ஹர ஹர மகாதேவகி ( 2017) , இருட்டு அறையில் முரட்டுக்குத்து என 2 கில்மா காமெடிப்படங்களை எடுத்து பி, சி செண்ட்டர்களில் வசூலை அள்ளிய இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எடுத்த யு படம் தான் இந்த காமெடிப்படமான கஜினிகாந்த்
1990 களில் ஆள் மாறாட்டக்காமெடி கேட்டகிரில கிட்டத்தட்ட 45 படங்கள் வந்தன . உள்ளத்தை அள்ளித்தா , நாம் இருவர் நமக்கு இருவர் , காதலா காதலா , உதவிக்கு வரலாமா? ,சின்ன மாப்ளே ,என நீளும் ஹிட் பட்டியல்கள் , அதில் பெரும்பாலும் ஒரே ஃபார்முலா தான், ஆள் மாறாட்டம், வார்த்தை ஜால காமெடி, பெரும்பாலும் வசனம் கிரேசி மோகன், பிரபு நடித்த சின்ன வாத்தியார் பிரபு கேரக்டர் , தர்மத்தின் தலைவன் ல ரஜினி நடிச்ச ஞாபக மறதிபேராசிரியர் கேரக்டர் இரண்டையும் இமிடேட் பண்ணி , மிக்ஸ் பண்ணி , அட்லீ வேலை பண்ணி இந்தப்பட நாயகனின் கேரக்டரை வடிவமைத்துள்ளார் இயக்குநர்
சரி , படத்தோட கதை என்ன? ஹீரோ ஒரு ஞாபக மறதிக்கேசு ,அவருக்கு பொண்ணு பார்க்கறாங்க, பொண்ணோட அப்பா ஹீரோவோட குறை தெரிஞ்சு நாஞ்சில் சம்பத் மாதிரி முறுகிக்கறாரு,இருந்தாலும் ஹீரோவும் ஹீரோயினும், சசிகலா , ஜெ மாதிரி ஒற்றுமையா இருகாங்க, 2 பேரும் சேர்ந்து எப்படி நாயகியோட அப்பாவை திமுக வுக்கு திரும்புன வை கோ மாதிரி மனசை மாத்தறாங்க என்பது தான் திரைக்கதை
ஹீரோவா ஆர்யா, சமீபகாலமா தொடர்ந்து 2 தோல்விப்படங்கள் தந்த ஆர்யா இதில் ஜெயிச்சுட்டார்.,ஆக்சன் ஹீரோ மாதிரி ஜிம் பாடியும், ரொமான்ஸ் ஹீரோ மாதிரி இளமையும் இருந்தாலும் ஆர்யாவுக்கு கை கொடுப்பது எப்போதும் பாஸ் என்கிற பாஸ்கரன் டைப் காமெடி கதைகள்தான்,ரொமான்ஸ் சீன்களில் இயல்பா நடிக்கிறார், ஆள் மாறாட்டக்காமெடி, ஞாபக மறதிக்காமெடிகளில் கனகச்சிதம்
ஹீரோயினா சாயிஷா, சமீப படங்களில் டொக்கு விழுந்த ஜக்கு மாதிரி டல் அடித்தவர் இதில் மழையில் நனைந்த நந்தியா வட்டைப்பூ மாதிரி தள தளனு இருக்காரு ( தக்காளி தானே தள தளனு இருக்கும்?னு லாஜிக் கேள்வி கேட்கக்கூடாது. ஸ்லீவ்லெஸ் ஜாக் 3 சீன்களிலும், லொ கட் ஜாக் சீன்கள் 6 காட்சிகளிலும் , லோ ஹிப் சீன்கள் 7 சீன்களிலும் நடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டிரஸ்ஸிங் சென்ஸ் அபாரம், சில காட்சிகளில் ஃபுல்லா கவர் பண்ணும் குர்தி டைப் ஆடைகள் அணிந்து கலக்கறார். நடிப்பா? அதைப்பற்றி அவரும் கவலைப்படலை, நாங்களும் பட மாட்டோம்
காமெடியன்களா கருணாவும் , சதீஷூம். இதுல கருணா எடுபடல. சதீஷ் வசன காமெடியில் சொதப்பினாலும், ஆள் மாறாட்டக்காமெடியில் கரெக்டா நடிச்சிருக்கார்
இவங்களை விட ஆடுகளம் நரேன் சிறப்பா பண்ணி இருக்கார் , லைட்டா ஓவர் ஆக்டிங்கா இருந்தாலும் தியேட்டர்ல ஜனங்க இவர் நடிப்புக்கு அபார வரவேற்பு
சம்பத் ஓக்கே ரகம். வில்லனா வர்றவர் ஸ்மார்ட் லுக், வில்லனுக்கு ஜோடியா எதுனா வில்லியை போட்டா அதையும் ரசிக்கலாம், எத்தனை நாள் தான் ஹீரோயினை , அவர் தோழியை ரசிப்பது?
திரைக்கதை , வசனம் பி செண்ட்டர் ஆடியன்சை குறி வெச்சு அமைக்கப்பட்டிருக்கு ,
க்ளைமாக்சில் எ ஃபிலிம் பை டைட்டில் வரும்போது ஏ யூ ஆகும் லாவகம் அருமை.
காமெடி டயலாக்குகளில் 13 மொக்கை காமெடி , 2 ட்விட்டர் காமெடி 3 சொந்தக்காமெடி , 2 கில்மா டபுள் மீனிங் காமெடி என கலந்து கட்டி அடிச்சிருக்காங்க
பி சி செண்ட்டர்களில் வசூலை அள்ளிடும்
3 வாரம் ஓடிடும்
பாடல்கள் சுமார் தான், ஒளிபதிவு பக்கா , இசை பின்னணி இசை ஓக்கே ரகம்
பலே பலே மதோதிவோய் என்ற தெலுங்குப்படத்தின் அதிகாரப்பூர்வ உரிமை பெற்று ரீமேக் செய்யப்பட்ட படம்
நச் டயலாக்ஸ்
1 ஊழல் பண்ண முடியாத ஒரே தொழில் பிச்சைத்தொழில்தான்,நீ அதுலயே ஊழல் பண்ணிட்டியே,எவ்ளோ பெரிய கேடி? #Gajinikanth
2 மண்ணை மலடாக்கி விவசாயம் பண்றது விஷம்தான் #Gajinikanth (படத்தோட கதைக்கு சம்பந்தமே இல்லாம் விவசாய வசனங்கள் சமீபமா பெருகுது)
4 இவன் ரொம்ப நல்லவன் ,எந்த வேலை குடுத்தாலும் பிரமாதமா செய்வான்,இவனுக்கே உங்க பொண்ணைக்கொடுத்துட்டா...
யோவ்
நல்லா பாத்துக்குவான்னு சொல்ல வந்தேன் #Gajinikanth ( double meaning)
5 4 பேருக்கு உதவி பண்றதை விட அது 4 பேருக்குத்தெரியற மாதிரி பண்றது இப்ப பெருகிடுச்சு #Gajinikanth
6 இவங்க பரத நாட்டிய டீச்சர்
அய்யோ ,அது குச்சிப்புடிங்க
7
ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட்,உனக்கு சன்னி லியோனை பிடிக்கும்,எனக்கு திண்டுக்கல் ஐ லியோனியைப்பிடிக்கும் #Gajinikanth
8 என்ன யோசிக்கற?
எவ்ளோ பெரிய பிகர் நீ? எப்டி எனக்கு உஷார் ஆனே? #Gajinikanth
9 நாலு வார்த்தை அன்பா பேசுனாலே காய்ச்சல் சரி ஆகிடும் #Gajinikanth
10 ஒருத்தனுக்கு மனசு நல்லாருந்தா அவன் கிட்ட ஏதாவது குறை இருந்தாலும் ஆண்டவன் அவனை ஜெயிக்க வெச்சிடுவான் #Gajinikanth
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 கத்திரிப்பூ கலர் சேலைக்கு சிவப்பு கலர் ஜாக்கெட் போட்டிருக்கு சாயிஷா,என்ன மேட்சிங்கோ? #Gajinikanth
2 ஓப்பன் யூனிவர்சிட்டி சாயிஷா புல் கவர் பண்ற மாதிரி க்ளோஸ் நெக் குர்தி போட்டிருப்பது அதிர்ச்சியா இருக்கு பை மாடர்ன் பொண்ணுங்க புல் கவரேஜ் பண்ணாலே ஜெர்க் ஆவோர் சங்கம் #Gajinikanth
3 முதன்முதலா காதலை வெளிப்படுத்த ஹீரோ ஹீரோயினை வரவழைக்கற தியேட்டர்ல ஓடற படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து #Gajinikanth
4 உழவர் சந்தைல 5 ரூபாக்கு வாங்குன சோlளக்கருதை வீட்ல வேக வெச்சு தியேட்டர்ல கொண்டு வந்து சாப்ட்டா கேவலமாப்பார்க்கறாங்க.அதே 5 ரூபா கருதை சின்ன சின்ன கப்ல போட்டு 50 ரூபா னு மூணு பாக்கெட்டா விற்கறதை வாங்கி பெருமையா சாப்பிடறான்
5 சோளக்கருது என்பதே சரி,அது என்ன சோழக்கருது?னு கேட்கறாங்க,சோழர்கள் தான் முதன்முதலா பயிரிட்டாங்கனு சொல்லி சமாளிப்போம்
சபாஷ் டைரக்டர்
1 ஆர்யா - சாயிஷா ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கும் விதத்தில் காதல் துள்ளலுடன் படமாக்கபட்டது
2 மொட்டை ராஜேந்திரன் காமெடி டிராக் சதீஷ் காமெடியை தூக்கி சாப்பிடுவது
3 ஃபேமிலி ஆடியன்சை கவரும் பெண் பார்க்கும் காட்சிகள், பெண் வீடு , மாப்ளை வீடு கான்வோ காட்சிகள் குட்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஞாபக மறதி கேசான ஹீரோ எப்படி விஞ்ஞானி ரேஞ்சுக்கு டெஸ்ட் ட்யூபும் கையுமா அலையறார்?
2 பிளட் டொனேட் பண்ணினா பொண்ணுங்க லவ பண்ணுவாங்களா? இது என்ன புதுப்புரளியா இருக்கு ? 4 பிஸ்கெட்டும் ஒரு டம்ளர் பாலும் வேணா கிடைக்கும்
3 ஆர்யாவின் அம்மா தன் கனவனை அண்ணா என அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ற காமெடி கண்றாவி , வீட்டு ஹாலில் மேரேஜ் தம்பதி சகித ஃபோட்டோவெல்லாம் இருக்கே? அதை சம்பத் பார்க்க மாட்டாரா?
சி.பி கமெண்ட் -கஜினிகாந்த் − 1990 களில் ட்ரெண்ட் ஆன ,இப்போது வழக்கொழிந்த ஆள் மாறாட்டக்காமெடி,லைட்டா மொக்கை போட்டாலும் தியேட்டர்ல ஜனங்க சிரிக்கறாங்க,கிரேசி மோகன் டைப் வசனங்கள் காப்பாத்துது,படம் தேறிடும் ,விகடன் 41 ,ரேட்டிங்க் 2.5 / 5
ஈரோடு அபிராமி 70MM A/C DTS ( படம் முடியறதுக்கு 20 நிமிசம் இருக்கும்போது ஏ சி ,fan off பண்ணிடுவாங்க,கேன்ட்டீன் ல 10 ரூபா வெஜ் பப்சை 25 ரூபா க்கு விற்பாங்க (அடக்க விலை 6 ரூபா). பஸ் நிலையம் எதிரே. ராயல் தியேட்டர் க்ளோஸ் பண்ணதுல இவங்களுக்கு ஒரு சந்தோஷம்
ஈரோடு அபிராமி 70MM A/C DTS ( படம் முடியறதுக்கு 20 நிமிசம் இருக்கும்போது ஏ சி ,fan off பண்ணிடுவாங்க,கேன்ட்டீன் ல 10 ரூபா வெஜ் பப்சை 25 ரூபா க்கு விற்பாங்க (அடக்க விலை 6 ரூபா). பஸ் நிலையம் எதிரே. ராயல் தியேட்டர் க்ளோஸ் பண்ணதுல இவங்களுக்கு ஒரு சந்தோஷம்
0 comments:
Post a Comment