1 அரசியலிலோ , சினிமாவிலோ யாரோ ஒரு முக்கியப்புள்ளியுடன் எடுத்த புகைப்படங்களை தற்பெருமைக்காக காட்டுவது ஒரு வித தாழ்வுமனப்பான்மையை காட்டுவதே
=============
2 கலைஞரின் சாணக்கியத்தனம் எடுபடாமல் போன ஒரே நபர் எம் ஜி"யார் . அதே எம் ஜி யார் ஆளுமை ஜெயிக்கமுடியாத நபர் ஜெ.அப்பேர்ப்பட்ட ஜெ வால் தவிர்க்க முடியாத நபர் சசிகலா.சசிகலாவை ஆட்டுவித்தவர் நடராஜன்
=============
3 பழ வகைகளில் எட்டப்பர்கள் பலாச்சுளையும்",கொய்யாப்பழமும்.வீடடில் எங்கே மறைத்து வைத்தாலும் வாசம் காட்டிக்கொடுத்து விடும்
===========
4 எதிர்காலத்துல பொண்ணுங்க வீட்டு பீரோக்கள்ல
பிறந்த வீட்டு சீதன புடவைகள்
புகுந்த வீட்டு புடவைகள்
FB பாலோயர்ஸ் பரிசா"தந்த புடவைகள் னு ஒதுக்குவாங்க போல
==========
5 நெட் தமிழன் பாலோயர்ஸ்க்கு பட்டுப்புடவையா அனுப்பிட்டே இருக்காப்டியே?ஏது அவ்ளோ"காசு?ஜவுளிக்கடை ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டாப்டியா?
============
6 முதலாளி ஒரு"கிறிஸ்துவர் என்பதால் தமிழ் நாட்டில் ஆச்சி மசாலா என்ற பிராண்டை தவிர்ப்போம் என்று கூறுபவர்கள் முஸ்லீம் நாட்டிலிருந்து கிடைக்கும் பெட்ரோல்,டீசல் உபயோகப்படுத்த மாட்டார்களா?
========
7 வெளியூர் அவசியம் செல்ல வேண்டி இருப்போர் பஸ்களை தவிர்த்து ரயிலில் செல்லலாம், அது கூடுதல் பாதுகாப்பு
==============
8 உதய சூரியன் மறைந்த நேரம் சூரிய அஸ்தமனம் 6.10 pm
=================
9 ஜெ இறப்புச்செய்தி வந்த போது அதிமுக தொண்டர்கள் காட்டிய அதே அமைதியை திமுக தொண்டர்களும் காட்டுவார்கள் , பொது மக்களுக்கு, மாநில அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டார்கள் என நம்பலாம்
==========
10 பொதுவாக தலைவர்கள் இறப்புச்செய்தியை நள்ளிரவில் 11 அல்லது 12 மணிக்கு அறிவிப்பதே நல்லது, பணி இடத்தில் இருப்போர் பாதுகாப்பாக வீடு திரும்ப கால அவகாசம் தேவை
===============
11 வழக்கமாக கருணாநிதி எனவே உச்சரிக்கும் சன் டி வி இப்போது பொறுப்பாக கலைஞர் காலமானார் என மரியாதையாக அறிவித்திருப்பது நல்ல மாற்றம்
============
12 ஜெ , கலைஞர் இருவரின் மரணச்செய்தியுமே திடீர் என வராமல் தொண்டர்களை ஒரு வித தயார் நிலைக்கு வர வைத்து பின் வ்ந்தது மாநில அமைதிக்கு நல்ல விஷயம்
==============
13 ஈரோடு −அரசு,தனியார் பஸ்கள் ஓடவில்லை ,மாலை 7 மணியிலிருந்து நிறுத்தம்,ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்.வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க முடியாதோர் அருகாமை நெட் செண்ட்டரில் எடுக்கலாம்
===========
14 சட்டப்படி மெரீனாவில்"இடம்"ஒதுக்க வழி இல்லை,ஆனால் தார்மீக முறைப்படி இடம் தரலாம்.தீர்ப்பு கிட்டத்தட்ட இந்த பார்மட்டில் வரும்
============
15 கோர்ட்"தீர்ப்பு திமுக வுக்கு சாதகம்,இதை இவங்களா தந்திருந்தா நல்ல பேராவது மிஞ்சி இருக்கும்
=============
16 Sun Music, KTV , Adithya TV, சிரிப்பொலி போன்ற தொலைக்காட்சிகளில் தங்கு தடையின்றி விளம்பரங்களோடு வழக்கமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
*துக்கத்தில்* கடைகளை மூடியுள்ள வியாபார நண்பர்களுக்கு நன்றி.. #WhatsApp frwrd
=============
17 தலைவர்களின் இறுதிப்பயணத்தில் ரெக்கார்டான கூட்டம் இதுவரை அறிஞர்"அண்ணாவுக்கு (1.5 கோடிக்கு மேல் தோராயமாக)
எம்ஜியார் அந்த எண்ணிக்கையை எட்டமுடியவில்லை என்றாலும் 1 கோடி தாண்டினார்
கலைஞர் 3 வது இடம்
=============
18 கலைஞர் இறந்த துக்கத்தில் நிஜமான சோகமுகம் காட்டியவர்களில் (ரத்த சம்பந்தம் அல்லாத)முக்கியமானோர்
1 விஜயகாந்த்
2 வைரமுத்து
3 அன்பழகன் க
ரத்த சொந்தத்தில்
ஒப்பனையுடன் வந்து தொண்டர்களை முகம் மாற"வைத்தவர்கள்
ஸ்டாலின்
கனிமொழி
அழகிரி
================
19 திமுக உடன்பிறப்புகளில் பலரும்"ஆன் லைன்"போராளிகளாகவே கடந்த 2 தினங்களாக ட்வீட்டினர்.நேரில் அஞ்சலி செலுத்த 10% பேர் கூட சென்னை செல்லவில்லை
(எம்ஜியார் வாக்குவங்கிக்கும் கலைஞர் வாக்கு வங்கிக்கும் இதுதான் வித்தியாசம்) கிராமம் vs நகரம்
============
20 அதிமுக போல் திமுக வுக்கு எப்போதும் ,எந்த சூழலிலும் அனுதாப வாக்கு வங்கி"உருவானதில்லை,ஆனால்"கலைஞரின் இறுதிக்கட்டத்தில் ஸ்டாலின் கடைப்பிடித்த மூவ்கள்,அவரது உணர்வு,நல்ல மகனாக நடந்தது அனைத்தும் நடுநிலை வாக்காளர்களை"கவரும்.
==========
0 comments:
Post a Comment