ஒரே ஒரு டீசர்ல இந்தியா பூரா பிரபலம் ஆனது நம்ம பிளிங்க்கிங் ப்யூட்டி கண்ணடிக்கும் கட்டழகி ப்ரியா வாரியர்தான்,அவர் நடிச்ச படம் டீசர் மாதிரி ஹிட் அடிச்சுதா? இல்லையா?னு பாப்போம் வாங்க
ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் 11 வது படிக்கறாங்க,ஸ்கூல்ல முதல் டைம்பார்த்ததுமே ஹீரோ ஹீரோயினைபார்த்து சிக்னல் குடுக்கறாரு ( நானெல்லாம் 11 வது படிச்சப்ப கூட படிச்ச பொண்ணுங்களோட முகத்தைப்பார்க்கவே 20 நாட்கள் ஆச்சு , ஏன்னா பொண்ணூங்க எங்க பெஞ்ச்சுக்கு முன்னாடி உக்காந்திருக்கும்க, காலைல வந்தபின் 4 பீரியட் நடக்கும்,லஞ்சுக்கு மரத்தடிக்குப்போய்டுவாங்க, க்ளாஸ் ரூம்ல வெறும் முதுகுதான் தெரியும்)
ஹீரோயின் வெட்கப்பட்டு தலை குனியும்னு எதிர்பார்த்தா அது கண்ணடிக்குது,புருவத்தை ஆட்டுது., ஹீரோ அடுத்த ரீல்லயே ஹீரோயினுக்கு லிப் கிஸ் குடுத்துடறாப்டி ( தியேட்டர்ல ஒரே விசில் மழை)
இனிமேதான் செம காமெடி, ஹீரோவுக்கு ஹீரோயின் தன்னை லவ் பண்ணுதா? இல்லையா?னு ஒரு டவுட் (ங்கொய்யால லிப் கிஸ்சே தந்தபின் என்ன கேனத்தனமான டவுட்?)
அதைக்கண்டுபிடிக்க மறுபடி ஒரு கேனத்தனமான ஐடியா பண்றாப்டி,இப்டியே இடைவேளை வரை போகுது, ஒரு ட்விஸ்ட் வேணூமில்ல> 2 பேருக்கும் சின்ன கருத்து வேற்றுமை, பிரியறாங்க, லைனுக்கு பழைய படி நாயகியை வரவைக்க என்ன வழி?
சக மாணவி அது ஹீரோ ஹீரோயின் 2 பேருக்கும் பொது ஃபிரண்டு, அது கூட பேசி வெச்சுக்கிட்டு 2 பேரும் லவ் பண்ற மாதிரி டிராமா போடலாம்னு ஐடியா, பொறாமைப்பட்டு நாயகி லைனுக்கு வந்துடும்னு திட்டம்
ஆனா ஒரு திருப்பம் , 2 பேரும் நிஜமாவே லவ் பண்றாங்க ( தமிழ்ல ரீமேக்குனா நயன் தாரா , சிம்பு , பிரபு தேவா நடிக்கலாம்)
க்ளைமாக்ஸ் என்ன ஆச்சு, வெள்ளித்திரையில் காண்க
ஹீரோ நடிப்பு அருமை,போதும் ஆம்பளைங்களைப்பற்றி நமக்கென்ன கவலை?திருப்பதி லட்டு , திருநெல்வேலி அல்வா கணக்கா 2 ஹீரோயின்கள் இருக்காங்க, வர்ணிப்போம்
ப்ரியா வாரியர் பெரிய பிளஸ் அவரோட புருவங்கள்தான், லிப்ஸ்டிக் இடாமலேயே பிங்க் கலர்ல இருக்கும் அவர் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டு கெடுத்து வெச்சிருக்கு, மற்றபடி அவரோட நடை, உடை , இடை எல்லாம் அழகு
அடுத்ததா நூரின் ஷெரீப், கர்லிங்க் ஹேர் கட்டழகி, எதார்த்தமான சிரிப்பழகி. உதட்டுச்சாயம் பூசாத இதழ் அழகி, பிரிச்சு மேய்ஞ்சுட்டாப்டி, ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் சர்ப்பரைஸ் இவர் அழகு, ஏன்னா பட் டீசர், ட்ரெய்லர்ல ப்ரியாவாரியர்தான் சிக்சர் அடிச்சாரு, இவரை யாருக்கும் தெரியல
ஸ்கூல் கலாட்டாக்கள் அருமை,
ஜாலியா போகுது, 2 அழகிகளை ரசிக்கவே போலாம்
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 காதலர்கள் ,கள்ளக்காதலர்கள் கூட்டத்தோட #OruAdaarLove
587 பேரு ்/465 சீட்ஸ் ,பலரும் மடில உக்காந்துக்கிட்டாங்க,அடடா.. @கேரளா கோட்டயம் தன்யா #OruAdaarLoveFromFeb14
2 எத்தனை லவ் சப்ஜெக்ட் படங்கள் வந்தாலும் தவறாமல் இடம் பெறும் காட்சி ஒரே குடையின் கீழ் காதலர்கள் மழை பெய்யும் சமயம்,சலிப்பு தட்டாத காட்சி #OruAdaarLove
3 சயின்ஸ் க்ருப்ல தான் ஹை க்ளாஸ் பிகர்கள் வருவாங்க #OruAdaarLove (ஆனா நான் படிச்ச சயின்ஸ் க்ருப்ல மொக்க பிகருங்கதான் )
4 தற்செயலா அமையுதா?திட்டமிட்டு பண்றாங்களா தெரில,லவ் சப்ஜெக்ட் படங்கள்ல நாயகியை விட நாயகியின் தோழி செம பிகரா அமைஞ்சிடுது #OruAdaarLove
5 டீசர்லயோ,ட்ரெய்லர்லயோ அப்ளாஸ் வாங்கற சீன் பெரும்பாலும் இடைவேளைக்கு அப்பறம்தான் வரனும்,எப்ப வரும்?எங்கே வரும்?னு ஜனங்க ஏங்கனும்,எதிர்பார்த்த சீன் வரும்போது தியேட்டர் அதிரனும் # #OruAdaarLove
6 திரையில் ஒரு படம் ,தியேட்டர் சீட்களில் பல படங்கள் ஓடுவதால் இன்று லாஜிக் மிஸ்டேக்ஸ் கண்டுபிடிக்க டைம் இல்லை #OruAdaarLove
நச் வசனங்கள்
1 க்ளாஸ்மொத்தமும் கேர்ள்ஸா இருக்கனும்
அதுக்கு நீ கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்லதான் படிக்கனும் #OruAdaarLove
2 கேரளா ல வெள்ளம் வந்தப்ப ஜனங்களைக்காப்பாத்துனது சூப்பர்மேனோ,ஸ்பைடர்மேனோ இல்ல,பிஷர்மேன் #OruAdaarLove ( இது ட்விட்டர்ல ஹிட் ஆனது,சுட்டுட்டாங்க)
3 அப்பாவோட கண்டிப்பு இல்லாம அம்மாவோட அன்புல மட்டும் வளர்ற பையனோட ஒழுக்கம் சந்தேகத்துக்கு உரியதாத்தான் இருக்கும் #OruAdaarLove
4 உன் மேல யாருக்கு பொசசிவ்னெஸ் மட்டும் இருக்கா அவங்களை விட உன் கேரக்டரை நீ யாருக்காக மாத்திக்கறயோ,யார் உன் கேரக்டரை மாத்தறாங்களோ அவங்கதான் உன் வாழ்க்கைத்துணை யா அமைய பெஸ்ட் சாய்ஸ் #OruAdaarLove ( எடிட்டட்)
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 லாஜிக் மிஸ்டேக் 1− நாயகன்,நாயகி,நண்பர்கள் எல்லாரும் 11 வது படிக்கறமாதிரி தான் கதைக்களம் அமைந்தது,ஆனா பேர்வெல் பார்ட்டி வைக்கறாங்க ,12 வதுலதானே வைப்பாங்க?அதே ஸ்கூல் ல படிக்கறப்ப எப்டி 11 வதுலயே பேர்வெல் பார்ட்டி நடக்கும்? #OruAdaarLove (malayalam)
2 என்னதான் நவீன யுகமா இருக்கட்டும், 11 வது படிக்கற க்ளாஸ் ரூம், ஸ்கூல் வளாகம் எல்லாம் ஒரே லவ்ஸ் மழைதான் , நிர்வாகம், கண்டிப்பு மருந்துக்குக்கூட இருக்காதா/
3 க்ளைமாக்ஸ்ல இவரா? அவரா? என்ற கேள்விக்கு விடையே சொல்லாமல் ட்விஸ்ட் வைத்தது எதுக்கு?
OruAdaarLove (malayalam)- திரைக்கதையை விட இரு நாயகிகளின் அழகை நம்பி எடுக்கப்பட்ட சிறார்களின் காதல் கதை,ட்ரெய்லர் ஹிட் அடிச்ச மாதிரி படம் ஹிட் அடிப்பது எல்லாப்படங்களுக்கும் அமைஞ்சிடாது,மடத்தனமான,செயற்கையான க்ளைமாக்ஸ் பெரிய மைனஸ் , ரேட்டிங் 2.25 / 5 #OruAdaarLove
0 comments:
Post a Comment