Sunday, March 31, 2019

எங்க ஊரு காவக்காரன்

  மக்கள், சின்னத்தைப் பார்த்து, தேர்தலில் ஓட்டளிப்பது இல்லை; அக்கட்சியின் தலைவரை பார்த்து தான் ஓட்டளிக்கின்றனர். -- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிசாமி (அ.ம.மு.க) # அப்புறம் எதுக்காக குக்கர் சின்னம் தான் வேணும்னு அடம் பிடிக்கறாரு தினகரன்?


================


2  மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: ராகுல் # அதனாலதான் ஏழைகளுக்கு மாதம் 60,000 ரூ இலவச அறிவிப்பை வெளியிட்டீங்களா?


===============


3  அடங்கொப்புரான் சத்தியமா, நான் காவல்காரன்'... என்ற, எம்.ஜி.ஆர்., பாடலை, பிரதமர் மோடியின், பிரசார பாடலாக, தமிழக பா.ஜ., தேர்தல் பிரசார குழு தயாரித்துள்ளது. # அடடா , ராமராஜம் நடிச்ச எங்க ஊரு காவக்காரன் படத்து;ல வர்ற > எங்க ஊரு காவக்காரன் அவன் எல்லாத்துலயும் கெட்டிக்காரன் “ பாட்டை மிஸ் பண்ணீட்டீங்களே?


================


நாங்கள் திருநீறு பூசி, இந்துக்களை ஏமாற்றி விடுவோம்,''-தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் # மக்கள் முகத்தில்  கரியைப்பூச ரெடியா இருக்காங்கப்பா


===============


5  ஜெ., இருந்திருந்தால் பன்னீர் செல்வம் மகனுக்கு 'சீட்' கிடைத்திருக்குமா- ஸ்டாலின் # கலைஞர் இருந்தவரை நமக்கே கட்சித்தலைவர் பதவி கிடைக்கலையே?


=============


6  குடும்பத்தை மட்டுமே வளர்த்த கட்சி தி.மு.க., மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு # மக்களூக்காக உழைக்கறாங்க, அதாவது தன் வீடு தன் மனைவி  தன் மக்கள் இப்படி


===============


மக்களுக்கு பிரதமர் மோடி உரை: 'உலக நாடக தின வாழ்த்துக்கள்' : ராகுல் காந்தி கிண்டல் #  அய்யோ ராமா எல்லாம் டிராமா அப்டிங்கறாரா?



============


'ராவணன் ராகுல் காந்தி; பிரியங்காவுக்கு முடிவில் சூர்ப்பனகைக்கு நடந்ததுபோல நடக்கும்'' - ராஜஸ்தான் பாஜக தலைவர் சர்ச்சைப் பேச்சு # நோஸ்கட் பண்ற மாதிரி பேசற தலைவர்கள் நாக்கை கட் பண்ணனும்



==============


9  

பயணச்சீட்டில் பிரதமரின் புகைப்படம்: ரயில்வே, விமானத்துறை அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி #  அமைச்சர் சீட் கிழியப்போகுதோ?



=============

10  

கட்சித் தலைமை விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரியங்கா காந்தி # அம்மாவும் , சகோதரனும் வேணாம்னா சொல்லப்போறாங்க?


==============

11  ஆரணி தொகுதியில் திமுக, காங்கிரஸ் என்பதற்குப் பதிலாக திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரத்தில் ராமதாஸ் மாற்றிப் பேசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.#

பழைய நினைப்புதான் பேராண்டி பழைய நினைப்புதான்

 எப்படியும் ஜனங்க இவர் சொல்றத எல்லாம் சீரியசா எடுத்துக்கப்போறதில்லை, கவலைப்படேல்


======

12 

மோடியை 'டாடி' என சொன்னதில் என்ன தவறு? இந்திரா காந்தியை 'அன்னை' என்றுதானே அழைக்கிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


அம்மா அப்டினு யாரை வேணா கூப்பிடலாம், ஆனா அப்பானு அப்பாவை மட்டும் தான் கூப்பிட முடியும், அப்பா ஸ்தானம்னு வேணா சொல்லலாம்


================


13   இன்றைக்கு, கையில் வைத்திருக்கிற, 'ஸ்மார்ட் போன்' மூலம், அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் இளைஞர்கள் பார்த்து, தெரிந்து கொள்கின்றனர். அவர்களை ஏமாற்ற முடியாது-ராமதாஸ்:  # மாற்றம் , முன்னேற்றம் பத்தின மீம்ஸ் எல்லாம் மாம்ஸ் பார்த்திருப்பாரோ?


===============


14    'குடி'யால் நடக்கும் குற்றத்துக்கு, அரசும் உடந்தை என்ற ரீதியில், பொறுப்பேற்க வேண்டும். அதாவது, குற்றம் செய்ய ஒருவரை துாண்டுகிறது- சென்னை உயர் நீதிமன்றம்:  # குடியரசு என்பதை குடி அரசுனு தப்பா புரிஞ்சுட்டாங்க போல இந்த ஆட்சியாளர்கள்


===============


15 ஏழைகளுக்கு தரும் நிதியுதவியை தடுக்கும், ஒரே கட்சி, தி.மு.க., தான்-இ.பி.எஸ்.:   # அவங்களுக்கும் தேர்தல் நிதி குடுத்துடுங்க, கம்முனு இருப்பாங்க, பாவம் ஏழைக்கட்சி


==============


16   பிரதமர் மோடி, இந்தியாவின் கதாநாயகன். இந்தியாவை பாதுகாக்கும், 'ஸ்டன்ட் மாஸ்டர்! -ராஜேந்திர பாலாஜி #  தேர்தல் கிட்டே வரும்போது மட்டும் பாகிஸ்தான் கூட சண்ஐ போடுவாரு?



===========

17  தி.மு.க.,வை தொடங்கிய அண்ணாதுரை, கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து, மறைந்தார். அந்த கட்சியின் இப்போதைய தலைவர்கள், ஏழ்மையை ஒழிக்க மாட்டார்கள்; ஏழைகளையே ஒழித்துவிடுவர்-   ராமதாஸ் # வறுமையை ஒழிப்போம்னு அரசியல்வாதிகள் சொல்வதற்கு அர்த்தமே ஏழைகளை நாட்டை விட்டு துரத்தி விடறதா இருக்குமோ?


==============


18   மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து, நான் தான் முதலில் தெரிவித்தேன்-சுப்ரமணியசாமி # எங்கே என்ன முறைகேடு நடந்தாலும் உங்களூக்கு மட்டும் தகவல் கிடைச்சுடுதே அது எப்படி?> இன்ஃபார்மர் டீம் வெச்சிருக்கீங்களோ?


=================


19 இன்று, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், பெண்களுக்கு பாதுகாப்பான கட்சிகளாக இருக்கின்றன-= ராமதாஸ் # இவருக்கு இன்னும்  பொள்ளாச்சி மேட்டர் தெரியலை போல 




==============

20  நாடு சுதந்திரம் அடைந்த பின், இரு அறிவுரைகளை, காந்தி வழங்கினார். அதில், காங்கிரசை கலைக்க வேண்டும் என்பது ஒன்று -வெங்கையா நாயுடு # காந்தி உருவாக்குன காங்க் இப்போ இந்திரா காங்

ராஜீவ் காந்தி காங்
ராகுல் காந்தி காங் கிரஸ்னு  பரிணாம வளர்ச்சி அடைஞ்சிடுச்சே? அடுத்த தேர்தல்ல பிரியங்கா காந்தி காங்க் ஆனாலும் ஆகலாம்


=============

0 comments: