Thursday, March 28, 2019

ஐரா - சினிமா விமர்சனம்


நாயகி மீடியா ல ஒர்க் பண்ணுது, வீட்ல  மாப்ளை பார்க்கறாங்க , ஃபாரீன் மாப்ளை, பேசிப்பார்த்தா பிடிக்கலை. மேரேஜ்ல இருந்து எஸ் ஆக வீட்டை விட்டு ஓடிப்போய் கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு வருது. அந்த பங்களால பேய் நடமாட்டம் இருக்கு.இதை வெச்சு நாயகி காண்ட்ரவர்சியா டூப்ளிகேட்டா சில வீடியோ க்ளிப்ஸ் போட்டு ஃபேமஸ் ஆகுது. ஒரு கட்டத்துல அவரோட பாட்டியே பேயால் கொல்லப்படறாங்க

பேயோட டார்கெட் நாயகிதான். ஏன்? எதனால? ஒரு ஃபிளாஸ்பேக்
மிச்சத்தை வெண் த்ரையில் காண்க


 நாயகியா பட்டர் ஃபிகர் நயன் தாரா. ஓப்பனிங் சீன்ல அவரோட காரக்டர் என்னமோ ஜான்சி ராணி  மாதிரி காண்பிச்ச்ட்டு பின் வ்ழக்கமான பயந்தாங்கொள்ளியா காட்டியது சொதப்பலான கேரக்டரைசேஷன். இயக்குநரின் சறுக்கல் இங்கே ஆரம்பிக்குது

பின்னணி இசை , ஒளிப்பதிவு நல்லாருக்கு

நயன் தாரா மாறுபட்ட இரு வேடங்களில் முடிஞ்சவரை சைன் பண்ணி இருக்கு, இந்தப்படத்தில் ஒரே ஆறுதல் கலையரசன் தான். நல்ல கேரக்டர். குட்

 யோகி பாபு இடை வேளை வரை சம்பந்தம் இல்லாம வந்து மொக்கை போடறார், ஒரு ஜோக் கூட சிரிக்கற மாதிரி இல்லை. இவரும் மதுரை முத்து , ஈரோடு மகேஷ் மாதிரி டி வி ஷோ போய்டலாம்

 ஃபிளாஷ்பேக் சீன் கறுப்பு வெள்ளையில் எடுத்தது நல்ல ரசனை



நச் டயலாக்ஸ்


1  மீடியா ல ஒர்க் பண்றே,நாலஞ்சு பேரையாவது அட்ஜஸ் பண்ணாமயா இந்த நிலைமைக்கு வந்திருப்பே?


உன்னை மாதிரி ஆளுங்களாலதான் பெண்களுக்கு ஆதரவா அவங்க குடும்பத்தாரே பேச முடியாத சூழல் ஏற்படுது,உனக்கு ஆதி னு பேர் வெச்சதுக்குப்பதிலா..... ( sv சேகர் தாக்கப்பட்டார்)



2 என் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நாலஞ்சு வாழ்க்கை வாழ்ந்துட்ட மாதிரி இருக்கு

( சிம்பு
பிரபு தேவா
ஆர்யா
உதயநிதி
விக்னேஷ்சிவன்)

3  எப்பவும் நம்ம கூட சண்டை போடறவங்க என்ன திட்றாங்கனு காது கொடுத்துக்கேட்கக்கூடாது,நம்ம நிம்மதி போயிடும்

எந்த அப்பாவும் தன் பொண்ணுகிட்ட தன் கோபத்தைக்காட்ட மாட்டாரு

5  பாகுபலியே எடுத்தாலும் ப்ளூசட்டை குறை சொல்லித்தானே முன்னேறுனாரு?


பாத்தேன் பாத்தேன்,கழுவிக்கழுவி ஊத்துவாரே? ( தாக்கறதா நினைச்சு இலவச விளம்பரம்)


6 கான்ட்ரவர்சியா எதாவது பேசுனாதான் புகழ்பெற முடியும்,அட்டென்சன் சீக்கிங் தேவை

7  என் வாழ்க்கைல நடந்த ஒரே நல்ல விஷயம் நீதான் #ஐரா

8  வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு? போதும் போதும்கற அளவுக்கு ஒருத்தனுக்கு எல்லாமே கிடைக்குது, இன்னொருத்தனுக்கு எதுவுமே கிடைக்கறதில்லை, கடவுள் தூங்கிட்டாரா? #ஐரா




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  ஓப்பனிங் சீன்ல தலைவி நயன்தாரா வண்டியை ஒருத்தன் இடிச்சுடறான்,டேய் பொறம்போக்கு னு திட்டுது.குறியீடு.ராதாரவி ரசிகர்கள் ,உடன்பிறப்புகள் கடுப்பாயிடுவாங்க


2 நேத்து ப்ரீவ்யூ ஷோ பாத்துட்டு பலரும் ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா ரேஞ்சுக்கு பாராட்னாங்க, அப்டி ஒண்ணும் ஸ்பெஷலா  இல்லையே? டெம்ப்ளேட் பேய்ப்பட ஃபார்முலா தான், க்ளிஷே தான் #ஐரா@ இடைவேளை




சபாஷ் டைரக்டர்


1  லட்சுமி கில்மாப்பட இயக்குநர் அந்தப்பட புகழை வெச்சு நயன் கிட்டே கால்ஷீட் வாங்குனது, அறம் மாதிரி பிரமாதமான படம் பண்ணிட்டு இது மாதிரி சாதா கதைல நடிக்க ஓகே பண்ண வெச்சது

2  பட ரிலீஸ் டைம்ல ராதாரவி யை காண்ட்ரவர்சியா பேச வெச்சு படத்துக்கு இலவச விளம்பரம் தேடிக்கிட்டது






லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)

லாஜிக் மிஸ்டேக் 1 − ஊருக்கு ஒதுக்குப்புறமா இவ்ளோ பெரிய பங்களாவா?னு அந்த ஏரியா போலீசே வியக்குது.அதெப்பிடி ஒரு போலீசுக்கு அவங்க ஏரியா பங்களாவே பரிச்சயம் இல்லாம போகும்?


2  லாஜிக் மிஸ்டேக் 2 -ரீசென்ட் டெத் பவானி இன் சென்னை அப்டினு இங்க்லீஷ்ல டைப்ம் பண்ணி கூகுள் சர்ச் பண்ணுது தலைவி, ஆனா மேட்டர் ( சாதா மேட்டர்தான் )தமிழ்ல வருது  #ஐரா

3  ஃபிளாஸ்பேக்கில் வரும் பவானி கேரக்டர் பொண்ணு முகச்சாயல் நயனுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம இருக்கு

4  நாயகியின் பாட்டிக்கும் பேய்க்கும் சம்பந்தமே இல்லை. கண்ணு தெரியாத பாட்டியை எதுக்கு பேய் கொல்லுது> பேய்க்கும்  கண் தெரியலையா?

5 நயன் தாரா வின் ஒப்பனை யார் பண்ணது? புருவங்களில் ஓவரா மை அப்பி அழகான புருவத்தை நாஸ்தி பண்ணி வெச்சிருக்காங்க

6  லாஜிக் மிஸ்டேக் 3 - 5 1/2 அடிக்கு மேல் உயரமாக இருக்கும் நயன் தாரா வைப்பார்த்து ஒரு பேக்கு பொண்ணு குள்ளமா இருக்கே னு டய;லாக் #ஐரா


7  லாஜிக் மிஸ்டேக் 4 - நீண்ட இடைவெளிக்குப்பின் காதலியை (கிராமத்துப்பொண்ணு)சந்திக்கும் காதலன் ? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?னு கேட்கறார் . இந்துவான நாயகி கழுத்தில் தாலி இல்ல , கால் விரலில் மெட்டி இல்லை, நெற்றி வகிட்டில் சுமங்கலி ஸ்பெஷல் குங்குமம் இல்லை, இதை  எல்லாம் நோட் பண்ண மாட்டாரா?#ஐரா

8  லாஜிக் மிஸ்டேக் 5  - குப்பன் சுப்பனை  எல்லாம் பழி வாங்கும் பேய் தன்னை அபாண்டமா புகார் செய்த அதுவும் தன்னை கரெக்ட் பண்ண பார்த்தானு புகார் சொன்ன ஆளை ஏன் பழி வாங்கலை? #ஐரா






சி.பி கமெண்ட் -ஐரா - முதல் பாதி வழக்கமான டெம்ப்ளெட் பேய்ப்பட ஃபார்முலா, பின் பாதி ஃபிளாஷ்பேக் காட்சிகள் எடுபட;லை, திரைக்கதையை நம்பாம இயக்குநர் நயன் தாராவை நம்பி இருக்கார், விகடன் 38  ரேட்டிங் 2.25 / 5 .கமர்ஷியல் வெற்றி மிக மிக அரிது #ஐரா

0 comments: