![Image result for pyar prema kadhal](https://i.ytimg.com/vi/nFcHP8ikzJs/maxresdefault.jpg)
இந்தப்படத்துக்கு 2 விதமான விமர்சனங்கள் வரும் , 1 ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் , தமிழ் சினிமாவுக்கு இன்னொரு செல்வராகவன் கிடைச்ட்டாரு, யூத்க்கு எற்ற படம், 2 அய்யய்யோ கலாச்சார சீர்கேடு, இப்டி எல்லாம் படம் எடுக்கலமா? எப்டியொ படம், செம கல்லா கட்டி இருக்கு , ரொம்ப லோ பட்ஜெட் படம் , ஹீரோவுக்கு 5 லட்சம், ஹீரோயினுக்கு 10 லட்சம், மெக்கப் செலவு ஒரு லட்சம் , யுவன் சங்கர் ராஜாவுக்கு 50 லட்சம்னு டோடலா ஒரு கோடி - 2 கோடி ல முடிச்சு இருப்பாங்க தோராயம , ஆனா தியெட்டர்கள்ல எழும் கை தடல்களைப்பார்த்தா இது ஆல் செண்டர் ஹிட் ஆகி முதலீட்டைப்போல் 7 மடங்கு லாபம் சம்பாதிச்சிடும்னு தோணுது
ஹீரோ ஒரு ஆஃபீஸ்ல கம்ப்யூடரை வேடிக்கை பார்க்கறவரு , ஹீரோயின் மேக்கப் நல்லா போட்டுட்டி எதிர் ஆஃபீஸ்ல டெபிளை துடைச்ட்டு இருக்கு, ஹீரோவுக்கு கண்டதும் காதல்.அறிஞர் அண மறைவுக்குப்பின் கழகத்தை உருவாக்கப்பாடுபட்ட 7 சீனியர் தலைவர்கள் இருந்தாலும் கலைஞருக்கு அடிச்ச தலைமைப்பொறுபு லக் போல ஹீரோவுக்கு ஒரு லக் , அந்த ஃபிகரு அவரோட ஆஃபீஸ்லயே அவர் சீட்க்குப்பக்கத்துலயெ வருது
இவங்க லவ் பணுவாங்களா? சண்டை போட்டுக்குவாங்களா?னு ஆடியன்ஸ் யோசிக்கறதுகுள்ளயே ஒரு கில்மாப்புரட்சி நடக்குது, ஹீரோயினுக்கு ஹீரொ மேல லவ்வே இல்ல, ஆனா கில்மாக்கு அதுவா கூப்பிடுது, இந்த மாதிரி புரட்சிபெண்களைதான் தமிழன் தேடிட்டு இருக்கான்
அப்பறம் என்ன? படமே முடிஞ்சுட்ட மாதிரினு நாம நினைகும்போது இயக்குநர் நம்மை அதுக்கப்பறமும் 2 மணி நேரம் உக்கார வைக்க யோசிச்சு திரைக்கதை அமைசிருக்கார், க்ளைமாக்ஸ் ல இவங்க கல்யாணம் பண்ணீக்கிட்டங்களா? இல்ல்லையா? என்பதுதான் ட்விஸ்ட்டாம், அடங்கோ
ஹீரோவா பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், பிரமாதமான நடிப்பு , அம்மா அப்பா ப்= மேல பாசம் கொண்ட , ஒரு மிடில் கிளாஸ் இளைஞனா அச்சு அசல் நடிசிருக்கப்டி , இவருக்கு டயலாக் டெலிவரி , ரொமான்ஸ் , சோகம் கோபம் எல்லாம் அருமையா வருது. , ஒரு கார்த்ஹிக், ஒரு மோகன், ஒரு சுரேஷ் லெவலில் இவர் எதிர்காலத்தில் வலம் வருவார்
ஹீரொயினா பிக்பாஸ் ஒப்பனைத்திலக்ம் ரைசா. பாப்பா பெருசா ஒண்ணும் அலட்டிக்கலை, ஹீரோ ஹீரோயின் கிட்டே அந்த சேர் ல உக்காருன்னா அது பெட்ரும்ல போய் படுத்துக்கற எதார்த்தமான கேரக்டர், சி செண்ட்டர் ஆடியன்ஸ் விசில் பறக்குது. படத்துல இடைவேளைக்கு முன் 3 லிப் லாக் சீன்களும் , இடைவேளைக்குபின் 4 லிப் லாக் சீன்களும் , 13 ரம்பா டைப் தொடை காட்டும் சீன்களும் 24 லோ கட் சீன்களும், 19 கட்டிபிடிக்கும் சீன்களும், இது போக ஓணம் போனசா 3 கில்மா சீன்களும் உண்டு , காஸ்ட்யூம் டிசைனர் அற்புதம், ஒரு சீன்ல கூட பாப்பா ஃபுல் கவரேஜ் கிடையாது, நல்ல வெளை சென்சார்னு ஒண்ணு இருந்தாக்காட்டி போனாப்போகுதுனு ஒரு பனியனையாவது போட்டுட்டு வருது இந்த அழகிய சனியன்
இதை எல்லாம் எதுக்காக எண்ணிபார்த்தேன்னா இந்த சமூகம் எப்டி எல்லாம் இதைபார்த்து தைரியமா மேன் மேலும் கெடப்பொகுதுங்கற அவலத்தை எண்ணிப்பார்த்துதன்
முனீஷ்காந்த்த் காமெடி பண்ணுவார்னு பார்த்தா பாவம் மொக்கை போடறார்,
ரைசாவுக்கு அப்பாவாக வரும் ஆனந்த்பாபு நல்ல நடிப்பு , பொறுமையான வசன உச்சரிப்பு, ஆனா சில காட்சிகளில் இவர் ரைசவுக்கு அப்பாவா? மாமா வா?னு நினைக்க வைக்கிறார்
ஹீரோவோட அம்மாவா புன்னகை மன்னன் ரேகா, நல்லவெளை ரேகவுக்கு ஒரு லிப் கிஸ் சீன் வைக்காம விட்டுட்டாங்க
திரைக்கதை ல ஹீரோ- ஹீரோயின் ஊடல் தான் முக்கியம் என்பதால் மறவர்களுக்கு காட்சி அதிகம் வைக்கலை போல
யுவன் சங்கர் ராஜா சொந்தப்படம் என்பதால் பாடல்கள் சூப்பர் ஹிட். ஒளிப்பதிவு , பிஜிஎம் எடிட்டிங் எல்லாம் பக்கா
![Image result for big boss raiza hot](https://wallpapers.oneindia.com/downloadimage1.php?file=https://wallpapers.oneindia.com/ph-1024x768/2017/07/raiza-wilson-bigg-boss_1499402676130.jpg)
நச் டயலாக்ஸ்
1 பசங்க முதல்ல பேசனும்னு நினைக்கறதுதான் பொண்ணுங்க சைக்காலஜி #PyaarPremaKaadhal (அப்பத்தானே ஜொள்ளு பார்ட்டினு தோழிங்க கிட்ட நக்கல் பண்ணலாம்?)
2 ரைசா = எனக்கு ஒயின்,உனக்கு?
ஜூஸ்
ஏன்?சரக்கு அடிக்க மாட்டியா? #PyaarPremaKaadhal
3 அதோ அந்தப்பொண்ணு கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டு வா
அய்யோ,ஏதாவது பிரச்சன ஆகிடப்போகுது
அப்போ இந்த சரக்கை ஒரே மூச்சுல குடி #PyaarPremaKaadhal
4
அதோ,அந்த ப்ளூ சர்ட் ஆளை ஒரு அறை அறைஞ்சிட்டு வா
அய்யோ எதுக்கு?
சும்மா,அவன் மூஞ்சியே எனக்குப்பிடிக்கல #PyaarPremaKaadhal ( இந்த டயலாக் எதேச்சையா அமைஞ்சதா? ப்ளூ சட்டை மாறனுக்கானதா? தெரில )
5 எனக்கு தொண்டை எப்டியோ இருக்கு,ஒரு ஹால்ஸ் வாங்கிட்டு வா
சரி
அப்டியே மெடிக்கல்ஷாப் ல உனக்கு எதாவது தேவைன்னா வாங்கிட்டு வா
எனக்கென்ன தேவை?
வீட்ல அப்பா இல்ல,தனியாதான் இருக்கேன் #PyaarPremaKaadhal
6 லவ்வுன்னா பசங்க உயிரையே குடுப்பாங்க,அவன் இன்ட்டென்சன் தெரியாம பழகுனது உன் தப்பு #PyaarPremaKaadhal
7 ஒரே மாதிரி பேசற பொண்ணை நம்பிடலாம்,ஆனா ஒரு மாதிரியா பேசற பொண்ணை நம்பக்கூடாது #PyaarPremaKaadhal
9 எல்லாமே பண்ணுவாளுகளாம்,எல்லாம்னா எல்லாம்தான்,ஆனா கேசுவலா இருப்பாளுங்களாம் #PyaarPremaKaadhal
10 உன்னை நல்ல விதமா உங்க வீட்ல வளர்த்திருந்தா நமக்குள்ள நடந்த பர்சனல் விஷயத்தை இப்டி பப்ளிக்கா போட்டு உடைச்சிருக்க மாட்டே #PyaarPremaKaadhal
11 பிடிச்சிருக்குன்னுதான் உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்,ஆனா அதை அட்வான்ட்டேஜா எடுத்துக்காதே! #PyaarPremaKaadhal
12 எத்தனை வருசம் ஆனாலும் நாம ஆசைப்பட்டது நடக்கலைனு மனசுல ஒரு குறை இருந்துட்டுதான் இருக்கு #PyaarPremaKaadhal
13 எனக்கு நீயா?எங்க அம்மாவா? ன்னா அம்மா தான் முக்கியம்
என் கனவா?நீயா?ன்னா என் கனவு தான் எனக்கு முக்கியம் #PyaarPremaKaadhal
14 தெரியாம பண்ற தப்புக்கு மன்னிப்பு உண்டு,தெரிஞ்சே பண்ற தப்புக்கு இன்னொரு வாய்ப்பே கிடையாது #PyaarPremaKaadhal
15 கல்யாணம் கறது வெறும் வார்த்தைதான் ,2 மனசு சேர்ந்தாலே அது கல்யாணம் தான்் #PyaarPremaKaadhal
![Image result for big boss raiza hot](https://i.ytimg.com/vi/IDQaSuj6ywM/maxresdefault.jpg)
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஈரோடு −ஸ்ரீ சண்டிகா−(முத்துக்குமார்),ரயில் நிலையம் எதிரே ப்யார்,பிரேமா ,காதல் ,நல்ல ஓப்பனிங்க னு சொன்னாங்க,படமும் நல்லாருக்குன்னாங்க,ஆனா கூட்டம் இல்ல,மக்கள் தியேட்டருக்கு வர்றதை குறைச்சுக்கிட்டது சினிமா உலகுக்கு பின்னடைவு,தனிநபர் சேமிப்புக்கு உகந்தது #pyarpremakadhal
![](https://pbs.twimg.com/media/DkUdV0JUYAEI6tJ.jpg)
![](https://pbs.twimg.com/media/DkUdWEFUYAEYe3O.jpg)
2 ரைசா ஓப்பனிங் சீனுக்கு விசில் எல்லாம் அடிக்கறாங்க,தமிழன் ரொம்ப காய்ஞ்சுபோய் கிடக்கறானா?ரைசா அவ்ளோ அழகா? #PyaarPremaKaadhal
3 இந்தப்படத்துக்கு பொருத்தமான டைட்டில் முதல் ரீல்லயே கண்டுபிடிச்சாச் .எதிர்வீட்டுஜன்னல் #PyaarPremaKaadhal
4 இயல்பான இயற்கையான ஒப்பனைதான் பெண்ணுக்கு அழகு, இதை யாராவது ரைசா கிட்ட சொல்லி டுங்க #PyaarPremaKaadhal
5 இயக்குநரிடம் ஒரு செல்வராகவன் டச் தெரிதே?குறிப்பா லிப்ட் சீன்,ஹீரோ ,ஹீரோயின் #PyaarPremaKadhal
6 யுவன்சங்கர் ராஜாவின் "பிஜிஎம் க்கு அப்ளாஸ் அள்ளுது ,ஓ கண்ணே என் மேல் சாய்ந்து சாய்ந்து பாடல் குட் #PyaarPremaKaadhal
7 துள்ளுவதோ இளமை,திருடா திருடி,7ஜி ரெயின்போ காலனி படங்கள எல்லாம் பாத்துட்டு இயக்குநர் திரைக்கதை எழுத உட்கார்ந்துட்டார் போல ,யூத்புல் #PyaarPremaKaadhal
8 படம் போட்ட அரை மணி நேரத்துலயே ஹீரோ ஹீரோயின் கில்மா சீன்.இந்த லட்சணத்துல ஹீரோயினுக்கு ஹீரோ மேல லவ் இல்லையாம்,விளங்கிடும் #PyaarPremaKaadhal
9 ரைசா தம் அடிக்குது ,இதெல்லாம் மிக தவறான முன்னுதாரணம்,கேட்டா நடக்கறதத்தான் காட்றோம்பாங்க.இதைப்பாத்துட்டு பல பொண்ணுங்க இதெல்லாம் தப்பில்ல போல னு நினைக்கலாம் #PyaarPremaKaadhal
10 ஒரு சீன் ல (சாதா சீன் தான்)ஹீரோ ரைசா முகத்துல மழைத்தண்ணிய பிடிச்சு அடிக்கறாரு,ஆடியன்ஸ் "மேக்கப் கலைஞ்சு பார்ட்டி டென்சன் ஆகிடப்போகுதுனு கமெண்ட் #PyaarPremaKaadhal
11 3 லிப் லாக் சீன்கள் ,ஒரு கில்மா சீன் முடிஞ்சு இடைவேளை ,ஒரு பயலும் எந்திரிக்கலை,லைட் போட்டு ,பாட்டு போட்டதும்தான் எந்திரிக்கறாங்க,அப்டியே படத்தோட மெர்ஜ் ஆகிட்டாங்களா? #PyaarPremaKaadhal
12 ஏ படம்னு தெரியாம யூ படம்னு நினச்சு வந்து மாட்டிக்கிட்ட பொண்ணுங்க கிட்ட இடைவேளை லைட்ஸ் ஆன் ல ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்வு தென்படும்,இப்பவெல்லாம் அசால்டா தில்லா கேண்ட்டீன்ல கோன் ஐஸ் சாப்டுட்டு இருக்காங்க,வாழ்க பெண்கள் முன்னேற்றம் #PyaarPremaKaadhal
13 ஹீரோயின் கெட்ட வார்த்த பேசுது.ஆடியன்ஸ் கை தட்றாங்க. தவறான ஒரு சமூக நடப்பு #PyaarPremaKaadhal
14 ரைசா வர்ற பாதி சீன்ல பாதி டிரஸ்தான் ,எப்ப பாரு ஒரே ஒரு டாப்ஸ் தான் ,அடங்கோ #PyaarPremaKaadhal
15 ஹீரோவும் ,ஹீரோயினும் ஆபிஸ் ல ,ஆபிஸ் பாத்ரும்ல ரொமான்ஸ் பண்றாங்க,அதென்ன ஆபிசா?பிக்பாஸ் செட் டா? #PyaarPremaKaadhal
![Image result for big boss raiza hot](https://static.asianetnews.com/images/9051b3ab-a4bc-4437-9a10-a18df6131bef/image_1200x603xt.jpg)
சபாஷ் டைரக்டர்
1 பிக்பாஸ் ஹிட் ஆனதும் முதல் வேளையா கதை கிடக்குது கழுதை அப்பறம் பார்த்துகலாம்னு அதில் ஹிட் ஆன ஜோடியான ஹரீஷ் , ரைசாவை புக் பண்ணீனது
2 கலாச்சார சீர்கேடு கூச்சல் வரும்னு தெரிஞ்சும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாம இறங்கி அடிச்சது
3 போஸ்டர் டிசைன் என்னமோ தெய்வீகக்காதல் கதை போல் அட்டகாசமாக வடிவமைத்தது , டைட்டில் டிசைனும் பக்கா
![Image result for big boss raiza hot](https://newstm-static.s3.ap-south-1.amazonaws.com/uploads/gallery/2018/04/17/114/large/xyz1526018145410.jpg)
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 எந்த ஆஃபீஸ்ல இந்த மாதிரி கில்மா பண்றதுக்கெல்லாம் இடம் ஒதுக்கறாங்க?
2 ஆஃபீஸ் பாத் ரூம்ல அசால்ட்டா எல்லாம் பண்றாங்களே? பேர் கெடாதா?
3 ஆண்கள் பாத்ரும்ல ஹீரோயின் அரை மணி நெரம் டயலாக் பேசுதெ? குமட்டலை? ஸ்மெல் உவ்வே வாக இருக்குமெ?
4 வயசுக்கு வந்த பெண்ணை வீட்ல தனியா விட்டுட்டு எந்த அப்பா இப்டி வெளில அடிக்கடி ஊருக்குபோவார்? ( தெரிஞ்சா நம்ம பசங்களுக்கு ஒரு உதவியா இருக்குமே?)
5 கற்புன்னா கிலோ என விலை என கேட்கும் நாயகி கில்மா ருசி எல்லம் அறிஞ்சு பின் 3 வருசம் பிரிவில் இருந்தும், ஹீரோவுக்கு வேற ஒரு பெண் கூட மேரேஜ் ஆன பின்பும் இவரும் பழி வாங்கறென்னு வெற 4 , 5 பெரு கூட டேடிங் போகலையெ? இது ஏன்> ( இன்னும் 5 கில்மா சீன் புகுத்தி இருக்கலமில?)
சி.பி கமெண்ட் -ப்யார் ப்ரேமா காதல் − கதைக்கரு அலை பாயுதே,திரைக்கதை அமைப்பு தென்றலே என்னைத்தொடு +போடாபோடி ,இளமைக்கொண்டாட்டம்,காதலர்கள் ,யூத் ரசிப்பார்கள்,ஆல் செண்ட்டர் ஹிட் ,சின்னப்படம் ,பெத்த லாபம்,விகடன் 43 , ரேட்டிங்க் 3/5 #PyaarPremaKaadhal
![Image result for big boss raiza hot](https://www.gethucinema.com/wp-content/uploads/2017/10/Raiza-Wilson-22.jpg)
0 comments:
Post a Comment