Saturday, March 30, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு



1   

பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்திருக்காது: கார்த்தி சிதம்பரம் வேதனை


இதுக்குதான் உழைச்சு சாப்பிடனும்கறது,அரசியல்வாதி ஆகிட்டாலே ரெய்டு. ஜெயிலு பெயிலு வாழ்க்கைதான்

============


2  

அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு- முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்தார் சரத்குமார்


அப்பாடா, அதிமுக வுக்கு அவர் குடும்பத்துல இருந்து 4 ஓட்டு கிடைச்சிடுச்சு


=============


3  

கனிமொழி வெற்றி பெற வேண்டி திருச்செந்தூரில் ராஜாத்தி அம்மாள் வழிபாடு # பகுத்த்றிவு சம்மர் வெக்கேஷனுக்கு  டூர் போய் இருகு போல



 கனிமொழிக்கு அரோகரா அரோகரா



==============

4  

மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்துக்கு திமுக எதையும் செய்யவில்லை: சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு   # ஏன் செய்யலை? 2 ஜி வழக்கில் ஊழல் செஞ்சாங்க

சர்காரியா  கமிஷன் அடிச்சாங்க

==================



5    

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது; அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  #   அடடா, இனி நம்ம பருப்பு வேகலையேனு எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடுமே?



==============


6   

பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்கள் உணவு டெலிவரி செய்கின்றனர்: தயாநிதி மாறன் விமர்சனம்


படிக்காத இளைஞர்களை அந்தப்பணிக்கு அமர்த்தினா  எப்படி அட்ரஸ் படிச்சுப்பார்த்து டேர் டெலிவரி பண்ணூவாங்க?

================


ஒளிமயமான எதிர்காலம்': சிவாஜி பாடலை எம்ஜிஆர் பாடல் என கூறிய பிரேமலதா


பெரிய பிரச்சனை இல்ல, அடுத்த கூட்டத்துல ஒரு எம் ஜி ஆர் பாட்டை சிவாஜி பாட்டுன்னு சொல்லிடுங்க, தானிக்கு தீனி சரியாப்போச்சு


==============


8   தேர்தலில் போட்டியிட, எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால், அதற்கு நேரம், காலம் வர வேண்டும்.-குஷ்பு   #   சரி சரி  கண்ணைத்துடைங்க


ராகு காலம் முடிஞ்சு ராகுல் காலம் வருதுன்னாங்க, இவருக்கு  மட்டும் இன்னும் ராகு காலம் தான் போல


ரஜினி கட்சிக்கு தாவிடுங்க, எப்படியும் அண்ணாமலை சீட் குடுத்துவாப்டி



===================


 வறண்ட பூமியான தமிழகத்தில், தாமரை மலராது.-

பாரிவேந்தர் 


 பூமி வறண்டு போகக்காரணமே  சூரியனோட தாக்கம்தான்னு ஒரு அர்த்தம் வருதே, கூட்டணீக்கட்சியையே தாக்கறாரே? 


================


10 மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள், 20 ஆண்டுகளாக நிறைவடையவில்லை- EVKS

 அப்போ அதுக்கு திமுக வும் ஒரு காரணம்கறதை ஒத்துக்கறாரா?ஏன்னா அந்த  கால கட்டத்துல திமுக வும் ஆளும் கட்சியா இருந்ததே?


================

1  

நான் பனங்காட்டுக்காரி; சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்: தமிழிசை # அந்தப்பக்கம் பணம் காட்டும் காரர்கள் இருந்தாலும் அஞ்ச மாட்டீங்களா?



==============

47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமை: நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு # மானம் முக்கியமா? வருமானம் முக்கியமா?ன்னா நம்மாளுங்க வருமானம் தான் முக்கிய்ம்பாங்க



================


இடம் மாறினாலும் தடம் மாறாத  ஒரே ஆள் நான்தான் - நாஞ்சில் சம்பத் # அதே மாதிரி  திமுக , மதிமுக, அதிமுக , அமமுக இப்படி 4 இடம் மாறி மாறி போனதும் நாம ஒரு ஆள் தான்


================


4  , 

அடிமட்டத்தில் இருந்து வந்து முதல்வர் ஆனவன் நான்: எடப்பாடி பழனிசாமி உருக்கம் # அடிமட்டம்னா  தரைல  விழுந்து வணங்கி வந்தவர்னு அர்த்தமா?



==============


5   என்னைத் தனிப்பட்ட முறையில் சீண்ட வேண்டுமென நினைத்தால், ஆஸ்திரேலியாவும் தெரியும், சிங்கப்பூரும் தெரியும். இவ்வளவுதான் சொல்வேன். இதற்கு மேலும் ஆழமாகச் சொல்ல வேண்டுமெனில், பிஞ்சிலே பழுத்த பழமாக உள்ளவர்கள் விளையாட வேண்டாம்'' -இளங்கோவன். # சினிமா ஹீரோ மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசறாரு, பஞ்ச் பேசி பிழைக்க வந்தவரோ?


===================

6  மோடி அரசு மீது, தொடர்ந்து அரசியல் ரீதியாக கேள்விகளை எழுப்பி வருவதால், என் தந்தை மீது, பல பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர்.- கார்த்தி சிதம்பரம் # வழக்கை சந்திக்காம ஜாமீன் கேட்டு கேட்டு காலத்தை ஓட்டறீங்களே? அது ஏன்?


===================


துணை முதல்வரும், அமைச்சர் ஜெயகமாரும், என் வீட்டிற்கு வந்து, ஆதரவு கேட்டனர். அதேபோல, பல அமைச்சர்களும் பேசினர். அதன் அடிப்படையில், அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தோம்=சரத்குமார்:  # அப்போ உங்க வீட்டுக்கு யாரு வந்து ஆதரவு கேட்டாலும் உடனே அவங்களுக்கு ஆதரவு கொடுத்துடுவீங்களா?ரெய்டு வராம இருக்கத்தான்னு சொல்றாங்களே?


===============


 ஜெ.,வும், விஜயகாந்தும், சாதாரணமானவர்களை, சக்திமிக்கவர்களாக ஆக்கும் குணம் படைத்தவர்கள்-பிரேமலதா #அப்போ ஓபிஎஸ் சாதாரணமானவர் அப்டிங்கறாரா?


==============

9   அ.தி.மு.க., அரசு, இணைப்பு தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பல பொய் வரலாறுகளையும், பொய் வாக்குறுதிகளையும் வாரி இறைத்துள்ளது-முத்தரசன் # தேர்தல் வந்துட்டாலே அரசியல்வாதிகள் மெய் மறப்பது இயல்புதுதானே?


==================


10 அ.தி.மு.க., கூட்டணி என்பது, தெளிந்த நீரோடை போன்றது; அதில் இருக்கும் நீரை, எடுத்து குடிக்கலாம். ஆனால், தி.மு.க., கூட்டணி என்பதோ, தேங்கிக் கிடக்கும் குட்டை தண்ணீரைப் போன்றது. அது, குடிப்பதற்கு லாயக்கு இல்லாதது.-ராமதாஸ் #  திமுக , அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு யாரோ சொன்னாங்களே?



===================

0 comments: