக்ஸ்.

இது சொந்தக்கதைங்களா? இல்ல அட்லீ வேலையா?


1994 ல ரிலீஸ் ஆன டிஸ்க்ளோசர் ஹாலிவுட் படத்தை சுடறதுக்கு  15 வருசம் ஆகி இருக்கு ஆம்பளைங்களுக்கு, ஆனா பாருங்க நான் எப்பவுமே ஃபாஸ்ட் , போன மாசம் ரிலீஸ் ஆன படத்தை இந்த மாசம் சுட்டுடுவேன்



மேடம், உங்க முதல் படத்துக்கு ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளர்  கம் விமர்சகர் எதிர் கருத்து சொல்லி இருந்தாரே?அவரை எப்படி சமாளிச்சீங்க?



 நிங்க மட்டும் உங்க படத்துல கில்மாப்பாட்டு வைக்கலையா?னு கேட்டேன்


 இது  அரசியல்வாதிக டெக்னிக் ஆச்சே? உங்க தலைவர் திருடுனாரா?அப்டினு கேட்டா அதுக்கு நேரடியா ஆமா, இல்லைனு பதில் வராது, அவங்க திருடுனாங்க , இவங்க கொள்ளை அடிச்சாங்க, அது மட்டும் சரியா?ம்பாங்க


ஆங், அதே டெக்னிக் தான்,பொதுவாவே பொண்ணுங்களை யாரும் எதிர்த்துப்பேசமாட்டாங்க, மீறிப்பேசுனா மேரேஜ்க்கு முன்னமே நான் கில்மா வெச்சுக்கலாமா?வேணாமா?ங்கறதை நான் தான் தீர்மானிப்பேன், உங்க கிட்டே அட்வைஸ் கேட்டு வந்து நிக்க மாட்டேன்னு ஒரே போடா போட்டுடுவேன்


அய்யோ, மேடம், ட்விட்டர் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப்ப 3110 ஃபாலோயர்ஸோட இருந்த நீங்க திடீர்னு 4257  ஃபாலோயர்ஸா இன்க்ரீஸ் ஆகி  இருக்கே? அது எப்படி?>



ரொம்ப சிம் ப்பி:ள் லாஜிக் 5 லட்சம் ப்ளஸ் ஃபாலோயர்ஸ் உள்ள விஐபி க்ளை வம்பிழுக்கறதுதான், அவங்க நம்ம ட்வீட்டை க்வோட் பண்ணி ரிப்ளை பண்றப்போ அவங்களோட ஃபாலோயர்ஸ் கவனம்   நம்ம மேல விழும்


ஓஹோ , மேடம், சிறை , பூ ஒன்று புயல் ஆனது , வைஜெயந்தி ஐபிஎஸ், விதி புதுமைப்பெண், மனதில் உறுதி வேண்டும், காற்றின் மொழி , இந்தப்படங்களைப்பற்றி கேள்விப்பட்டிருகீங்களா?

 இல்லையே, இன்னா மேட்டரு


 இவை எல்லாம் தான் தமிழ் சினிமாவில் பெண்கள் முன்னேற்றத்துக்காக நிஜமாவே இயக்குநர்கள் முயற்சி எடுத்த படங்கள்.,மேடம் பெண் முன்னேற்றம்னா என்ன? ஆணுக்கு சமமாக அல்லது அவனை விட அதிகமா பெண் படிக்கனும், சம்பாதிக்கனும், எல்லா தொழில் நுட்பங்களூம் கற்கனும், கல்பனா சாவ்லா மாதிரி விஞ்ஞானி ஆகனும் , அதானே முன்னேற்றம்கறது?


 நாட்ல நடக்கறதைத்தானே நான் காட்றேன்? பொண்ணுங்க குடிக்கறதில்லையா?தம் அடிக்கறதில்லையா?



இல்லைனு சொல்லல, ஆனா இத்தனை நாளா பயந்து பயந்து அந்த தப்பை செஞ்ச பொண்ணுங்களூக்கு இனி துணிச்சல் வராதா?இனி ஓப்பனா செய்ய மாட்டாங்களா?இதுவரை தப்பு செய்யாத பெண்கள் கூட சரி, குவாட்டர் அடிச்சுதான் பார்ப்பமே என இறங்க மாட்டாங்களா?இதுதான் சமூக ;பிரக்ஞையா?


சினிமாங்கறது பணம் சம்பாதிக்கறதுக்காக இருக்கற மீடியா, உங்க்ளைத்திருத்தறது  என் வேலை இல்லை




சரி , மேடம், இப்போ ரஜினி, விஜய் படங்களல சிகரெட் குடிக்கற காட்சி வந்தா டாக்டர் ராம்தாஸ் அதை எதிர்க்கறாரு, ஆனா சாதா ஹீரோக்கள் படங்கள்ல அப்டி சீன் வந்தா கணடுக்கறதில்லை, அது ஏன்?



 ஏன்?


ஏன்னா மற்ற நடிகர்கள் படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தறது இல்ல், ஆனா ரஜினி ஸ்டைலா தம் அடிக்கறதைப்பார்த்து 1000 பேர்ல 10 ;பேர் தம் அடிச்சுப்பார்ப்பமே என முயற்சி செஞ்சாலும் அதுக்கு தெரிஞ்சோ , தெரியாமயோ ரஜினி ஒரு காரணம் ஆகிடறார் இல்லையா?சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டியோட அவர் இனி தம் சீனில் நடிக்க வேணாம்னு வேண்டுகோள் விடுத்ததும் அதை ரஜினி ஏத்துக்கிட்டதும் அதுக்குதான்,



 அப்போ  தம் அடிக்காதேனு நீதி வசனம் பேசுனா மட்டும் அவன் நிறுத்தப்போறானா?


 மாட்டான், எப்பவும் நல்ல கருத்து மக்கள் மனசுல உடனே பதியாது, கெட்டதுதான் டக்னு அவங்களை கவரும்


 நான் ஒரு பெண் என்பதால்தான் இத்தனை எதிர்ப்பு, இதே ஒரு ஆண் இயக்கி இருந்தா கேள்வி கேட்டிருப்பீங்களா.?


 நிச்சயம் கேட்போம் , கேட்டிருக்கோம். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படத்துலயும் இதே போல் கேவலமான காட்சிகள், கதைக்கரு இருந்தப்ப அதுக்கு கடும் எதிர்ப்பு வந்தது., படம் டப்பா ஆகி 7 நாட்கள்ல தூக்கிட்டாங்க , அவர் பேரு கெட்டுடுச்சு, பல படங்கள் பண்ணி அவர் சம்பாதிச்ச பேரை ஒரே படத்துல கெடுத்துக்கிட்டாரு


 அதுக்குதான் நான் என் சொந்தப்பேரை டைட்டில்ல போட்டுக்கலை, புனைப்பெயர்தான்

 ஓ, இது வேறயா?படம் ஹிட் ஆனா உங்க பேரை சொல்லிக்கலாம்,  ஃபெய்லியர் ஆனா கமுக்கமா இருந்துக்கலாம்னு நினைச்சீங்க போல 


 நீதான் இப்படி சொல்றே. படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூஸ் வருதே?


 யாரு மேடம் [பாசிட்டிவா பேசுனாங்க?எப்பவும் ஆன் லைன்ல இருக்கறவங்களை நம்பாதீங்க, தியேட்டர்ல ஜனங்களோட ஜனமா உக்காந்து படம் பாருங்க , என்ன கமெண்ட் பண்றாங்கனு பாருங்க , உங்க கி9ட்டே ஆர் டி வாங்கறதுக்காக, எதுனா பிஸ்கெட் பாக்கெட் தூக்கிப்போட்டா கவ்விட்டுப்போய்டலாம்னு நினைக்கறவங்க வேணா அப்டி எழுதி இருக்கலாம்


=    தொடரும்    ( இது ஒரு கற்பனை பேட்டி )

0 comments: