சென்னையில் சில வருடங்களுக்கு முன் கால் டாக்சிகளில் மர்மமான முறையில் சில கொலைகள் நிகழ்ந்தன. அந்த உண்மைசம்பவத்தில் இயக்குநர் கொஞ்சம் கற்பனை கலந்து கார்பரேட் , தொழில் போட்டி ,சதி வேலை என திரைக்கதை அமைத்து இருக்கிறார்
சுருக்கமா சொல்லனும்னா தன் அப்பாவைக்கொலை செஞ்சவங்களை ஹீரோ பழி வாங்குவதுதான் கதை , ஆனால் ரிவஞ்ச் சப்ஜெக்டாக ஜல்லி அடிக்காமல் க்ரைம் த்ரில்லராக பண்ணி இருக்காங்க
கவுதம் கார்த்திக் தான் ஹீரோ . இன்னும் நல்லா பயிற்சி வேணும், அவர் முகம் எப்போ பாரு சோகமாவே இருக்கு , தாடியும் ஒரு காரணம். காதல் காட்சிகளில் வழக்கம் போல்
அப்பாவாக வரும் கார்த்திக்ம் கலக்கல் நடிப்பு , பின்னி எடுத்துட்டார். கிட்ட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையான ரோல் . ரயில் சினேகிதி வரலட்சுமியுடனான காதல் ஒரு சிறுகதைக்குரிய அழகு
அந்த காதல் கதை அளவில் பாதி கூட ஹீரோ -ஹீரோயின் காதல் எடுபடாதது மைனஸ் , கண்டதும் காதல், அடுத்த நொடியே ஸ்விம் டிரஸ்ல டூயட்னு சொதப்பிட்டாங்க
சதீஷ் சும்மா கெஸ்ட் ரோல் 4 மொக்கை ஜோக் சொல்லி 6 இடத்துல கடுப்படிக்கிறார்
வில்லனாக உதிரிப்பூக்கள் மகேந்திரன் அளவான நடிப்பு
மற்ற 2 வில்லன்கள் நடிப்பும் ஓக்கே ரகம்
ஹீரோவுக்கு 2 அடிக்கு தாண்டி கண் பார்வை தெரியாது என்ற மேட்டர் இரவுசூரியன் , தாண்டவம் படங்களின் காட்சிகளை நினைவுபடுத்துவது மைனஸ்
நச் டயலாக்ஸ்
1 7 வருசம் தொடர்ந்து விருது வாங்கிட்டேன்,அடுத்த வருசம் எட்டாவது தடவையா னு யாரும் சொல்லக்கூடாது,யாராலும் எட்டாத இடம் னு சொல்லனும் #MrChandramouli
2 ஓல்டு ஈஸ் கோல்டு னு சொல்லிட்டு உங்கப்பா வயசான கிழபோல்ட்டை உனக்கு கட்டி வெச்சுடப்போறாரு #MrChandramou
3 மேடம்,வண்டி உங்களுதா?டிக்கில இவ்ளோ அடி வாங்கி இருக்கு? #MrChandramouli ( double meaning)
4 நான் சொன்னபடி நடந்துட்டா உங்க நரைமுடியை டை அடிச்சு கறுப்பாக்கனும் ,ஓக்கே?
இது என்ன புதுவித "பிளாக்"மெயில்? #MrChandramouli
5 பார்ட்டி ன்னா குடிக்கறது மட்டும் இல்ல.சேர்ந்து சாப்பிடுவதும் #MrChandramouli
6 இது கார்ப்பரேட் உலகம்,இங்க ஒருத்தன் அழிஞ்சாதான் இன்னொருத்தன் வாழ முடியும் #MrChandramouli
7 இந்த உலகத்துக்கு நாம என்ன குடுக்கறமோ அதைத்தான் இந்த உலகம் நமக்கு திருப்பித்தரும் #MrChandramouli
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 mr.சந்திரமவுலி @ ஈரோடு ஆனூர்
930 பேர் உட்காரலாம் 16 பேர்
கரண்ட் பில்க்கு கட்டாது
====
2 பஸ் ஸ்டார்ட் ஆகறப்ப கரி மாதிரி புகை வர்ற "சுந்தரா ட்ராவல்ஸ்" காமெடிய டைரக்டர் திரு "அட்லி"ஒர்க் பண்ணி சேத்துட்டாரு #MrChandramouli
3
கார்த்திக் = ஓல்டு ஈஸ் கோல்டு
சதீஷ் = இப்பவெல்லாம் கோல்டே ஓல்டாதான் வருது
(இந்த ஜோக்(!!??)கை சொல்லிட்டு சதீஷ் 5 நிமிஷமா சிரிக்கறாரு,ரைட்டு அடுத்த சூரி ரெடி #MrChandramouli
4 நிறைய படத்துல நடக்கற அதே தப்பு.இதுலயும்.ஸ்கூட்டியை பைக்னு மென்சன் பன்றாங்க #MrChandramouli
5 கவுதம் கார்த்திக் நடிச்ச எல்லாப்படத்துலயும் அவரு கடல்ல குளிக்கற மாதிரி ஒரு சீன் வந்துடுது,மணிரத்னம் கடல் அறிமுகப்படம்கறதாலயா? #MrChandramouli
6 கார்த்திக் கார் விபத்துக்குப்பின் காட்டும் நடிப்பு அதே கார்த்திக் நடிச்ச வீரன் வேலுத்தம்பி போலீஸ் ஸ்டேசன் பைட் இன்ஸ்பிரேசன் #MrChandramouli
7 இந்தப்படத்திற்கு மாற்று டைட்டில் எனது சிபாரிசு
வாடகைக்கார் விபரீதங்கள்
அப்பாவின் புதிய காதலி
பைரவி கொலை வழக்கு #MrChandramouli
நுணுக்கமாய் சில கொலைகள்
8 கார்த்திக்கின் "பத்மினி" கார் பாசம் ஏற்கனவே ரஜினி நடிச்ச ,படிக்காதவன் "லட்சுமி" டாக்சி சீன் உல்டா புல்டா !#MrChandramouli
சபாஷ் டைரக்டர்
1 பின் பாதி திரைக்கதையும் , கார்த்திக் - வரலட்சுமி காம்போ காட்சிகளும் அருமை
2 க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் குட்
மைனஸ்
1 கார்த்திக்கின் பிரமாதமான நடிப்புக்கு முன் கவுதம் கார்த்திக்கின் கழுவாத விஷால் முக நடிப்பு எடுபடலை
2 ஹீரோயின் கிளாமர் காட்சிகள் பெரிய கிளுகிளுப்பை ஏற்படுத்தலை ( சின்ன படம் சின்ன கிளுகிளுப்பு)
3 டாக்சி டிரைவர் பின்னால திரும்பி ஒரு குத்து குத்துனா அந்த லேடி அவுட், ஆனா அவர் காரை விட்டு இறங்கி 10 அடி துரம் நடந்து பின் மீண்டும் திரும்பி அந்த லேடியை தேடுவது எல்லாம் காமெடி
4 சிசிடிவி காமரான்னு ஒண்ணு இருப்பதையே இயக்குநர் மறந்துட்டாரு ,அசால்ட்டா கொலைகள் நடக்குது
சி.பி கமெண்ட் =mr. சந்திரமவுலி- பி சென்ட்டர் ரசிகர்களுக்கான க்ரைம் த்ரில்லர்.கார்த்திக்கின் உயிரோட்டமான நடிப்பு,பின் பாதி திரைக்கதை கனகச்சிதம்..க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட்
விகடன் 40 ,ரேட்டிங்க் 2.5 / 5 #MrChandramouli
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) 40
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) 3\5
0 comments:
Post a Comment