1 ரஜினி, அரசியலுக்கு வரமாட்டார். வந்தால், சிறையில் தான் இருப்பார் - சு சாமி: #
கருத்து சொல்றாரா? மிரட்றாரா?
===============
2 : ஈரோடு அல்லது திருப்பூரில் போட்டியிட விரும்பினேன். கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டியதால், தேனியில் போட்டியிட, தலைமை கேட்டுக் கொண்டது - EVKS
ஈரோடுதான் என் கோட்டை, வேற பக்கம் போட்டி இட்டா கோட்டை விட்டுடுவோம்னு சொல்லி இருக்கலாமே?
=============
3 தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வினர், எங்களுடன் இணைவர். நாங்கள், எந்த காலத்திலும், அவர்களுடன் இணைய மாட்டோம். = தினகரன்: #
முள்ளு மேல சேலை விஒழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் ஜனங்களுக்கு ஒரு நட்டமும் இல்ல
================
4 அ.தி.மு.க.,வுடன் இணைவதை விட, கடலில் குதிப்பதே மேல்-தினகரன்:
நீச்சல் தெரியும்கற தெனாவெட்டுல பேசிட்டு இருக்காரு
=============
5 எந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரியும், நீண்ட காலம், அந்தப் பணியில் இருக்க விரும்புவதில்லை.-முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி, நரேஷ் குப்தா # உங்க பேரைக்கேட்டாலே அரசியல்வாதிகளுக்கு “குப்”னு வேர்த்துடுதாமே? மிஸ்டர் குப்தா
==============
6 லோக்சபா தேர்தல் முடிவில், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு, எந்தத் தேசியக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே, கூட்டணி ஆட்சி தான் அமையும் -நவீன் பட்நாயக் # நாயக் நஹி கல்நாயக் ஹூங் மை அப்டிங்கறாரு
===============
7 - தி.மு.க.,வின் வேட்பாளர்களை, வாரிசுகளா என்று, ரத்தப் பரிசோதனை செய்யாதீர்கள் - ஸ்டாலின்
சோதனை , ரெய்டுன்னாலே அரசியல்வாதிகளுக்குப்பிடிக்கறதில்லை
=============
8 தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படக் கூடாது' என, ஐகோர்ட் கண்டித்துள்ளது. எனவே, தேர்தல் ஆணையம், சார்பு நிலையாக செயல்படாமல், நடுநிலையாக செயல்பட வேண்டும்.-முத்தரசன்
பாவைன்னா கேவலமா?னு சம்பந்தம் இல்லாம பெண்ணுரிமை இயக்கங்கள் வந்துடப்போகுது
================
9 - : கடந்த லோக்சபா தேர்தலில், மோடிக்கு ஆதரவாக எப்படி அலை வீசியதோ, அதேபோல் இந்தத் தேர்தலில், மோடிக்கு எதிரான அலை வீசுகிறது -, திருமா
அப்போ ஜெயிச்சாக்கூட உங்க சொந்த செல்வாக்குல ஜெயிச்சதா இருக்காது?
=================
10 தற்போதுள்ள, மோடி தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும். இதற்காகவே, காங்கிரஸ் போராடுகிறது. நாட்டைக் காப்பாற்றும் வகையில், வாழ்வா, சாவா நிலையில், காங்கிரஸ் உள்ளது.-
கபில் சிபல்
# அப்போ கட்சி ரொம்ப வீக்கா இருக்குனு சொல்ல வர்றாரா?
=================
11
பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
கட்சியையே பதிவு பண்ணலை, இவர் எங்கே எப்போ மக்கள் மனசுல பதிய வைக்கப்போறாரு?
===========
12 தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டுக்கு, சிவன் கோயில் பட்டர்கள் சென்று, பூரண கும்ப மரியாதை கொடுத்து ஆசி வழங்கினர்
பகுத்தறிவு தேர்தல் சமயங்களில் மட்டும் லீவ் எடுத்துக்கும் போல
=================
13 ஆ.ராசாவின் சொத்துப் பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்தத் தேர்தலிலும் தாக்கல் செய்துள்ளார்.
பதவி கிடைத்த பின் தானே பொதுவா அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு கூடும்?
=================
14
தேர்தலில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும்=செங்கோட்டையன்
வெறும் ஒண்ணே கால் லட்ச பரிசுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யனுமா?னு யோசிக்க மாட்டாங்களா?
=================
15
சேவக அரசிடம் இருந்து தமிழகத்தை எங்கள் கூட்டணி மீட்கும்: வைகோ
மக்கள் சேவையே செய்யாத கட்சிக்குதான் ஆதரவு தருவார் போல?
==================
16
திமுகவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா?- ட்விட்டரில் கனிமொழிக்கு தமிழிசை பதிலடி
உதய சூரியனுக்கே ஓட்டுப்போடுங்கள் எனும் கருத்தை வேணா யார் வேணா எப்போ வேணா கட்சில சொல்லலாம்
===============
17
நான் ஒரு கால்டாக்ஸி; வேட்பாளர்கள் அதில் பயணிக்கட்டும்: தேர்தலில் போட்டியிடாதது குறித்து கமல்ஹாசன் பதில்
ட்ரெய்லர்ல ( பாராளூமன்ற தேர்தல்) ஹீரோ வர மாட்டாரு, ஆனா மெயின் பிக்சர் ( சட்டமன்ற தேர்தல்) ல அவசியம் வருவாருனு சொல்ற மாதிரி இருக்கு
==================
18
ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000, ராகுல் திட்டம்: ‘பம்மாத்து அறிவிப்பு’ என அருண் ஜேட்லி சாடல் # சுருக்கமா சொல்லனும்னா அது மோடி அறிவித்த ஒவ்வொருவர் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் ரூபா என்பதற்கு சமம். 2ம் நடக்காது
==============
19
பாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா # இனி ரத யாத்திரை போனா அது ஜெயப்ரதா யாத்திரை எனப்படுமோ?
=================
20
உ.பி. ஆட்சியாளர்கள் ‘டி ஷர்ட்’ விற்கின்றனர்: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
அதை காபி அடிச்சு நீங்களும் காபி சர்ட் விற்கலாமே?
================
0 comments:
Post a Comment